Wednesday, May 13, 2015

"மனு தர்மம் " வருவதற்கு முன்பே சாதி இருந்ததா ?

சமிபத்தில் அருந்ததி ராய் அவர்கள் தமிழகம் வந்திருந்தார்கள் ! வழக்கம் போல கம்யூணீஸ்டுகளை குறிப்பாக மார்க்சிஸ்டுகளை விமரிசித்து விட்டு போனார் !

பொது வாக "கம்யூனிஸ்டுகளை கடி"ப்பவர்கள் மாநிலத்திற்கு மாநிலம் தங்கள் நிலையை மாற்றீக் கொள்வார்கள் !

தமிழகம் வந்த அருந்ததி ராய் அவர்கள் " வர்க்கத்தையும் சாதியையும் " பார்ப்பதில் கம்யூனிஸ்டுகள் தவறிழைத்து விட்டார்கள்" என்று என்று கூறிவிட்டு போயுள்ளார் ! 

"When arguments fails you abuse " என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு ! அதுதான் நடந்துள்ளது !

சாதிகளின் தோற்றம் என்று ஒரு  நூல் ! "குணா"என்பவர் எழுதியது ! பல ஆண்டுகளுக்கு முன் எழுதியது ! அதன் அடிப்படையான  வாதத்தை ஏற்கமுடியாவிட்டாலும் அந்த நூலில் அவர் சொல்லியிருக்கும் சில விவரங்கள் வெளிச்சம் தருபவை ! 

இர்ஃபன் ஹபீப் என்ற வரலாற்றூ பெராசிரியர் "ஜாதி " என்ற வார்த்தை முதன் முதலாக பௌத்த கிரந்தங்களில் குறிப்பிடப்படுவதாக கூறுகிறார் ! 

சமிபத்தில் கட்டுரையாளர் ஒருவர் " ஆண்டான் அடிமைச்சமுதாயத்திலயே சாதியப்பிரிவினை தோன்றி விட்டதாக கூறியுள்ளார் !

இது பற்றி என்னுடைய சந்தேகங்களை தீர்க்க மார்க்சீய அறிஞரும் களத்திலிரங்கி பாணீயாற்றுபவருமான  பெரியவர் ஒருவரை தொடர்புகொண்டேன் !

"உண்மைதான் ! ஆண்டான் அடிமை சமூகத்திலேயே  சாதி தோன்றிவிட்டது ! அது பின்னர் வந்த நிலபிரபுத்துவ சமூகத்தில் கெட்டிப்படுத்தப்பட்டது ! வளர்ச்சிப் போக்கீல் மனுதர்மமாக உறுதிப்படுத்தப்பட்டது !" என்று விளக்கினார் !

இது பற்றீ இ.எம்.எஸ் அவர்கள் ,வரலாற்றாளர் கோசாம்பி,தெவி பிரசாத் சட்டோபாத்யாயா ஆகியோரை படியுங்கள் என்று கூறீனார் ! 

"இந்தியாவில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளது !" என்று கொள்வது மிகவும் சரி !

இந்த சிக்கலை உணர்வு பூர்வமாக அல்லாமல் அறிவார்த்தமாக அணுக வேண்டும் !

அணுகுவோம் !!!

  

Sunday, May 10, 2015

AB என்ற ஏ.பாலசுப்பிரமணீயம் அவர்களூம் ,

மாணவர்களூம்.............!!!



கட்சியில் மதுரை - முகவை மாவட்டம் என்று தான் சொல்லி வந்தார்கள் ! பின்னர் தான் மதுரை மாவட்டம்  அதன் பின்னர்,திண்டுக்கல்,தேனி என்று மாவட்டங்களாகபிரிந்தது ! 


மதுரை மில் தோழிலாளியாக இருந்த ABPஎன்ற  எ.பி பழனிச்சாமிதான் மதுரைமாவட்ட செயலாளராக வெகு காலம் இருந்தார்! அப்பொது தான் அவரை நான் முதன்முதலாக பார்த்தேன் ! "திண்டுக்கல் பாலு" என்று அழைப்பார்கள் ! ஏ.பாலசுப்பிரமணியம் என்ற  AB பின்னாளில் மாநில  செயலாளராக.அரசியல்தலமைக்குழு உறுப்பினராக உயர்ந்தார் ! 


மிட்லண்ட் ஹோட்டல் எதிரில் இருக்கும் அரசமரம் சந்தில் தான் பொது தொழிலாளர் சங்கம் இருந்தது ! அதற்கு முன் அதன் பின்புறம் உள்ள கருகப்பிலை கார சந்தில் ஒருவீட்டின் மொட்டை மாடியில்  ஓலை குடிசை போட்டு செயல் பட்டு வந்தது ! அங்குதான் கட்சி யூனிட் கூட்டம் நடக்கும் ! 9 பெர் உறுப்பினர்கள் ! சனிக்கிழமை மதியம் படை பதைக்கும் வெய்யிலில் மொட்டைமாடியில் வகுப்பு நடக்கும் !  AB,NS போன்ற தலைவர்கள் வகுப்பு எடுப்பார்கள் !


வகுப்பு முடிந்ததும் NS அவர்கள் "சரியாக இருந்ததா ? நல்ல புரிஞ்சிதா ? நான் பேசினது சரிதானா என்று என் போன்ற குஞ்சுகுளுபவாங்களீடம் விசாரிப்பார்! 'தலைவா தலைவா "  என்று எங்கள் நெஞ்சம் கதறும் ! எப்பேர்பட்ட தலைவர்கள் ! இவர்கள் காலடியிலமர்ந்து பாடம்கேட்ட நாங்கள் எவ்வளவுபாக்கியவான்கள் !


மாணவர்கள் இயக்கத்தை கட்டி அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தது ! 

 

ரயிவே கர்டர் பாலத்திற்கு அருகில தான் "ராஜா மில் "இடுந்தது ! அதன் பின்னால் மதுரையின் சாக்கடை நீர் வைகையில் கலக்கும் ! அதில் உள்ள திட்டுகளில் மரங்களையும் செடிகளயும் வளர்த்திருப்பார்கள் ! அதனை அங்கு குடியிருக்கும் மில் தொழிலாளர்கள் "பூந்தோட்டம் " என்று அழைப்பார்கள் 1 அங்குதான் மாணவர்களூக்கான வகுப்புகள் நடக்கும் ! எங்களைப்போன்றவர்கள் மாணவர்களை அங்கு அழைத்து வரும் பொருப்பினை ஏற்றுக் கொள்வோம் !


ஒரு முறை AB  தொடர் வகுப்பின எடுத்தார் !  வகுப்பு எடுக்கும் போது ஒரு மாணவன் எழுந்து சந்தேகங்களை கேட்பான் ! தலவரும் விளக்கமளீப்பார் ! சில சம்யங்களில் அவனுடைய சந்தேகங்கள் மிகவும் சிறு பிள்ளைத்தனமாக இருக்கும் ! வெட்டித்தனமாகவும் இருக்கும் !  இந்த மாணவன் மட்டும் அதிகம் கேட்பான் ! ஒருமுறை  AB அவர்கள் வகுப்பு முடிந்ததும் என்னை வந்து பார் ? என்றார் ! 


"எங்கு படிக்கிறாய்?"

"அக்ரி கல்லுரியில் "

"எங்கு இருக்கிறது?"

"மேலூர் ரோட்டில் 1ஆனை மலை அருகில் "

"பேராசிரியர் கிரிஜா அவர்களைத்தெரியுமா ?"

பையன் முகத்தில் ஆச்சரியக்குறி !

"அவர்களிடம்விசாரித்தேன் ! "

"அவன் தங்கமான பையன் ! மற்றவர்களூக்காக  உயிரக்கொடுத்து வேல செய்வான் ! ஆனால் அவன யாரும் சட்டை செய்யமாட்டார்கள் ! படிக்கவே மாட்டான்! சிங்கில்டிஜிட் தான் மார்க் ! எந்த மாணவனும்  அவனோடு  ஓட்டாமாட்டான் என்று பேராசிரியர் சொன்னதாக  கூறினார் ! தோழா !

பி.டி ஆர் தெரியுமா ! நமது அகில  இந்தியதலவர் ! அவர் ஆங்கிலம் பேசினால் பிரிட்டிஷ் காரனே தடுமாறுவான் ! ஷெக்ஸ்பியரையும்,மிலடனையும் கரரைத்துக் குடித்தவர் ! அவர் விக்டொரியன் ஆங்கிலம் பேசுவார் ! மாணவர் சங்க தலைவர் சிதாராம் எச்சுரி தெரியுமா? ! அவர்  நேஷனல் மெரிட் லிஸ்டில் நம்பார் ஒன் ! எம்.ஆர்.வி தெரியுமா ? அவர் சென்னை பலகலைகழக கால்பந்து குழுவில் இருந்தார் ! உலக கால்பந்து போட்டி ஹாலந்தில் நடக்கும் போது பார்த்தவர் ! பீலியின் விளயாட்டை பார்த்தவர் !   அண்ணாமலையில் தான் நான் படித்தேன் ! பல்கலைகழகஹாக்கி டீமில் விளையாடீயிருக்கீறேன் ! நாம் எங்கு இருந்தாலும் முதலிடத்தை பிடிக முயற்சிக்க வேண்டும்  ! அப்போது தான் நம்மை மற்றவர்கள் பார்ப்பார்கள். கவனிப்பார்கள் ! காது கொடுப்பார்கள் ! "


பெருமூச்சு விட்டார் AB ! " பெராசிரியர் கிரிஜா என் மனைவி ! நல்ல படி !" என்று அந்த மாணவனை விடை கொடுத்து அனுப்பினார் !


Thursday, May 07, 2015


POSTS RSS

CONTACT

LOG IN

Thursday, May 09, 2013


வடக்கே  புத்தன் சிந்தன்

V P C.....!!!

அப்பபோது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மதுரையில் செயல் பட்டு வந்தது !அங்கு சென்று சிறு சிறு பணிகளை ச் செய்வது உண்டு !

மாநில அளவில் நடை பெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கான எற்பாடுகளைச் செய்ய தலைவர்கள் வந்திருந்தார்கள் !தீர்மானங்கள் ,அறிக்கைகள் ஆகியவற்றை அவர்கள் சொல்லச்சொல்ல எழுதி கொடுக்க வேண்டும் .


சென்னையிலிருந்து வந்த அவர் சொல்லிக்கொண்டு வந்தார்! நான் எழுதி கொடுத்துக் கொண்டிருந்தேன் ! கிட்டத்தட்ட மதியம் 11 மணிக்கு பசித்ததால் உணவருந்த விரும்பினேன் ! "சரி ! எங்க போய் சாப்பிடப் போற ?" என்று கேட்டார் !

என் பையில் நான் கொண்டுவந்த தை சொன்னேன்! "நானும் சாப்பிடலாமா ?" 

நடுத்தர குடும்பம் ! நான் என்ன பஞ்ச பரமான்னமா கொண்டு வந்திருப்பேன் ! வெட்கமாக இருந்தது ! அவர் எவ்வளவு பெரியதலைவர்! 

பிரித்தேன் ! நான்கு கோதுமை பரோட்டா ! வெஞசனமாக தேங்காய் கலந்த கீரைக் கடைசல் !

 அவருக்கு இரண்டு,எனக்கு இரண்டு என்று பகிர்ந்தோம் ! 

"உன்மனைவி என்ன மலையாளப் பக்கமா?"என்று கேட்டார் !

"இல்லை தோழர் ! நான் நெல்லை மாவட்டம் ! ஆழ்வார்குறிச்சி ! திருவனந்தபுரத்து தொடர்பு உண்டு "என்றேன்!

"எங்கள் ஊர் காரர்கள் செய்வது மாதிரியே கீரை இருந்தது அதனால் தான் கேட்டேன்!"என்றார் !

நான் காப்பி குடிக்க சென்றேன்! அவர் காப்பி குடிக்க மாட்டார்! என்னுடன் காலாற நடக்கலாமென்று வந்தார்! மதுரை 1 ம் நம்பர் சந்திலிருந்து திரும்பி சித்திரை வீதியில் நடந்தோம்! அதன் முக்கில் தான் நகர் காங்கிரஸ் அலுவலகம் இருந்தது ! பலர் அவருக்கு வணக்கம் சொன்னார்கள் ! எனக்கு பெருமை தாங்கவில்லை ! முக்கில் உள்ள கோபி ஐயங்கார் கடைஅருகில்  காபி அருந்தினேன்  ! அவர் எதுவும் சாப்பிட மறுத்து விட்டார்! 

"ஆமா ! நீ என்ன பண்ற ?"

சொன்னேன் !

"கட்சில மேம்பராயிட்டயா?"

"இல்ல "  

"ஏன் ?"

என் வாய்க் கொழுப்பு ! 

"I  don't have any objection " என்றேன்!

கனமான கண்ணாடிக்குள் இருந்து  with a sharp look and broad smile 

"நீ பாதி உறுப்பினராகத்தான்முடியும் " என்றார்!

"ஏன் ?" 

"மறு பாதி கட்சிக்கு உன்னை உறுப்பினராக்க objection இருக்கக் கூடாதல்லவா!"  

எழுந்து செல்லமாக என்தலையில் குட்டி" வா! போகலாம் " என்றார்!

அவர் குட்ட வில்லை !

என்னை ஆசீர்வதித்தார் !என் கொழுப்பு கரைய !!

 இந்த ஆண்டும் என் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து விட்டேன் தோழா!

என்னை ஆசீர்வதியும்!!!


தோழர் தண்டபாணி அவர்களூம்

"வாரா" கடன்களூம்............! 



மதுரை பகுதி இண்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலவராக கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் பணீயாற்றியவர்  தோழர் எஸ்.தண்டாபாணி அவர்கள் ! சென்னை பலகலைகழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பு படித்து முதல் வகுப்பில் முதலாவதாக தேறியவர் !மிகச்சிறந்த மார்க்சீய ஊழியர்  ! 

 

மிகவும் கூர்மையான விவாதங்களூக்கு  சொந்தக்காரர் ! ஒருமுறை கூட்டத்தில் பேசும்பொது குறிப்பிட்டார் ! " வங்கிகளில் தொழில் முனைவோருக்கு கடன் கொடுக்கிறார்கள் ! அவர்கள் தொழில் ஆரம்பிக்கிறார்களா இல்லையா என்பதைக்கூட கண்காணீப்பதில்லை ! அப்படி ஆரம்பித்தாலும் கம்பெனியைமூடிவிடுகிறார்கள் ! கடன் கொடுத்தபணத்தை திருப்பி செலுத்துவதில்லை ! நானகெட்பதெல்லாம் இது தான் ! "எவன் எவ்வளவு கடன் வாங்கினான் ! எவ்வளவு ஏப்பம் விட்டான் என்பதை சொல்லக்கூடாதா ! கடன்வாங்கினவன் சொகுசா கார்ல சுத்தரான் ! எங்களுக்கு தெரிஞ்சா ரோடல அவன பாக்கும்போது "இந்தா போறான் பாரு ஒருகொடி ஏமாத்தினவண் ! இந்தா இவன் 50 லட்சம் நாமம் போட்டவன் "நு சொல்லியாவது ஆறுதல் அடைவோம் ! "என்றார் !


நாகபுரியினை சுற்றி அதிகமான சுரங்கதொழில் உண்டு !  சுரங்க முதலாளிகல் வங்கிகளீல் கோடிகணக்கில் கடன் வாங்குவார்கள் ! முக்கா துட்டு திருப்பி கொடுக்க மாட்டார்கள் ! லட்டசக்கணக்கான கொடிகளை வங்கிகள் "வாரா" கடனாக அறிவித்துள்ளது ! இதில் பாஜக,காங்கிரஸ் ,தேசிய காங்கிரஸ் என்று வேறுபாடில்லை !


இங்கு கொடீஸ்வரர்கள் தெரு என்று உள்ளது ! "குரோர்பதி கல்லி " !  இதில் யஷ்வந்த் ஸங்க்லா,

மஞ்சு ஸ்ங்கலா என்று இரண்டு சகோதரர்கள் வசித்து வருகிறார்கள் ! இவர்கள் லிக்சன் கோல் அண்ட் மினரல் பிரைவேட் என்ற கம்பெனியைனடத்தி வருகிறார்கள் ! யூனியன் வங்கியிலிருந்து 55 கோடி கடன் வாங்கியுள்ளார்கள் ! திருப்பிகொடுக்கவில்லை !


செவ்வய் கிழமை கால யூனியன்வங்கி ஊழியர்கள் அவர்கள் வசிக்கும்பங்களா முன் சென்று ஆர்ப்பாட்டம்  நடத்தியுள்ளனர் ! "ஸ்ங்க்லாவே மக்கள் பணத்தை திருப்பிக்கொடு  " என்று பதாகைகளை ஏந்தி ஆற்ப்பாட்டம் செய்துள்ளார்கள் !


தமிழ் நாட்டிலும் இப்படி ஆரம்பிக்கலாம் ! பல இன்னாள் முன்னாள் அமைச்சர்கள் வீட்டு வாசலில் ஆர்ப்பட்டம் நடத்தலாம் ! 

Saturday, May 02, 2015

இட ஒதுக்கீட்டை ஏற்கும் 

"மன வளம் " வேண்டும் ...!!!

இடது சாரி பார்வை கொண்ட திரைப்பட இயக்குனர் மிருணாள் சென் அவர்கள் புனே திரைப்பட கல்லூரியின்  பட்டமளீப்பு விழாவில் பேசினார் !

" சுதந்திரத்திற்கு முன் இந்திய குடிமகனிடம் உன் எதிரி யார் என்று   கேட்டால்  காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள இந்தியன் "பிரிட்டிஷ் எகாதிபத்தியம்"என்று ஒரே முனைப்பாக கூறுவான் !  இன்றூ வாலிபன் ஒருவனிடம் கேட்டால்  "இட ஒதுக்கீடூ" என்கீறான்!  பலசரக்கடை முதலாளியிடம் கேட்டால் தொழிலாளர்கள் என்கிறான் ! நமது பார்வையை சிதறடித்து நம்மை குழப்பி வைத்துள்ளார்கள் " என்றார் !

சமூகத்தில் தாழ்த்தப்பட்ட,மற்றும் ஒரம்கட்டப்பட்ட மக்களூக்கு "இட ஓதுக்கீடு ' சகல ரோக நிவாரணி இல்லைதான் ! நிலமும்,அதிகாரமும்,அதன் பயன் பாடும் வந்தால் தான் அவர்கள் நிமிர முடியும் ! இட ஒடுக்கீடு ஒரு நிவாரணீதான் !  Instead of solving the problem we are tackling the situatioan ! அவ்வளவுதான் !

இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்துள்ளது ! குறிப்பக இடது சாரிகள் விவாதத்தை கிளப்பி யுள்ளனர் !

மாநில அரசு ஊழியர்களூக்கு இந்த சலுகை முழுமையாக உள்ளதா ? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டியதிருக்கிறது ! தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களூக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது கிடையாது ! ஏன் ? இந்த கேள்விக்கு விடை இல்லை ! 

நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரசார் சொன்னார்கள் !  

இது பற்றி தமிழக உயர் நீதி மன்ற வழக்கறிஞர் கூறும் பொது " உச்சநீதி மன்றம் இடஒதுக்கீடூ பிரச்சினயில் தலையிட்டுள்ளது ! அதனை சட்டதிருத்தத்தின் முலம் தீர்த்தால் தான் முடியும் "என்றார் !

இன்சூரன்சு துறையில் , வேலை வாய்ப்பிலும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு உண்டு  ! அந்த உரிமையை அங்குள்ள இடது சாரி தொழிற்சங்கம் போராடி பெற்றுத்தந்தது ! பா.ஜ.க போன்ற வலது சாரிகள் அதன எதிர்த்தபோது தன்னந்தனியாக அந்தசங்கம் நின்று அந்த உறிமையை பாதுகாத்தது 1 

  

மாநில அரசு ஊழியர் சங்கங்கள் இந்த விஷயத்தில் ஏன் கள்ள மௌனம் சாதிக்கின்றன ! 

திமுக கொள்கை அளவில் நாங்கள் இதனை ஏற்கிறொம் என்று அறிவித்ததோடுசரி ! 

தாழ்த்தப்பட்டவர்களுக்காக உயிரக் கொடுக்க தயாராக இருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி ,திருமாவளவன் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் !

தொலைக்காட்சி பெட்டிக்குள்ளேயே கட்சி நடத்தும் வேல்முருகன் இது பற்றி பேச மறூக்கிறாரே !

ஏன் ?

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வந்தால் அரசுப்பணியில் தரம்   குறைந்து விடும் என்கீறார்களா?

தன்னைவிட குறந்த பணிக்காலம் கொண்டவர்கள் மேல் பதவிக்கு வந்துவிடுவார்கள் என்று மூத்த ஊழியர்கள் பயப்படுகிறார்களா ? 

இன்சூரன்சு துறையில் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக நடை முறையில் இருக்கிறதே ! 

 உலகம் பூராவும் போற்றிப் புகழும் வகையில் ஏல்.ஐ..சி பிரும்மாண்டமாக எழுந்து நிற்கிறதே !!

சம்மந்தப்பட்டவர்களூக்கு இடஒது கீட்டினை ஏற்றுக்கொள்ளும் 

"மன வளம் " வேண்டும் !

வரும் ! வரவைப்போம் !!

அக்