Wednesday, August 31, 2016



உலகம் அறியாத ஒன்று ....... !!!








உலகம் அறியாத ஒன்று நடந்தது ! 59 வருடங்களுக்கு முன் இந்தியாவில், உலகத்தில் எவருமே அறியாமல் எட்டுபேர் கொண்ட குழு மட்டுமே அறிந்த ஒன்று நடந்தது !


ஆம் ! இந்திய அரசாங்கத்தின் முடிவு ஆயுள்இன்சுரன்சதேசஉடமையாக்கும   முடிவு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது!


இதனை நடைமுறைப்படுத்த தேவையான அவசர சட்டம் மிக மிக ரகசியமாக தயாரிக்கப்பட்டது!


திறமையாக , எந்த சிக்கலும் ஏற்படாததாக, பார்த்துப்பார்த்து கவனமாக அமல் படுத்த திட்டம் தீட்டப்பட்டது !


அன்று இதனைச் சாதித்த நிதி அமைச்சர் சி.டி .தேஷ்முக் அவர்கள் தன்னுடைய வரலாற்று நுலில் இதனை  குறிப்பிடுகிறார்!




"நான் எச்.எம் படேலை வர்த்தக அமைச்சர் டி டி கிருஷ்ணமாசாரியாரை சந்திக்க அனுப்பினேன் ! அவருடைய சம்மதத்தை பெற -பிரதமரின் ஆமோதிப்பை பெற-அகில இந்திய ரேடியோவின் டைரக்டர் ஜெனரல் முலமாக இன்று இரவு நிதியமைச்சர் நாட்டுமக்களுக்குஒரு அறிவிப்பு செய்யவிருக்கிறார் என்று செய்தி சொல்ல ! என்ன சொல்லவிருக்கிறேன் என்பதை டைரக்டர் ஜெனரலுக்கும் சொல்லவேண்டாமென்று கூறிவிட்டேன் !"



அன்று இரவு ஒரு அவசர சட்டம் தயாராக இருந்தது ! அன்று இரவு அது கையெழுத்தாயிற்று !  மறுநாள் காலை 9 மணிக்கு இதற்காக போறுக்கி  எடுக்கப்பட்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இன்சுரன்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள் ! அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த  அதிகார உத்திரவை காட்டி அலுவலகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள் !ஆயு்ள்  இன்சுரன்சு தேச உடமையாக்கப்பட்டது !இது இந்திய அரசாங்கத்தால் மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட ,இனி எப்போதும்   நடத்த முடியாத சம்பவமாகும் !"








ஏன் இவ்வளவு ரகசியம் ? !




முன்னமெயே தெரிந்திருந்தால் கோடிகணக்கான கம்பெனி பணத்தை முதலாளிமார்கள் தங்கள் சொந்த வங்கி கணக்கிற்குமாற்றிவிடுவார்கள் என்ற பயம் தான் காரணம் !


எச்.எம் படேல்,பி.கே.கவுல்,எ,ராஜ கோபாலன் ஆகியமுவரும்தான் தளபதியாகச் செயல்பட்டார்கள்.! அவர்களுக்கு உதவியாக வையாபுரி,எம்.ஜ.ராவ் ஆகியோர் இருந்தனர் ! இந்த நடவடிக்கையை அமைச்சரவைஇன் ஆமொதிப்புக்காக வைக்கவில்லை ! பிரதமரிடம் மட்டும் சொல்லிவிட்டு -அதுவும் தேதி குறிப்பிடாமல் சொல்லிவிட்டு செய்தார்கள் !


பல்வேறு துறையைச் சேர்ந்த 47 அதிகாரிகாளை முக்கிய நகரங்களுக்கு 17ம்தெதியெஅனுப்பினார்கள்  ! அவர்களுக்கு ஏன் செல்கிறோம், என்பதைச் சொல்லவில்லை ! அவர்களிடம் சீல் வைக்கப்பட்ட கவர்கள் கொடுக்கப்பட்டன ! அதில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது !  


இந்த அதிகாரிகளுக்கன பயண ச்செலவுக்கான பணத்தை அரசு கஜானாவிலிருந்து எடுக்கவில்லை ! முத்த அதிகாரிகள் தங்கள் சொந்த வங்கிக்கணக்கிலிருந்து கொடுத்தார்கள் !  ரகசியம் அந்த அளவு காக்கப்பட்டது !


19-1-56 அன்று இரவு 8.30 க்கு  நிதி அமைச்சர் வானொலி முலம் இன்சுரன்சு நிர்வாகம் அரசு வசம் வருவதற்கான அவசரச் சட்டம்பற்றி  அறிவித்தார் !


கம்பெனி முதலாளிகள் அவசர சட்டம் பற்றிய விதிகளை அறிய தொலைபேசியில் காத்துக் கிடந்தனர் ! மறுநாள்  20-1-1956  அன்று விடிந்ததும் அந்தந்த அலுவலக வாயிலில் ஏற்கனவே நியமிக்கப்பட்டஅதிகாரிகள் கதவு திறக்க காத்திருந்தனர் ! 


கம்பெனியின் கணக்குப் புத்தகங்களில் கோட்டைப் போட்டு கையெழுத்திட்டனர் ! வழக்கம் போல வர்த்தகம் எந்த பாதிப்புமில்லாமல் தொடர்ந்தது ! 


இப்படி ஒரு நடவடிக்கைக்காக 1951ம் ஆண்டிலிருந்து போராடியது    அகில இந்திய இன்ரன்சு ழியர் சங்கம் .


"long live A I I E A !!!

(1-9-16  அன்று எல்.ஐ.சி உருவாக்கி வைர விழா நடத்தும் அகில இந்திய இன்ஸுரன்ஸ் ஊழியர் சங்கம்) 




Wednesday, August 24, 2016





அழுகும் மனுநீதி , 

அழிவது ,

உறுதி !!! 

திங்கள் கிழமை அன்று அந்த திருமணத்திற்கு சென்றிருந்தேன். மணமகள் மலேசியாவில் பணியாற்றுகிறார். மணமகன் அமெரிக்காவில். 

மணமகளின் தந்தை மராட்டிய  மாநிலம் . மகாராஷ்டிராவில் செட்டிலாகிய தமிழ் குடும்பத்து.பெண்ணை காதலித்து திருமணம். என்ன தான்  சாதி மத மறுப்பு திருமணம் செய்து கொண்டாலும் மகள்  செல்லும் புகுந்தவீடு எதிர்காலம் பற்றி பாசமுள்ள தந்தைக்கு கரிசனமிருக்கும் அல்லவா !

மணமகனின் தாயும் தந்தையும் கனடா நாட்டில் செட்டில் ஆனவர்கள்.மணமகன் முதன்முதலாகஇந்தியா வருகிறான்.தமிழ் அந்த குடும்பத்திற்கு பேச தெரியும். எழுத படிக்க தெரியாது. மணமகளும் தமிழ் பேசுவார்.எழுத படிக்க தெரியாது .மண  மகனின் தாயார் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். தந்தை தொம்பரை என்ற கிராமத்தை சேர்ந்தவர். 

நெல்லை மாவட்டத்தில் உள்ள "தென் திரு பேரை "என்று யூகித்து தோழர் கிருஷி அவர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க சொன்னேன்.

"ஸார்வாள் !தென்திரு பேரைக்கும் தோம்பறை க்கும் சம்மந்தம் கிடையாது."தென்பரை யிலிருந்து வெண்மணி வரை " என்று அப்பண்ணா சாமி நூல் எழுதி இருக்கிறார் . அவரை தொடர்பு கொள்ளுங்கள் " என்கிறார் கிருஷி .  அப்பண்ணா சாமியை தொடர்பு கொண்டேன்.

" வாடா " என்றால் "போடா " என்று சொல் ; அடித்தால் திருப்பி அடி " என்று முதல் முதல் சீனிவாசராவ் அவர்கள் அறிவித்த  ஊர் தென்பரை மன்னார் குடிக்கு அருகில் உள்ள கிராமம் .வைணவ பிராமணர்கள் நிறைந்த ஊர் என்று தெரிந்து கொண்டேன். திருமண  விழாவில்        எல்லாரையும் சந்திக்கமுடிந்தது.

நான் வாழும் அடுக்ககத்தில் நாற்பது குடும்பங்கள் வாழ்கின்றன .

வெவ்வேறு மொழி. மாநிலம்.பழக்க  வழக்கங்கள்  .கல்லூரியில் பள்ளிகளில்  படிக்கு மாணவ மாணவிகள் பழகும் அழகு , ஒவ்வொருவரும் தங்கள் எல்லை  எது என்பதை புரிந்து செயல்படுவது பார்க்க பரவசமாக உள்ளது. அவர்களுக்குள் உள்ள புரிதல்  சிறப்பானது.

திருமணம் என்று வந்தால் மட்டும் கண்ணுக்குத்தெரியாத ஒருவனை கொண்டு வந்து நிறுத்துகிறோம் . காரணம் சாதி .அதன் இறுக்கம் .

"உங்கள் தமிழ் நாட்டில் எப்படி இருக்கிறது ?" என்று  நண்பர்கேட்டார் 

"என் சிறு வயதில் பிராமணர் -பிராமணர் அல்லாதார் என்று தான் இருந்தது.அந்த காலத்தில் B   X   N B  என்பார்கள். அன்றய தலைவர்கள் பிராமணர் அல்லாதவர்களை ஒன்றுபடுத்தினார்கள். அதன் மூலம் பல உரிமைகளையும் சலுகைகளையும் அவர்கள்பெற்றுத்தந்தார்கள்."

"இன்று முகநூலில் பார்ப்பன எதிர்ப்பு கொடிகட்டி பறக்கிறது . ரெட்டியார் ரெட்டியார் விட்டு பெண்ணை மணந்து கொண்டு "மனுநீதிய ஒழிக்க " வருகிறார். பிள்ளை வீட்டில் மனம் புரிந்த பிள்ளைவாள் பார்ப்பனியத்தைஒழிக்க முண்டி அடிக்கிறார். என்ன செய்ய ?"

"தன்  மகளை 21 வயது ஆவதற்கு முன்பே தன உறவினருக்கு கட்டிவைக்கும் திருமணங்களை நடத்தி விட்டு புரட்ச்சி பேசுவதும்நடக்கிறது"  

"இந்தப்  போலிகளின் வாரிசுகள் சாதி சமயத்தை மீறி வருவது ஆறுதலளிக்கிறது." 

மநு நீதி அழுகி நாற்றமெடுக்க ஆரம்பித்து விட்டது.

இந்த  போலிகளையும் தாண்டி அழியத்தான் போகிறது.!!!


இது உறுதி !!!















Friday, August 19, 2016



மது விலக்கு -


பாவம் "முத்துக்குமார் "





அற்புதமான கவிஞன் ! எழுத்தாளன் ! சமூகப்பிரக்ஞை  உள்ள இளைஞன் !

அவனுடைய மரணத்தை இந்த மதுவிலக்கு ஆதரவாளர்கள் இவ்வளவு தூரம் கொசசை   படுத்தி இருக்க வேண்டாம் .

நுழைவதற்கு முன்பே இந்த துறையில் முதலில்  வேண்டியது இந்த பழக்கம்  தான். இது எல்லாருக்கும் தெரியும். 

என் போன்றவர்கள் பாக்கியசாலிகள்.நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போதே மது விலக்கு  அமலாகிவிட்டது. முதன் முதலாக மது விற்பனை கடையி னை   என் இருபத்திஇரண்டாம் வயதில் ஹைதிராபாத்தில் தான் பார்த்தேன். நானொன்றும் மதுவை தொட்டதே  இல்லை என்று சொல்ல வில்லை . and I am not a habitual drunkard .

குடிப்பதை பெருமையாக எழுதுவதும்  அதனை சிலாகித்து புகழுவதும் நின்றாலே பாதி பிரசினைமுடிந்து விடும்.

சாரு நிவேதிதாவும்,மனுஷ்யபுத்திரனும்குடித்துகும்மாளமிட்டதை  பத்திரிகைகள் பிரசுரிப்பதை நிறுத்தினாலே போதும். பிரச்சினை  தீர்ந்துவிடும் .

எதோ தமிழகத்தில் தான் குடித்து கொண்டாடுகிறார்கள் என்பது உண்மையல்ல. காந்தி அடிகள் பிறந்த குஜராத்திலும் உண்டு.

சந்திகரில்  நடந்த அகில இந்திய மாநாடு ஒன்றுக்கு பார்க்க சென்றிருந்தேன். மார்சு 31 லிருந்து நான்கு நாட்கள் நடந்தது. 5* வெப்பம்.குளிர் தாங்கமுடியவில்லை. பொது மாநாடு 11மணிக்கு வெளி அரங்கில் நடந்தது. மாலை 3 மணிக்கு முடித்து அனுப்பி விட்டார்கள். வந்திருந்த பார்வை யாளர்கள் பாக்கெட்டில் 1/4 பாட்டில்கள் இருந்தன.

தெலுங்கானா எழுசசியின்  பொது  போராளிகள் மலேரியாவினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காட்டுப்பகுதியில் இருப்பதால்.அவர்களிடம் "குடும்பா " என்ற நமது "கள் " மது எப்போதும் இருக்கும்.அதுதான் அதற்கான மருந்து . (telungaana struggle -by p .sundarayya ) 

- 40* குளிரில் வசித்திருக்கிறீர்களா ? மாசுகோவில் இது சர்வ சாதாரணம்.உயிர் காப்பதற்காகவாவது குடிக்கவேண்டியது உண்டு.

முதலமைசர்கள் எத்தனை  பேர் குடிக்கிறார்கள். அடையார் கடற்கரையில் போலீஸ் காவலோடு அமைசசரவை கூட்டம் நடக்குமே ! அப்போது குடிக்காமலா இருந்தார்கள்.

அந்த பிரபல நடிகர் அமெரிக்காவிலிருந்து வரும்போது black horse பாட்டிலை திறந்து குடித்துக் கொண்டேவந்தார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் எழுதியதை  பார்த்தவர்கள் தானே நாம்.

மதுவின் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் !

மது பழக்கமாகிவிடக்கூடாது !!

எல்லாம் சரிதான் !!!

தமிழகத்தின் பிரசினை அதுமட்டும் தானா ???















     













Tuesday, August 16, 2016




சரித்திர பொருள் முதல் வாதத்தை ,

இலக்கியமாக்கி தந்தவர் ,

ராகுல் ஜி !!!



கிறிஸ்து பிறப்பதற்கு 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கிறி ஸ்து பிறந்து பிறகான 1942ம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் வரை மனித குலவரலாற்றை கொடுத்தவர் ராகுல் சாங்கிருத்யாயன். 

அதனை அற்புதமான இலக்கிய நடையில் தந்தார். கி.மு 6000 த்தில் வாழ்ந் த  நிஷாவிலிருந்து 1942ல் ஜப்பானிய பாசிஸ்களை வென்ற சமர்  வரை ஒரு பருந்து பார்வையை கொடுக்கிறார்.

கம்யூனிஸ்டு இயக்கத்தின்பால்  ஈர்க்கப்படுபவர்களுக்கு அந்த இயக்கம் படிக்கக் கொடுக்கும்முதல் நூல்"வால்காவிலிருந்து  கங்கை வரை "என்ற இந்த நூலாகும் .

வீரம்,விவேகம்,பாசம்,பரிவு, காதல் என்று இதில் இல்லாத சுவையே கிடையாது எனலாம்.

20 கதைகளாக விரியும் இந்த நூலில் ராகுல் ஜி காதலை அமரத்துவமாக்கி இருக்கிறார் என்றால் மிகை இல்லை .

கம்பனின்மகன்அம்பிகாபதிஅமராவதிகாதல்,தேவதாஸ்பார்வதி,லைலா--மஜ்னு , ரோமியோ-ஜுலியட் படித்திருப்போம். ஆனால்  பிரபா -அஸ்வகோஷ் காதலை அமரத்துவம் பெற  செய்தவர் அவர்.   

அஸ்வகோஷ் அந்தணன். படித்தவன்.அறிவு ஜீவி . மகா கவி.மிகசிறந்த கலைஞன் . மரபு  ரீதியான நாடக கூறுகளையும் ,கிரேக்க நாடக  கூறுகளையும்   ஆய்ந்து  நாடக இயலுக்கு புத்துயிர் ஈட்டியவன் .

( இன்றும் டெல்லியில்  உள்ள தேசிய நாடக பள்ளியில் இவனுடைய நாடக பாணி கற்று கொடுக்கப்படுகிறது)  

பிரபா என்ற கிரேக்க வம்சத்து பெண்ணோடு இவன் நடித்த நாடகம் தான் "ஊர்வசி". பிரபாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். தங்க நிறத்தில் மின்னும் பிரபா அவனை  காதலிக்கிறாள். பெற்றோர்கள் இதனை  ஏற்கவில்லை. 

அஸ்வகோஷை புத்தமதத்தில் சேர்ந்து தன அறிவை சிறப்பிக்க விரும்புகிறான். உலகம் புராவிலும் அவன் புகழ்  பரவு கிறதுஆனால் அஸ்வகோஷுக்கு தயக்கம் உள்ளது. தன்  அறிவு பூர்வமான தேடலா-பிரபாவா  என்ற கேள்வி எழுந்த பொது அவன் பிரபா தான் என்று முடி எடுக்கிறான். 

"காதலா ! அன்பா ! என் உயிர் நீ !  உன்னை மணந்து உன் வாரிசை சுமக்க தயாராக இருக்கிறேன் .  ஆனால் நீ மகா  கவிஞன்! மகா கலைஞன் !  அறிவார்ந்தவன் ! நீ மக்களுக்கானவன் ! என்னை மற! நீ மறக்க மாட்டாய் ! நான் மறையும் வரை ! சரயு நதியின் வேகத்தில் ஆழமான  பகுதியில் நான் மறைகிறேன் ! என் உயிரே !" என்று கூறி பிரபா மறைகிறாள்.

அஸ்வ கோஷ் ,தேவ சேனரிடம் தீட்சை  பெற்று புத்த பிக்கு வாகிறான்.

ராகுல் ஜி யின் "வால்கா விலிருந்து கங்கை வரை "  மிகவும் வித்தியாசமான இலக்கிய படைப்பு .






 

Friday, August 12, 2016





ரயிலும்   

நாகர் கோவில் 

சின்ன பையன்களும் ...!!!



இந்த தலைப்பு ஒரிஜினல் இல்லை . "ரயிலும் நம்ம பாட்டையாவும் " னு தான் முதல்ல எழுதினேன் . சென்னைல நாடக கொட்டைகை சீன்  இழுக்கறவன் கூட சண்டைக்கு வந்தர்வான் .நாட்ல அவருக்கு அம்புட்டு சப்போர்ட்டு..

நான் சின்ன பையனா ஆறாப்பு படிக்க தி -லி டவுன் ஸ்டேஷன் பக்கத்துல இருக்கற பள்ளில படிசசென் . பாட்டையா என்னை வீட்டா ஒருவயது சின்னவராயிருக்கலாம். அப்போ எல்லாம்நாகர்கோவிலுக்கு ரயில் கிடையாது. நாளம்கிளாஸ் ஐந்தாம் கிளாஸ் பசங்களை பயோனியர் மற்றும் குமார விலாஸ் பஸ்ல கூட்டி வருவாங்க. அதுதான் ரயில்வேக்கான  அவுட் ஏஜென்சி . சேர்மாதேவில ரயில் ஏறி கல்லூர் ,பேட்டை,டவுன் ,ஜங்ஷன் னு அந்த பையன்களை கூட்டி வந்து ரயிலை காட்டுவாங்க.. 

"ஏல ! குட்டா ரயிலு ! ஏல ! செட்டா என்ஜின்னு ! ஏல ! சத்தம் போடாதல்ல பிடிசிட்டு  போயிருவான் ! " அந்த சின்ன பயலுக பேசுறத கேக்க நல்ல இருக்கும்இந்த கூட்டத்துல மணிங்கற சின்னப்பையனும் இருந்திருப்பான்.

1962ல நான் மதுரைக்கு மாற்றலாகி வந்தேன். நாகர்கோவில் பையன்க -ராமசந்திரன்,விட்டல் தாசு, துறை னு முணுப்பசங்க எல்.ஐ.சில சேர்ந்தாங்க. ஆபிசுக்கு   அடுத்து ரோடு அதுக்கு அடுத்து குட்ஷேட் . காலைல 8மணிக்கே வந்துருவானவுக .மொட்டைமாடிக்கு போய் நிப்பானுக.

"ஏல ! ராமாந்திரா ! ரயிலு ! சிக்கிரம்ல ! வா ! பாரு !" ம்பான் துறை !

"ஏ! இன்ஜினை பாருல!கிழக்க  பாருனா  மேக்க பாக்க !" ம்பான் ராமந்திரன்.

""எத்தான்   தண்டி என்ஜினு!! "னு முக்குல கைவைப்பன் விட்டல் தாசு.

ஆபிஸ்விடத்தும் ரூமுக்கு போக மாட்டாங்க.மதுரை ஸ்டேஷன்ல போயி வர போற ரயில்ல ஏறி இறங்கி பாப்பாங்க.இன்ஜினை குட்ஸ்ட்ல போய் பாத்துகிட்டே மணிக்க்ணக்குல நிப்பானுங்க.

நாகர் கோவிலுக்கு ரயில் வந்திட்டது. முத ரயிலு  விட்ட அன்நிக்கு  பாக்கணுமே. ரயிலைவிட நான் ஓடிடுவேன் னு சொல்லி துறையோடு அன்னான் ஒடி கல்வெர்ட்ல  முட்டி கால  ஓடசசி கிட்டான்.  .

ராமந்திரன் இப்பம் தொழிற்சங்க தலைவர் மகன் சிங்கப்பூர்ல .பயணம் பூரா  பிளைட் தான்

துறை  மாப்பிள்ளை  பெரிய அரசியல் தலைவரு. கால் பூமியிலேயே படாது..

விட்டால் தாசு மகள் அமெரிக்காவுல இருக்கு.

பாட்டையா லண்டன் ல இருந்தவறு.!

என்ன பிரயோசனம் ! 

ரயிலை பத்து வயசுக்கு மேல தான பாத்திய !!!