Friday, August 12, 2016





ரயிலும்   

நாகர் கோவில் 

சின்ன பையன்களும் ...!!!



இந்த தலைப்பு ஒரிஜினல் இல்லை . "ரயிலும் நம்ம பாட்டையாவும் " னு தான் முதல்ல எழுதினேன் . சென்னைல நாடக கொட்டைகை சீன்  இழுக்கறவன் கூட சண்டைக்கு வந்தர்வான் .நாட்ல அவருக்கு அம்புட்டு சப்போர்ட்டு..

நான் சின்ன பையனா ஆறாப்பு படிக்க தி -லி டவுன் ஸ்டேஷன் பக்கத்துல இருக்கற பள்ளில படிசசென் . பாட்டையா என்னை வீட்டா ஒருவயது சின்னவராயிருக்கலாம். அப்போ எல்லாம்நாகர்கோவிலுக்கு ரயில் கிடையாது. நாளம்கிளாஸ் ஐந்தாம் கிளாஸ் பசங்களை பயோனியர் மற்றும் குமார விலாஸ் பஸ்ல கூட்டி வருவாங்க. அதுதான் ரயில்வேக்கான  அவுட் ஏஜென்சி . சேர்மாதேவில ரயில் ஏறி கல்லூர் ,பேட்டை,டவுன் ,ஜங்ஷன் னு அந்த பையன்களை கூட்டி வந்து ரயிலை காட்டுவாங்க.. 

"ஏல ! குட்டா ரயிலு ! ஏல ! செட்டா என்ஜின்னு ! ஏல ! சத்தம் போடாதல்ல பிடிசிட்டு  போயிருவான் ! " அந்த சின்ன பயலுக பேசுறத கேக்க நல்ல இருக்கும்இந்த கூட்டத்துல மணிங்கற சின்னப்பையனும் இருந்திருப்பான்.

1962ல நான் மதுரைக்கு மாற்றலாகி வந்தேன். நாகர்கோவில் பையன்க -ராமசந்திரன்,விட்டல் தாசு, துறை னு முணுப்பசங்க எல்.ஐ.சில சேர்ந்தாங்க. ஆபிசுக்கு   அடுத்து ரோடு அதுக்கு அடுத்து குட்ஷேட் . காலைல 8மணிக்கே வந்துருவானவுக .மொட்டைமாடிக்கு போய் நிப்பானுக.

"ஏல ! ராமாந்திரா ! ரயிலு ! சிக்கிரம்ல ! வா ! பாரு !" ம்பான் துறை !

"ஏ! இன்ஜினை பாருல!கிழக்க  பாருனா  மேக்க பாக்க !" ம்பான் ராமந்திரன்.

""எத்தான்   தண்டி என்ஜினு!! "னு முக்குல கைவைப்பன் விட்டல் தாசு.

ஆபிஸ்விடத்தும் ரூமுக்கு போக மாட்டாங்க.மதுரை ஸ்டேஷன்ல போயி வர போற ரயில்ல ஏறி இறங்கி பாப்பாங்க.இன்ஜினை குட்ஸ்ட்ல போய் பாத்துகிட்டே மணிக்க்ணக்குல நிப்பானுங்க.

நாகர் கோவிலுக்கு ரயில் வந்திட்டது. முத ரயிலு  விட்ட அன்நிக்கு  பாக்கணுமே. ரயிலைவிட நான் ஓடிடுவேன் னு சொல்லி துறையோடு அன்னான் ஒடி கல்வெர்ட்ல  முட்டி கால  ஓடசசி கிட்டான்.  .

ராமந்திரன் இப்பம் தொழிற்சங்க தலைவர் மகன் சிங்கப்பூர்ல .பயணம் பூரா  பிளைட் தான்

துறை  மாப்பிள்ளை  பெரிய அரசியல் தலைவரு. கால் பூமியிலேயே படாது..

விட்டால் தாசு மகள் அமெரிக்காவுல இருக்கு.

பாட்டையா லண்டன் ல இருந்தவறு.!

என்ன பிரயோசனம் ! 

ரயிலை பத்து வயசுக்கு மேல தான பாத்திய !!!

1 comments:

'பரிவை' சே.குமார் said...

ரசித்து வாசித்தேன் ஐயா....