மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி . அதற்கு முன்னால் ஒரு இரும்பு சுத்தியல் மூலம் பல்லை உடைத்து விழ செய்கிறார்கள். இடுக்கியை கொண்டு அவன் விரல் நகத்தை சதையோடு பிய்த்து எறிகிறார்கள் .அவன் முழங்கை ,முழங்கால் ,மூட்டுகள் கணுக்கால் இணைப்புகளை மர சுத்தியலால் நொறுக்குகிறார்கள். அவனை தூக்கிலிடுகிறார்கள் .அவன் சடலம் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்படுகிறது. அவன் தான் "சூரிய சென் ".
யுகாந்தர் என்ற அமைப்பை உருவாக்கி தனி படைய நிறுவினான்> படைக்கு ஆயுதம் சேகரிக்க சிட்டகாங்கில் உள்ள ஆயுதக் கிடங்கை தாக்கினான் .அதில் பிடிபட்ட சூர்யா சென் தூக்கிலிடப்பட்டான்>சூர்யா சென்க்கு உதவியவர்கள் கணேஷ் கோஷும்,ஆனந்த் சிங் என்பவனும்.கணேஷ் கோஷ் தப்பி சந்திரநாகூரில் தலை மறைவாக இருந்தான். அவனும் கைது செய்யப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டு அந்தமான் தீவிற்கு அனுப்பப்பட்டான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
1979 மாண்டு சென்னையில் citu வின் அகில இந்திய மாநாடு நடந்தது. 4000 க்கும் மேற்பட்ட சார்பாளர்கள் கலந்து கொண்ட பிரும்மாண்டமாநாடு. முற்றிலும் வி.பி.சிந்தன் தலைமையில் ஏற்பாடுகள் நடந்தன . அதனை cover செய்ய தீக்கதிரிலிருந்து வி.பரமேஸ்வரன் சென்றார்? அவருக்கு உதவியாக நான் சென்றேன்.
தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர் ."இந்து " ராம் ஒரு தொண்டராக செயல்பட்டார். மத்திய குழு அலுவகத்தில் பணியாற்றிய என்.ராமகிருஷ்னன் ( தோழர் சங்கரய்யாவின் தம்பி ) வந்திருந்தார் .முத்த தலைவர்களை சந்தித்து அவர்களின் பெட்டியை தீக்கதிரின் வார மலரில் போடுவது என்னுடைய நோக்கம் .ராமகிருஷ்ணனின் உதவியை நாடினேன்." ஆகா அருமையான யோசனை. வாருங்கள். அதோ நிற்கிறாரே அவர்தான் கணேஷ் கோஷ். சிட்டகாங் ஆய்தகிடங்கு தாக்குதலில் ஈடுபட்டவர்> அவரிடம் வாங்குங்கள். ஆனால் லேசில் அமையாது "'என்றார் .
விபிசி யின் உதவியை நாடினேன்.அழைத்து சென்றார்.
"com ! gosh -this is ThiLipan ! our dailis reporter.he wants to have an interview from you!" விபிசி சென்றுவிட்டார்>
"what interview ? no ..no nathing doing !"
"com .I want to write your story in our daily. Pl help me !"
"story .. I dont have any story. iam humble worker. no ..no.."
"our younger generation must know the past ?"
"I dont have any oaast no..no.."
"com. I know you are Ganesh the revoutionary> you are part and parcel of Cittakaong attack. . I know some thing more .Do not know how much true .If you dont give me the interview I will write what I know"...
"are you threatning Me. Iwil go to the court. "
"youwill not com. because it is our own daily..
there was a smile in his face. and he said "All right young man> iwill give you fifteen minites . Tomorraow morninga between 9.Am to 9.15
and he left hariedly.
எனக்கு சந்தோசம் தாங்கவில்லை> எப்பேர்ப்பட்ட மனிதர்> ஆகா .இரவு முழுவதும் அவரையே நினைத்துக் கொண்டிருந்தேன். மறுநாள் காலை விபிசியா சந்தித்து அவர் தங்கி இருக்கும் இடத்திற்கு எப்படி போக என்று கேட்டேன்.
"என்னப்பா சொல்ற அவர் நேத்து ராத்திரியே விமானத்துல கல்கத்தா போயிட்டார் ! நேத்து intervew வாங்கலையோ ? "என்றார்..
"ஏன் தோழர் இப்படி பண்ணிட்டார் ! இவர்களின் தியாகம் நம்ம அணிகளுக்கு தெரியவேண்டாமா/?என்று வருத்தத்தோடு கேட்டேன்.
"அவர்கள் தியாகம் செய்தது நாட்டுக்காக மக்களுக்காக. interview க்காக இல்லை.அவர்கள் தான் தனது என்ற நிலையை கடந்த சித்தர்கள்." என்றார்
விபிசி என்ற சித்தர்.
0 comments:
Post a Comment