ஏ.கே. ஜி,
கோவில் ஊழியர் சங்கம் ,
சங்கரராமன் ...!!!
1956ம் ஆண்டு வாக்கில் ஓலவக்கொடு ரயில் நிலையம் கூட்டத்தால் நிரம்பி இருந்தது .அங்கு கம்யூனிஸ்ட் கடசியின் மாநாடு நடக்கவிருக்கிறது ரயில் நிலைய வாசலில் செந்தொண்டர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். நிலையத்திற்கு உள்ளே சிவப்பு ஆடையில் ஐயப்ப பக்தர்கள் இருமுடியோடு ரயிலேற காத்திருக்கிறார்கள்.
ரயிலில் கம்யூனிஸ்ட் கடசியின் தலைவர் எ,கே கோபாலன் வருகிறார்> அவருக்கு வரவேற்பு கொடுக்க ரயில் நிலையம் முன்பு செந்தொண்டர்கள் நிற்கிறார்கள்.
ரயில் வருகிறது ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கட்டி ஏறுகிறது ,மெதுவாக ரயில்பெட்டி நடைபாதையில் வந்து நிற்க .ஏ கே ஜி தோன்றுகிறார்.
"ஏகே ஜி ! ஜிந்தாபாத் " ஒரு ஐயப்ப சாமி கோஷம் விடுகிறார்.
"சாமி ! சரணம் ஐயப்பா ! " என்று இருமுடி கட்டிய ஐயப்பமார்கள் பதில் கோஷமிடுகிறார்கள்.
ஏகேஜி ஜிந்தாபாத் ! சாமிசாரணம் ஐயப்பா " என்ற கோஷம் விண்ணதிர பத்து நிமிடம் ஒலிக்கிறது.
கேரளா கோவில் பணியாளர்கள் சங்கத்தை உருவாக்கியவர் ஏகே ஜி !
தலைமறைவு வாழ்க்கையில் ஏகேஜி மதுரை மினாடசி அம்மன் கோவிலில் பட்டர்களோடு தங்கி இருந்திருக்கிறார்.
ராமேஸ்வரம்கோவிலில் பணியாளர்களுக்கான சங்கம் உண்டு. அதன் தலைவராக ஆவுல் நாயினா இருந்திருக்கிறார் .ஆவுல் நாயினா வின் சம்மந்தி தான் முன்னாள் குடியரசு தலைவர் கலாம் .
காஞ்சி வரதராஜ பெருமாள்கோவில் பணியாபர்களுக்கும் ஒரு சங்கம் உண்டு சி.ஐ.டி .யு வோடு இணைந்தது அதன் செயல் வீரர்களில் ஒருவராக இருந்தவர் தான் சங்கரராமன் .
சங்கரராமன் கொலைசெய்யப்பட்டார் !!!
(தகவலுக்காக )
0 comments:
Post a Comment