Sunday, April 21, 2019




"மதுபானி" ஓவியமும் ,

அந்த மணமகளும் ....!!!




ராஜிவேணுகோபால் வீட்டிற்கு சென்றிருந்தேன். அது 2010 ஆண்டாகயிருக்கலாம் .தோழர் ராஜியின் தாயார் -தந்தை இருவருமே எனக்கு பரிச்சையா மாணவர்கள் ,ராஜி சிறுகுழந்தையாக இருந்த போதே தூக்கி வைத்து விளையாடியவன் நான்  .

அந்த சின்னஞ்சிறு குழந்தை இன்று தோழர் ராஜி. சென்னை தலைமை அலுவலக ஊழியர் சங்க பொறுப்பளர்களில் ஒருவர்".மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை அசைக்கத்தான் செய்யும்."

ராஜியின் மகள் "இந்து "அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.இந்துவின் தம்பி "நந்தா " படு சுட்டி..

பாரதியின் புதுமைப்பெண் இந்து.சாதி மறுப்பு,சாமி மறுப்பு, மூட நமபிக்க்கை மறுப்பு,பெண்விடுதலை என்று தனித்து நிற்கிறாள் இந்து .பொறியியல் பட்டப்படிப்பில் ஐந்து ஆண்டுகள் படித்து, கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவள்.

ராஜி தம்பதியரை விட  இந்த பெண்ணின் எதிர்காலம் பற்றி அதிகம் கவலைப்பட்டவன் நான் . நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே ! அவள் ஒரு ஆதர்சமாக எடுத்துக்காட்டாக துலங்க வேண்டுமே என்ற கவலை எனக்கு உண்டு. அடிக்கடி ராஜியையும் வேணுவையும் அழைத்து அவள் திருமணம் பற்றி விவாதிப்பேன்,நானே சில இடங்களை யோசனை கூறினேன்> அமையவில்லை.

திடீரேன்று இருநாள் வேணு தொலைபேசி மூலம் தெரிவித்தார்> இந்து விற்கு திருமணம் முடிவாகி விட்டது என்றார் . மத்திய அரசு ஊழியர் சங்கத்தில் பொறுப்பாளராக இருக்கும் சுஜாதா - கிருஷ்ணன் தம்பதியரின் புதல்வன் அஸ்வின் தான் மாப்பிள்ளை. "தாலி " கட்டிக்கொள்ள மாட்டேன் என்று கூறி வந்த இந்து 93 வயதான ஒய்வு பெற்ற துணை கலெக்டர் வரதாசசாரி தாத்தா வின் வேண்டுகோளை ஏற்று கொண்டது மனதுக்கு நிம்மதி அளித்தது. வேறு எந்த வைதிக சடங்குகள் இன்றி அற்புதமாக நடந்த இந்த திருமணத்திற்கு முத்து மீனாட்ச்சியோடு  நானும் சென்றிருந்தேன்..என் வாழ் நாளில் எனக்கு கிடைத்த அற்புத தருணம் அது

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூலத்திற்கு பதிலாக "இசைத்தட்டாக சுழலட்டும் இனிய வாழ்க்கை " என்ற வேணுகோபாலன் அவர்கள் எழுதிய நூல் கொடுக்கப்பட்டது.

அந்த நூலின் முகப்பு  படபடத்தை வரைந்தவர் மணமகள் இந்து.

"மதுபானி " ஓவிய வகையைச சேர்ந்தது இந்த படைப்பு.வடக்கு பீகாரின் மதுபானி கிராமமே இதற்கு புகழ் பெற்றது. இதனை மிதிலை பிராந்தியம் என்றும் கூறுவார்கள் .பிகார்-நேபாள எல்லைப்பகுதி இது .இங்குதான் ஜனகன் அரசனாக இருந்தான் என்பார்கள்> இங்கு புராணகாலத்து சீதா பிறந்ததாக நமபுகிறார்கள்.

மதுபானி  ஓவியம் வடிவியல் ( Geometric ) சார்ந்தது .வெறும்   கோடுகளால் ஆனது கோடுகளுக்கு இடப்பட்ட வெளியை சிறு சதுரம்,வட்டம், முக்கோணம என்று நிரப்புவார்கள்.அப்படி நிரப்பும் போதே அதில் ஒரு வடிவம் தோன்றும்படி அமைப்பார்கள்.உலகப்புகழ் பெற்ற இந்த ஓவியக்கலையை மதுபனி  கிராமத்து மக்கள் பாதுகாத்து வருகிறார்கள்.

இந்து என் கட்டிடக்கலையில் வேணு சேர்த்தார் என்பதற்கு எனக்கு விடை  கிடைத்தது .

ராஜி-வேணு தமப்தியருக்கு ஒரு வேண்டுகோள். நந்தா வுக்கும் திருமணம் நடக்கும். அப்போது  இந்தக் கிழவனாயும் முத்து மீனாட்சி யையும்  சக்கர நாற்காலியில் வைத்து நகர்த்தி கல்யாண  மண்டபத்தில் பார்வையாளனாக வைக்க வேண்டும் .


வாழ்த்துக்கள் "இந்து-அஸ்வின் " தமபத்தியரே !!!









0 comments: