Wednesday, December 30, 2015

திசைகள் எட்டுக்கும் 

கொண்டு செல்வீர்.....!!!





90ம் ஆண்டுகளாக இருக்கலாம். "லோக் லேகக்  சங் " என்ற மக்கள் எழுத்தாளர் சங்கம் அகில இந்திய மாநாட்டை கல்கத்தாவின் சால்ட்  லேக் சிட்டி  அரங்கில் நடத்தியது.
மதிப்பிற்குரிய  மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களும் நானும்  கலந்து கொண்டோம் .

சங்க இலக்கியத்திலிருந்து தமிழ் நவீன இலக்கியம் வரை ஒரு அருமையான சொற்பொழிவை  மேலாண்மை நிகழ்த்தினார்அவரது பேச்சின் சுருக்கத்தை இந்தி மொழியில் எழுதி நான் வாசித்தேன்.என் உச்சரிப்பு சரியாக இல்லையோ என்னவோ 1இந்து உருது எழுத்தாளர் சங்க தலைவர்  சஞசல் சௌஹான் வாசிக்க ஆரம்பித்தார்.

என் பங்கிற்கு நான் ஆங்கிலத்தில்பேசினேன். நமது கலை இரவுகள் பாற்றி விளக்கினேன். கவிஞர்  கந்தர்வன் கவிதை வரிகளை சுட்டிகாட்டினேன் .

"நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ,
ஞாயற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை"

என்ற வரி களைச்சுட்டிய பொது கரகோஷம் விண்ணை எட்டியது. பஞ்சாபி ,வங்க,இந்தி கவிஞர்கள் அவரவர் வரிவடிவத்தில் தமிழ் உச்சரிப்பை கேட்டு எழுதிகொண்டார்கள் .நாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்து உச்சரிப்பை சரிபார்த்துக் கொண்டார்கள்.   

மராட்டிய, வங்க, பஞ்சாபி எழுத்தாளர்களோடு பேசி மகிழ்ந்தேன். " 

"சரத்த்சந்திரரும்,தகூரும்,பிரேம்சந்தும் ,காண் டெகரும்,தகழியும், வேமன்னாவும், மாஸ்தியும் எங்கள்கிராமத்து இலக்கிய வாதிகளுக்கு தெரியும்.எங்கள் கலைமகள்,கல்கி,விகடன் போன்ற பத்திரிகைகள் 50 களிலேயே அவற்றை தொடராக பிரசரித்துள்ளன.உங்களுக்குபாரதியை தெரிந்திருக்கலாம் .புதுமைபித்தனை தெரியுமா? அழகர் சாமியைதேரியுமா ? சின்னப்பா பாரதியதேரியுமா? என்று கேட்டேன்.  அவை இந்தியில்,வங்காளத்தில் வந்துள்ளதா ? என்று கேட்டார்கள்.. ஆம் என்று பொய் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்தது"

என்னுடைய சிறுகதைகள் இந்தியில் வந்துள்ளன.வங்காளம்,தெலுங்கு,மராத்தி.ஏன் சம்ஸ்கிருதம் பிரெஞ்சு ,ஆங்கிலத்தில் வந்துள்ளன. 

எந்த பின்புலமும் இல்லாத என்னால் இதனை செய்யமுடியுமென்றால் .....!

சிறுகதகளை  பொருத்தவரை தமிழ் சிறுகதைகள் உலக தரத்தை எட்டியுள்ளன. சந்தேகமில்லை.

இவை பற்றி இந்திய மொழி இலக்கியவாதிகளுக்கே சரியான பாரவை  இல்லை. 

நமது மொழிபெயர்ப்பாளர்களின் திறமைககும் பஞசமில்லை.

பாரதி புத்தகாலயம், கிழக்கு பதிப்பகம் ஆகியவை முன்கை எடுத்து செயல்படவேண்டிய நேரமிது.

சுப்பாராவ், குமரேசன் போன்றவர்கள் ஆங்கிலத்திற்கு தமிழ் எழுத்தாளர்களை கொண்டு செல்ல வேண்டும்.

மொழிபெயர்ப்பு என்பது ஒருவழிப்பாதை அல்ல.

நவீன தமிழுக்கான அங்கீகாரம் மொழிபெயர்ப்போடு பின்னிப்பிணந்துள்ளது .

கொண்டு செல்வோம் !!!



 

Tuesday, December 29, 2015

தேவி பிரசாத் ராய் சவுத்திரி 


என்ற 


சிற்பி .......!!!




1923 ஆண்டு .கடுமையான கோடை வெய்யில். சென்னை திருவல்லிக்கேணி அருகில் அந்த கடற்கரையில் அந்த கூட்டம் நடந்தது அது மீ மாதம் முதல் தேதி..தொழிலாளிகளின் உரிமையையும், அவர்களின் நியாயத்தையும் உறுதிப்படுத்த சிங்காரவேலர் நடத்திய மே தினக்கூட்டம் தான் அது  இந்திய மண்ணில் முதன் முதலாக மே தினக்கூட்டம் நடந்தது.

அதற்கு 36 ஆண்டுகள் கழித்து அதன் நினை வாக  அதே இடத்தில் truamph of labour என்ற (உழைப்பின் வேற்றி ) சிற்பம் நிறுவப்பட்டது> முதல்வர் காமராஜர் 1959 ஆண்டு அதனை நிறுவினார்.

உலகம் போற்றும் அந்த சிற்பத்தை உருவாக்கியவர் தேவி பிரசாத் ராய் சவுத்திரி என்ற வாங்காளியாவார்   மதராஸ் கலைப் பள்ளியின் முதல்வராக 29 ஆண்டுகள் பணியாற்றிய உலகம் போற்றும் சிற்பி அவர்.

நான்கு தொழிலாளர்கள் பெரும் பாறை ஒன்றை மிகவும் கஷ்டப்பட்டு வெற்றிகரமாக பெயர்த்தெடுக்கும் சிற்பம் அது.

அதன் முதல் மற்றும் முன்றாவது உரு வத்திற்கு மாதிரியாக தன மாணவன் ராமுவை நிற்கவைத்தார் ராய்.

இரண்டாவது நான்காவது சிற்பத்திற்குதன் கல்லூரியில் காவலாளியாக இருந்தவரை மாடலாக்கினார்

அந்த உழைபபாளிகளின்  நாடி நரம்புகளையும், அவர்களின் உணர்வுகளையும் 
மிகநுட்பமாக சித்தரிக்கும் அற்புதம் அந்த சிலைகள்.

1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு  போராட்டத்தின் போது  பிஹார் மாநிலம் பாட்னா நகரில் துப்பாக்கி சூடு  நடந்தது..அதில் ஏழு பேர் துப்பாக்கி சூட்டில் இறந்தனர் அந்த  காட்சியை  ஏழு உருவங்களும் மடிந்து  விழும் காட்சியை சிற்பமாக்கி பாட்னா நகரில் வைத்தார் சிற்பி ராய்.

தண்டி யாத்திரைக்கு சென்று உப்பு சத்தியாக்கிரகம் நடத்தினார் காந்தி அடிகள்.
பொலிசாரின் அடியை ஆணும் பெண்ணும்  ஒருகையால் தடுத்துக்கொண்டு மறுகையால் உப்பினை எடுப்பதை சிற்பமாக்கினர் ராய் சவுத்திரி. 

இன்றும் அது குடியரசுதலைவர் மாளிகை முன் இருக்கிறது.

ராய் சவுத்திரி சிறந்த வண்ண  ஓவியரும்கூடா. ராசலிலைகளை  ஓவியங்களாக தீட்டியுள்ளார். 



தமிழகத்தின் மிகச்சிறந்த சிற்பிகளில் ஒருவர் ராஜன் அவர்கள்.

ஏகப்பட்ட தடைகளை மீறி அவர் சிற்பக்கலையை கற்றுக் கொண்டவர் இன்றும் வெளிநாடுகளீல் அவர் படைத்த சிற்பங்கள் கோவில்களில் வழிபடப்பட்டு வருகின்றான

அவர் கடவுள்னம்பிக்கை இல்லாத நாத்திகர்.

ராய் சவுத்திரி போன்று நீங்களும் படைக்க வேண்டும் என்று என் போன்றவர்கள் 
ஆசைப்படுகிறோம்.

உங்களால்  முடியும்    தோழரே !!!

Monday, December 28, 2015

ஜோதி பாசு 

பதவி ஏற்றபோது ,

13 லட்சம் பேர் கூடினர்....!


1972ம் ஆண்டு . மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில  இந்திய மாநாடு நடந்தது. 
எனக்கு கடைசிநாள் பேரணியில் தான் கலந்து கொள்ள முடிந்தது. மேற்கு வங்கத்திலிருந்து "பயோனிர் " பத்திரிகையின் நிருபர் வந்திருந்தார். அவர் கட்சி உறுப்பினரும்  ஆவர்..
தைக்கால்தெரு தாண்டி கிழ்பாலம் இறக்கத்தில் ஊ ர்வலத்தில்கலந்து கொண்டோம் , மனம் மகிழா வாய் நிறைய கோஷம் போட்டேன். புன்னகை யோடு அந்த வங்காளியும் மழலை தமிழில் கோஷம் போட்டார்.கிழ்பாலத்தில் பாதிதுரம் சென்றிருப்போம். "காம்ரேட் ! ரன் அப் ! கமான் ! "என்று ஓடினார்>நானும்  ஓடினேன்.. மீனாட்சி கல்லுரி தாண்டி மேம்பாலத்தில் நின்று கொண்டு ஊர்வலத்தை படம்பிடித்தார்.  செங்கொடி அசைந்தாட ஊர்வலக் கட்சி ரம்யமாக இருந்தது.

நான் இரண்டு லட்சம் பேர் இருக்கும் என்று கணித்தேன்.மறு நாள் இந்தியன் எக்பிரசில் "mamooth gathering " என்று போட்டிருந்தார்கள்..

மேற்கு வாங்க நண்பரிடம் நான் சொன்ன பொது  வாய் கோண சிரித்தார். நீங்கள்  எவ்வள்வு என்று செய்தி அனுப்பினீர்கள் ?

"25000 என்று அனுப்பினேன். "என்றார்

"நீங்கள் செய்தது அநியாயம்" . என்றேன்.

"தமிழ்நாட்டு காரர்கள் எதிலும் உணர்ச்சி வசப்படுபவர்கள்."
"எப்படி?"

"இதைவிட ப்ரும்மான்டமான் பெரணிகளை பார்த்தவன் நான் "நாங்கள்  பேரணியின் புகைப்படத்தை வைத்து அளவிடுவோம்.கூட்டத்தின் அடர்த்தி, அதில் உள்ள வெற்றிடம், படத்தில் 10x 10 சதுரத்தில்  எத்துணை பேர் நிற்கிறார்கள்  மைதானம் எவ்வள்வு பெரியது என்பதை கணக்கிடுவோம். அது  கிட்டத்தட்ட சரியாக இருக்கும்".என்றார்.. 

"அண்ணல் காந்தியடிகள் இறந்த போது அஞ்சலி செலுத்த வந்த மக்கள் 8லட்சம்பேர்,
குருசேவும் புல்கானினும் இந்தியா வந்த போது மேற்கு வாங்க மக்கள் அளித்த வரவேற்பில் கலந்து கொண்டவர்கள் 11லட்சம் பேர் .

ஜோதிபாசு இடதுமுன்னணியில் முதலமைசராக பதவி ஏற்றபோது வந்த மக்கள் 13 லட்சம் பேர்.

இப்போது டெசம்பர் 2015 பேரணிக்கு வந்தவர்கள் கட்சியின் எதிர்பார்ப்பு 10 லட்சத்தையும் தாண்டிவிட்டது..(மம்தா போலிசு 2லட்சம் என்று கூறியுள்ளது)

தமிழகத்தில் அண்ணா  மறைந்த பொது கூடியவர்கள் 6லட்சம்.. 

அழகர் ஆத்தில் இறங்கும் போது வரும் கூட்டம் சில ஆயிரங்கள் தான் .தமிழ் பத்திரிகைகள் லட்சக்கணக்கில் என்று எழுதினாலும்..

Sunday, December 27, 2015

தோட்டக்காரா , தோட்டக்காரா ,

அதோ வருகிறார்களே , அவர்கள் 

காலடியில் என்னை போடு !!!



சதந்திர போராட்ட காலத்தில மாகன் லால் சதுர்வேதி என்ற கவிஞர் எழுதிய வரிகள் இவை :

நந்த வனத்தில் மலர்ந்த பூக்கள் சொன்னதாக கவிஞர் கூறுகிறார்:


தோட்டக்காரா! தோட்டக்காரா ! 
தினமும் காலையில் என்னை பறிக்கிறாய் !
மாலையாக தொடுக்கிறாய் !
ஈஸ்வரன் கழுத்தில்போடுகிறாய்  !
எனக்கு அதில் மகிழ்ச்சி இல்லை !

சுதந்திர போராட்ட வீரர்கள் வருவார்கள் !
கரடு முரடான பாதை கல்லும் முள்ளும் குத்துமே !
அதோவருகிறார்களெ !
அவர்கள் காலடியில் போடு !
அவர்கள் பாதங்கள் நோகாமல் பார்த்துக் கொள்வேன் !
அதுதான் எனக்கு மகிழ்ச்சி !!!


நேற்று காலை பத்து மணியிலிருந்து  ஆனந்த் பஜார் பத்திரிகை தொலைக்காட்சிமுன் அமர்ந்து விட்டேன்..
அவர்கள்  கொஞ்சம் கொஞ்சமாக அந்த மை தானத்துக்குள் வந்து  கொண்டிருந்தாரகள்.உழைப்பாளிகள், விவசாயிகள் , ஆசிரியர்கள்,அரசு உழியர்கள் ,சிப்பந்திகள், ஆயிரம் ஆயிரமாக ,இல்லை பத்தாயிரம்பத்தாயிரமாக,இல்லை லட்சம்லட்சமாக அவர்கள் தலைமை மார்க்சிஸ்டகட்டி கேட்டுக்கொண்டதற்காக  .வருகிறார்கள்.

பிமன் தாதா என்ற அந்த சிங்கம் மேடையில் ஏரி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்கிறது.

புத்ததேவ் அவர்கள் தலைமையில் பேரணி கூட்டம் துவங்குகிறது . பிமன், பிருந்தா, மாணிக் சர்க்கார்,முகம்மது சலீம், மாநில செயலாளர் டாக்டர் சுர்யகாந்த மிஸ்ரா கொடியேரிபாலகிருஷ்னண் ,  என்று பேசுகிறார்கள்

இறுதியில் சித்தாராம் எச்சூரி பேசுகிறார்.

"வங்கம்  இன்று நினைப்பதை இந்தியா நாளை  நினைக்கும் .   
மம்தாவை பதவியிலிருந்து இறக்குவோம்" வங்கத்தை காப்போம் !
மோடியை இறக்குவோம் .இந்தியாவை காப்போம் "

என்று கர்ஜிக்கிறார்.
 பத்துலட்சம் பேர் விண்ணைமுட்ட ஓரே குரலில் 
குரலெழுப்புகிறார்கள்.!!!

கண்கள்கசிய ,நெஞ்சம் விம்ம 
பார்த்தேனே!!!

Friday, December 25, 2015

இடதுசாரிகள் தனியாக 

நின்றால் .......!!!



மதுரை கீழ  மாசி விதியில் நிறைய கிட்டங்கிகள் உண்டு. பலசரக்கு சாமான்களை மொத்தமாக வாங்கி அவ்வப்போது தேவையான சரக்கை கடைகளுக்கு கொண்டுவந்து விற்பார்கள்.இந்த கிட்டங்கிகளில் "பெருச்சாளி " தொந்திரவு அதிக மாக இருக்கும். வாரத்திற்கு ஒரு நாள்  அடித்து விரட்ட கடை சிப்பந்திகள் கூடு \வார்கள்..
கிட்டங்கியின் சகல வழி களையும் அடைத்து விடுவார்கள். சுவரில் மட்டும்  கீழ்பகுதியில்  உள்ள துவாரத்தை விட்டு வைப்பார்கள். சுவரின் வெளிப்பகுதியில் தடி யோடு சிலர் காத்திருப்பார்கள். கிட்டங்கியின் உள்ளெ உள்ளவர்கள் மூல முடுக்கில் ஒளிந்திருக்கும் பெருச்சாளிகளை  விரட்டுவார்கள்.,சுவற்றின் துவாரம் வழியாக ஒவ்வொரு பெரு ச்சாளியாக வரும்போது அதனை துவம்சம் செய்து விடுவார்கள்.

மார்க்சிஸ்டு கட்சியின் மறைந்த தலைவர்  எ.பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறுவார்கள். "நாம் எப்பொதுமே தனியாக இருக்கக் கூடாது; எதிரி அதைத்தான் விரும்புவான். நாம் மக்களொடு இருக்க வேண்டும். அது நமக்கு பாதுகாப்பும் கூடா "என்பார்.

இந்தியாவில் இது வரை எந்த ஒருகட்சியும் தனந்தனியாக ஆட்சியை  பிடித்தில்லை . காங்கிரஸ்,பா ஜ.க உட்பட .மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரீ..

1952ம் ஆண்டு தேர்தலில் பின்புறமாக வந்த ராஜாஜியின் தலைமையில் மாணிகவேலர் உட்பட சேர்ந்து தான் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டது. அப்போது பெரும்பான்மையாக கம்யூனிஸ்டுகள் தலைமையில்கூட்டணி வெற்றிபெற்றிருந்தது.காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வில்லை 

1967லதிமுக கூட்டணியால் தான் வெற்றி பெற்றது.
அண்ண திமுக முதல் தேர்தலை திண்டுக்கல்லில் சந்தித்தது. மார்க்சிஸ்ட்கட்சி ஆதரவில் தான் வென்றது .

இது வரலாறு.'

இதுவரை எந்த கட்சியும் தனி பெரும்பான்மை பெறவில்லையா?

பெற்றது உண்டு!
மேற்கு  வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பெற்றது ஆனால் கூட்டணி கட்சிகளையும் அணைத்துக்கொண்டு அமைசரவையில் அவர்களையும் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைத்தது.

திரிபுராவிலும் இதே போல் ஆட்சியைப்பிடித்து அமைச்சரவையையும் அமைத்தது.

அரசியலில் நேர்மை , சகிப்பு உணர்வு, மக்கள் நலம் ஆகியவை மார்க்சிஸ்டு கட்சி க்கு மட்டும் அதிகமாகவே இருக்கிறது.

கூட்டணி என்பது தந்திரம் மட்டுமல்ல.
அது ஒரு அரசியல் நெறி !!!