Tuesday, October 09, 2018




(விமர்சனம் அல்ல )














"பரி ஏறும்  ..." திரைப்படத்தை ,

முன் நிறுத்தி ,

டாக்டர் ரவிகுமாருடன் .....!!!





நான் "பரி ஏறும்  ..." படம் பார்க்கவில்லை.பார்க்கும் வாய்ப்பும் இல்லை/ ஆனால்  வலைத்தளத்தில் இந்த படம் பற்றிய விமரிசனங்கள், write up கள் , கட்டுரைகள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த படம்பற்றிய நேர்மறையான  எழுத்துக்கள் சிறப்பாக உள்ளன. 

இந்த படம் பற்றி  திரைப்பட ஆய்வாளர், கவிஞர்,ஓவியர் ஸ்ரீரசா என்று அன்போடு அழைக்கப்படும், டாக்டர் ரவிக்குமார் அவர்களோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன் .

மிகவும் வித்தியாசமான விமரிசனத்தை வைத்தார். 

"திரைப்படங்களில் சாதி பிரசினை இதற்கு முன்பும் சித்தரிக்கப்பட்டு  வந்திருக்கிறது.திரைப்பட தயாரிப்பாளர்களும் சரி, இயக்குனர்கள்,மற்றும் எழுத்துத்தாளர்களும் சரி ஒரு தலித் இளைஞன் மேல்சாதி அல்லது இடைநிலை சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து சுகமாக வாழ்கிறான் என்பதை மட்டும் சித்தரிப்பதில்லை " என்றார் .

வலைதளத்தில் அவர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார் . " மதுரை வீரன் காலத்திலிருந்து இப்படியான சித்தரிப்புகள் தான் நடந்து வருகிறது. .சக்கிலியர் சாதியில் பிறந்த மதுரைவீரன் நாயக்கர் அரண்மனை பெண்ணை காதலித்தால் கால்மாறு  கைம்மாறு வாங்கப்படுவான் என்று வருகின்றது.பாரதி கண்ணம்மா , பருத்தி வீரன், என்று பார்த்தாலும் இதுதான் நிலைமை . ரஞ்சித் தயாரிப்பிலமாரி செல்வராஜ் தயாரிப்பிலும் இது தான் நிலைமை .ஏன் ? " அவர் கேள்விக்கு பதில் சொல்பவர் இல்லை.

பள்ளர் சாதி இளைஞர் பிராமணப்பெண்ணை மணந்து கொண்டு சுகவாழ்வு வாழ்வதும் அரசியல் பிரமுகராக வருவதும் என் இவர்கள் கண்களில் படமறு க்கிறது.  பயமா ?

இதோடு நானா நிற்கவில்லை> எனக்கு தெரிந்த மனநல மருத்துவரை கேட்டபோது அவர் சொன்னது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

"பலநூறு ஆண்டுகளாக இந்த மக்கள் சாக்கடைப்புழுக்களாக நடத்தப்பட்டனர்.இப்போது தான் அதுவும் கடந்த 60து 70து  ஆண்டுகளாகத்தான் கொஞ்சமாக மிகவும் கொஞ்சமாக கல்வி அறிவு பெற்று மிகசிறு பகுதியினர் மனிதர்களாக நடத்தப்படுகின்றனர் .தங்களுக்கு விடிவுகாலம் வரதா  என்று ஏங்கி தவிக்கின்றனர் ."அடித்தால் திருப்பி அடி " என்று சொல்ல அவர்களிடையே ஒரு சீனிவாசராவ்,ஏ .பாலசுப்பிரமணியம், பி.ராமமூர்த்தி இல்லையே .தங்களுடைய வாரிசுகளுக்காவது இந்த இழிநிலை கூடாது என்று நினைக்கிறார்கள் . தங்கள் வாரிசுகளாவது மேல்சாதி  அல்லது இடைநிலைசாதியில் மணவாழ்க்கையை அமைத்துக்கொணடால்  இதை தாண்டிவிட முடியுமா என்று பார்க்கிறார்கள் . தங்கள்வாரிசுகள் சாதி மறுப்பு திருமணம் செய்வதை ஆதரிக்கவோ ஊக்குவிக்கவோ செய்கிறார்கள் " என்று விளக்கினார் .

எனக்கு ஒரு கருத்து உண்டு . பட்டியல் இணைத்து பையன் ஒரு ராஜ்குமாரியைத்தான் மணமுடிப்பேன் என்று அலையவில்லை. இளவரசனும்,சங்கரும் உலகமகா அழகி என்பதற்காக காதலிக்கவில்லை. மனம் ஒப்பி நமது பக்கத்துவீட்டு,எதித்துவிட்டு பெண்போன்ற வரைதான் காதலித்தார்கள். மணம் செய்து கொண்டார்கள் .

பரியன்  பழகும் பெண் மூக்கும் முழியும் கறுப்பாகஇருந்தாலும் நாம் அவர்களை இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று தான் ஆசைப்படுவோம்.

திரைப்படங்களில் ஏன் இப்படி உலகமகா அழகியாக சித்தரிக்கிறார்கள் ?

அதே சமயம் இந்த "பரி யேறும் பெருமாள் " சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் ஒரு உரையாடலை  ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்,வாலிபர்,மாதர் இயக்கங்கள் இந்த உரையாடலை பரவலாக கொண்டுசெல்லவேண்டும். !!!


      

0 comments: