Wednesday, January 31, 2018

ஏ.கே. ஜி,

கோவில் ஊழியர் சங்கம் ,

சங்கரராமன் ...!!!

1956ம் ஆண்டு வாக்கில் ஓலவக்கொடு  ரயில் நிலையம் கூட்டத்தால் நிரம்பி இருந்தது .அங்கு கம்யூனிஸ்ட் கடசியின் மாநாடு நடக்கவிருக்கிறது ரயில் நிலைய வாசலில் செந்தொண்டர்கள்  அணிவகுத்து நிற்கிறார்கள். நிலையத்திற்கு உள்ளே சிவப்பு ஆடையில் ஐயப்ப பக்தர்கள் இருமுடியோடு  ரயிலேற காத்திருக்கிறார்கள். 

ரயிலில் கம்யூனிஸ்ட் கடசியின் தலைவர் எ,கே கோபாலன் வருகிறார்> அவருக்கு வரவேற்பு கொடுக்க ரயில் நிலையம் முன்பு செந்தொண்டர்கள் நிற்கிறார்கள். 

ரயில் வருகிறது ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கட்டி ஏறுகிறது ,மெதுவாக ரயில்பெட்டி நடைபாதையில் வந்து நிற்க  .ஏ கே ஜி தோன்றுகிறார்.

"ஏகே ஜி ! ஜிந்தாபாத் " ஒரு ஐயப்ப சாமி கோஷம் விடுகிறார்.

"சாமி ! சரணம் ஐயப்பா ! " என்று இருமுடி கட்டிய ஐயப்பமார்கள்  பதில் கோஷமிடுகிறார்கள்.

ஏகேஜி ஜிந்தாபாத் ! சாமிசாரணம் ஐயப்பா " என்ற கோஷம் விண்ணதிர பத்து நிமிடம் ஒலிக்கிறது.

கேரளா கோவில் பணியாளர்கள் சங்கத்தை உருவாக்கியவர் ஏகே ஜி !

தலைமறைவு வாழ்க்கையில்  ஏகேஜி மதுரை மினாடசி அம்மன் கோவிலில்  பட்டர்களோடு  தங்கி இருந்திருக்கிறார்.

ராமேஸ்வரம்கோவிலில் பணியாளர்களுக்கான சங்கம் உண்டு.  அதன் தலைவராக ஆவுல் நாயினா இருந்திருக்கிறார் .ஆவுல் நாயினா வின் சம்மந்தி தான் முன்னாள் குடியரசு தலைவர் கலாம் .

காஞ்சி வரதராஜ பெருமாள்கோவில் பணியாபர்களுக்கும் ஒரு சங்கம் உண்டு சி.ஐ.டி .யு  வோடு இணைந்தது அதன் செயல் வீரர்களில் ஒருவராக இருந்தவர் தான் சங்கரராமன் .

சங்கரராமன் கொலைசெய்யப்பட்டார் !!! 

(தகவலுக்காக )

Tuesday, January 30, 2018

திரைப்படங்கள் -

"அறம் "மற்றும் 

"அருவி " யை 

முன்வைத்து ....!!!

தமிழ் திரைப்படத்துறையின் முக்கியமான ஆண்டாக 2017 ஐ குறித்துக்கொள்ளலாம். குறைந்த சிலவில் மிகவும் நல்ல  படங்கள் வெளிவந்த ஆண்டு என்பதோடு  நிற்காமல் இந்திய திரைப்பட துறையே திரும்பி பார்க்கும் படைப்புகளை தந்த ஆண்டுமாகும்.

பாலிவுட் திரைத்துறையில் இளம் இயக்குனர்கள் எழுத்தாளர்கள், திரைக்கதை மற்றும் வசனகர்த்தாக்கள் பலர் இது பற்றி என்னோடு விவாதித்தார்கள். அவர்கள் பலரிடம் "அறம் ","அருவி" படங்களை பார்த்துவிட்டு விவாதிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

பொங்கல் சமயத்தில் தொலைக்காட்ச்சியில் "அறம் " படத்தை பார்த்தேன் . "ஆமஸான் " உதவியுடன் "அருவி "படம் பார்த்தேன் .

படிப்பறிவில்லாத ராஜஸ்தானத்து கிராமத்து பெண், பிஹாரில் வனப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவி ஆகியவர்களை நம்பி நாட்டின் பலப்பகுதி மக்களை திருப்தி படுத்த வேண்டிய இந்தி திரை உலகம் இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்க தயங்கு கிறது.

அதிகம்அறிவுஜீவிகளைக்கொண்டதமிழகம்கலை பண்பாட்டுத்துறையில் முன்னணியில் இருப்பதாலும், ஒரே இனமாகஇருப்பதாலும் உங்களால் பரிசோதனை முயற்சியில் ஈடுபட முடிகிறது> இதே தான் மலையாளம்,கன்னட மொழிகளுக்கும் பொருந்தும். ஆனால் இந்தித்திரைப்படத்துறை அதன் பிரும்மாண்டமான சந்தையின் காரணமாகவே அதில் சிக்கி தவிக்கிறது என்கிறார்கள்.

"விஸ்காம் "பட்டம் பெற்று திரைத்துறையை புரட்டிப்போட்ட விரும்பும் இளைஞ்சர்கள்பலர் இந்த இப்படத்தையும் தலையில் வைத்து கொண்டாடினார்கள்>தா.மு.எ .க.சங்கம் நிசசயமிது பற்றி தன கருத்தை சொல்லும் என்றும் விரும்பினேன் .

"அருவி"

அருவி என்று பெயரிடப்பட்ட குழந்தை, தந்தையின் பாசத்தால் குளிப்பாட்டப்பட்ட அந்த சிறுமி, பள்ளியில் ,கல்லூரியில்படித்து வளர்ந்த அவள் அன்புத்தந்தையால் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படுகிறாள்.சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அரவாணி ஒருத்தியால் அன்போடு அணைக்கப்பட்டு சராசரி வாழ்வை வாழ முற்படுகிறாள் .இதில் அவள் படும்பாடுகள் தான் திரைக்கதையாக விரிகிறது.

இளம்இயக்குனர் ஒருவர் " தாத்தா ! அற்புதமான திரைக்கதை அமைப்பு ! நிசசயம் விருது பெரும் "என்று அடித்து சொன்னார்.

ஆனால் பாசமிக்க தந்தை அருவியை இப்படி பாசத்தோடு வளர்த்திருக்கவும் வேண்டாம். அரக்கத்தனமான அவரை குடும்பத்தை விட்டு விரட்டி இருக்கவும் வேண்டாம் .வலிந்து புனையப்பட்ட அமைப்பாக எனக்கு பட்டது.

"சொல்வதெல்லாம்சத்தியம் " எபிசொட் கொஞ்ச்ம தேவைக்கு அதிகமாக வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது. அதுவும் அந்த பெண் நெறியாளர்   அழகான கணவனை  விட்டு கிழட்டு  செக்யுரிட்டியோடு "சோரம் " போவது எந்தவகையிலும் சரிஇல்லை .

சின்னங்சிறு பள்ளி மாணவியிலிருந்து கல்லூரி மாணவியாக, நோய்வாய்ப்பட்ட மனுஷியாக , இந்த சமூகத்தை எதிர்கொள்ளும் யுவதியாக அதிதி பாலன் என்ற புதுமுகம் மிகவும் சிறப்பாகசெய்துள்ளார் .ஆனாலும் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும், "சார் ! நான் சரியாக செய்துவிட்டேனா ? 'என்று ஆசிரியரைப்பார்த்து பயந்துமாணவன்  கேட்பதைப்போல அதிதி பாலன்  தோன்றுவது எனக்கு மட்டும்தானா?

இளம் இயக்குனர் அரூண் பிரபு , இந்த ஆண்டின் சிறப்பு வருகை . மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறேன்.

"அறம் " 

நாட்டின் வளர்சசியின் அவலத்தை இதனை வீட சிறப்பாக சொல்லிவிட முடியாது. அதுவும் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் அனுப்பிய ஏவுதளத்தின் பின்னணியில் குடிதண்ணீருக்காக மக்கள்படும் அவலத்தை வெகுவாக சித்தரித்தபடம் "அறம் " .

படம் முழுக்க இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ளது ஆறுதலுக்குரியது. பாத்திரங்கள் ஒவ்வொன்றும் கவனமாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர் .கும்பல் காட்ச்சிகளில் கூட எல்லோரும் பிரேமுக்குள் வருகிறவர்கள்  முகபாவங்கள் தெளிவாக உள்ளன . நயன தாரா என்பதற்காக அவருக்கு என்று சிறப்பு காட்ச்சிகள் இல்லாதது நிறைவாக உள்ளது. 

இந்த ஆண்டின் சிறந்தபடமாக த.மு.எ க ச தேர்ந்தெடுத்திருப்பது மிகசரியான ஒன்று .

கோபி நயினார் அவ்ர்களுக்கு பாராட்டுகள். 

Thursday, January 18, 2018

ஆண்டாள் பேரை சொல்லி ,

முத்துலட்சுமி,சுப்புலட்சுமி நு 

இழுக்காதீங்கடா ! பாவிகளா !!!

முத்துலெட்சுமியும்,சுப்புலெட்சுமியும் தேர்முட்டில நின்னு கண்ணாடிச்ச  மாதிரி பிலிம் காட்டா ஆரம்பிச்சுட்டானுவ !  அடேய் ! உருப்பட மாட்டிங்கடா !

உங்களுக்கு புராணமும் தெரியாது வரலாறும் புரியாது . முத்து லட்சுமி ரெட்டி தந்தை பெயர் நாராயண அய்யர்.புதுக்கோட்டை மகாராஜா கல்லூரி முதல்வரா இருந்தார்.இள   வயதிலேயே சமூக அக்கறை உள்ளவராக இருந்தார் . சிறு வயதிலேயே மனைவி இறந்து விட்டார் .அந்த காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தில் இருந்தது . இசை வேளாளர் குடும்பங்கள் அதிகம். அவர்கள் பட்ட துன்பமும் அதிகம் . இதனை எதிர்த்து கிளர்ந்த வர்களில் நாராயண அய்யரும் ஒருவர்.

சாதிக்க்காரர்களின் எதிர்ப்பையும் மீறி இசை வேளாளர்குடும்பத்து பெண்ணைஇரண்டாம் தாரமாக  மணந்து கொண்டார் .சாஸ்திர சுமப்பிரதாயத்த்தோடு அய்யர் மந்திரம் சொல்ல திருமணம் நடந்தது. அக்ரகாரத்தில் குடித்தனம் வைத்தார் .ராஜா கல்லூரி முதல்வர் .ராஜாவுக்கு வேண்டியவர் ஒரு பய வாயை திறக்கவில்லை .முத்து லட்சுமி முத்த மகளாக பிறந்தார் . படிக்க வைத்தார் .மகள்  பெரியவளானதும் படிப்பை நிறுத்தவில்லை . மேலே படிக்கவைத்தார் ராஜாவின் அனுமதியோடு !  

சென்னைக்கு அனுப்பி  ராஜாவின் கோட்டாவில் மருத்துவம் படிக்கவைத்தார்.முத்து லட்சுமிக்கு பிறகு நாராயண் அய்யருக்கு ஒரு மகன் பிறந்தான் .பையனுக்கு  பூணுல் போட்டு பிராமணனாக வளர்த்தார்.பிராமணக்குடும்பத்திலேயே அவனுக்கு திருமணம் செய்வித்தார் .மகன் ராமசாமிக்கு ஆண்  குழந்தை  பிறந்தது .கணேசன் என்று  பெயரிடப்பட்ட அந்த குழ்ந்தை அத்தை முத்துலெட்சுமிக்கு செல்லக்குழந்தையாய் வளர்ந்தான்

அத்தை முத்து லட்சுமி மருத்துவ கல்லூரியில்தான்னோடு படித்த ரெட்டி அவர்களை காதலித்து திருமணமா செய்து கொண்டார்.செல்லமருமகன் கணேசனை கிறிஸ்துவக்கல்லூரியில் படிக்க வைத்து அங்கேயே வேலையும் வாங்கி கொடுத்தார்> ஆனால் கணேசனுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை . ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்தான்  பின்னாளில்பிரபலமான ஜெமினி கணேசன் தான் முத்துலட்சுமி ரெட்டி யின் தம்பி மகன் ..

ஜெமினி மறந்த பிறகு அவருடைய மகள்   கமலா செல்வராஜ் தன தந்தை பற்றி ஒரு நூலை வெளியிட்டார்.இந்த விழாவிற்கு வந்திருந்த முதல்வர் கருணாநிதி "  ஜெமினியின் அத்தை சுப்புலட்சுமி ரெட்டி. அவர் எனக்கு உறவினர்> ஆக ஜெமினி கணேசனும் எனக்கு உறவினர் தான் " என்றார்

கோவில்களில் "தேவர் அடியார்கள் " என்ற இந்துமத அழுக்கை தந்தையின் விருப்பபடி அழிக்க முத்துலட்சுமி முயன்றார் .சட்டமன்றத்தில்  அதனை சட்டமாக கொண்டுவந்தார் அதனை சத்தியமூர்த்தி அய்யர் எதிர்த்தார் . சத்தியமூர்த்தி புதுக்கோட்டை அருகில் உள்ள திருமயத்தை சேர்ந்தவர்

நாராயண அய்யரும் ,சத்தியமூர்த்தி அய்யரும் உறவினர்கள்தான் என்றும் கேள்வி !!!

Monday, January 15, 2018

அந்ந்...த  நாளு ..ம் 

வந்ந்..தி டா..தோ !!!

அரவிந்தர் ஆசிரமத்தின் நடவடிக்கை களில் ஆர்வமுள்ளவர் என் மைத்துனி அவர்கள். ஒருமுறை காஞ்சிபுரம் சென்ற பொது புதுசேரிக்கு ஒரு விசிட் அடித்தார்> தோழர் புதுவை ராம்ஜி அவர்கள் தான் உதவினார். ஒரு இரண்டு மணி நேரத்தில் திரும்பவேண்டய நிலை. இருக்க முடியவில்லை. 

தற்போதுமீண்டும் போகலாமென்று ஆசைப்படுகிறார். புதுவை ராம்ஜியை தொடர்பு கொண்டேன்.    

"தோழர் ! உங்களை  நானே நேத்து இரவிலிருந்து தொடர்பு கொள்ள விரும்பினேன் "என்றார் ராம்ஜி!

"அப்படியா ? என்ன விசேஷம் ?"

"த.மு.ஏ.சாவின்  14வது  மாநிலமானாடு புதுசேரில நடத்த முடிவாகி இருக்கு !உங்க சவுகரியம் எப்படி னு கேக்க  நினைச்சேன்    ! "

" கண்டிப்பா வரலாம் னு தான் இருக்கேன் ! வசாயிட்டு ! ஏன் அலையறீங்க ! னு பையன் அங்கலாய்க்கிறான் " இயலாமை கொஞ்சம் அதிகம் தான் கூட முத்து மினாடசி இருக்காங்க ! இருந்தாலும் அவங்களுக்கு 76 ! எனக்கு 82 ! அங்க வந்தா உங்களுக்கு தான் சிரமம் ! அதுதான் யோசிக்கிறேன் ! அதுசரி ! அங்க நம்ம ஆபிசுல கெஸ்ட் ஹவுஸ் இருக்கில்ல ! போட்டுருங்க !

"அதெல்லாம் இருக்கு தோழர் ! நீங்க கவலைப்படாதீங்க ! நாங்க வேற ஏற்பாடு பண்ணிடறோம் !கெஸ்ட் ஹவுஸ் வேண்டாம் " என்றார் ராம்ஜி !

த.மு.ஏ.சவை ஆரம்பித்த கே.எம் அவர்களின் நூற்ராண்டு இது. புதுவை தோழ ர்கள் கொடுத்து வைத்தவர்கள் நூற்ராண்டுவிழாவாக சிறப்பிக்கலாம்.

ஜூன் மாதம் 22.23.24 ம் தேதிகளில் நடத்த முடிவாகி இருக்கிறது.

அந்ந் .. த  நாளு ..ம்  வந்ந்..தி  டா ..தோ  !!!

Sunday, January 14, 2018

வே. சங்கரன் என்ற

தோழர் "ஞாநி"

மறைந்தார் ...!!!

வே .சங்கரன்    "இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகையில் நிருபராக இருந்த காலத்திலிருந்து எனக்கு பழக்கம். அவருடைய தந்தை  வேம்பு அவர்களும் "இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகையில் மூத்த நிருபராக இருந்தவர். என்னுடைய உறவினர் பி.வி.ராமசந்திரன் என்பவர் அதே பத்திரிகையில் 50ம் ஆண்டுகளில் பணியாற்றிய காலத்திலிருந்து நிருபர் வேம்பு அவர்களை எனக்கு தெரியும்.

பத்திரிகையா;ளர் சந்திப்பில் சங்கரனை பார்த்துபழகி இருந்திருக்கிறேன்.துடிப்பு மிக்க இளைஞர். எந்தவித தயக்கமும் இன்றி கேள்விகளை கேட்பார். பல சந்தர்ப்பங்களில் "தர்மசங்கடமான" நிலைமைகளை ஏற்படுத்தி இருக்கிறார். 1977ம் ஆண்டு காந்தி கிராமத்தில்  பேராசிரியர் ராமானுஜம் அவர்கள் தேசிய நாடகப்பள்ளியின் சார்பில் நாடக பயிற்சி  முகாம் நடத்தினார். கேரளத்திலிருந்து குரூப், கர்நாடகாவிலிருந்து பி.வி கராந்த, சிவராம கரந்த் ,என்று முன்னோடிகள் வகுப்பு எடுத்தனர்> அந்த அப்பயிற்சிக்கு  ஜெயந்தன்,ப.ரத்தினம் , கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் மு.இராம சாமி, (அப்போது மாணவர் ) என்று 15 பேர்     மணவர்களாமே இருந்தோம். அந்த முகாமுக்கு சங்கரனும் வந்திருந்தார்அப்போது தான் அவரோடு நெருங்கி பழக்க முடிந்தது பத்து பதினைந்து நாள் அங்கேயே தங்கி  இருந்தோம்

மாணவர்கள் நாடகம் தயாரிக்க வேண்டும். சங்கரன் "கடியாரம் " என்ற நாடகத்தை போட்டார். குரூப் எழுதிய "திரௌபதி வஸ்திராபரணம் " நாடகத்தில்நானும் சங்கரனும் கட்டியங்காரனாக நடித்தோம்.  

அதோடு "நாற்காலி காரர் " என்ற நாடகத்தில் நான் நாற்காலிக்காரராக நடிக்க சங்கரன் முக்கிய பாத்திரத்தில் நடித்தார் . பின்னாளில் "தீம்தரி கிட    "  என்ற பத்திரிகையை நடத்தினார் .

அப்போது தான் வே சங்கரன் தான் ஞாநி என்பதைத்தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தை "ஞானி " என்றுதான் எழுதி வந்தார்.கோவை பழனிசாமி ஞானி என்ற அப்பெயரில் எழுதிவந்ததால் ஞாநி என்று மாற்றிக்கொண்டார்.

அரசியல் ரீதியாக வி.பி சிங் ஆதரவாளராக இருந்தார்.

ராஜிவ் காந்தி  படுகொலையில் "சிவராசன், தனு "ஆகியோர்  சம்மந்தப்பட்டதும்,அவர்களுடைய புகைப்படமும் ஞாநி யின் மூலமாகவே உலகத்திற்கே தெரியவந்தது. ராஜிவ் காந்தி  கொலை செய்யப்படுவதற்கு முன்பாக சிவராசன் வி.பி சிங் கூட்டத்திற்கு சென்று பரிசோதனை நடத்தி இருக்கிறான் .சிங்  கூட்டங்களுக்கு சென்றிருந்த ஞாநி  எடுத்த  படத்தில் சிவராசனும்  தனுவும்  இருந்துள்ளனர் . பிரபாகரன் அமைப்பு இதில் தொடர்பு கொண்டிருந்தது அதன் பிறகே உலகிற்கு தெரியவந்தது.

ஞாநி தொலைக்காட்சி யோடும் தொடர்பு கொண்டிருந்தார்.பெரியாரின்   வாழ்க்கையை   சித்தரிக்கும்  தொடரை  எடுத்தார் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது.

தமிழ்  சமூகம் பன்முக திறமை கொண்ட சிறந்த செயல்பாட்டாளரை  இழந்து   விட்டது .

Tuesday, January 09, 2018

இசைக்கு "சாதி" கிடையாதாம் !

இசைக்கு மட்டும் தானா ?

இசைக்கு சாதிக்கிடையாதாம் ! "அலை"க்காரர்கள் துவைத்து எடுக்கிறார்கள்.. பாவம் ! புஷ்பவனம் குப்புசாமி ! கடுமையாக பாதிக்கப்பட்டவர் .பம்மி பம்மி பேசவேண்டியதிருக்கிறது ?o 

ராமசுப்பிரமணிய அய்யர்,நாராயண அய்யர் , ஆகியோர் முன்னிலையில் " சாதி இருக்குவே " னு சொல்ல முடியவில்லை . எங்கு சாதி இல்லை என்று கேட்க அங்கு ஆளில்லை ! என்ன செய்ய .

நரேந்திர மோடி திருமணமாகி மூன்று மாதம் குடித்தனம் நடத்தினார்>பின்னர் ஓடிவிட்டார் . அந்த பெண் ...?  மோடியின் சாதியில் குழந்தை  கலாயணம் செய்யும் பழக்கம் உண்டு என்கிறார்கள் ! பாவிகள் ?

நான் வசிக்கும் அடுக்ககத்தில் ஒரு உபி மாநிலத்து  . குடும்பம்    வசித்து வந்தது .அவர்கள் வீட்டுக்கு வந்த விருந்தினரை எனக்கு "ராஜேந்திர  பாஜ்பாய் " (Raajendra Bajboy) என்று அறிமுகப்படுத்தினார். நம்ம வாய் தான் சும்மா இருக்காதே .

"OH ! then   you are close to P M " என்றேன்.

"no !no ! I am Bajboy ! bramin ! he is vajboy  nonbramin " என்று கோபத்தோடு கூறினார்.

பொதுவாக வடநாட்டில் பெயரை சொல்லும் பொது சாதியையும் சொல்லும் பழக்கம் உள்ளது .

என்னுடைய பேரன் பெயர் நிஹால். அவனை பள்ளியில் சேர்க்கும் பொது நிஹால் காஷ்யப் என்று பெயரைக்கொடுத்திருந்தோம். வடநாட்டில் வால்மீகி ,காஷ்யப் என்றகுடும்ப பெயரை தலித்துகள் தான் வைத்துக்கொள்வார்கள்.

இந்த ஆண்டோடு அவன் கல்லூரி படிப்பு முடிகிறது . மேல்சாதி பையன்கள்  அவனோடு மிகவும் நெருக்கமாக பழகுவதில்லை என்பது அவனுடைய அனுபவம். 

தீண்டாமையும், சாதீயா ஒதுக்கல் களும் அனுபவித்தால்  தான் புரியும். 

சாதி,மதம்,மாநிலம் என்று எதுவமே கண்டு பிடிக்க முடியாமல் என்மகளுக்கு  பெயர் வைத்தேன் சட்டம் படித்து நீதிமன்றம் செல்கிறாள். நிதி மன்றத்தில் சக வழக்குரைஞர்கள்   கூட "பாப்பாத்தி " என்று மறைமுகமாக கூப்பிடுகிறார்கள் என்று வேதனைப்பட்டார் .

'பத்து வருடமாக தான் உனக்கு இந்த வேதனை .இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர்கள் வேதனையை சொல்லக்கூட முடியாமல்தவித்தார்களே "என்று சமாதானப்படுத்தினேன் .  

சாதி நீக்க மற இருக்கத்தான்  செய்கிறது !

எங்கும் ! எதிலும் !! 

Saturday, January 06, 2018