skip to main |
skip to sidebar
ஆண்டாள் பேரை சொல்லி ,
முத்துலட்சுமி,சுப்புலட்சுமி நு
இழுக்காதீங்கடா ! பாவிகளா !!!
முத்துலெட்சுமியும்,சுப்புலெட்சுமியும் தேர்முட்டில நின்னு கண்ணாடிச்ச மாதிரி பிலிம் காட்டா ஆரம்பிச்சுட்டானுவ ! அடேய் ! உருப்பட மாட்டிங்கடா !
உங்களுக்கு புராணமும் தெரியாது வரலாறும் புரியாது . முத்து லட்சுமி ரெட்டி தந்தை பெயர் நாராயண அய்யர்.புதுக்கோட்டை மகாராஜா கல்லூரி முதல்வரா இருந்தார்.இள வயதிலேயே சமூக அக்கறை உள்ளவராக இருந்தார் . சிறு வயதிலேயே மனைவி இறந்து விட்டார் .அந்த காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தில் இருந்தது . இசை வேளாளர் குடும்பங்கள் அதிகம். அவர்கள் பட்ட துன்பமும் அதிகம் . இதனை எதிர்த்து கிளர்ந்த வர்களில் நாராயண அய்யரும் ஒருவர்.
சாதிக்க்காரர்களின் எதிர்ப்பையும் மீறி இசை வேளாளர்குடும்பத்து பெண்ணைஇரண்டாம் தாரமாக மணந்து கொண்டார் .சாஸ்திர சுமப்பிரதாயத்த்தோடு அய்யர் மந்திரம் சொல்ல திருமணம் நடந்தது. அக்ரகாரத்தில் குடித்தனம் வைத்தார் .ராஜா கல்லூரி முதல்வர் .ராஜாவுக்கு வேண்டியவர் ஒரு பய வாயை திறக்கவில்லை .முத்து லட்சுமி முத்த மகளாக பிறந்தார் . படிக்க வைத்தார் .மகள் பெரியவளானதும் படிப்பை நிறுத்தவில்லை . மேலே படிக்கவைத்தார் ராஜாவின் அனுமதியோடு !
சென்னைக்கு அனுப்பி ராஜாவின் கோட்டாவில் மருத்துவம் படிக்கவைத்தார்.முத்து லட்சுமிக்கு பிறகு நாராயண் அய்யருக்கு ஒரு மகன் பிறந்தான் .பையனுக்கு பூணுல் போட்டு பிராமணனாக வளர்த்தார்.பிராமணக்குடும்பத்திலேயே அவனுக்கு திருமணம் செய்வித்தார் .மகன் ராமசாமிக்கு ஆண் குழந்தை பிறந்தது .கணேசன் என்று பெயரிடப்பட்ட அந்த குழ்ந்தை அத்தை முத்துலெட்சுமிக்கு செல்லக்குழந்தையாய் வளர்ந்தான்
அத்தை முத்து லட்சுமி மருத்துவ கல்லூரியில்தான்னோடு படித்த ரெட்டி அவர்களை காதலித்து திருமணமா செய்து கொண்டார்.செல்லமருமகன் கணேசனை கிறிஸ்துவக்கல்லூரியில் படிக்க வைத்து அங்கேயே வேலையும் வாங்கி கொடுத்தார்> ஆனால் கணேசனுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை . ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்தான் பின்னாளில்பிரபலமான ஜெமினி கணேசன் தான் முத்துலட்சுமி ரெட்டி யின் தம்பி மகன் ..
ஜெமினி மறந்த பிறகு அவருடைய மகள் கமலா செல்வராஜ் தன தந்தை பற்றி ஒரு நூலை வெளியிட்டார்.இந்த விழாவிற்கு வந்திருந்த முதல்வர் கருணாநிதி " ஜெமினியின் அத்தை சுப்புலட்சுமி ரெட்டி. அவர் எனக்கு உறவினர்> ஆக ஜெமினி கணேசனும் எனக்கு உறவினர் தான் " என்றார்
கோவில்களில் "தேவர் அடியார்கள் " என்ற இந்துமத அழுக்கை தந்தையின் விருப்பபடி அழிக்க முத்துலட்சுமி முயன்றார் .சட்டமன்றத்தில் அதனை சட்டமாக கொண்டுவந்தார் அதனை சத்தியமூர்த்தி அய்யர் எதிர்த்தார் . சத்தியமூர்த்தி புதுக்கோட்டை அருகில் உள்ள திருமயத்தை சேர்ந்தவர்
நாராயண அய்யரும் ,சத்தியமூர்த்தி அய்யரும் உறவினர்கள்தான் என்றும் கேள்வி !!!
1 comments:
உங்கள் முத்துலெட்சுமி ரெட்டி/புதுக்கோட்டை சம்பந்தமான பதிவை படிக்க நேர்ந்தது. கவர்ந்தது. நானும் புதுக்கோட்டை ராஜாஸ் காலேஜில் (தற்போது மன்னர் கல்லூரி) படித்தவன் என்பதும் காரணமாயிருக்கலாம்!
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சரித்திரமும் தெரியாது; புராணமும் புரியாது இந்தப் புண்ணாக்குகளுக்கு. தொடருங்கள். நன்றி.
உங்கள் பதிவுக்கு இப்போது என்னைக் கொண்டுவந்தது ‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராமின் ரெஃபரென்ஸ்!
Post a Comment