Wednesday, April 10, 2019




நெகிழ்ச்சியான

பயணம் ....!!! 





தோழர் ராஜேஸ்வரி -வேணுகோபால் தம்பதியரின் செல்வி இந்து - அஸ்வின் திருமணத்திற்காக சென்னை வந்திருந்தேன் .

6-4-19 அன்று மாலை 6மணிக்கு வரவேற்பு நிகழ்ச்ச்சியில் கலந்து கொண்டேன். சுமார் 7 மணிக்கு  இரா .தே . முத்து மற்றும் சில தோழர்களோடு மார்க்சிஸ்ட் கடசியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வந்திருந்தார்கள்.அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் .

பேச்சின் ஊடே  "வரவேற்புக்கு வந்ததில் மகிழ்ச்சி. அதை விட உங்களைப்பார்த்தது மிகவும் மகிழ்ச்சி  "என்று குறிப்பிட்டார்

1971ம் ஆண்டு தேர்தலின் பொது மதுரை வந்திருந்தார்> அப்போது அவர் மாணவர் . அண்ணாமலையில் அறிவியல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்> மாணவர் இயக்கத்திலும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அவரோடு உடன் படித்துக் கொண்டிருந்த ராமலிங்கம் கதிரேசன் என்ற அருணனும் தேர்தல் பணிக்காக வந்திருந்தார் .

மதுரை 1 நம்பர் சந்தில்  அப்போதுமாநிலக்குழு அலுவலகமும் தீக்கதிர் அலுவலகமும் செயல்பட்டு வந்தது. கே. எம் தலைமையில் தீக்கதிர் வந்து கொண்டிருந்தது வ.உ சியின் பேரன அ சண்முசுந்தரம் ,கோவைஞனபாரதி     ஆகியோரோடு நானும் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

மாணவர்கள் இருவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் .45   ஆண்டுகள் ஓடிவிட்டது .

  "நீங்கள் மாநில செயலாளர்.நான் வந்து உங்களை   சந்தித்து இருக்க வேண்டும் ".என்றேன் .

   "உங்களை .எத்தனை ஆண்டுகள் கழித்து பார்க்கிறேன் .மகிழ்ச்சி தோழர்" என்கிறார்.தோழர் KB . 


மனம் நெகிழ்ச்ச்சியடைய கண்கள் கசிந்தது .1971ம் ஆண்டு நான் பார்த்த மாணவன் அல்ல அவர் 


ஒருபுரட்ச்சி கர கட்சியின் தலைவர் .


"லால் ஸலாம் காம்ரேட் "


0 comments: