த.மு.எ.ச வின் இலக்கியமுகாமும்,
அவசரநிலைக் காலமும் ..........!!!
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு இலக்கிய பயிற்சி முகாமை நடத்த முடிவெடுத்தது.
அவசர நிலைகால போலீஸ் கெடுபிடி இருந்ததால் எங்கு எப்படி நடத்துவது என்ற தயக்கமுமிருந்தது ! த.மு.எ.ச வின் துணைதலவரும் "செம்மலர்" ஆசிரியருமான கு சின்னப்ப பாரதி அவர்கள் நாமக்கல் வக்கீல் சுப்பிர மணியன் அவர்களின் ஒத்துழைப்பொடு நாமக்கல்லில் நடத்த முண்வந்தார்!
1975ம் ஆண்டு நவம்பர் மாதம்17,18 தேதிகளில் நடத்த முடிவாகி காரியங்கள் ஆரம்பமாகியது.
கேரளத்துலிருந்து பி.கொவிந்த்பிள்ளை,திருச்சியிலிருந்து பெராசிரியர் மாறன் ஆகியோரை அழைக்க முடிவாகியது.
L.I.C நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக ( Maneging Director ) இருந்தவர்
N.G.நாயுடு.தமிழ்,ஆங்கிலம் சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ந்த ஞானம் உள்ளவர்.மார்க்சீய அறிஞர் M.R.வெங்கடராமன் அவர்களின் நெருங்கிய நண்பர். ஓய்வு பெற்ற அவ்ர் திருப்பூரில்இருக்கிறார் ! "தமிழ் இலக்கியத்தில் சமஸ்கிருதத்தின் தாக்கம் " என்ற தலைப்பில் அவ்ர் பேச ஏற்பாடானது.!
தமிழகம் முழுவதிலிமிருந்து உறுப்பினர்களை அழைக்க முடிவானது. யார் யார் என்பதை உறுப்பினர்களுக்கு ரகசியமாக தெரிவிக்கப்படும். எந்த உறுப்பினருக்கும் அடுத்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை !அவரவர் தனித்தனியாக நாமக்கல் வரவேண்டும். கூட்டம் கூட்டமாக இல்லாமல் தனித்தனியாக வரவேண்டும். எல்லவற்றிர்க்கும் மேலாக குடும்பத்தில் எங்கு ஏன் போகிறொம் என்பதையும் தெரிவிக்காமல் வரவேண்டும்!
முகாம் நடக்க நான்கு நாட்களுக்கு முன்பு N.G.நாயுடு அவர்கள் உடல்நிலை காரணமாக சென்னைமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. த.மு.எ.சவின் பொதுச்செயலாளர் K.முத்தையா அவர்கள் நாயுடு அவர்களுக்கு பதிலாக காஸ்யபன் அந்த வகுப்பை நடத்துவார் என்று கூறிவிட்டார்.
(" ராமாயணம் -உண்மையும்புரட்டும் " என்ற நூலை K.M. அவர்கள் எழுதும் பொது வால்மீகி ராமாயனத்திலிருந்து சில வரிகளை அவருக்கு படித்து காட்டினது தவிர எனக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் சம்மந்தம் கிடையாது )
நோந்து நூலாகிபோய் நாமக்கல் புறப்பட்டேன்.
அப்போதெல்லம் திருவள்ளுவர் பஸ் முன்பதிவினை செய்வதில்லை ! 38 சீட் உண்டு. 48 சிட்வரை எற்றுவார்கள். சென்னை வரை நின்று கொண்டே சென்று வந்த காலம் !
மதுரை பாத்திமா கல்லூரி வாசலில் இரவு பத்துமணீக்குசேலம்செல்லும் வண்டியில் நாமக்கல்லுக்கு பயணமானேன் ! கூட்டம்.! நிற்க வேண்டியிருந்தது.டிரவர் அருகில் இஞ்சின் பானட்டில் அமர்ண்டு பயணமானேன்! இஞ்சின் சூடு பனிகாலமாதலால் இதமாக இருந்தது. வாடிப்பட்டியி நின்றது !
மாநிறத்தில் ஒரு இளஞர் ஏறினார். கையில் மஞ்சப்பை . தலைமுடி போலீஸ் வேட்டு பொல் இருந்தது. என்னையே பார்பது போல் இருந்தது ! அடிவயிரு கலங்கியது ! மெல்ல பின்புறம் சென்று நின்று கொண்டேன் ! அந்த கூட்டத்திலும் போலீஸ் இலைஞர் என்னை எட்டி எட்டிபார்த்துக் கொண்டே வந்தார் ! தீண்டுக்கல் வந்தது !
அப்போதெலாம் இப்போது போன்ற பெரிய பஸ்நிலையம் கிடையாது. நகரத்தின் மிகப்பேரிய மூத்திரக் கிடங்குதான் பஸ் ஸ்டாண்டு.கீழே இறங்கினேன். வேறு பஸ் பிடித்து விடலாமா என்று நினைத்தேன்.பஸ் கிளம்பியதால் ஒடிவந்து ஏறினென் ! வண்டிக்குள் இருந்த போலீஸ் இளைஞர் என்னைப்பார்த்து அசடு வழிய புன்னகைத்தார்!
மனதிற்குள் நான் எங்கு போகிறேன் என்பது அவருக்கு எப்படி தெரியும் என்று சமாதானம்செய்து கொண்டேன்.
நாலரை மணிக்கு நாமக்கல் வந்தடைந்தது. "படக்" கென்று இறங்கி இருட்டுக்குள் மறைந்துகொண்டேன். பெட்டி கடையில் ஆயிர வைசிய மண்டபம் பற்றி விசாரித்து நடையைக்கட்டினேன்,கொஞ்சதூரம் சென்று திரும்பிப்பர்த்தேன் ! நடுங்கி விட்டேன் ! போலீஸ் இளைஞர் பெட்டிகடையில் விசாரித்து கொண்டிருந்தார் !
மண்டபம் சென்றதும் பொறுப்பளரிடம் மதுரையிலிருந்து என்னை பொலீஸ் தொடருவதை சொல்லிவிடுவது என்று முடிவெடுத்தேன். வந்திருக்கும் அத்துணை பேரையும்கோழியை அமுக்குவது பொல அமுக்கி விடுவார்கள் இந்த பாவிகள் ! சொல்லி விடுவது நல்லது. அவர்கள்
பாடு என்றுகருதினேன் .
மண்டபத்தின் உள்ளே கு.சி.பா வந்தவர்களுக்கான ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் நடந்ததைக் கூறினேன் . "கவலைப்படாதீர்கள்.எதையும் சந்திப்போம்" என்று தைரியம் கூறினார் .
வெளியே பார்த்தேன்.மண்டப வாசலில் அதே போலீஸ் இளைஞர் ! வக்கீல் சுப்பிர மனீயத்தோடு வந்து கொண்டிருந்தார்.
"இவந்தான்-இவன் தான்" என்று கு.சி.பாவின் காதில் கிசு கிசுத்தேன்!
"சும்மா இருங்க காஸ்யபன்.இவர் நம்ம கவிஞர் வேண்மணி"என்றார் குசிபா
என்னைப் பார்த்து பயந்து கொண்டிருந்த வெண்மணியிடம்
"இது நம்ம காஸ்யபன்" என்று அறிமுகம் செய்தார் வக்கீல் சுப்பிர மணியம்.
அசடு வழிய நாங்கள் இருவரும் கை குலுக்கிக்கொண்டோம்.
0 comments:
Post a Comment