Tuesday, May 29, 2018





எளிய மக்களின் 

"ஈரலை " வறுத்து ,

தின்பவர்கள் ....!!!




ஆலையை மூடிவிட உத்திரவு வந்து விட்டது .கலெக்டர் சீல்  வைக்க தொலைகாட்டசியில் நாடகம் அரங்கேறியது .

பதிமூன்று பேர் இறந்தார்கள் என்று தொலைக்காட்சி யில் சொல்கிறார்கள் .1996லிருந்து புற்று நோயால் இறந்தவர்கள் கணக்கு இல்லை>அரைகுறையாக பிறந்த சிசு,கண் புற்றுநோயால்  நடமாடும் பிணங்கள் ,க ணக்கில் இல்லை .

ஆஸ்திரேலியாவில் சுரங்கம்.அங்கிருந்து கப்பலில் ஏற்றி தூத்துக்குடி வந்து உருக்கவேண்டும். என் அங்கேயே ஆஸ்திரேலியாவில் உருக்கலாமே ! அவன் அகர்வாலின் கோட்டையை நசுக்கி விடுவான்> அவனுக்கு அவன் மக்கள் நலம் முக்கியம். இளிச்சவாயன் வேண்டும் தேடினார்கள்> இந்தியா கிடைத்தது> முதலில் குஜராத். அப்புறம் கோவா ! அதன் பிறகு மஹாராஷ்டிரா > மராட்டியத்தில் ஆலை கட்டிய பின்பு அடித்து விராட்டப்பட்டான் .தமிழகத்தில் பிசாசு ஆடசி ! வரவேற்றது ! அதன் பிறகு வந்த பிடாரி விரிவாக்கம் செய்ய உதவியது.

இது இறுதி அல்ல !"பசி " த்த வக்கீல்கள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு நிற்கிறார்கள். நீதிபதிகளும் தயார்.

எளியமக்களின் ஈரலை  வறுத்து திங்க போகிறார்கள் !!!



0 comments: