தேவி பிரசாத் ராய் சவுத்திரி
என்ற
சிற்பி .......!!!
1923 ஆண்டு .கடுமையான கோடை வெய்யில். சென்னை திருவல்லிக்கேணி அருகில் அந்த கடற்கரையில் அந்த கூட்டம் நடந்தது அது மீ மாதம் முதல் தேதி..தொழிலாளிகளின் உரிமையையும், அவர்களின் நியாயத்தையும் உறுதிப்படுத்த சிங்காரவேலர் நடத்திய மே தினக்கூட்டம் தான் அது இந்திய மண்ணில் முதன் முதலாக மே தினக்கூட்டம் நடந்தது.
அதற்கு 36 ஆண்டுகள் கழித்து அதன் நினை வாக அதே இடத்தில் truamph of labour என்ற (உழைப்பின் வேற்றி ) சிற்பம் நிறுவப்பட்டது> முதல்வர் காமராஜர் 1959 ஆண்டு அதனை நிறுவினார்.
உலகம் போற்றும் அந்த சிற்பத்தை உருவாக்கியவர் தேவி பிரசாத் ராய் சவுத்திரி என்ற வாங்காளியாவார் மதராஸ் கலைப் பள்ளியின் முதல்வராக 29 ஆண்டுகள் பணியாற்றிய உலகம் போற்றும் சிற்பி அவர்.
நான்கு தொழிலாளர்கள் பெரும் பாறை ஒன்றை மிகவும் கஷ்டப்பட்டு வெற்றிகரமாக பெயர்த்தெடுக்கும் சிற்பம் அது.
அதன் முதல் மற்றும் முன்றாவது உரு வத்திற்கு மாதிரியாக தன மாணவன் ராமுவை நிற்கவைத்தார் ராய்.
இரண்டாவது நான்காவது சிற்பத்திற்குதன் கல்லூரியில் காவலாளியாக இருந்தவரை மாடலாக்கினார்
அந்த உழைபபாளிகளின் நாடி நரம்புகளையும், அவர்களின் உணர்வுகளையும்
மிகநுட்பமாக சித்தரிக்கும் அற்புதம் அந்த சிலைகள்.
1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது பிஹார் மாநிலம் பாட்னா நகரில் துப்பாக்கி சூடு நடந்தது..அதில் ஏழு பேர் துப்பாக்கி சூட்டில் இறந்தனர் அந்த காட்சியை ஏழு உருவங்களும் மடிந்து விழும் காட்சியை சிற்பமாக்கி பாட்னா நகரில் வைத்தார் சிற்பி ராய்.
தண்டி யாத்திரைக்கு சென்று உப்பு சத்தியாக்கிரகம் நடத்தினார் காந்தி அடிகள்.
பொலிசாரின் அடியை ஆணும் பெண்ணும் ஒருகையால் தடுத்துக்கொண்டு மறுகையால் உப்பினை எடுப்பதை சிற்பமாக்கினர் ராய் சவுத்திரி.
இன்றும் அது குடியரசுதலைவர் மாளிகை முன் இருக்கிறது.
ராய் சவுத்திரி சிறந்த வண்ண ஓவியரும்கூடா. ராசலிலைகளை ஓவியங்களாக தீட்டியுள்ளார்.
தமிழகத்தின் மிகச்சிறந்த சிற்பிகளில் ஒருவர் ராஜன் அவர்கள்.
ஏகப்பட்ட தடைகளை மீறி அவர் சிற்பக்கலையை கற்றுக் கொண்டவர் இன்றும் வெளிநாடுகளீல் அவர் படைத்த சிற்பங்கள் கோவில்களில் வழிபடப்பட்டு வருகின்றான
அவர் கடவுள்னம்பிக்கை இல்லாத நாத்திகர்.
ராய் சவுத்திரி போன்று நீங்களும் படைக்க வேண்டும் என்று என் போன்றவர்கள்
ஆசைப்படுகிறோம்.
உங்களால் முடியும் தோழரே !!!
0 comments:
Post a Comment