Tuesday, May 03, 2016
Saturday, April 30, 2016
"தீபாவளியின் போது ...."
அப்போதெல்லாம் தீபாவளியின் பொது "தீக்கதிர் " உழியர்களுக்கு போனஸ் போடுவார்கள். அன்று விடுமுறையும் விடுவார்கள். கட்டிடமே வெறிச்சோடி இருக்கும். தலைமை இடம் என்பதால்செயற்குழுமட்டத்தில் ஆசிரியர் தோழர் கே.முத்தையா அவர்கள் மட்டும் இருப்பார். அவரும் சில சமயம் சென்னை சென்று விட்டால் வேறு யாராவது எம்.ஆர் வெங்கடராமன் ,ஏ .பாலசுப்பிரமணியம் என்று இருப்பார்கள்.
"கம்யூன்" தோழர் திருப்பரம்குண்றம் மணியும் சென்றுவிடுவர் என்பதால் இருக்கும் தலைவர்களுக்கு உணவு சிக்கல்தான் .
எங்கள் எல்.ஐ. சி தீக்கதிர் ஆபிசிலிருந்து நடந்து போகும் தூரம் தான்.ஆகவெஅவர்களை காலை ,மதியம் உணவிற்கு அழைத்து வருவேன். . எல் ஐ சி காலனியில்வசிக்கும் மூத்ததொழர்கள் கிருஷ்ணன்,நாராயண்சிங், தண்டபாணி, சீனு , மாணிக்கம் ,கபூர் என்று எல்லோரும் கூடுவோம். வந்திருக்கும் தலைவர் கட்சி,தத்தவுவார்த்த பிரச்சின பற்றி பேசக் கூடாது. அவர் கட்சிக்கு வந்தது,அவருடைய சொந்த அனுபவம் இவற்றை பற்றி கேட்டு தெரிந்து கொள்வோம். எ.பி ,கே.எம், ஐ.மா பா .என்று வந்துள்ளனர். எம் ஆர்.வெங்கடராமன் வந்திருந்தார்.
அவர் காலை 9 மணிக்கு சைக்கிளில் வந்தார். எங்கள் வீட்டில் ஹாலில் ஊஞ்சல் உண்டு. அதில் அவர் நடுநாயகமாக அமர நாங்கள் சுற்றி உட்கார்ந்தோம். அவர் புதியதாக வேட்டியும்ஜிப்பாவும் அணிந்திருந்தார்.
"தோழர் ! தீபாவளி வந்துட்டதா உங்களுக்கும் ?"
"புது துணிய பாத்து கேக்கற !இல்லையா ! அது ஒரு பெரியகதை என்றார்"
"ரொம்ப கொஞ்ச பேருக்கு தான் தெரியும் !என் மைத்துனர்விடு மதுரை ! என்.சுப்பிரமணியன் என்ற வக்கீல் தான் என் மைத்துனர். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு செட்டு டிரஸ் கொடுத்து விடுவார்."
ஆழ்ந்த மௌனம் . கம்பிரமான ஆறடி ஆகிருதி . பறந்த நெற்றி . அகன்ற வாய் .கூர்மையான முக்கு . ரோமானிய வீரன் போன்ற தோற்றம் .
ஊஞசலின் கம்பியை பிடித்துக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டார்.
கீழ வெளிவீதியில் உள்ள செயின்ட் மேரி பள்ளி அருகே மகால் போகும் சாலை உள்ளது .அதன் முதல் கட்டிடம் இன்சுரன்ஸ் கட்டிடம். அதற்கு அடுத்தது வக்கீல் சுப்பிரமணியன் வீடு. எம்.ஆர்.வி அவ்ர்களின் துணைவியார் தன இறுதி காலத்தில் தங்கி இருந்ததும் அங்குதான்
"அப்போது நாங்கள் தலைமறைவாக இருந்தோம். நானும் சுந்தரய்யாவும வேலூர் அருகே உள்ளமலைப்பகுதியில் இருந்தோம். அவ்வப்பொது கீழெ வந்து கட்சி பணி செய்வோம். என்மனைவி சகோதரன் வீட்டில்தங்கி இருந்தார். உடம்பு சரியில்லை . அதனால் அங்கிருந்தார்.ஒரு நாள் கட்சி குரியர் மூலம் தகவல் வந்தது . அவருக்கு என்னை பார்க்க வேண்டும் என்று தோன்றுவதாகவும் உடனே வர வெண்டும் என்பது செய்தி . உடனேயே கிளம்பி செங்கல்பட்டு வந்தேன். அங்கிருந்து விழுப்புரம் ,மாயவரம், தஞ்சை என்று போலிசுக்கு போக்கு காட்டி மதுரை வந்தேன். மதுரையில் ரயிலடிக்கு எதிரே உள்ள மங்கம்மா சத்திரத்தில் தங்கினேன். கூரியர் மூலம் என் மைத்துனருக்கு செய்தி அனுப்பினேன்."
கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் இதயத்தை பிடித்துக் கொண்டு காத்திருந்தோம் .தொடர்ந்தார்.
"என் துணைவியாருக்கு உடல் நலம் சரி இல்லை என்பதை போலிஸ் மோப்பம் பிடித்து விட்டது . மைத்துனர் தகவல் அனுப்பவில்லை. உடல் நலம் சீரியசாக ஆரம்பித்ததால் டாகடர் அழை க்கப்பட்டார். நான் மதுரை வந்து விட்டேன் என்பதை அவரிடம் சொல்லி இருக்கிறார்கள் . போலிஸ் கெடு பிடி குறைந்ததும் வருவேன் என்று சொல்லி இருக்கிறார்கள். "
நாங்கள் மூச்சு விடாமல் அமர்ந்திருந்தோம்..
"நான் அவரைபார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் அவர் போலீசில் சிக்கி சித்திரவதை படவேண்டாம். அவர் வரவேண்டாம் என்று சொல்லி அனுப்புங்கள். அவர் இந்த வீட்டுப்பக்கம் வரவேண்டாம் என்பது தான் இப்போது என் ஆசை "
" எனக்கு தகவல் சொல்லப்பட்டது. நான் ரயிலேறி வெல்லூர் வந்தேன். அங்கு அவர் மறைந்த செய்தி எனக்காக காத்திருந்தது."
என் தொண்ட்டைகுழிக்குள் இதயம் வந்து விட்டது போல் உணர்ந்தேன் . என்னிட மிருந்து இரு விம்மல் தான் வெளிவந்தது.
ஊஞ்சலில் இருந்து அவர் இறங்கினார்.
என் முதுகை தட் டி தடவினார் .
"Comrade ! it often happen in the life of a communist "
அந்த பாரத புத்திரரின் கம்பீரமான முகத்தை தரிசித்தேன் .!!!
Thursday, April 28, 2016
அவர்கள் இந்த மண்ணின்
விளைச்சல்கள் .......!!!
1935 ம் ஆண்டிலிருந்து 45ம் ஆண்டுவரை இந்திய அரசியல் வானம் "தீ"யாய் எரிந்து கொண்டிருந்தது. அண்ணல் காந்தி அடிகளின் அறைகூவலுக்குஇணங்க லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளையும்கல்லுரிகளையும் விட்டு வெளியே வந்தார்கள். அரசு ஊழியர்களும் சிப்பந்திகளும் தங்கள் வேலையை விட்டு சுதந்திர வேள்வியில் ஆகுதியாக தயாரானார்கள்.
அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் C .சுப்பிரமணியம் என்ற மாணவர் .
C .S என்று அழிக்கப்பட்ட இவர் பின்னாளில் ராஜாஜி,காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றினார். பின்னர் மத்திய அமைச்சரவையிலும் இருந்தார் ,"பசுமை புரட்சி " என்ற விவசாய எழுச்சியை இந்தியாவில் உருவாக்கியவரும் இவர்தான்.
C .S கல்லூரியில் படிக்கும் போதே ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றார். சகமாணவர்களையும். இளைஞர்களையும் திரட்டுவதில் முக்கிய பங்காற்றினார் .காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவான "காங்கிரஸ் சோசலிஸ்ட் " கட்சியினரோடும் தொ \டர்புடனிருந்தார். மோப்பம் பிடித்த பிரிட்டிஷ் போலீஸ் அவரை கைது செய்ய முனைந்தது.
போலிசிட மிருந்து தப்ப அவர் தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். அப்போது "மெட்றாஸ் " மாகாணத்தில் ஆந்திரா,கர்நாடகா,கேரளா ஆகியவற்றின் பகுதிகளும் இருந்தது. தலைமறைவு போராளிகளை பாதுகாக்கும் பொறுப்பு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினருக்கு வந்தது. ஆந்திராவைச் சேர்ந்த P .சுந்தரய்யாவும் , தமிழகத்தைச் சேர்ந்த M .R .வெங்கடராமனும் இதனை கவனித்தார்கள். தலைமறைவாக இருப்பவர்கள் தங்குமிடம்,உணவு,பாதுகாப்பு ஆகியவற்றை கவனித்துக் கொண்டார்கள்.
சவுகார் பேட்டை ,ஜார்ஜ் டவுண்,சிந்தாதிரிபேட்டை ஆகிய ஜன நெருக்கமுள்ள பகுதிகளில் சந்து களுக்குள் உள்ள வீடுகளில் இவர்கள் தங்க வைக்கப்பட்டனர் .
C .S ம் இப்படி ஒரு காற்றோட்டமில்லாத அறையில் தஙக நேர்ந்தது . குளிர் பகுதியான கோவை இலிருந்து வந்த C .S கு உடல் நலம் கெட்டது நெஞ்சில் சளியும்,அதனால் காய்ச்சலும் வந்து கஷ்டப்பட்டார். ஒருகட்டத்தில் "நிமோனியா "வோ என்று சந்தேகம் ஏற்பட்டது.
தனியார் மருத்துவரை அணுகமுடிவு எடுக்கப்பட்டது. எப்படி அழை \த்து செல்வது போலீஸ் நாய்கள் மோப்பம் பிடித்து விடுமே.
C .S ஐ சைக்கிள் காரியரில் ஒக்காரச்செய்து அவரை அணைத்தபடி ஒரு இளைஞர் சைக்கிளை உருட்டி வந்தார். அவர்களுக்கு முன்னால் அடுப்புக்கரி விற்கும் ஒருவன் சைக்கிளில் வழிகாட்டிக்கொண்டு வந்தான் . சைக்கிளில் வந்தவன் P .சுந்தரய்யா . C .S அணைத்தபடி வந்தவன் M .R . வெங்கடராமன்.
இந்தியா சுதந்திரம் பெற்றது.
C .S காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரானார்.
P .சுந்தரய்யா மார்க்சிஸ்ட் கட்சியின் போதுச் செய்லாளர் ஆனார்.
M . R வெங்கடராமன் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஆனார்.
இந்த முவருமே இந்த
மண்ணின் விளைச்சல் தான் !!!
Wednesday, April 27, 2016
"P .R is a gentleman "
"P.R.is a gentle man "
1936 ம் ஆண்டு நான் பிறந்தேன். என் மூத்த சகோதரிக்கு 1936ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 1942ம் ஆண்டு பெண் குழந்த பிறந்தது.1962ம் ஆண்டு அந்த பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டேன்.
என்மாமனார் ஒரு அப்புராணி .துஷ்டனைக்ண்டால் தூர விலகு என்று வளர்க்கப்பட்டசனாதனகுடும்பம்.தூரமாகவிலகமாட்டார்.ஒருமைலாவது தள்ளி நின்று கொண்டு எட்டிபார்க்கும் ரகம்.
நான் தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டவன். " எல்.ஐ.சி வேல லேசுலகிடைக்காது. தேவை இல்லாமல் சண்டய போட்டு வேலையை கெடுத்துக்காம இருக்க சொல்லு " நு மாணவி முலம் "அட்வைஸ் " வரும். என்னை பார்க்க வரும் நண்பர்கள் தலவர்கள் கம்யுனிஸ்டுகள் என்பது அவருக்கு தெரியும்.
"தினமணி " -"இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகைகள் மூலம்கம்யூனிசம் பற்றி "அறிந்து " கோண்ட கோடானு கோடி அப்பாவி இந்தியர்களில் அவரும் ஒருவர் .கம்யுனிஸ்டுகளுக்கு இரண்டு கைகள் அல்ல -நான்குகைகள் -ஒருகையில் அரிவாள், மற்றோன்றில் கம்பு ,ஒருகையில் துப்பாக்கி, அடுத்ததில் குண்டு என்று ஒரு படிமத்தை கொண்டவர்களிலொருவர்.
அவர் ஓய்வுபெற்ற பின் மகளொடு பத்து நாட்கள் தங்க மதுரை வந்திருந்தார்.78-79 ஆண்டாக இருக்கலாம். அப்பொது தான் பைபாஸ் சாலைக்கு தீக்கதிர் ஆபிஸ் வந்த நேரம் . பக்கத்தில் இன்று மாதிரி கட்டிடங்கள் கிடையாது. தீக்கதிர் ஆபீசை ஒட்டி ஒரு குடிசைபோட்டு ஜோசப்ஃ என்ற கேரளத்துக்காரர் டீக்கடை போட்டிருந்தார். ஆபிசில் "கம்யூன் " இருந்தது.
மதுரை வந்திருநத P . R அவர்கள் இரவு அங்கு தங்க வேண்டியதாயிற்று.
நிர்வாகியான ராமராஜ் அவ்ர்கள் "டேய் ! சாமா ! பி ஆர் "நான் மிர்ச்சி " கோஷ்டி. ராத்திரி டவ்னுக்குகூட்டி போய் சாப்பாடு எற்பாடு பண்ணனும் . நீ ..." என்று இழுத்தார்.
"எதுக்கு தோழர் ! நான் கொண்டுவரேன் ! இல்ல அவர் வந்தா நல்ல சூடா.." ..."
"அதுக்கு தாண்டா ஒங்கிட்ட சொன்னேன் .ராத்திரி ரண்டு இட்லி சாப்பிடுவாரு. பால் கண்டிப்ப வேணும் .ரண்டு டம்ளராவதுகுடிப்பாரு "
"எத்தன மணிக்கு வருவாரு ?"
"ஏழரை மணின்னு வச்சுக்கோயேன் "
வீட்டில் என் மனைவியிடம் சொன்னேன். என்மாமனார் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முகம் கோணியது. கம்யூனிஸ்ட் தலைவர் - அவரோடு ஒரே வீட்டில் - போலிஸ் மோப்பம் பிடித்தால் - பாவம் குட்டிபோட்ட பூனைமாதிரி அலைந்தார். காலையில் ஒரே பரபரப்பு . நாலுமணி இருக்கும். "நான் வேணா ஒரு ஏழுமணிக்கு பிள்ளையார் கோவில்ல பூஜை பாக்க போகட்டுமா ? உங்க தலைவர் வந்து போனதும் சொல்லி விடு .நான் கொவில்லேர்ந்து வரேன் " என்றார்.
"உங்கப்பாவுக்கு போலிஸ் காரன் இவர பிடிச்சுட்டு போயிடுவானோ நு பயம் "என்மனைவியிடம் சொன்னேன்.
"No! No! it is not like that " என்றார் என் மாமனார் .
இருந்தாலும் இருப்புக்கொள்ளாமல் தான் இருந்தார்'
வீட்டு குள்ளேயே வரவில்லை. வராண்டாவிலேயே இருநதார்
ஏழுமணிக்கு பி .ஆர் வந்தார். ஹாலுக்குள் வந்த மாமனார் ஜன்னலோரத்தில் இருப்புக் கொள்ளாமல் நின்று கொண்டிருந்தார்.
"தோழர் ! இது என் மாமனார் "
பீ ஆர் அவர்களுக்கு என் குடும்பம் மனைவி ஆகியோரை தெரியும் .
உன் அத்திம்பேரா ?
"ஆமா தோழர் "
"நாக்பூரா ? "
என்மாமனார் தலையை ஆட்டினார் !
"அப்படியா ! உங்களுக்கு ஹிதவாதா பத்திரிகை எடிட்டோர் எ.டி. மணியைதெரியுமா ?"
என்மாமனார் முகத்தில் ஒரு தேளிவு கிடைத்தது.
"கோபால கிருஷ்ண கோகிலே யோட சிஷ்யன் servents of india society மெம்பர் "
"வார்தால இருந்திருக்கேன் சுவாமி ! உம்மா பெயர் என்ன ?"
"நடராஜன் "
"படிச்சதெல்லாம் எங்க ?"
"மெட்ராஸ்ல ? "
"எந்த ஸ்கூல் ?"
"இந்து ஹைஸ்கூல் ,திருவல்லிகேணி !"
"நானும் அங்கதான்யா படிச்சேன் "
"அப்படியா !"
"உமக்கு ரங்கநாதன தெரியுமா ?"
"பெரிய தெரு ரங்கநாதானா ?'"
"ஆம்மாம் ஐயா ! கிரிகெட் பிளேயர் !"
"நல்ல தெரியும் ! நான் பால் பாட்மிண்டன் 1 அவன் கிரிகெட் !"
இருவரும் அவர்கள் வாத்தியார்கள் ,பள்ளி வாழ்க்கை என்று பேசிக்கொண்டார்கள் .
"தோழர் ! உங்க மாமனார் என் ஸ்கூல் மேட் "
பி ஆர் உணவு அருந்தி விட்டு கிளம்பினார் ஜீப்பில் ஏறும்போது "வரட்டுமா நடராஜன்" என்று மாமனாரிடம் விடை பெற்றார்.
அவரை அனுப்பி விட்டு படியேறினேன் !என் மாமனார் தன மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
"எவ்வளவு சிம்பிள் ! காந்தி ,நேரு , இந்திரா , எப்பேர்பட்ட தலைவர்களோடு இருந்தவர்."
"P.R is a gentle man "