திரைப்படம்
ஒரு கலைவடிவமா..?---5
எனக்கு இப்போது 83 வயது ஆகிறது> நான் சிறுவனாக இருந்த பொது தி.லி டவுன் ராயல் டால்க்கீசில் பள்ளியிலிருந்து அழைத்து சென்று ஒரு படம் காட்டினார்கள் .சிறப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தோம். ஊ ஞ்சல் ஆடுபவரின் கால்கள் நம் முகத்தில் இடிக்கும் வரை வரும். ஓ என்று கத்திக்கொண்டு கண்ணாடியை எடுப்போம். அதாவது அப்பொழுதே மூன்றாவது பரிமாணம் பரிசோதனை முயற்சியாக வந்துவிட்டது.
கதைப்படங்கள் பின்னர் வந்தன . இப்போது வட ஐரோப்பாவில் சில அலைவரிசையில் 3d ஒளிபரப்பாகிறது. முப்பரிமாணம் வந்து விட்டது .
அதற்கு அடுத்தபடியாக ஒரு இளைஞனும் அவன் காதலியும் ரோஜா தோட்டத்தில் சநதிக்கிறார்கள் என்றால் பார்வையாளர்கள் நாசியில் ரோஜாவின் நறுமணம்வீசும். அளவுக்கு முன்னேறியிருக்கிறது.இது பரிட்சார்த்தமான நிலையில் உள்ளது.
"தாகம் "என்னும் நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சி நடந்தது> அதனை தயாரிப்பில் நானும் செயல்பட்டேன். "தீக்கதிர் "பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தோழர் முத்தையா அவர்களை ."நிபெரிய நடிகனாகவுன்னைஅனுப்பலை ஐயா ! அங்க ஒரு "யூநிட்" ஆரம்பிக்க முடியுமா னு பாரும் " என்று சொல்லி அனுப்பினார் .
அந்தப்படத்தில் நான் நடித்தேன்> திரைப்படம் பற்றி பல விஷயங்களை நேரடியாக கற்றேன்.
ஒரு இணை இயக்குனர்,லட்சுமிநாராயணன்> ஒரு இணை காமிராக் கலைஞர் கோபால் ஓப்பனை கலைஞர் கோபி என்று சிலரை அணுகி ஒரு யூனிட் ஆரம்பிக்க முயன்றேன்.
திரை உலகிற்குள் சென்று சிராய்ப்பு இலாமல் வெளிவந்தவர்களில் நானும் ஒருவன். மிகவும்முக்கியமான பணி என்றால் தொகுப்பாளர் பணியைத்தான் சொல்லவேண்டும் .என் அனுபவம் ஒன்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன் .
அவர் ஒரு தொகுப்பாளர். ஒரு பாடல்காட்ச்சிய தொகுத்துக் கொண்டிருந்தார். மிகவும்பிரபலமான நடிகர் வரும் காட்ச்சி. பாடலின் வரிகளும் LIPMOVEMENT ம் சரியில்லை. எடிட்டர் ஒருநாள் புறாவும் கஷ்டப்பட்டு சரியாகவில்லை . எரிசசலில் தன் பக்கத்தில் இருந்த உதவியாளரை ஒரு காப்பி வாங்கிவர செய்துவிட்டு தனியாக போய் அமர்ந்து விட்டார் . உதவியாளர் 18 வ ய து. ஆர்வக்கோளாறில் இவரிடம் வந்துள்ளார். காபியை குடித்த எடிட்டர் சோபாவில் அயர்ந்து விட்டார் . உதவியாளர் மூவியாலோ வில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார் . எடிட்டிங் ஆபிசில் ng SHOT என்று ஒரு டப்பா வைத்திருப்பார்கள் .நோ குட் ஷாட் என்பார்கள் . அதில் எப்போதோ வேண்டாம் என்று போட்ட ஒரு strip இருந்தது.அது TRAOLY யில் . எடுக்கும் பொது தவறாக எடுக்கப்பட்ட ஒன்று> ஓரூரின்கண்ணமும்.கழுத்து நரம்பும் மட்டும் தெரியும் துண்டு படம் .பையன் அந்த துண்டை எடுத்து ஒட்டி பார்த்தான். உதட்டசைவும் குரலும் ஒன்று சேர்ந்தன .பையன் கத்த எடிட்டர் எழ பிரசினை முடிந்தது..அந்தப்படம் வெளியானதும் பத்திரிகைகள் அந்த நடி \கரின் கன்னமும்,கழுத்த்து நரம்புகளும் நடித்த கதையை விலாவாரியாக எழுதி சிலாகித்தன .
திரைப்படம் என்பது ஒரு கலைவடிவமா? ஆம் !
அது ஒரு தொழில் நுணுக்கப் புரட்சியா ? ஆம் !
திரைப்படக்க்கல்லூரியில் படித்த ஒரு மாணவனை கேளுங்கள்.!
திரைப்படம் என்றால் என்ன ?
what is cinema ?
it is sound and light !!
என்பது தான் அவன் பதிலாக இருக்கும் !!!
(நிறைவுற்றது)
0 comments:
Post a Comment