Sunday, January 13, 2013

நீயா ?  நானா ?   வின்

"முகம்" .........!!!


"அகத்தின் அழகு முகத்தில் தெரியும் " என்ற சொல்லாடலை அக்கு வேறு  ஆணி வேறாக முகம் என்ற தலைப்பில் ஆராய்ந்தார்கள் ஸ்டார் விஜயின் நீயா ? நானா ? நிகழ்ச்சியில்.!

முகத்தின்வசீகரம், பெண்களுக்குபிடித்த முகம்,ஆண்களுக்கு பிடித்த முகம்,
மனித வள மேம்பாட்டு   நிபுணருக்கு பிடித்தமுகம், மனித வியல் நிபுணருக்கு பிடித்த முகம், நடிகருக்கு  பிடித்த  முகம்  என்று  பேசினார்கள்! 

முகத்தைப் பார்த்து ஒருவரின் மனதை அறியமுடியுமென்பதும் விவாதிக்கப் பட்டது!  நிச்சயமாக மனதை அறிய முடியாது என்று ஒரு அம்மையார் சொன்னதுமுத்தாய்ப்பாக  இருநதது !

மகிழ்ச்சியாகவும், நகைச்சுவையோடும் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் சாந்தி என்ற அம்மையார் வந்தார் !

சாந்தி சிறுவயதிலேயே அழகாக இருப்பார் ! அவருடைய தாயாருக்கு தன மகளின் அழகில்பெருமை ! சீவி,சிங்காரித்து,பூவும் பொட்டும் வைத்து அழகு பார்ப்பார்  மகளை ! உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது
ஒரு விடலைப் பையன் சாந்தியின் கழுத்தில்  மஞ்சள் கயிறை கட்டிவிடுகிறான் ! பெரியவர்கள்,சாந்தியின் தாயார் ஆகியோர் அவனுக்கே சாந்தியை  மணமுடிக்க சம்மதிக்கிறார்கள் ! சாந்தியின் அழகிற்காகவே அவரை திருமணம் செய்ய விரும்பியதாகவே அந்தப் பையனும் சொல்கிறான் ! சாந்தியும் எற்றுக் கொள்கிறாள் ! திருமணம் நடந்த பின் தான் அந்தப் பையனுக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரிய வருகிறது ! சாந்திக்கு பெண் குழந்தை பிறக்கிறது ! கணவனின் குடி தொல்லையும் அதிக மாகிறது ! இரண்டாவதாக ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிறாள் சாந்தி! கணவனின் இம்சைபொறுக்க முடியாமல் தாய்வீட்டிற்குவருகிறாள் சாந்தி ! திரும்பவில்லை !

கணவனுக்கு கோபம் ! அழகான சாந்தியை வேறு எவனாவது ....!  வக்கிர புத்தி ! ஆணல்லவா ! சாந்தி வீட்டிற்கு வருகிறான் ! அங்கு தங்குகிறான் ! இரவு குழந்தைகளோடு தூங்குகிறான் ! அருகில் இருக்கும் மனைவியின் முகத்தில் திராவகத்தை ஊற்றி விட்டு ஓடிவிடுகிறான் ! இது  நடந்து  இருபது  வருட மாகியிருக்கும் !

அந்த சாந்திதான் பாதி எரிந்த முகத்தை மூடிகொண்டு வந்திருக்கிறார்  !

ஒருங்கிணப்பாளர் சாந்தியிடம் " உங்கள் கணவர் மீது உங்களுக்கு கோபம் வரவில்லையா ? என்று கேட்டார் !
" யார் மீதும் கோபம் வரவில்லை ! வருத்தம் --இப்படியாகிவிட்டதே -என்ற வருத்தம் இருந்தது !" அரங்கமே அதிர்ந்து மோனித்தது !


"அப்போது எனக்கு இருபத்தினான்கு வயது ! என் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் ! வசதியில்லை ! பதிவுத்திருமணம் செய்யலாம் ! அதற்கு கணவரின் ஒப்புதல் வேண்டும் ! இல்லையென்றால் 10000 ரூ லஞ்சம் கேட்கிறார்கள் ! என்னிடம் பணம் இல்லை ! "
  
மீண்டும் அரங்கத்தில் அமைதி !

பங்கு பெற வந்திருந்த "திரு நங்கை " ஒருவர் ,பெண்மைக்காக பல  அறுவை சிகிச்சை செய்து கொள்கிறோம் நாங்கள் ! கொடுரமாக சாந்தியை தாக்கியதை நினைக்கும் போது ....! "  


அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை !
















Wednesday, January 09, 2013

சாதியை மட்டுமல்ல !

சாமியையும் மறுத்த காதல் !!


சரியாக 40 வருடங்களுக்கு முன்னால்   நடநதது !  அந்த இளைஞர் பெரியகுளம் எல்.ஐ .சி அலுவலகத்தில்பணியாற்றிக் கொண்டிருந்தார்.! அவர் கிறிஸ்துவர் !  அலுவலகத்துக்கு அருகில் வசித்துவந்த பிராமணர் குடும்பத்து பெண்ணை காதலித்தார். ! . இருவரும் திருமணம் செய்து
கொள்ள முடிவெடுத்தனர். ! சங்க நிர்வாகிகளிடம் உதவும்படி
கேட்டுக்கொண்டார்.!

தலைமை நிர்வாகிகள் மதுரையிலிருந்ததால் அவர்களை அணுகினார் ! தலைமை திருமணத்தை நடத்த உதவ சம்மதித்தது.!சங்கத்தை பாதிக்காமல், உள்ளுரில் சிக்கல்வராமல் காதும் காதும் வைத்தபடி காரியமாற்ற முடிவாகியது !

மூத்த தோழர்கள் நாராயணசிங்,கிருஷ்ணன் தண்டபாணி,தனபால்பாண்டியன்
 ஆகியோர்  முன்னின்று பணிகளை செய்தனர். ! ரகசியமாக மணமகளையும், மணமகனையும் கொண்டுவருவதிலிருந்து சகலமும் திட்ட மிடப்பட்டது ! பொருக்கி எடுக்கப்பட்ட தோழர்களுக்கு என்னன்னா செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது!. அவர்களுக்கு எதற்காக இதனச் செய்கிறோம் என்பது சொல்லப்படவில்லை.! ராணுவத்தில் logistic என்பார்களே  அதுமாதிரி காரியங்களை செய்வதி வல்லவரான நாரயண்சிங்  முழுப் பொறுப்பையும் செய்தார் ! திருமணம்  செய்விக்கும்  பூசாரியை கொண்டுவரும் பொறுப்பு  எனக்கு அளிக்கப் பட்டது.

1972ம் ஆண்டு .ஜனவர் மாதம் 10ம் தேதி !  பெரியகுளம் அக்கிரகாரத்தில் வக்கீல் வீட்டு முன் இருந்த டாக்சி புறப்பட்டது ! அதில் மணப்பெண்  அமர்ந்திருந்தார். ! நகரத்திற்கு வெளியில் இருந்த பெட்றோல் பங்கில்காத்திருந்த மணமகனோடு  எல்.ஐ.சி தோழர் காசி அவர்களும்

 காரில்  ஏறி கொண்டார் !  மதுரை  நோக்கி கார் புறப்பட்டது ! காருக்கு முன்னாள் எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரி ஒருவர் பைலட் ஆக பாதுகாப்பிற்கு வந்தார்!  .

மதுரை ரயிவே காலனியில் உள்ள தோழர் தியாகராஜன் அவர்கள் வீட்டில் மணமகளை இறக்கிவிட்டு ,மணமகனை மதுரை அரசமரம் சந்திலுள்ள பொதுத்தொழிலாளர் சங்கத்தில் அந்த மணமகனை தங்கவைத்தார்கள் ! மறுநாள் காலை 10 மணிக்கு திருமணம் !(11-1-72)

எனக்கு இதெல்லாம் தெரியாது !  எனக்கு சொன்னதெல்லாம்,காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளர் தொழார் எ .பாலசுப்பிரமணியம் அவர்களை (அவர்தான் திருமணத்தை நடத்தும் பூசாரி)பொதுத் தொழிலாளர் சங்கத்துக்கு  அழைத்துவரவேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது!

நான் எ.பி அவர்களொடு சங்கத்திற்குள் நுழைந்தேன் !மணக் கோலத்தில் . அங்கு இருந்தார்கள். ! திருமணம்முடிந்து மீண்டும்     எ.பி யை கட்சி அலுவலகத்திறகுஅழைத்துச்  சென்றேன் ! திருமண சடங்கு  நடக்கும்  போது  மணப்பெண்ணிடம்   விசாரித்திருக்கிறார் ! அவருக்கு வயது 19 என்று தெரிந்துள்ளது !

"ஏண்டா ! மாநில செயலாளரை ஜெயிலுக்கு அனுப்ப தீர்மானிச்சுட்டீகளாடா ? மைனர் பொண்ணை கட்டத்தின பழி ஒண்ணுதான் பாக்கி? என்றார் .
 "இல்லை! எ.பி " என்று இழுத்தேன் !
"வாயை மூடு ! "
"எவ்வளவு சீக்கிரம் ரிஜிஸ்டர் பண்ணனுமோ அவ்வளவு சிக்கிரம் பண்ணிடுங்க "
என்றார் !

அந்த இளைஞர்  தான் இன்று ஓய்வு பெற்ற பிறகும  தீக்கதிர்  அலுவலகத்தில் துணை  ஆசிரியராகப்  பணியாற்றும்  தோழர்  எம்.எஸ்.அருள் தாஸ் ! 

தோழரே ! நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே சாதியை மட்டுமல்லாமல் தன்  
சாமியையும் மறுத்து    தங்கள்கைப்பிடித்து நடந்த நாகலட்சுமி அம்மையாருக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் !


























Monday, January 07, 2013

ஆசாராம் பாபு என்ற சாமியார் ......!

(Slur on Asaaram  Bapu - a video report )


டெல்லியில் நடந்த சம்பவம்பற்றி சாமியார்கள், மடத்தலைவர்கள், இகலோக சுகங்களை விட்டு ஒழித்தவர்கள் கருத்துக் கூற  ஆரம்பித்து  விட்டார்கள் !

சில சாமியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு  உள்ளது.! என்ன எழவு என்று தெரியவில்லை ! இந்தப்பாவிகள் தான் முதலில் கருத்துச் சொல்ல துடிக்கிறார்கள்.!


டெல்லியில் பாலியல்பலத்காரத்திற்கு ஆட்ப்பட்டு, 13நாள் உயிருக்கு போரடி,மரணமடைந்த அந்தப் பெண்ணும் குற்றவாளிதான்
என்றுஆசாரம் என்ற சாமியார் கூறியுள்ளார்!.ஓசை எழ வேண்டுமென்றால்    இரண்டு கைகளும் தட்டத் வேண்டுமாம் ! தன்னை பலாத்காரம் செய்ய்வந்தவர்கள்காலில் விழுந்து காப்பற்ற முறையிடவில்லயே ஏன்? இந்த சாமி கேக்குது.! "நீ என் சகோதரன் ! தெய்வீக சகோதரன் ! என்னைகாப்பற்று என்றி அவனிடம் வேண்டாமல் இருந்தது என்?என்று இந்த தாடி கேட்கிறது ?

யார் இந்த அசாராம் சாமியார் என்று தேட ஆரம்பித்தேன் !  குஜராத்திலாச்ரமம் நடத்துகிறார் ! குஜராத் என்றவுடன் தவறாக நினைக்க வேண்டாம் ! குஜராத்தில் தான் காந்தி பிறந்தார் !"வைஷ்ணவ ஜனதோ " என்ற பாடலைக் கொடுத்த நரசி மேத்தா என்ற சித்தரும் பிறந்தார் !

இந்த சாமியாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்  உண்டு,! ஒரு மகன் ! நாராயண சாய் !  தந்தையின் தொழிலையே செய்து வருகிறான் ! (ஆன்மீகம் ) ஒரு மகள் !  பாரதி தேவி என்று பெயர் !

இவருடைய ஆசிரமத்தில் இரண்டு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு. !

இவருடைய மூத்த சிஷ்யர் பெயர் ராஜு சாந்தக்.!
இப்போது மடத்திலிருந்து வெளியேறிவிட்டார் !

சந்தோக் தொலை காட்சியில் கூறியுள்ளார்.! ஆயிரக்கணக்கில் சாமியாருக்கு சிஷ்யைகள் உண்டாம்! அவர்களுக்கு உபதேசிப்பார் ! "குரு   தேவோ பவ ! குரு  பதி பவ ! குரு  சம்மந்த் பவ !
 என்று உபதேசிப்பராம்.! குருவுடன் (தொடர்பு ) கொள்வது மோட்சத்தை அடையச் செய்யும் " என்பாராம். நான் என் கண்ணாலேயே சாமியாரின்லீலைகளை பார்த்துள்ளேன் ! (slur on Asram Bapu -viseo ) என்று கூறியுள்ளார். ! அதனால் மடத்திலிருந்து விலகி விட்டேன் ! என்றூம்குறிப்பிட்டுள்ளர் ! ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் ஒரூவர் இந்தக் அவதூறுக்கு ஆதாராமில்லை என்று கூறியதும் அந்த  காணொளியில் இருக்கிறது !

சந்தோக்கை கொல்ல  துப்பாக்கியோடு சாமியாரால்  ஆட்கள்  அனுப்பட்டதா கவும் அவருடைய காயங்களோடு காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது !












Sunday, January 06, 2013

நெகிழச்செய்த ஒளி பரப்பு .......!!!


மானவிகள் இரண்டு புறமாக அமர்ந்திருக்கிறார்கள் ! துடிப்பும், செய லூக்கமும் ,  சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட மேல்தட்டு மாணவியர் அவர்கள். ! அவர்களின் வசதியான ,மேல்தட்டு வாழ்வு அவர்களின் ஒவ்வொரு அசைவிலும்,சொல்லிலும்பட்டுத்தெரிக்கின்றது.!சென்ன நகரத்தின்  மிகச்சிறந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும்  மிடுக்கு  அவர்கள் முகத்தில்பளிச்சிடுகிற து !

மற்றொரு பக்கம் அரசுகல்லுரிகளில்படிக்கும் நடுத்தர கீழ்தட்டு மாணவிகள்
 அமர்ந்திருக்கின்றனர்! வசதி இல்லாமை அவர்முகங்களில் படர்ந்துள்ளது.!
போஷாக்கான உணவு அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை
அவர்களுடைய கண்கள் வெளிப்படுத்து கின்றன !

ஒரு புறம் விலைஉயர்ந்த கைப்பைகள் -அதில்  செல்போன்  ,விலை   உயர்ந்த  குளிரூட்டும் கருப்பு கண்ணாடி, லிப்ஸ்டிக் , நகபாலிஷ்,-! கல்லூரியில் சேர்ந்ததும் ஆறு ஜோடி காலணிகள் வாங்கியுள்ளதாக ஒருவர கூறினர் !

எதிர் புறம் சாதாரண கைப்பைகள் ! அதனுள் கொஞ்சம் பவுடர்,, ,பேனா,சில்லரைகாசுகள்! ஒருவர் கல்லூரியில்சேர்ந்த பிறகு ஐந்தாறு சூடிதார் வாங்கிகியதகக் கூறினார் ஒருவர் மெல்லிய தங்கத்தாலான சங்கிலி ஒன்றை அம்மா வாங்கித் தந்ததாகக் கூறினார்.காதுக்கு ஜிமிக்கி, விரலுக்கு மோதிரம் வாங்கியதாக ஒருவர் கூறினார்..

தங்கள் தேவைகளை தாங்களே முடிவு செய்பவர்களொருபக்கம் !  மற்றொரு பக்கம் தங்கள் ஆசைகளை முழுங்கிவிட்டு பெற்றொரின்  வசதிக்குவளைந்து வாழும் மாணவிகளொரு பக்கம் !

அவர்களிடையே விவாதம் தொடர்ந்தது.! அந்த சின்னஞ்சிறு பெண்கள் கள்ளம்கபடமற்று தங்கள்  கல்லூரி  வாழ்க்கையில் செய்த குறும்புகள், தோழிகள்,ஆசிரியர்கள்   ஆகியொருக்குபட்டப் பெயர்  வைத்தது என்று பகிர்ந்து மகிழ்ந்தனர்.

அவர்கள் கல்லூரிகளில் நடக்கும் கலைவிழாக்கள் பற்றி பேச்சு திரும்பியது.!
பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் ஆரம்பமாகின.!  அரசு கல்லுரி மாணவிகள்  தாங்கல் ஒதுக்கப்ப்டுகிறோம்  ! எங்களை அவமதிக்கிறார்கள் ! எங்களுக்கு ஆங்கிலம் பேசுவதில் சிரமம் உள்ளது  என்பதால் ஏளனம் செய்   கிறார்கள்  என்று குற்றம் சாட்டினர் .

எதிர்தரப்பு மாணவிகள் இதனை  மறுத்தனர்! தாழ்வு மனப்பான்மையின்  காரணமாக  அவர்கள்   ஒதுங்கி போகிறார்கள். என்று சமாதானம் கூறினர்!
இருதரப்பும் கூர்மையாக தங்கள் நிலையினை நியாயப்படுத்தினர்.

அடுத்து கல்லூரியில்வசதிகள் பற்றி விவாதம் நடந்தது.

தனியார் கல்லூரிகளில்குளிறூட்டப்பட்ட அரங்கமுள்ளது. படிப்பதற்கான சுழல் நன்றக உள்ளது என்று பொதுவான அபிப்பிராயத்தை மானவிகள்முன் வைத்தனர்.!

அரசு கல்லூரி மாணவி ஒருவர் எழுந்தார் ! எங்கள் கல்லூரியில்  restroom   (கழிப்பறை)கிடையாது  என்றார்! ஒருங்கிணைப்பாளர் அதிர்ச்சி அடைந்தார்! உங்கள் கல்லுரியி எத்தனை  மாணவிகள் என்று கேட்டபோது 3500 மானவிகள் என்றார்.!  தண்ணிர் கிடையாது ! சகிக்க முடியாது ! என்ன செய்கிறீர்கள் ? சமாளிப்போம் ! வேறூ வழியே இல்லை என்றால் பயன்படுத்ததானே வேண்டும்  என்றார் ஒரு மாணவி  !

அரங்கம் ஸ்தம்பித்தது !

எதிரில் அமர்ந்துள்ள மாணவிகளின் முகங்களில் அதிர்ச்சி ! சிலர்  உள்ளம்  நடுங்க ,உதடுகள் பிதுங்க கசிந்தனர்!

ஒருமாணவி எழுந்தார் !  இவ்வளவு கஷ்டத்தையும் சகித்துக் கொண்டு கல்வியத்த்தொடரும் அந்த மானவியர்க்கு மரியாதை செலுத்தும்  வகையில் எழுந்து கையொலி எழுப்புங்கள் என்றார் !
அரங்கம் எழுந்து அந்த எளிய மாணவிகளுக்கு மரியாதை செலுத்திய போது " இந்தியா ! இந்தியா ! " என்று நெகிழ்ந்து என் மனம் கதறியது !!!



( 6-1-!3 அன்று ஸ்டார்விஜய்  தொலைக்கட்சியில் நடந்த "நீயா நானா "
நிழ்ச்சி பற்றிய பதிவு )





ர் க

Wednesday, January 02, 2013

ஹரிஹரன் அவர்களே!

நீதிபதி கட்ஜு சொன்னது சரிதான் ...!


பதிவுலக நண்பர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கத்தாரிலிருந்து தோழர் ஹரிஹரன் மின் அஞ்சல்  அனுப்பியிருந்தார். நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு "சம்ஸ்கிருத மொழி 5சதம்,"மதம்" 95 சதம் "அறிவியல்" என்று அவருடைய  வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அது பற்றி விளக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

எண்பது வயதை (77) நெருங்கிக் கொண்டிருக்கும் நான் இன்றும் மார்க்சிய மாணவன் தான்.எந்த ஒருமொழியும் அதன் தோற்றம்,வளர்ச்சி ஆகியவற்றை கணக்கிட்டால் அறிவியல் ரீதியானது தான்.பயன்பாட்டில் அதன் அழுத்தம் முன்பின்னாக மாறலாம்.

சம்ஸ்கிருதம் தேவ பாஷை  என்றும் அது அந்தணைரகளின் மொழி என்றும் கிருத்துவத்தை வளர்க்கவந்த பாதிரிமார்கள் சொன்னார்கள். அன்றைய இனவாத அரசியலுக்கும்,பிரிட்டிஷ் அடிவருடிகளுக்கும் அது சௌகரியமாகப்போனது..

உண்மையில் அறிவியல் கருத்துக்கள்,தத்துவ விசாரணைகள் சம்ஸ்கிருத மொழியில் நிரம்பிக்கிடக்கின்றன. ஒரே ஒரு உதாரணத்தைப் பார்ப்போம் :

பொருட்களில் உயிருள்ளவை உயிரற்றவை என்று உள்ளன ! உயிருள்ளவகளுக்கும் உயிரற்றவைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதாவது உயிர் என்றால் என்ன? இதை இன்றய அறிவியல் விளக்கியுள்ளது!

"எந்த ஒரு பொருள் தனக்கு தேவையானதை தனக்கு வெளியிலிருந்து எடுத்துக் கொள்கிறதோ , எந்த ஒரு பொரூள் தனக்குத் தேவையற்றதை தன்னிலிருந்து வெளியேற்றி கொள்கிறதோ அது உயிருள்ள பொருளாகும் "

இதனை ஆங்கிலத்தில் catabolism ,metabolism என்கிறார்கள்.

எல்லா மதத்தினரும் "நீத்தார் நினைவினை" சடங்காக அனுசரிப்பார்கள்.இந்துக்கள் புரோகிதரை வைத்து இதனை செய்வார்கள். அவர்        "பிராணோவா அன்னம்!
                     தத் வ்ரதம் !
                      அன்னம் ந நிந்தயேத் !
                     அன்னமேவ பிராணன் !
என்று ஓதுவார். அதன் அர்த்தம் அவருக்கும், திருப்பிச் சொல்பவருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதன் பொருள்
                  உயிர்  என்பது உண்வு மட்டுமே !
                  அதிகமாகவோ குறைவாகவோ உண்ணாதே !
                  உணவை வெறுக்காதே !
                 உணவுதான் உயிர் !
கடவுளை நம்பாதவர்கள்,வேதத்தை மட்டும் நம்பி கடவுளை நம்பாதவர்கள், என்று தத்துவ வாதிகள் உள்ளனர். கபிலர்,ய்க்யவல்கியர்,பதஞ்சலி என்று அறிவியல் ரீதியாக சிந்திப்பவர்கள் உண்டு .

ஹரிகரன் அவர்களே ! நீங்களோ,நானோ அவனோ அவர்களோ எற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நீதிபதி கட்ஜு சொன்ன உண்மை  பளிச்சிடவே செய்கிறது..!