Tuesday, October 30, 2018





கதை ,

கற்பனை ,

திருட்டு !!!




"சர்கார்" திரைப்படம் பற்றிய சர்ச்சை ! வருண் ராஜேந்திரன் தன்னை அங்கிகரிக்க வேண்டும் என்கிறார். முருகதாஸ் என் கதை என்கிறார். இருவரும் சமாதானமாகிவிட்டார்கள். 

நான் இந்த அசிங்கம் பற்றி எழுதப்பபோவதில்லை.

"கற்பனை என்பது இல்லை "(there is no fiction ) என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

இது அறிவியல்.

இல்லாததை கற்பனை செய்யமுடியாது. இந்த உலகம் நமக்கு வெளியே இருக்கிறது. இதை நாம் எப்படி அறிகிறோம்.நமக்கு அது எப்படிப்புலப்படுகிறது .

பார்க்கிறோம். கேட்கிறோம்.நுகர்கிறோம்.ருசிக்கிறோம். தொடுகிறோம். ஆகவே புலப்படுகிறது.

நமக்கு வெளியே இருப்பதை  நாம் நம்புலன் களின் வழியாக உணர்கிறோம்.இந்த உணர்வின் முதிர்ச்சியில் அறிகிறோம்.

வெளியே இருப்பது உண்மை .அப்படி இருப்பதால் தான் நமக்கு புலப்படுகிறது .இல்லாதது புலப்படாது. புலப்படாததை கற்பனை செய்யமுடியாது.

இந்த கட்டுரையை படிப்பவர்கள் ஒரு பரிசோதனை செய்யலாம்.

ஐந்து வினாடிகள் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.எதை வேண்டுமானாலும் கற்பனை செய்து பாருங்கள். அது நீங்கள் இதுவரை பார்த்திராத ,நுகர்ந்திராத,கேட்டிராத,ருசித்திராத தொட்டிராத ஓன்றாக இருக்கவேண்டும்.

முடியுமா ?

முடியாது.

அதனால் தான் இல்லாத கடவுளுக்கு கூட இருக்கும் மனிதனின் கண்,மூக்கு,கை ,கால்,சிங்கம்,யானை என்று தெரிந்ததாய் உருவகப்படுத்துகிறோம். 

இல்லாத ஒன்றை கற்பனை செய்ய முடியாது.  

கற்பனை என்பது இருந்த ஒன்று. 

அப்படியானால் copy right எப்படி வந்தது?

நானும் நீங்களும் உணவு விடுதிக்கு போகிறோம்.உனவு அருந்திய பின்  கடையில் வெற்றிலை  போடுகிறோம். விடுதியின் பக்கத்தில் வீசி எறியப்பட்ட எச்சில்   இலையில் மிதமிருப்பதை ஒருவன் எடுத்து உண்கிறான். அதனைப்பார்த்த நீங்கள் பரிதாபப்படுகிறீர்கள்.அது உங்கள் மன தை வாட்டுகிறது .அதனை ஒருகவிதையாக,கதையாக கட்டுரையாகஎழுதுகிறிர்கள். . நான் அதை பற்றி கவலையில்லாமல் கட்டமண்ணாக    இருக்கிறேன். உங்களையும் என்னையும் வேறுபடுத்த எழுதிய உங்களுக்கு அந்த உரிமை கொடுக்கப்படுகிறது.

கலை இலக்கியம் கற்பனை என்று அந்த ஜெர்மனிய  கிழவன் எழுதியதை படிக்கப்படிக்க பிரமிப்பாக  இருக்கிறது

0 comments: