Tuesday, August 16, 2016




சரித்திர பொருள் முதல் வாதத்தை ,

இலக்கியமாக்கி தந்தவர் ,

ராகுல் ஜி !!!



கிறிஸ்து பிறப்பதற்கு 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கிறி ஸ்து பிறந்து பிறகான 1942ம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் வரை மனித குலவரலாற்றை கொடுத்தவர் ராகுல் சாங்கிருத்யாயன். 

அதனை அற்புதமான இலக்கிய நடையில் தந்தார். கி.மு 6000 த்தில் வாழ்ந் த  நிஷாவிலிருந்து 1942ல் ஜப்பானிய பாசிஸ்களை வென்ற சமர்  வரை ஒரு பருந்து பார்வையை கொடுக்கிறார்.

கம்யூனிஸ்டு இயக்கத்தின்பால்  ஈர்க்கப்படுபவர்களுக்கு அந்த இயக்கம் படிக்கக் கொடுக்கும்முதல் நூல்"வால்காவிலிருந்து  கங்கை வரை "என்ற இந்த நூலாகும் .

வீரம்,விவேகம்,பாசம்,பரிவு, காதல் என்று இதில் இல்லாத சுவையே கிடையாது எனலாம்.

20 கதைகளாக விரியும் இந்த நூலில் ராகுல் ஜி காதலை அமரத்துவமாக்கி இருக்கிறார் என்றால் மிகை இல்லை .

கம்பனின்மகன்அம்பிகாபதிஅமராவதிகாதல்,தேவதாஸ்பார்வதி,லைலா--மஜ்னு , ரோமியோ-ஜுலியட் படித்திருப்போம். ஆனால்  பிரபா -அஸ்வகோஷ் காதலை அமரத்துவம் பெற  செய்தவர் அவர்.   

அஸ்வகோஷ் அந்தணன். படித்தவன்.அறிவு ஜீவி . மகா கவி.மிகசிறந்த கலைஞன் . மரபு  ரீதியான நாடக கூறுகளையும் ,கிரேக்க நாடக  கூறுகளையும்   ஆய்ந்து  நாடக இயலுக்கு புத்துயிர் ஈட்டியவன் .

( இன்றும் டெல்லியில்  உள்ள தேசிய நாடக பள்ளியில் இவனுடைய நாடக பாணி கற்று கொடுக்கப்படுகிறது)  

பிரபா என்ற கிரேக்க வம்சத்து பெண்ணோடு இவன் நடித்த நாடகம் தான் "ஊர்வசி". பிரபாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். தங்க நிறத்தில் மின்னும் பிரபா அவனை  காதலிக்கிறாள். பெற்றோர்கள் இதனை  ஏற்கவில்லை. 

அஸ்வகோஷை புத்தமதத்தில் சேர்ந்து தன அறிவை சிறப்பிக்க விரும்புகிறான். உலகம் புராவிலும் அவன் புகழ்  பரவு கிறதுஆனால் அஸ்வகோஷுக்கு தயக்கம் உள்ளது. தன்  அறிவு பூர்வமான தேடலா-பிரபாவா  என்ற கேள்வி எழுந்த பொது அவன் பிரபா தான் என்று முடி எடுக்கிறான். 

"காதலா ! அன்பா ! என் உயிர் நீ !  உன்னை மணந்து உன் வாரிசை சுமக்க தயாராக இருக்கிறேன் .  ஆனால் நீ மகா  கவிஞன்! மகா கலைஞன் !  அறிவார்ந்தவன் ! நீ மக்களுக்கானவன் ! என்னை மற! நீ மறக்க மாட்டாய் ! நான் மறையும் வரை ! சரயு நதியின் வேகத்தில் ஆழமான  பகுதியில் நான் மறைகிறேன் ! என் உயிரே !" என்று கூறி பிரபா மறைகிறாள்.

அஸ்வ கோஷ் ,தேவ சேனரிடம் தீட்சை  பெற்று புத்த பிக்கு வாகிறான்.

ராகுல் ஜி யின் "வால்கா விலிருந்து கங்கை வரை "  மிகவும் வித்தியாசமான இலக்கிய படைப்பு .






 

0 comments: