skip to main |
skip to sidebar
இசைக்கு "சாதி" கிடையாதாம் !
இசைக்கு மட்டும் தானா ?
இசைக்கு சாதிக்கிடையாதாம் ! "அலை"க்காரர்கள் துவைத்து எடுக்கிறார்கள்.. பாவம் ! புஷ்பவனம் குப்புசாமி ! கடுமையாக பாதிக்கப்பட்டவர் .பம்மி பம்மி பேசவேண்டியதிருக்கிறது ?o
ராமசுப்பிரமணிய அய்யர்,நாராயண அய்யர் , ஆகியோர் முன்னிலையில் " சாதி இருக்குவே " னு சொல்ல முடியவில்லை . எங்கு சாதி இல்லை என்று கேட்க அங்கு ஆளில்லை ! என்ன செய்ய .
நரேந்திர மோடி திருமணமாகி மூன்று மாதம் குடித்தனம் நடத்தினார்>பின்னர் ஓடிவிட்டார் . அந்த பெண் ...? மோடியின் சாதியில் குழந்தை கலாயணம் செய்யும் பழக்கம் உண்டு என்கிறார்கள் ! பாவிகள் ?
நான் வசிக்கும் அடுக்ககத்தில் ஒரு உபி மாநிலத்து . குடும்பம் வசித்து வந்தது .அவர்கள் வீட்டுக்கு வந்த விருந்தினரை எனக்கு "ராஜேந்திர பாஜ்பாய் " (Raajendra Bajboy) என்று அறிமுகப்படுத்தினார். நம்ம வாய் தான் சும்மா இருக்காதே .
"OH ! then you are close to P M " என்றேன்.
"no !no ! I am Bajboy ! bramin ! he is vajboy nonbramin " என்று கோபத்தோடு கூறினார்.
பொதுவாக வடநாட்டில் பெயரை சொல்லும் பொது சாதியையும் சொல்லும் பழக்கம் உள்ளது .
என்னுடைய பேரன் பெயர் நிஹால். அவனை பள்ளியில் சேர்க்கும் பொது நிஹால் காஷ்யப் என்று பெயரைக்கொடுத்திருந்தோம். வடநாட்டில் வால்மீகி ,காஷ்யப் என்றகுடும்ப பெயரை தலித்துகள் தான் வைத்துக்கொள்வார்கள்.
இந்த ஆண்டோடு அவன் கல்லூரி படிப்பு முடிகிறது . மேல்சாதி பையன்கள் அவனோடு மிகவும் நெருக்கமாக பழகுவதில்லை என்பது அவனுடைய அனுபவம்.
தீண்டாமையும், சாதீயா ஒதுக்கல் களும் அனுபவித்தால் தான் புரியும்.
சாதி,மதம்,மாநிலம் என்று எதுவமே கண்டு பிடிக்க முடியாமல் என்மகளுக்கு பெயர் வைத்தேன் சட்டம் படித்து நீதிமன்றம் செல்கிறாள். நிதி மன்றத்தில் சக வழக்குரைஞர்கள் கூட "பாப்பாத்தி " என்று மறைமுகமாக கூப்பிடுகிறார்கள் என்று வேதனைப்பட்டார் .
'பத்து வருடமாக தான் உனக்கு இந்த வேதனை .இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர்கள் வேதனையை சொல்லக்கூட முடியாமல்தவித்தார்களே "என்று சமாதானப்படுத்தினேன் .
சாதி நீக்க மற இருக்கத்தான் செய்கிறது !
எங்கும் ! எதிலும் !!
0 comments:
Post a Comment