திரைப்படம் என்பது
ஒரு கலைவடிவமா ...? -----2
ஓவியம் ஒரு மொழியாக கையாளப்பட்டு வந்த பொது மனிதன் தன்னுடைய தகவல் தொடர்பு சாதனத்திற்கு கிடைத்த மற்றுமொரு வசதியாக பயன்படுத்தினான் ஓவியர்களும் ஓவியகலை யும் பெரும் வளர்சசி பெற்றது. டாவின்சியும்.ராம்பிரண்டும் ,போற்றி புகழப்பட்டார்கள்
.டசசு நாட்டை சேர்ந்த ராம்பிராண்ட் மிகசசிறந்த ஓவியர். தன நாட்டின் மலைகளையும்,மரம்செடிகொடிகளையும் ,நீரோடைகளையும் அற்புதமாக வரைவார்> டச்சு மன்னர் "ராமபிரானின் ஓவியங்களைப்பார்த்த பிறகுதான் என் நாடு இவ்வளவு அழகானதா என்று நான் பிரமித்திருக்கிறேன் "என்று குறிப்பிட்டுள்ளார்..
ஆணாலும்மனிதனுக்கு திருப்தி வரவில்லை. ஓவியனின் திறமை அல்லது திறமையின்மை ,அவனுடைய உணர்வுகளை அவன் பார்க்கும் கோணம் ஆகியவை உள்ளதை உள்ளபடியே சித்தரிக்கிறதா என்ற சந்தேகம் இருந்தே வந்தது. தான் பார்த்ததை in its concrete form வெளிப்படுத்தமுடியவில்லையே என்ற குறை அவனுக்கு இருந்து கொண்டே வந்தது. அவன் காத்திருந்தான்.
1760ம் ஆண்டு வாக்கில் ஒரு விஞ்ஞன கண்டுபிடிப்பு அவனுக்கு உதவி செய்தது. வெளிச்சம் அல்லது ஒளி சில ரசாயனங்களின் மேல்பட்டால் அது கறுப்பாகிறது என்பதை கண்டு கொண்டான் .ஏற்கனவே கடலோடியான அவனுக்கு ஆடிகளை (lens ) பற்றி தெரிந்திருந்து. ஆடி களின் முன் இருக்கும் பொருள்களின் மீது விழும் ஒளி ஆடிகள் வழியாக சென்றால் ரசாயனம் தடவிய பொருளில் கருப்பு ப வெள்ளையாக மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டான. அந்த கருப்பு வெள்ளை மாற்றங்கள் அந்த ஆடி யின் முன்னால் உள்ள பிம்ப த்தின் மறுவடிவமாக அதேபோன்று அச்சு அசலாக வருவதையும் கண்டான்.இது தனக்கு தகவல் தொடர்புக்கான மற்றுமொரு வழி என்று நினைத்தான் .language of Photography பிறந்தது.
நான் சோவியத் யூனியன் சென்றதில்லை.ஆனாலும் அந்த படத்தை பார்த்தால் இது கிரெம்ளின் மாளிகை ,இது லெனின் சதுக்கம், என்று எளிதாக கூறமுடியும்.காரணம் புகைப்படம் உள்ளதை உள்ளபடியே காட்டுகிற ஒரு ஊடகமாகமாறிவிட்டிருந்தது.நான் குமாரி கடற்கரையில் என்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டால் அது கடற்கரையை,பின் தெரியும் சமுத்திரத்தை காந்திமண்டபத்தை அப்படியே காட்டும் இது அவனுடைய தகவல் தொடர்புக்கு மிகவும் அனுசரணையாக இருந்தது> ஒருகட்டுரையை எழுதி,அதில் ஒரு புகைப்படத்தையும் போட்டால் பார்வையாளனின் புரிதல் மேன்மையடைகிறது இதனால் தான்.
ஆணாலும்மனிதனுக்கு திருப்தியேற்படவில்லை.புகைப்படம் சமுத்திரத்தை,மனிதர்களை அப்படியே காட்டுகிறது என்பது உண்மைதான் .ஆனாலும் கடலின் அலைகள் அசை கின்றன. படத்தில் நிற்கும் மனிதனின் உடைகள் காற்றில் அசைகிறது .இந்த அசைவுகளை சொல்ல முடியவில்லையே புகைப்படம் என்பது ஒரு still .அசைவுகளை வெளிப்படுத்துவதில்லை.
மனிதன் தேட ஆரம்பித்தான்.
( தொடரும்)
0 comments:
Post a Comment