Friday, July 24, 2015


த.மு.எ.ச வின் இலக்கியமுகாமும்,

அவசரநிலைக் காலமும் ..........!!!



தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு இலக்கிய பயிற்சி முகாமை நடத்த முடிவெடுத்தது.

அவசர நிலைகால போலீஸ் கெடுபிடி இருந்ததால் எங்கு எப்படி நடத்துவது என்ற தயக்கமுமிருந்தது ! த.மு.எ.ச வின் துணைதலவரும் "செம்மலர்"   ஆசிரியருமான கு சின்னப்ப பாரதி அவர்கள் நாமக்கல் வக்கீல் சுப்பிர மணியன் அவர்களின் ஒத்துழைப்பொடு நாமக்கல்லில் நடத்த முண்வந்தார்!


1975ம் ஆண்டு நவம்பர் மாதம்17,18 தேதிகளில் நடத்த முடிவாகி காரியங்கள் ஆரம்பமாகியது.


கேரளத்துலிருந்து பி.கொவிந்த்பிள்ளை,திருச்சியிலிருந்து பெராசிரியர் மாறன் ஆகியோரை அழைக்க முடிவாகியது. 


L.I.C நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக ( Maneging Director ) இருந்தவர்

N.G.நாயுடு.தமிழ்,ஆங்கிலம் சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ந்த ஞானம் உள்ளவர்.மார்க்சீய அறிஞர் M.R.வெங்கடராமன் அவர்களின் நெருங்கிய நண்பர். ஓய்வு பெற்ற அவ்ர் திருப்பூரில்இருக்கிறார் ! "தமிழ் இலக்கியத்தில் சமஸ்கிருதத்தின் தாக்கம் " என்ற தலைப்பில் அவ்ர் பேச ஏற்பாடானது.!


தமிழகம் முழுவதிலிமிருந்து உறுப்பினர்களை அழைக்க முடிவானது. யார் யார் என்பதை உறுப்பினர்களுக்கு ரகசியமாக தெரிவிக்கப்படும். எந்த உறுப்பினருக்கும் அடுத்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை !அவரவர்  தனித்தனியாக நாமக்கல் வரவேண்டும். கூட்டம் கூட்டமாக இல்லாமல் தனித்தனியாக வரவேண்டும். எல்லவற்றிர்க்கும் மேலாக குடும்பத்தில் எங்கு ஏன் போகிறொம் என்பதையும் தெரிவிக்காமல் வரவேண்டும்!  


முகாம் நடக்க நான்கு நாட்களுக்கு முன்பு N.G.நாயுடு அவர்கள் உடல்நிலை காரணமாக சென்னைமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. த.மு.எ.சவின் பொதுச்செயலாளர் K.முத்தையா அவர்கள்    நாயுடு அவர்களுக்கு பதிலாக காஸ்யபன் அந்த வகுப்பை நடத்துவார் என்று கூறிவிட்டார்.

(" ராமாயணம் -உண்மையும்புரட்டும் "  என்ற நூலை K.M. அவர்கள் எழுதும் பொது வால்மீகி ராமாயனத்திலிருந்து சில வரிகளை அவருக்கு படித்து காட்டினது தவிர எனக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் சம்மந்தம் கிடையாது ) 


நோந்து நூலாகிபோய் நாமக்கல் புறப்பட்டேன்.


அப்போதெல்லம் திருவள்ளுவர் பஸ் முன்பதிவினை செய்வதில்லை ! 38 சீட் உண்டு.  48 சிட்வரை எற்றுவார்கள். சென்னை வரை நின்று கொண்டே   சென்று வந்த காலம் ! 


மதுரை பாத்திமா கல்லூரி வாசலில் இரவு பத்துமணீக்குசேலம்செல்லும் வண்டியில் நாமக்கல்லுக்கு பயணமானேன் ! கூட்டம்.! நிற்க வேண்டியிருந்தது.டிரவர் அருகில் இஞ்சின் பானட்டில் அமர்ண்டு பயணமானேன்! இஞ்சின் சூடு பனிகாலமாதலால் இதமாக இருந்தது. வாடிப்பட்டியி நின்றது ! 


மாநிறத்தில்   ஒரு இளஞர் ஏறினார். கையில் மஞ்சப்பை . தலைமுடி போலீஸ் வேட்டு பொல் இருந்தது. என்னையே பார்பது போல் இருந்தது !  அடிவயிரு கலங்கியது ! மெல்ல பின்புறம் சென்று நின்று கொண்டேன் ! அந்த கூட்டத்திலும் போலீஸ் இலைஞர் என்னை எட்டி எட்டிபார்த்துக் கொண்டே வந்தார் ! தீண்டுக்கல் வந்தது !


அப்போதெலாம் இப்போது போன்ற பெரிய பஸ்நிலையம் கிடையாது. நகரத்தின் மிகப்பேரிய மூத்திரக் கிடங்குதான் பஸ் ஸ்டாண்டு.கீழே இறங்கினேன். வேறு பஸ் பிடித்து விடலாமா என்று நினைத்தேன்.பஸ் கிளம்பியதால் ஒடிவந்து ஏறினென்  ! வண்டிக்குள் இருந்த போலீஸ் இளைஞர் என்னைப்பார்த்து அசடு வழிய புன்னகைத்தார்!


மனதிற்குள் நான் எங்கு போகிறேன் என்பது  அவருக்கு எப்படி தெரியும் என்று சமாதானம்செய்து கொண்டேன்.


நாலரை மணிக்கு நாமக்கல் வந்தடைந்தது. "படக்" கென்று இறங்கி இருட்டுக்குள் மறைந்துகொண்டேன்.  பெட்டி கடையில் ஆயிர வைசிய மண்டபம் பற்றி விசாரித்து நடையைக்கட்டினேன்,கொஞ்சதூரம் சென்று திரும்பிப்பர்த்தேன் ! நடுங்கி விட்டேன் ! போலீஸ் இளைஞர் பெட்டிகடையில் விசாரித்து கொண்டிருந்தார் !


மண்டபம் சென்றதும் பொறுப்பளரிடம் மதுரையிலிருந்து என்னை பொலீஸ் தொடருவதை சொல்லிவிடுவது என்று முடிவெடுத்தேன். வந்திருக்கும் அத்துணை பேரையும்கோழியை அமுக்குவது பொல அமுக்கி விடுவார்கள் இந்த பாவிகள் ! சொல்லி விடுவது நல்லது. அவர்கள்

பாடு என்றுகருதினேன் .


மண்டபத்தின் உள்ளே கு.சி.பா வந்தவர்களுக்கான ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் நடந்ததைக் கூறினேன் . "கவலைப்படாதீர்கள்.எதையும் சந்திப்போம்" என்று தைரியம் கூறினார் .

 வெளியே பார்த்தேன்.மண்டப வாசலில் அதே போலீஸ் இளைஞர் ! வக்கீல் சுப்பிர மனீயத்தோடு வந்து கொண்டிருந்தார்.


"இவந்தான்-இவன் தான்" என்று கு.சி.பாவின் காதில் கிசு கிசுத்தேன்!


"சும்மா இருங்க காஸ்யபன்.இவர் நம்ம கவிஞர் வேண்மணி"என்றார் குசிபா

 என்னைப் பார்த்து பயந்து கொண்டிருந்த வெண்மணியிடம்

"இது நம்ம காஸ்யபன்" என்று அறிமுகம் செய்தார் வக்கீல் சுப்பிர மணியம்.


அசடு வழிய நாங்கள் இருவரும் கை  குலுக்கிக்கொண்டோம். 

 

Thursday, July 23, 2015

ஸ்நேகலதா ரெட்டி அவர்களும்

அவசர நிலை காலமும்........!!!

"ஸம்ஸ்காரா" என்ற திரைப்படம்  கன்னட திரை உலகை சர்வதேச அளவில் பார்க்க வைத்த படமாகும்!

 சீத்தாராம ரெட்டியும்,சிங்கிதம் சிணிவாச ராவும் இயக்கிய இந்த படத்தில் கிறிஷ் கர்னாட்,லொகெஷ், ஆகியோர் நடித்தனர் .கதாநாயகியாக  சித்தாராம ரெட்டி அவர்களின் மனைவி ஸ்நெகலதா நடித்தார்.

ஸ்னெக லதா வின் பெற்றொர் கிறிஸ்தவ குடும்பத்தினர். அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள் .டாக்டர் ரம்மனொகர் லோகியாவோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் ! ஸ்நேகாவும் பிரிட்டிஷ் எடிர்ப்பு,சோஸ்லிச கருத்துக்களை கொண்டவர். . சென்னையில் 60ம் ஆண்டுகளில் இயங்கிய "மெட்றாஸ் கிளப்" என்ற நாடக குழுவில் நடித்தவர். ஜார்ஜ் பெர்ணாண்டசின் ஆதரவாளர்.

"ஸமஸ்கார"கதையை 1965ம் ஆண்டு யு.ஆர்.அனந்தமூர்த்தி மாணவரக  இருக்கும் போது எழுதினார் ! அவர்தன்னுடைய நூலில் " அவசர நிலைகாலத்தில் தலமறைவாக இருக்கும் பெர்ணண்டசை சந்திக்க சென்றேன் ! என் கண்களை கட்டி காரில்  அழைத்து சென்றார்கள் ! அவருடன் இரண்டுமணி நேரம் பெசினேன்.என்னிடம் உதவி கேட்டார்.அவசர நிலை க்கு எதிர்ப்பு இல்லை .மக்கள் அதன ஆதரிக்கிறார்கள் என்ற பொய்யை இந்திரா வெளிநாடுகளில்ல்பிர்ச்சாரம் செய்கிறார் ! இதன முறியடிக்க நான் உதவவேண்டும் என்று கெட்டுக் கொண்டார்

.

"அவசர நிலையை எதிர்த்து ரகசிய இயக்கம்  வேண்டும் ! அதன் மூலம் ஆபத்தில்லாத குண்டு வெடிப்புகளை நடத்தி நமது எதிர்ப்பை காட்ட வேண்டும் " என்றார்.

பெங்களுரில் உள்ள பிரும்மாண்டமான சட்டமன்ற கட்டிடத்தில் உள்ள கழிவறையை தேர்ந்தெடுத்திருகிறோம். அது பயன் பாட்டில் இல்லை ! அதில் சத்தம் அதிகம் கோடுக்கும் வேடியை வெடிக்டகச்செய்ய்வேண்டும்.இது ஆபயத்திலாதது.சேதம் விளைவிக்காது ! என்றார். 

இதனை ஸ்நெகலதா ரெட்டி கொண்டு வைப்பார்  நீங்கள் இதற்கு உதவவேண்டும் என்றார்.

ஆனால் இதற்கு முன்பாகவே ஸ்நெகலதா கைது செய்யப்பட்டு விட்டார். 

பங்களுர் சிறையில் அவர் சித்திரவதை செய்யப்பட்டார் . பெர்ணாண்டஸ் மறைந்திருக்கும் இடத்தை சொன்னால் விட்டுவிடுவதாக கூறினார்கள் ! 

அதே சிறையிலிருந்த மது தண்டவதே கூறுகிறார்' "நட்ட நடுனிசியில் ஸ்நெகாவின் அலறல்கேட்கும்.  .அவரை அடிக்கும்சத்தம்   கேட்கும் ! " எதுவும் செய்ய முடியாமல் நான் தவிப்பேன் " என்கிறார்.

சித்திரவதை தாங்காமல் ஸ்நேகாவை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள் . பின்னர் வீட்டுக்கு அனுப்பினார்கள்.வீடு வந்த ஐந்தாம் நாள் ஸ்நெகலதா ரெட்டி மரண மடைந்தார் !   .

ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தங்கி இருந்த் இடத்தை மட்டும்  அவர் தன் மூச்சு இருக்கும் வரை சொல்லவில்லை ..

ஸ்நேகலதா ரெட்டி நாடக,திரைப்பட நடிகை மட்டுமல்ல !

இந்தியாவின் தீரமிக்க பெ ண்களில் ஒருவர்!!! 


Wednesday, July 22, 2015

 





















"ஜுலை" மதம் த.மு.எசவுக்கு

சொந்தமானது ........!!!

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு சொந்தமான மாதம்தான் "ஜூலை" மாதமாகும்.!

சரியாக நாறப்து ஆண்டுகளூக்கு முன் 1975 ஜூலை மாதம் 12,13, தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் அந்தப் புரட்சிப்பெண்மணி கோதாவரி பருலெகர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமாக  புகழ்பரப்பி நிற்கும் அமைப்பு உருவான மாதம் அது..

1907ம் ஆண்டு பிறந்த கோதாவரி கோகலே சுதந்திர போராட்ட வீரர் கோபாலகிருஷ்ண கோகிலெயின் சகோதர்ரரின் மகளாவார் ! பூனே நகரத்தின் புகழ் பெற்ற ஃபெர்கூசன் கல்லூரியில் பொருளாதரமும்,அரசியல் விஞ்ஞானமும் படித்துபட்டம் பெற்றவர் ! அதுமட்டுமல்லாமல் சட்டக்கல்லூரியில் சேர்ந்து மகராஷ்ட்ற மாநிலத்தின் முதல் பெண் வக்கீலாக ஆனவர் !

படித்து முடிநதும் கோகலே ஆரம்பித்த sevents of india society ல்  ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்த இளம் பேண்ணாக திகழ்ந்தவர் ! அதில் பணியாற்றிய இளைஞர் பருலேகரோடு விவசாயிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார் ! 

தானே மாவட்டத்தில் உள்ள "ஒர்லி" இனமக்களை ஒருங்கிணைக்கும் பணி அவரிடம் கொடுக்கப்பட்டது ! அந்த பழங்குடி இன மக்களொடு தங்கினார் ! பின்னாளில் அவர் எழுதிய நூலில் "காலை எழுந்ததும் குளிக்க வேண்டும் என்று கூறினேன் ! ஒரு பெண் எனக்கு திறந்த வெளியில் இரண்டு பாறைகளுக்கு இடையே தேங்கி இருந்த ஒரு "குட்டை"யை  காட்டினார் ! பாசிபடர்ந்து பச்சைபோர்த்தி இருந்த அதில் குளிக்க நான் தயங்கினேன் ! அப்போது வேறொரு பெண் பானயொடு வந்து பாசியை விலக்கி நீரை எடுத்துக் கொண்டு மேலே ஏறினாள் ! அவளிடம் கேட்ட போது குடி நீருக்காக கோண்டு செல்வதாகக் கூறினாள்.    குளிக்க நான் தயங்கும் இந்த நீரைத்தான் இந்த மக்கள் குடிக்க பயன்படுத்துகிறார்கள் என்பது என்னை அதிர்ச்சியில்தள்ளியது ! நான்,என் படிப்பு என் உழைப்பு ,என்வாழ்க்கை அத்துணையையும் இந்த மக்களின் முண்ணெற்றத்திர்காக அர்ப்பணிக அன்று முடிவு செய்தேன் ' என்று கோதாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அப்பாவி மக்களைதிரட்டி போராட ஆரம்பித்தார் ! தன்னுடன் பணியார்ரும் பருலேகரை மணந்தார் ! தெலுங்கான விவாசாயிகளின் ஆய்தம் தாங்கிய புரட்சி, வங்கத்தில் நடந்த "தோ-பிகா"

எழுச்சி, கையூறில் நடந்த கிளர்ச்சி ஆகியவற்றிற்கு ஒப்பான "ஒர்லி இன மக்களின்" போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் ! 

கணவர் பருலேகர் " Revolt of Orli " எழுதிய நூல் இன்றும்  ஆவணமாக  கருதப்படுகிறது !

அந்தமக்கள் கோதாவரியம்மையாரை "கோதூதி" என்றே அழைக்கிறார்கள் ! அவரை தங்கள் "தாய்தெய்வமா"க வழிபடுகிறார்கள் !

தன் அனுபவங்களை " மனிதன் விழித்தெழுந்த போது " என்ற நூலாக எழுதினார். மராட்டிய மொழியின் சிறந்த படைப்பாக அதனை சாகித்திய அகாடமி விருதுகொடுத்து தன்னைபெருமைப்படுத்திக் கொண்டது !

மேடையில் தமிழ் எழுத்தாளர்கள்  நாரண துரைக்கண்ணன், ஆர்.வி ஆகியோர் இருக்க அந்த புரட்சி பெண் த.மு.எ.ச.வை துவக்கி வைத்தார்! 

தமுக்கம் மைதானத்தின் ஒரு மூலையில்  அமர்ந்து கொண்டு இந்தக்கட்சியை பரவசத்தொடு பார்த்த நான் எவ்வளவு பாக்கியவான் 

Monday, July 13, 2015

அன்புதோழர் வெண்புறா சரவணன் அவர்களுக்கு .....!




"கடல் காவல் படையின் டொர்னியர் விமானம் ஒரு கி.மி ஆழத்தில் சிதறியதை கண்டுபிடித்தவர்கள்

கோகுல்ராஜை கொலை செய்தவனை கண்டு பிடிக்க வீல்லையே" என்றுதன் கோபம் கலந்த ஆதங்கத்தை நிலைத்தகவலாக வெண்புறா அவர்கள் இடுகை இட்டிருந்தார்கள். நாற்பத்தி மூன்றூ ஆண்டுகளுக்கு முன் நடந அந்த அரசியல் சம்பவம் பற்றி நினவு வந்தது ! அதனை தகவலாக எழுது கிறென்:


1972ம் ஆண்டாக இருக்கலாம் ! இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு தி.மு.க வை அசைக்க முடியாது என்று அறிவித்து 170சொச்சம் இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்து ஓராண்டு ஆகி இருந்தது !


திண்டுக்கல்லில் நாடாளுமனர இடைத்தேர்தல் அறிவித்திருந்தார்கள் ! மார்க்சிஸ்டு கட்சி சார்பில் அருமைத்தோழர் சங்கரய்யா அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள் .திமுக பிரிந்து எம்ஜியார் அண்ணா திமு.க ஆரம்பித்திருந்தார் ! அதிமுக சார்பில்தீண்டுக்கல்லில் மாயத்தேவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதிமுக முதன் முதலாக தேர்தலை சந்திக்கிறது ! எம்ஜியார் அவர்களூக்கு தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டியகட்டாயம் ! ஆளும் திமுக வுக்கோ கௌரவப்பிரச்சினை ! அதிமுகவை தோற்கடிப்பதின் மூலம் எம் ஜி ஆரின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க வைக்கவேண்டிய கட்டாயம் ! மார்க்சிஸ்கட்சியின் உதவியாய் எம்ஜி ஆர் நாடினார். தோழர் சங்கரய்யாவை  வாபஸ் பெறவைத்து மாயதேவரை ஆதரிப்பதாக மார்க்சிஸ்டு கட்சி அறிவித்தது !


முதல்வர் கருணாநிதி அதிகார பலம்,பணபலம் ஆகியவற்றொடு வன்முறையையும்கையாண்டு வெற்றி பெற முடியுமென்று கருதினார் !


பொதுக் கூட்டங்களில் எம் ஜி ஆர் பெசமுடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டது ! செந்தோண்டர்கள் முன்னும் பின்னும்வர மார்க்சிஸ்ட் தலைவர் ஏ.பாலசுப்பிரமானியம் எம் ஜி ஆரை கிராமம் கிராமமக அழைத்து சென்று பிரச்சாரம் செய்ய வைத்தார் 

 

இருந்தாலும் பூலாவாரி சுகுமாறன் என்ற அதிமுக தொண்டர் படுகோலை செய்யப்பட்டார் ! எதிர்க்கட்சிகள் கொலை காரனை கைது செய்ய குரலேழுப்பின ! முதல்வர் கருணானிதி அசையவில்லை  !  ஏ.பி அவர்கள் வேண்டு கோள் விடுத்தார் ! முதல்வர் மசியவில்ல ! கெஞ்சினார் ! எதுவும் நடக்க வில்லை !" நான் கொலைகாரனைஅடையாளம் காட்டுகிறேன் ! கைது செய்யுங்கள் என்று அறிவித்தார் "  ஏ.பி அவர்கள் ! கலிஞர் உதாசீனப்படுத்தினார் !


ஏ.பி வெகுண்டு எழுந்தார் ! "நாளை காலைக்குள்  கைது செய்யுங்கள் ! இல்லைஎன்றால் செந்தொண்டர்களோடு கொலைகாரன் வீட்டு வாயிலில் நான்" தர்ணா" இருப்பேன்" என்று அறிவித்தார் !


அரசுபணிந்தது ! 


     

Tuesday, May 26, 2015

அந்த போர் வீரன் 

INSURENCE WORKER

பத்திரிகையை 

முத்தமிட்டான்.....!!!

எங்கள் ஆயுள் காப்பிட்டுக் கழக மதுரைகோட்ட சங்கத்தின் செயலாளராக பலமுறை இருந்திருக்கிறார்! தலைவராகவும் இருந்திருக்கிறார் ! ஆங்கிலத்தில் நிரம்ப புலமை உள்ளவர் ! பள்ளிப்படிப்பை அன்றய "சிலோனில்" முடித்தவர் ! பின்னர் M.A பட்டம்  பெற்றார் !

மிகச்சிறந்த மனிதாபிமானி !

சங்க கூட்டம் ஒன்றீர்க்காக நானும் அவரும்  நகர பேருந்தில் வந்தோம் ! மதுரை வெளிவீதியில் உள்ள கற்பகம் ஓட்டலிம் காபி குடித்தோம் ! "நீங்கள் போய்க்கொண்டு இருங்கள்1 ரயிலடியில் ஒரு நண்பரை பார்த்து விட்டு வருகிறேன்" என்றார் ! 

ரயிலடியில் ஒரு சிறு பேப்பர் கவர் கிடைத்திருக்கிறது ! அதற்குள் புதன் கிழமை அதிகாலை ரயிலுக்கான டிக்கெட் உள்ளது ! ரிசர்வெஷன் செய்யப்பட்ட அட்டை டிக்கட் ! அதன் பின்னால் 5 பெருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கண்டிருந்தது ! மதுரையிலிருந்து பாட்டியாலா செல்லும் பயண சீட்டூ 

நண்பர் யோசித்தார் ! நேரடியாக ரயிலடியில் உள்ள ரிசர்வேஷன் அலுவலக அறைக்கு சென்றார் ! அங்குள்ள அதிகாரிகள்  மூலம் பயணியின் முகவரியைபெற்றார் !

முகவரியில் மேலூர் அருகே உள்ள ஒரு சிறு கிறாமம் ! தகவல் அனுப்பி அவர் வந்து டிக்கட்டை பெற்றுக்கொண்டு பயணிப்பது முடியாத காரியம் ! நேரடியாக அருகில் உள்ள ஆர்.எம்.ஏஸ் அலுவலகம் சென்று ஒரு கார்டுவாங்கினார் !

"ஐயா 1 நீங்கள் புதன் காலை பயணம் செய்யவேண்டிய டிக்கட் என்னிடம் உள்ளது ! நீங்கள் எந்த கவலையும் படாமல் மதுரை ரயிலடிக்கு வாருங்கள் ! நான் டிக்கட்டோடு நீங்கள் ஏறவேண்டியகோச்சின் அருகே நின்று கொண்டிருப்பேன்! பயனத்தை தொடருங்கள் ! வாழ்த்துக்கள் ! என்று

 எழுதி தபாலில் செர்த்து விட்டார் !

அதே போல  புதங்கிழமை அதிகாலை எழுந்து ரயிலடிக்கு சென்று காத்திருந்தார் ! அந்தப்பயணி அவருடைய மனைவி ,தாயார்,இரண்டு குழந்தைகளுடன் வந்து செர்ந்தார் ! பாடியாலாவில் ராணுவத்தில் பணியாற்றுகிறார் ! 

அவரும் அடையாளம் கண்டு டிக்கட்டை பெற்று நெக்குருக அணைத்துக் கொண்டார் ! "நன்றி,நன்றி" என்ற அவருடைய வார்த்தைக்கு எங்கள் தலைவர் " இந்த தேசமே உங்களுக்கு கடமை பட்டிருக்கும் போது எனக்கு எதற்கையா நன்றி "என்றார்! 

அடையாளமாக  என்தலைவர் கையில் வத்திருந்த   "insurance worker  " அந்த போர்வீரன் வாங்கிகண்ணீல் ஒத்திக் கொண்டு முத்தமிட்டான் !

ஓய்வு பெற்றபின், சென்னையில் பத்தாண்டுகளூக்கும் மெலாக insurance worker அலுவலகத்தி அந்த பத்திரிகையை  வளர்த்து வந்த  K. David தன் அந்த தலைவர் !