Wednesday, December 21, 2011

சாகித்ய அகாதமி விருது...

சாகித்ய அகாதமி விருது......

இந்த ஆண்டு தமிழ் மொழிக்கான விருது எங்கள் தமிநாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடெசன் அவர்களுக்கு அளிக்கப்பட்டதாக அறிவிப்பினைக்கேட்டதும் இனிய அதிர்ச்சி. மதியம் 12 மணிக்கு அவரை தொடர்பு கொண்டபோது அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் இல்லைதான்.

1980 ஆண்டுகளின் துவக்கத்தில் தமிழ் புலவருடன் அலைந்து கொண்டிருந்த அந்த பால்வடியும் முகம் தான் எனக்குநினைவிருக்கிறது.என்ன அற்புதமான ,ஆரோக்கியமான வளர்ச்சி.! த .மு எ.க.ச.வின் பொதுச்செயலாளர் , சிறந்த நவலாசிரியர், திரைப்பட கthai ஆசிரியர்,தற்போது சாகித்ய அகாதமி விருது!.சுவே அவர்களே வாழ்த்துக்கள்.

வெங்கடேசனைவிட மூத்த எழுத்தாலர்கள்பலருண்டு.அவர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லயே என்ற ஆதங்கமும் சரியே! வண்ண நிலவன்,வண்ணதாசன், ஜெயமோகன்,குருசு,ஜாகீர் ராசா ஆகியொருக்கு கொடுக்கப்படவில்லையே என்ற ஆதங்கமும் சரிதான்.அதோடு, தலித் இலக்கியத்தை துவக்கி, யதார்த்த வாதத்தை ஆரம்பித்து வைத்த டி.செல்வராஜ் , கு.சின்னப்பபாரதி ஆகியோர் பெயரை மறந்துவிட்டதுஅவர்களுக்கு நினைவில் வராமல் போனதுவருத்தமளிக்கச்செய்கிறது

என்ன செய்ய?

Saturday, December 17, 2011

பேயை விரட்டப்போய் பிசாசைப் பிடித்தார்கள்......

பேயை விரட்டப் போய் பிசாசைப் பிடித்தார்கள்.....

அழகான அரண்மணையைக் கட்டவிரும்பினான் ஒருவன்.கட்டிமுடித்ததும் தான் தெரிந்தது அதில் அவனுக்கு முன்பாகவே ஒரு பேய் குடிவந்து விட்டது என்பது. பேயை விரட்ட பூசாரியைக் கூட்டி வந்தான்.அவனோ அரண்மணையின் ஒவ்வொரு செங்கலிலும் பிசாசை குடிவைத்துவிட்டான்

இந்தியா என்னும் அழகான அரண்மனையை கட்டினொம் அதில் அமர்ந்த பேய்களை ஒட்ட மன்மோகன்,சிதம்பரம்,மாண்டேக் சிங் என்று மூன்று பூசாரிகளைக்கொண்டுவந்தோம் .பேய்களுக்குப் பதிலாக ஊழல் பிசாசுகளை குடிவைத்துவிட்டார்கள். பேயும் பிசாசுகளும் இருக்கட்டும். இந்த பூசாரிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டிய பெரும் பணி நம் முன்னே வந்துவிட்டது.

கெட்டு அழுகி பூஞ்சைகாளான் பிடிக்கும் தானியத்தை பட்டினியால் சாகும் மக்களுக்குக் கொடுக்கக் கூடாதா என்று நீதிமன்றம் கேட்டது. மக்கள் சோம்பேறிகளாகிவிடுவார்கள் அதனால் கொடுக்கமாட்டொம் என்றார்கள். சமீபத்தில் தணிக்கை மற்றும் கணக்கு பரிசீலன செய்யும் அதிகாரி சொல்லியிருக்கிறார்.ஆண்டுக்கு 1,90,000 கோடி வரி வசூலாகமல் இருக்கிறதாம். இதில் 160000 கோடி கண்டிப்பாக வசூலாகாது என்கிறார்.

இது பற்றி நடாளுமன்றத்தில் கேட்டால் தண்ணிப்பாம்பு மாதிரி நாக்கைத் துருத்திக்கொண்டு சிதம்பரம் நியாயப்படுத்துவார்.

கிட்டத்தட்ட 1,40,000 கொடி பாக்கிவத்திருப்பவர்கள் 12பேர். 120 கோடி மக்களில் 12பேர் வரி கொடுக்காமல் இவ்வளவு பணத்தை வைத்துள்ளார்கள். இவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாட ஜேத்மலானிகள், பூஷன்கள்,சிதம்பரம்கள் உண்டு.

கள்ளப்பணத்தை எந்தஊரில் எந்த வங்கியில் போடவேண்டும் என்கிறீர்களோ அங்கு போட தயாராக ஏஜெண்டுகள் உள்ளனர்.அதில் முக்கியமானவன் ஹாசன் அலி கான். இவன் மட்டும் பாக்கி வைத்திருக்கும்வரி 50,345 கோடி. இவனுடைய கூட்டாளியின் மனைவி சந்திரிகா தபூரியா கணக்கில் வரி பாக்கி20,540 கோடி.நரசிம்ம ராவுக்கு சூட்கெசில் 1 கோடிகொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷத் மேத்தா வரி பாக்கி 15944 கோடி .

இவர்கள்,மற்றும் கள்ளப்பணக்காரர்களின் பெயரை சொல்லமாட்டேன்னு சாதிக்கிறாங்கள்.சொன்னா என்ன ஆயிறும். ரோட்ல இந்தப்பயிலுக சொகுசு கார்லபொகும்போது ரோட்டொரமா நின்ணு "ஒகோ இவந்தானா அவன் " ந்னு பெருமூச்சு விடுவோம். தூக்கி போட்டு மிதிக்கவா போறோம்.

Wednesday, December 14, 2011

நண்டு கொழுத்தால்......

நண்டு கொழுத்தால்......

ஜனாதிபதிக்கான தேர்தல் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடை பெற உள்ளது. தற்பொது ஜனாதிபதியாக இருப்பவர் ஒபாமா.இவர் மீண்டும் ஜனாதிபதியாக விரும்புகிறார்.இ வர் ஜனநாயகக் கட்சி உறுப்பினர். இவரை எதிர்த்து ரோம்னி என்பவர் நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரோம்னி குடியரசுக்கட்சசி உறுப்பினர்.இரண்டு கட்சியுமே பெரும் பணக்காரர்களை அண்டிபிழைக்கும்கட்சிகள் தான் . தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன வித்தியாசம்!அதேதான் இவை இரண்டுக்கும்

அமேரிக்கா தற்பொது . கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. சென்ற தேர்தலின் பொதும் இதே நிலமைதான்.வேலையின்மை அதிகரிப்பு,மக்களுக்கான நிவாரண உதவிகள் ரத்து, நிதி நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திவாலாவது, என்று திணறியது. இவற்றிலிருந்து மீளமுடியுமா? என்று திகைத்து நின்ற போது "ஆம்! நம்மால் முடியும்" என்ற கோஷத்தை முன் வத்து ஒபாமா பொட்டியிட்டார். மக்கள் நம்பினர்.அவர்கள் ஆதரவோடு வெற்றி பெற்றார்..

நிலைமையில் மாற்றம் எதுவும் இல்லை. மக்கள் ஆதரவு நடவடிக்கை களுக்குப் பதிலாக, தனியார் நிதிநிறுவனங்களுக்கு அரசு உதவிகளைச்செய்வதின் மூலம் நிலமையைச்சமாளிக்க முயன்றார்.தாங்கமுடியாத சுமைகளை மக்களின் மீது ஏற்றிய பொது அவர்கள்நிதி நிறுவனங்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் "வால் ஸ்ட்றிட்டை " தாக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலமையில் அடுத்த ஆண்டு தெர்தலை சந்திக்க ஜனநாயகக் கட்சியும் ,குடியரசுக்கட்சியும் களமிறங்க உள்ளன. இரண்டு கட்சிகளிடமும் நலிந்து போன் முதலாளித்துவ தீர்வினைத்தவிர எதுவும் இல்லை . ஆகவே இரண்டு கட்சிகளுமே மக்களின் கவனத்த திருப்ப யுத்தவேறியை பயன்படுத்த முடிவு செய்துள்ளன என்பது சமீப பெச்சுகளிலிருந்து வெளிப்படுகிறது. அவர்களு க்கு ஒரு எதிரி வேண்டும்.

தோதான எதிரியாக அவர்களுக்கு தற்போது ஈரான்கிடைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான,ஈராக், லிபியாஎன்று முடிந்தநிலையில் இன்று ஈரானை அமுக்க நினைக்கிறார்கள் .

அமெரிக்காவில் உள்ள சவுதி தூதரகம் தாக்கப்பட்டது. அதன் தூதுவரைக் கொல்ல ஈரான் சதி செய்தாதாக அமேரிக்கா குற்றம் சாட்டுகிறது. இந்த தாக்குதல் சம்மந்தமாக அப்ரசியாஎன்ற நபர்கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவர் ஈராணிய வம்சத்தை செர்ந்தவர். அப்ரசியாவின் உறவினர் .கோலம் சாவ்ரி. இவர் ஈரான் நாட்டிற்குள் ஈரானை எதிர்த்து கலகம் செய்யும் குழுவை சார்ந்தவர். சவுதி துதரகத்தைத்தாக்க இவருக்கு இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பு உதவியுள்ளது. இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி ஈரான் மீது யுத்தம் தொடுக்க பவேலை நடக்கிறது. சர்வதேச அணுசக்தி இணையம் அமெரிக ஆதரவு நிலை எடுத்து ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.இதில் வேடிக்கை என்ன வென்றால் சி.ஐ.ஏ வும், எஃப்.பி.ஐ யும் இதனை எதிர்க்கிறது.போதுமன ஆதாரம் இல்லை என்று இவை கருது கின்றன

அமெரிக்க ஜனதிபதிதேர்தலுக்கு முன் இரான் தாக்கப்படலாம்.

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள். அமெரிக்கவில் ஜனதிபதி தேர்தல் வந்தால் ஏழை நாடு ஒன்று தாக்கப்படத்தான் வேண்டுமா!!

Saturday, December 10, 2011

நல்லவரா...? கெட்டவரா...?

நல்லவரா? கெட்டவரா?.........

இந்தியாவில் அவசரநிலைக்காலம் முடிந்து ஜானதா ஆட்சிஏற்பட்டது. இந்திய -சின எல்லைத்தாவாவை தீர்க்க முயற்சிகள் எடுக்கப்பட பல யோசனைகள்கூறப்பட்டன .பாதுகாப்புத்துறையில் ஆலோசகராக கே.சுப்பிரமணியம் என்பவர் இருந்தார். இந்திய அரசோடு ஒரு உடன் படு கொள்ள இது தான் சரியான நேரம் என்று அவர் சீனாவிடம் கூறினார்.

"காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தால் எந்த ஒப்பந்ததைப் போட்டாலும்எதிர்க்கட்சி வலது சாரிகள் எதிர்க்கவே செய்வார்கள் . இப்போது அவர்கள் அதிகமாக உள்ள ஜனதா ஆட்சியில் ஒப்பந்தம் போடுவது சரியாக இருக்கும்.சீனா ஒரு கம்யூ நிஸ்ட் நாடு என்பதால் இதனைசொல்கிறேன் "என்று ஒரு விசித்திரமான காரணத்தையும் அவர் கூறினார்.

இந்தக் கருத்தை சுப்பிரமணியம் சாமியும் ஏற்றுக் கொண்டிருந்தார்.சுப்பிரமணியம் சாமிக்கு "மாண்டரின் சீனமொழி " எழுதவும் பேசவும் தெரியும் .அவர் சீனநாட்டுக்குச்சென்றார்.அங்கு சென்று மக்கள் சீன குடியரசுத்தலைவர் டெங்க் ஷியோ பிங்க் அவர்களைச்சந்தித்தார்." இந்திய அரசாங்கத்தோடு எல்லை பிரச்சினை பற்றி ஒரு தீர்வு ஏற்பட இது ஒரு நல்ல தருணம்.அரசாங்கத்தில் பழய ஜனசங்கத்தினர் அதிகம் உள்ளனர். அவர்கள் இந்துத்துவ வாதிகள்.அவர்களை சரிசெய்ய ஒரு நல்லெண்ண நடவடிகை எடுங்கள்". என்று கேட்டுக்கொண்டார்.

"இந்துக்களுக்கு மிகவும் புனிதமானது "கைலாச யாத்திரையும் ,மானசரோவர் ஏரியில் நீராடுவதும்.1962 தாவாவுக்குப் பிறகு இந்த யாத்திரை செல்வது தடைபெற்றுள்ளது..இதனை மீண்டும் அனுமதிப்பதின் மூலம் சீனா தன் நல்லெண்ணத்தை வெளிபடுத்த வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக சுப்பிரமணியம் சாமியின் தலைமையில் "கைலாச" யாத்திரை மீண்டும் துவங்கியது.

பாதரசம் வெப்பத்தைத் தாங்காது.மிகக் குறந்த வெப்பமானாலும் அது சுருங்கி விரியும் .அதனால் தான் அதனை " உஷ்ணமானி" யாக பயன்படுத்துகிறார்கள்.சுப்பிரமனியம் சாமியும் அதே போன்று எப்போது என்ன சொல்வார் செய்வார் என்பதை சொல்லமுடியாது.வாஜ்பாய் பற்றி "அவர் குடிகாரர், சபல புத்திக்காரர்" என்று குற்றம் சாட்டியதும் அதனால் ஜனதா கட்சியில் ஏற்பட்ட விளைவுகளூம் வரலாறாகும்.

"ராமர் பாலம் " இருந்தது . இலங்கைக்கு நடந்தே இப்போதும் போகலாம் "என்று கூறி தனுஷ்கோடியிலிருந்து தன் துணைவியாரோடு நடக்க முயன்று தோல்வியச்சந்தித்தவர்.

இந்திராகாந்தி அம்மையார், வாஜ்பாய், கருணாநிதி ,ஜெயலலிதா என்று அத்துணைபேரையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர்.

சுப்பிரமணியம் சாமி மதுரை அருகில் உள்ள சோழவந்தானை பூர்வீகமாகக் கொண்டவர்.மயிலாப்பூரில் பிறந்தவர்.தந்தை சீதாரமன் சுப்பிரமணியம் ,மத்திய அரசில் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் . சுத்தமான ஐயர்(பாப்பான்).சாமியின் தாயார் தமிழ் பேசும் திருச்சூரைச்சேர்ந்த கெரளத்துப் பெண்மணி.சாமியின் அத்திம்பெர் யூத மதத்தைச்செர்ந்தவர். அவருடைய மகள் சுபாஷினியை ஹைதர் என்ற முஸ்லீமுக்கு மணமுடித்திருக்கிறார். அவருடைய மைத்துனியின் கணவர் கிறிஸ்துவர். அவர் மனைவி டாக்டர் ரொஹனா பார்சி மதத்தைச்செர்ந்தவர்.

சுப்பிரமணியம் சாமி நல்லவரா? கெட்டவரா?

Thursday, December 08, 2011

வாய் கொழுப்பு....

வாய் கொழுப்பு....

சோழவந்தான் முல்லிபள்ளம் தெரு சுப்பிரமணியம் சாமியின் வாய்க்கோழுப்பு உலகமறிந்த ஒன்று.1965ம் ஆண்டு அமெரிக்கபல்கலையான புகழ் பெற்ற ஹார்வர்டு பலகலைகழகத்தில் முனவர் பட்டம் பேற்றார். அதே பல்கலையில் பெராசிரியராகப் பணியாற்றினார்.

இந்தியா வந்த பிறகும் அந்த பல்கலையின் கோடை கால பள்ளியில் பெராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.இவ்வளவு இருந்தும் "இந்துத்துவா " மோகம் அவரை ஆட்டுவிக்கும் .சமீபத்தில் ஒரு பதிப்பகத்தின் இதழ் ஒன்றில் அவர் எழுதியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

"இந்த்தியாவில் உள்ள மசூதிகளை யெல்லம் இடித்து விட வேண்டும். தங்கள் முன்னோர்கள் இந்துக்கள்தான் என்று ஏற்றுக்கொள்ளும் முஸ்லீம்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்க வேண்டும்" என்று எழுதியிருந்தார். நம்மூரில் உள்துறை iஅமைச்சர் ப .சிதம்பரம் வாயில் கட்டை விரலை வைத்துக்கொண்டு இருந்தார். கூகிள்,யாகு,ஃபேஸ் புக் மீது பாய்ந்துவிழும் கபில் சிபல் மூச்சு விடவில்லை.

ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மதக்கல்வித்துறை பேராசிரியர் தியானா என்ற அம்மையார் இதன கடுமையாக சாடினார். இப்படிப்பட்ட ஒரு மத குரோத உணர்வு கொண்ட ஒருவர் நமது பல்கலையில் ஆசிரியராக இருப்பது கேவலமானது. அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கமிட்டியில் தீர்மானம் கொண்டுவந்தார். பெரும்பான்மையினர் ஆதரிக்க நிறை வேறியுள்ளது. "சாமியின் கூற்று பொதுவானதல்ல.தேவையற்றதும் கூட" என்று தியானா அம்மையார் கூறியுள்ளார்.

"இது யூத அமெரிக்கர்களும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் ஆங்கிலோ சாக்ஸன் ப்ராடெஸ்டெண்ட் சர்ச்தான் எங்கள் முன்னோர்கள் என்று சொன்னால் தான் வாக்குப் போட அனுமதிக்க முடியும்" என்பது போல் உள்ளது என்று ஹார்வர்டு பல்கலையின் வரலாற்றுப் பேராசிரியர் சுகதா போஸ் கூறியுள்ளார்.

சுப்பிரமணியன் சாமியின் வாய்க்கொழுப்பு அவர் வேலையை நேற்று பறித்து விட்டது.

Monday, December 05, 2011

சங்கீதாவின் கணவர்.....

சங்கீதாவின் கணவர்.....

என் துணைவியாருக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருக்கும் அம்மையார்தான் சங்கீதா.அவருடைய கணவர் தினம் காலையில் எழுந்ததும் 1000 ரூ கடன் வாங்குவார், அதற்கு காய்கறி வாங்கி தள்ளூவண்டியில் வைத்து தெருதெருவாகச்சென்று விற்பார்.இரவு 7மணிக்கு கடனை வட்டியோடு திருப்பிக் கொடுப்பார். ராக்கெட்வட்டி என்றோ மீட்டர் வட்டி என்றோ அந்த அம்மையார் சொல்வார்கள்

இவர்களுக்குப் பதிலாகத்தான் "வால்மார்ட்" வரப் போகிறது. மிகப் பிரும்மாண்டமான அமெரிக்கக் கம்பெனி.அதனுடைய விற்று வரவு 18 லட்சத்து 95 ஆயிரம் கோடிரூபாய். சங்கீதாவின் கணவர் இந்த கம்பேனியோடு போட்டியிடவேண்டும். டிஸம்பர் மாதம் 1ம் தேதி சங்கீதாவின் கணவர் வியாபாரம் செய்யவில்லை. கெட்டதற்கு சங்கீதா
"ஹர்த்தால் ஐயா!

" எதற்காகத்தெரியுமா?

" தெரியாது.என்னமோ எங்க பொழப்புல மண்ணை பொடுதாங்கனு எங்காஆளு சொல்லிச்சு"

நான் விவரத்தச்சொன்னேன் .

"ஐயா இது சர்க்காருக்கு தெரியாதா?"

"நல்லாதெரியுமே"

"தெரிஞ்சும் ஏன் செய்தான் செத்த பயலுக"

நான் பதில் சொல்லவில்லை .

"அடுத்த தடவை இவனுகளுக்கு ஒட்டு போடக்கூடாது "

"வாரவன் மட்டும் யொக்கியமா?"
சங்கீதா மவுனமானாள். திடீரென்று அவள் முகத்தில் பிரகாசம்."நீங்க நில்லுங்களேன் ஐயா! நாங்க எல்லாம் செர்ந்து ஓட்டு பொடுதோம்".
தனக்கு தெரிந்தவர்,நெருக்கமனவர் தெர்தலில் வருவது சங்கீதாவுக்குப் பிடித்திருந்த்தது என்பதை அவருடைய முகம் ஜொலித்ததில் புரிந்த்தது.நான் பதில் சொல்லவில்லை.மையமாக தலையை ஆட்டிவத்தேன்.

Friday, December 02, 2011

மூலதனம் என்ற வனவிலங்குகளால் குத்திக் கிழிக்கப்படுகிறதே....

வன விலங்குகளால் குத்திக் கிழிக்கப்பட்டுவிட்டதே........

இரண்டாம் உலகப் போருக்குப்பின் கிட்டத்தட்ட நாற்பத்தியைந்து ஆண்டுகள் அமைதியாக இருந்த உலகம் தற்பொது முலதனம் என்ற வனவிலங்க்கால் குத்திக் கிழிக்கப்பட்டு கெட்பாரற்று பொய்விட்டதே!

1989ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் சோவியத் நாட்டின் அதிபர் கோர்பசோவ் தன் ராஜினாமாவை அறிவித்தார். சொவியத் நாட்டின் கொடி கிரம்ளின் மாளிகையில் இறக்கப்பட்டு ரஷ்யாவின் கொடி ஏற்றப்பட்டதும் அதே டிசம்பரில் தான். கோர்பசோவ் இந்தியா வந்தார் .அவர் வந்ததைக் கொண்டாடும் விதமாக மதுரையில் புலவர் புத்தூரான் தலைமையில் மதுரை நேரு வினாயகர் கோவில் முன்பு த.மு.எ.ச. சார்பில் பிரும்மாண்டமான் கவியரங்கம் நடத்தினோம்.கோர்பசோவின் நேற்றியில் இடது பக்கம் மச்சம் உண்டு வழுக்கைத்தலையில் பளிச்சென்று தெரியும் .ஆனந்தவிகடன் அந்த மச்சத்தை இந்தியாவாக வரைந்து சொவியத்தின் மனதில் எப்பொதுமே இந்தியாதான் இருப்பதாக கார்டூன் போட்டு கவுரவித்தது.

என் அலுவலக நண்பர் காலம் சென்ற எஸ்.கே மூர்த்தி மாஸ்கோ வாணொலி யில் பேச சென்றிருந்தார்.அவர் வாங்கி வந்த "ப்ரஸ்தொய்கா" புத்தகத்தை படித்து விட்டு "கிளாஸ்நாட் "பற்றி விவாதிப்பேன். சுபிட்சத்தின் பாதிப்புதான் சோவியத்தின் பிரச்சிசினை என்று கொண்டேன். பேருந்து கட்டணம் 5 கோபக் 1935ம் ஆண்டிலிருந்து அப்படியே இருக்கிறது. தொழிலாளியின் ஊதியம் உயர்ந்து கொண்டெவருகிறது.அவன் கையில் சேமிப்பு அதிகமாகிறது.அவனுக்கு நுகர்வு பொருள் தேவை. அதனை வாங்க அவன் விரும்புகிறான் ஆனால் கிடைக்கவில்லை அதுதான் பிர்ச்சினை என்று நாங்கள் கருதினோம். ஆனால் அவனோ முதலாளித்துவ ஜனநாயகம் பற்றி அரை குறையாக கேள்விப்பட்டு எல்ஸ்டினின் தலைமையில் அதனைக் கேட்டான் . .

லெனின் ,ஸ்டாலின்,என்று பிரஸ்னோவ் எல்லாருமே சர்வாதிகாரிகள் என்று ஒருவிமரிசன்ம் உண்டு.ஆம்.உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் (dictatorship of proletariat) .அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை ஆயுதம் தான். மூலதனம் அதனை பயன் படுத்தலாம் என்றால் உழைக்கும் வர்க்கம் பயன்படுத்த்க்கூடாதா? இளம் சோவியத் நாட்டை அழிக்க வெள்ளை ராணுவம் (white army) அனுப்பப்பட்டபோது செஞ்சேனை அதனை நோறுக்கித்தள்ளியதற்கு அந்த சர்வாதிகாரம் தான் உதவியது. இரண்டாம் உலக யுத்தத்தில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் மிக அதிக அளவில் சந்தித்தது சொவியத்தநாடுதான் அமெரிக்காஅல்ல .இருந்தும் கிழக்கு ஐரோப்பிய, வளரும் நாடுகளை தன் நாடுபோல் பதுகாத்து வளர்த்தது சோவியத் நாடுதான் தன்மக்களுக்கு இலவச மருத்துவம்,இலவச கல்வி,உணவு,உறைவிடம் அளித்த அரசும் அதுதான்.ஜனநாயகம் வேண்டும் என்று கோரியபோது அதனை சரியாக கையாள முடியாமல் கோர்பசோவ் திணறினார். சோவியத் ஒன்றியத்தை காக்க முடியாமல் ஓடினார் என்பது உண்மைதான்.ஆனால் சோவியத் நாட்டில் சத்தான உணவில்லத குழந்தையைப் பார்திருக்கமுடியாதே...

மூலதன ஜனநாயகமென்ற பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்துவிட்டோமே. அதனை எதிர்த்து நின்ற சொவியத் தகர்ந்து போனபின் இன்று கேட்பார் இல்லாமல் நிதி மூலதனம் ஆட்டம் போடுகிறதே! அமைதியான உலகம் மூலதனமென்ற வனவிலங்கால் குத்திக் கிழிகப்படுகிறதே!

மீளும் வழி எது? ஏது?...சிந்திப்போம் !

Friday, November 25, 2011

போராளிகள் யார்?.......

போராளிகள் யார் ?...

இந்த நாட்டிற்கு சதந்திரம் வாங்கிக்கொடுத்தவர்கள் யார்?பகவதிசரண் வோரா,சந்திர செகர ஆஜாத்,பகவத் சிங்க் ,ராஜ குரு ,சுகதேவ் ஆகியொர் என்ன செய்தார்கள்?ஆட்டுப் பாலைகுடித்து , அரைநிர்வாண காந்தி மட்டும் தான் போராடினாரா? மற்றவர்கள் போரடவில்லையா?

காந்தியைத்தவிர மற்ற போராளிகளைப் பற்றி நமக்கோ நம் சந்ததிகளுக்கோ எவ்வளவு தெரியும்? இடுப்பில் கத்தியையும், கையில் துப்பாக்கியையும் வைத்துக்கொண்டு தெருத்தெருவாக அலையும் தீவிரவாதியாகத்தானே பகத்சிங்கும் ,,மற்ற போராளிகளும் அறிமுகப்படுத்தபட்டிருக்கிறார்கள்.அவர்களுடைய தியாகம்.பட்டறிவு,ஜனநாயக மாண்புகள் ஆகியவை பற்றி நமக்கு சொல்லப்பட்டிருக்கிறதா?

சாவடி நெல்லையப்ப பிள்ளையும்,நீலகண்ட பிரும்மச்சாரியும்,வாஞ்சியும் ,மாடசாமியும் நம்மில் எத்துணை பெருக்குத்தெரியும்? இவர்கள் போராளிகள் இல்லையா?சிவராசனும், பொட்டுஅம்மானும்,திலீபனும் மட்டும்தான் போரளிகள் என்று சொல்லிக்கொடுப்பது ஏன்?

எல்.டி.டியை,பொடொவை,ஈரோசை தெரிந்த அளவுக்கு நவஜீவன் சபாவை,அனுசீலன் சமிதியை, நமக்கு தெரியப்படுத்தவில்லையே ஏன்? சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்தி,மக்கள் மனதிலிருந்து துடைத்தெரிய செய்யும் செயலன்றி வெறு என்ன?

தொழிசங்கத்தைக் கட்டுப்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க பிரிட்டிஷார் சட்டம் கொண்டுவந்தனர்.இந்திய இளைஞர்கள் ஒரு குழுவாக கூடி இதனை எதிர்க்கத்தீர்மானித்தனர்.இதற்கான இயக்கத்தை ஆரம்பிதவர் பகத் சிங். இந்த இயக்கம் வெரும் தலவர்களின் ஆணைப்படி நடக்கும் ஒரு அராஜக அமைப்பாக இருக்கக்கூடாது என்று அவர்கள் தீர்மானித்தனர். அதற்காக இயக்கத்தின் செயல் பாடுகளை தீர்மானிக்க மத்திய குழு ஒன்றை உருவாக்கினர்.சட்டத்த நிறைவேற்ற பராளுமன்றம்கூடியது.பாராளுமன்றத்தில்,ஆட்களே இல்லாத பகுதியில் சத்தத்தை மட்டும் எழுப்பும் குண்டு ஒன்றை வீச வேண்டும் என்ற யோசனையை பகத்சிங் கூறினார். குண்டை வீசினால் நிச்சயம் மரண தண்டனை என்பது அவர்களுக்குத்தெரியும்.இந்த குண்டை தானே வீசுவதாகவும் அதற்கு அமைப்பின் அனுமதி கோரியும் பகத்சிங் தீர்மனம் கொண்டுவந்தார்.

மத்தியகுழு கூடியது.விவாதித்தது.ஒரு சில மாற்றங்களோடு .அதில் முக்கியமானது குண்ட வீசுபவர் பகத் சிங்காக இருக்கக்கூடாது. அவர் இயக்கத்திற்கு முக்கியமானவர் .குண்டுவீச்சு நடந்தபிறகும் இயக்கத்தை முன் கொண்டு செல்ல அவர் அவசியம். ஆகவே வேரு இரண்டு பேர் செல்ல வேண்டும் என்று முடிவாகியது. இது நடக்கும் போது பகத் சிங்கிற்கு 21 வயது இருக்கும்.அவருடைய கூட்டாளிகளும் கிட்டத்தட்ட சமவயதினரே.

சாவு நிச்சயம்.இயக்கத்திற்கு தலைவன் அவசியம் அவனுக்குப் பதிலாக போக மற்றவர்கள் தயார். உலகை ருசிக்காத இளம் தீரர்கள். நெஞ்சு விம்முகிறது நண்பர்களே! தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சுகதேவ். அவர் பஞ்சாபிலிருந்து இரண்டுநாள் கழித்துவந்தார்.அவரிடம் தோழர்கள் தகவலைக் கூறினார்கள்.அவர் கோபப் பட்டார். இரண்டு தோழர்கள் உயிரிழப்பது நிச்சயம்.அதனால் என்னபயன் இயக்கத்திற்கு.உலகறிந்த பகத்சிங் இதனச்செய்தால் இந்தியா முழுவதும் மின்சாரம் பாய்ச்சியது போல் துடித்து எழும் என்று அவர் கூறினார்..

மீண்டும் மத்திய குழு கூடியது.தன் தலைவன் உயிரப் பாதுகாக்க தீமானித்த குழு மறுபடியும் விவாதித்தது. தான் முதலில் கொண்டுவந்த யொசனை நிறைவேறப் போகிறது என்று பகத்சிங் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .தீர்மானம் நிறை வேறியது. பகத்சிங் கூண்டுவீச தயாரானார்.
தியாகம் ,தீரம் , ஜனநாயகம் ஆகியவற்றை அன்ன ஹசாரே, கெசரிவால், அந்த அப்பாவிப்பெண்மணி கிரண் பேடி ஆகியோர் இந்த போராளிகளிடம் கற்றுக்கொள்வார்களா?

Tuesday, November 22, 2011

கடவுளை டெலஸ்கோப்பை வைத்து தேடுங்கள்- சர்.சி.வி .ராமன்.

கடவுளை டெலஸ்கோப்பை வைத்து தெடுங்கள் -சர் .சி .வி .ராமன் ....

சென்னையில் மாகாணக் கல்லுரியில் .பேராசிரியர் எலியட் பணியாற்றினார். அவருடைய வகுப்பில் ஒருமானவனை அவன் தவறி வகுப்பிற்குள் நூழைந்துவிட்டானோ என்று கருதி விசாரித்தார்.

"நீ பி.ஏ.மாணவனா?"

"ஆமாம்!ஐயா"

" உன் பெயர் என்ன?"

"சி.வி.ராமன்"

அந்த மாணவன் தான் பின்னாளில் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி ராமன்.இது 1903ம் ஆண்டு நடந்தது.ஸனாதனமன குடும்பம். குடும்பத்தினர் இசை,சமஸ்கிருதம்,அறிவியல் ஆகியவற்றைப் பற்றித்தான் பெசிக் கொண்டே இருப்பார்கள்.ராமனின் தந்தை கணிதவியல் பேராசிரியர்.

ஆரம்பத்தில் ராமன் ஒலி பற்றிய ஆராய்ச்சியில் தான் ஈடுபட்டார். அது பற்றிய அவருடைய ஆராய்ச்சிக்குறிப்புகள் உள்ளன பின்னர் ஒளி பற்றி ஆராயத்தொட்ங்கினார்.
1928ம் ஆண்டு அவர் 'ராமன்பாதிப்பு" என்ற அவர் கண்டுபிடிப்பு வெளியானது.அவருடைய மாணவன் கே எஸ்.கிருஷ்ணனும் அவருமாக கண்டு பிடித்தனர்.தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று உறுதியாக நினைத்தார்.லண்டன் புறப்படுவதற்கு 1929ம் ஆண்டே டிக்கெட்டும் வாங்கினார். விழா 1930ம் ஆண்டு நடந்தது..
.விழாவின் பொது ஒரு மதுக்கோப்பையில் மதுவை ஊற்றி அதில் ஒளியைப்பாய்ச்சி தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார்.மாலை விருந்தின் போது அவருக்கு மது பரிமாறப்பட்டபோது,தனக்கு குடிக்கும்பழக்கமில்லை என்று மறுத்துவிட்டார் . கண்டுபிடிப்புக்கு கருவிகள் எதுவும் கிடைக்கவில்லை.கருவிகளை அவரே செய்து கொண்டார். மொத்தம்300 ரூ செலவானது. .

ஒரு முறை அவரிடம் கடவுளைப்பற்றி நீங்கள் என்ன கருது கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.அவர் அதனைக் கவனிக்காதது போல் தவிர்த்தார். கேட்டவர் விடவில்லை.
"கடவுள் இருக்கிறார் என்றால் ஒரு டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு இந்த பிரபஞ்சம் முழுவதும் தேடு.வெறும் யூகங்களை வத்துக் கொண்டு உன் நேரத்தை வீணாக்காதே" என்றார்.

1970 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தெதி சர்.சி.வி.ராமன் மறைந்தார்.

Saturday, November 19, 2011

திரைப்படம் பற்றியது அல்ல.....

திரைப்படம் பற்றியது அல்ல......

1954ம் வருடம் ."முன்னா " என்ரு ஒரு திரைப்படம் வந்தது. இந்தியில் பாட்டு இல்லாமல் வந்த முதல் படம்.குவாஜா அஹமது அப்பாஸ் எடுத்தது. கே.ஏ.அப்பாஸ் ஒரு இடது சாரி எழுத்தாளர். கலைஞர்.இயக்குனர். நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்


நேரு ஒரு திரைப்படப் பிரியர் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
"'முன்னா " படத்தை நேரு குடும்பத்தினர் பார்ப்பதற்காக அப்பாஸ் தனியாக ஏற்பாடு செய்தார்.நேருவுக்கு படம் பிடித்திருந்தது.அதில் நடித்த சிறுவன் மாஸ்டெர்.ரோமி யின் நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்திருதது.மருநாள் காலை ரோமியை தன் வீட்டிற்கு காலை உணவுக்கு அழைத்துவர முடியுமா என்று அப்பாஸிடம் கேட்டார்.

"நேரு அவர்களே! படக்குழுவினர் அத்துணை பெரையும் அழையுங்களேன் அவர்களும் பெருமைப்படுவார்கள்"என்றார் அப்பாஸ்.

நேரு அருகில் இருந்த மகள் இந்திராவிடம் மெல்லியகுரலில் "இந்த கூட்டத்திற்கு உணவு தயாரிக்க முடியுமா?முட்டை, மற்ற சாமான்கள் இருக்கிறதா ? என்று கேட்டார். சிறிது நேர யொசனைக்குப் பிறகு இந்திரா சம்மதித்தார்.

மறு நாள் விருந்து முடிந்து எல்லாரும் விடை பெற்றுக் கொண்டார்கள். அப்பாஸ் விடை பெறும் போது,இந்திராவிடம் " விருந்திற்கு அழைக்க உங்களிடம் தயக்கமிருந்ததே! ஏன்?" என்று கேட்டார்.

" என்னசெய்ய! அவர் மாதசம்பளம் வாங்குகிறார்.அவருடைய சம்பளம்மட்டும்தான். பல மாதம் பலசரக்கு கடை,பால்காரன் என்று பாக்கி விழுந்து விடுகிறது அப்பா நிலமை தெரியாமல் விருந்துக்கு கூப்பிட்டு விடுவார். அதனல் என்னிடம் கேட்காமல் விருந்துக்கு அழைக்கக் கூடாது என்று சொல்லியிருந்தேன்.. நெருவின் வெளிநாட்டு பதிப்பகத்தார் ஆண்டுக்கு ஒருமுறைதான் உரிமைப்பணத்தை அனுப்புவார்கள். அதைவைத்துக் கொண்டுதான் கடனை சரிசெய்வேன் "என்றார்.

கண்கள்கசிய மனம் நெகிழ அப்பாஸ் விடை பெற்றார் .

( ரஷீத் கித்வாய் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து.)

Thursday, November 17, 2011

விஞ்ஞானம் மதத்தை வென்றது.......

விஞ்ஞானம் மதத்தை வென்றது.....

விஞ்ஞானம் மதத்தை வென்றது. உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களில் பெரும் பகுதியினர் கத்தோலிக்கர்கள் ஆவர் .அவர்களின் தலமை பீடம் ரோம் நகரத்தில் உள்ளது. அவர்களின் தலைவர் போப் ஆண்டவர் அங் குள்ளவாடிகன் நகரத்தில் வசிக்கிறார்.

அந்தமக்களுக்கு அவர் கூறுவதுதான் தெய்வவாக்கு. ரோம் நகரத்தில் "லா சாட்னியா" என்று ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. முழுக்க முழுக்கபோப் ஆண்டவரின் நிர்வாகத்தில் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்குப் பின் ஜானவரி மாதம் ஆரம்பிக்கும்.போப் ஆண்டவர் வந்து ஆரம்பித்து வைப்பார்.2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி வழக்கம் போல் ஆரம்பவிழா அறிவிக்கப்பட்டது.அப்பொது போப்பாக இருந்தவர் போப் பெனடிக் ரட்ச சிங்கர்.பல்கலைகழகத்தச் சேர்ந்த 67 விஞ்ஞானிகள் போப் பெனடிக் வரக்கூடாது என்று கூறினர்.திருச்சபை கூடி விவாதித்து,மத நல்லிணக்கத்தி நிலைநாட்ட போப் ஆண்டவர் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த நிகழ்ச்சி எவ்வளவு வாரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள நாம் 360 ஆண்டுகள் பின்னோக்கிச்செல்ல வெண்டும்.

1633ம் ஆண்டு கலீலியோ பூமி சூரியனைச்சுற்றி வருகிறது என்று அறிவித்தார்.திருச்சபையோ பூமி நிரந்தரமானது.சுரியன் தான் பூமியைச்சுற்றி வருகிறது என்ற கருத்தை கொண்டிருந்தது. கலீலியொவுக்கு முன்னரே கொபன்ஹெகர் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.இதனை வெளியே சொன்னால் திருச்சபை தன்னை தண்டிக்கும் என்று பயந்து தான் சாகும் வரை அதனை வெளியே சொல்லவில்லை

கலீலியோ தான் கண்டுபிடித்ததை அறிவித்து விட்டார். இது சபையின் மீதுள்ள விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது.ஆகவே கலீலியோ தண்டிக்கப்பட வேண்டும்.ஏசுவின்மீதுள்ள விசுவாசத்தைவிட திருச்சபையின்மீதுள்ள விசுவாசம் முக்கியமானது. இல்லையென்றால் சபை பலவீனப்பட்டுவிடும் அதனால் கலியொவை விசாரித்து போப்
ஆண்டவர் அவரைதண்டிக்க வெண்டும் என்று முடிவுசெய்தது.கலீலியோ சிறையில் அடைக்கப்பட்டார்.. வயதான காலத்தில் அவர் போப் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு சூரியந்தான் பூமியைச்சுற்றுகிறதுஎன்பதை எற்றுக்கொள்ள வற்புறுத்தப்பட்டார்..

கலீலியோவை இப்படி சித்திரவதை செய்தது தவறு என்ற கருத்து சபைக்குள் மெலிதாகவந்து வளர்ச்சி பெற்று இது பற்றி திருச்சபை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்றகுரல் பலப்பட்டது.. 360 ஆண்டுகளுக்குப்பிறகு அப்படி ஒருவிசாரணையும் 1990ம் ஆண்டு நடந்தது.அதில் திருச்சபை சொல்வது தவறு.கலீலியோ சொன்னது தான் சரி என்று முடிவாகியது.கார்டினல்கள் இதற்கு வாக்களித்தனர்.கார்டினல் பெனடிக் ரட்சசிங்கர் என்பவர் மட்டும் கலீலியோ சொன்னது தவறு. திருச்சபை சொன்னது தான் சரி என்று வாக்களித்தார் . கால மாறுதலில் கார்டினல் பெனடிக் ரட்ச சிங்கர் போப் ஆண்டவராக தெர்ந்தெடுக்கப்பட்டார். 17-1-2008ம் ஆண்டு பல்கலை திறப்பு விழாவிற்கு அவர் வரவேண்டியதிருந்தது.

விஞ்ஞானத்தை அனுபவித்துக்கொண்டே விஞ்ஞானி கலீலியொவுக்கு எதிராக வாக்களித்த பெனடிக் திறப்பு விழாவுக்கு வரக்கூடாது என்று பல்கலைகழகத்தைச்சேர்ந்த 67 விஞ்ஞானிகள் போர்க்குரல் எழுப்பினர். திருச்சபை விழாவை போப் ஆண்டவர் கலந்து கொள்ளவிருந்த விழாவை மத ஒற்றுமையை மனதில் கொண்டு ரத்து செய்வதாக அறித்தது.

அந்த 67 விஞ்ஞானிகளுக்கும் நம் வாழ்த்துக்கள்.

(தோழர் இரா எட்வின் அவர்கள்"குற்றம் குற்றமே" என்று எழுதிய இடுகையத் தழுவி எழுதப்பட்டது.)

Saturday, November 12, 2011

ஸ்டார் சிஸ்டம் எப்படி உருவானது?.....

ஸ்டார் சிஸ்டம் எப்படி வந்தது?........

இரண்டாம் உலக யுத்தத்திற்கான தூவானம் 35களிலேயே விழ ஆரம்பித்தாலும் இடியும் மின்னலுமாக அது வந்தது 39ம் ஆண்டுகளில் தான்.ஐரோப்பாகண்டத்தையே ஆட்டிப்படைத்த அது முதலில் கடுமையாக பிரான்ஸ் நாட்டை பாதித்தது.

திரைப்படம் வர்த்தக ரீதியக உருவாகி உலகம் முழுவதும் பரவியது பிரான்சிலிருந்து தான் புரஜக்டரும் ,காமிராவும், மற்றுமுள்ள கருவிகளும் உருவானதுமங்குதான்.எல்லாவற்றுக்கும் மேலாக காமிராவுக்குத்தேவையான கச்சாபிலிமும் அங்குதான் தயரிக்கப்பட்டு வந்தது.

யுத்தத்தின் காரணமாக அவை வருவதில் சிரமம் எற்பட்டது .சிலவும் அதிகமாகியது.விலைகூடுதலாகியது. தயாரிப்பாளர்கள் யுத்த காலத்தில் மூலதனமில்லாமல் துவண்டனர். .

அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்கவில்லை.படை வீரர்களுக்கு அத்தியாவசியம் என்பதால் உள் நாட்டில் பண்டங்கள் வருவது குறைந்து விட்டது. அரசு ரேஷன் முறை கொண்டுவர வேண்டியதாயிற்று.வியாபரிகள் பதுக்க ஆரம்பித்தனர். கள்ள மார்கட் உருவாகியது.கள்ளப்பணம் கொள்ளையாக சேர்ந்தது. கள்ளப்பணக்காரர்கள் இந்தப்பணத்தை என்ன செய்வது,எப்படி முதலீடு செய்வது என்று திக்கு தெரியாமல் அலைந்தனர்

கலை இலக்கியத்தில் ஈடுபாடும்,சமூக அக்கரையும் கொண்ட தயாரிபாளர்கள் மூலதனமில்லாமல் கையை பிசந்து கொண்டிருக்க கள்ளப்பணம் "வரட்டுமா? வரட்டுமா?" என்று ஆசைகாட்ட அப்பொது ஒரு "பொருந்தாதிருமணம்" நடந்தது.அதன் பயனைத்தான் இன்றும் அனுபவிக்கிறோம். .

பணமுள்ளவன் ஸ்டூடியோவை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். காசைவீசினால் எழுத,நடிக்க,இயக்க ஆள்பிடிக்கலாம். பணத்தில் அக்கரையிருந்தால் படமெடுக்கலாம் என்று நிலமை மாறியது. சமூக அக்கரை, கலை,பின்னுக்குத்தள்ளப்பட்டு நான் போட்ட பணத்திற்கு லாபம் கொள்ளை லாபம் வேண்டும் என்பவர்கள் நுழைய ஏதுவாயிற்று.

படத்தில் நடிப்பவனை " ஆஹா ஒஹோ "என்று விளம்பரப்படுத்தி அந்த நடிகன் மீது மூலதனத்தைப் போட்டு லாபம் பார்க்கும் முறை உருவாகியது.அப்படி உருவகியவர்கள் தான் எம்.கே.டி ,பி.யு .சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர்.

நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர். இருநூறுக்கும் மேலானபடங்களில் நடித்தவர் சிவாஜி. ஜெமினியும் அப்படியே. ஆனால் தமிழ் திரையுலகின் மூடிசாடா மன்னனாகத் துலங்குபவர் ஏம்.கே.தியகராஜ பாகவதர்..1934ம் ஆண்டிலிரு ந்து 1955ம் ஆண்டுவரை அவர் திரைஉலகில் வளையவந்தார். அவர் நடித்த மொத்தபடங்களின் எண்ணிக்கை பதினான்கு தான். அவர்நடித்த பத்தாவது படம் "ஹரிதாஸ்". படம் ரிலீசானதும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதானார். அந்தப்படம் மூன்று ஆண்டுகள் ஒடியது.அதன்பிறகு அவர் பட்ம் (நான்கு ) புஸ்வணமாகியது.

விளம்பரத்தின் மூலம் பணம் போட்டு பணம் எடுக்கலாம் என்ற வித்தை முன்னுக்கு வந்தது. ஸ்டார் சிஸ்டம் உருவான கதை இது தான்.

Thursday, November 10, 2011

ஸ்டூடியோ சிஸ்டம் என்றால் என்ன?.......

ஸ்டூடியோ சிஸ்டம் என்றால் என்ன?
80 ம் ஆண்டுகளின்முற்பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலமாநாடு சென்னையில் நடந்தது. அதில் , நாவல்,கவிதை,சிறுகதை,நாடகம்,திரைப்படம் என்று துறைவாரியாக ஆய்வுக் கட்டுரைகள் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப் படவேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

திரைப்படம் பற்றி திருச்சியைச்சேர்ந்த ஜகதீஷும் நானும் எழுதமுடிவாகியது..ஆரம்பகாலம் பற்றி நானும் நிகழ் காலம் பற்றி ஜகதீஷும் எழுத எங்களுக்குள் முடிவு செய்தோம்.

மாமேதை லெனின் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபொது மேற்கத்திய நாடுகளில் திரைப்பட்ம் என்ற புதிய வடிவம் உருவாகியுள்ளதைப் பார்திருக்கிறார். தன் நாட்டு மக்களுக்கும் இந்தவடிவத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு போதமூட்டவெண்டும் என்று நி னைத்தார். புரட்சி நடந்ததும் திரைப்படத்துறையை கல்வித்துறையொடு இணைத்தார். ஐசன்ஸ்டீன்,போடொவ்கின் ஆகிய இளைஞர்களை அனுப்பி திரைப்படம் பற்றி கற்றுவரச்செய்தார்.



இந்தியாவிலும் ஆரோக்கியமாகவே ஆரம்பமாகியது.தமிழகத்தில் ஸ்டூடியோ சிஸ்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக அஸ்திவாரமிட்ட முன்னோடிகளில் முக்கியமானவர் திரு.எஸ்.எஸ்.வாசன் ஆவார்.

தயாரிப்பாளர் சொந்தப்பணத்தில் பட்ம் எடுக்க வேண்டும் படம் எடுக்க தொழிற்கருவிகள் காமிரா, லைட்டுகள், சொந்தமாக இருக்க வேண்டும். படப்பிடிப்புக்கான தளங்கள் சொந்தமாக இருக்கவேண்டும் .தயாரிப்பாளர் வாசனுக்கு சொந்தமானதுதான் ஜெமினி ஸ்டூடியோ.

ஸ்டூடியோவோடு மாதச்சம்பளத்தில் நடிகர்களை வைத்திருந்தார். கணெசன்,புஷ்பவல்லி,சுந்தரிபாய் ,கொத்தமங்கலம் சுப்பு,நாகெந்திர ராவ் ,எம்.கே ராதா,ரஞ்சன் என்று அற்புதமான நடிகர்களை மாதாமாதம் சம்பளம் கொடுத்து வைத்திருந்தார்.

ஜெமினி கதை இலாகா என்று இருந்தது. ஆந்திராவின் இடதுசாரி எழுத்தாளர் ஆசார்யாவிலிருந்து, தேவன், சுப்பு,பட்டு, வென்று எழுத்தாளர்கள் மாதச்சம்பளத்தில் பணியாற்றினர்.

தயாரித்த படங்களை விநியொகம் செய்ய யார்தயவையூம் நாடாமல் ஜேமினி சர்க்யூட் என்ற அமைப்பும் இருந்தது.இவர்கள் ஊர் உஊராகச்சென்று படத்தை திரையிட்டு வர்வார்கள்.

அதனால் தான் அவரால் "சம்சாரம்","ராஜி என் கண்மணி" போன்ற படங்களை உருவாக்க முடிந்தது.

ஸ்டூடியோ சிஸ்டத்தில் ஒரு தயாரிப்பாளர் எதைக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை கொடுக்கமுடியும்.அவரே வினியோகம் செய்வதால் தன் தாயாரிப்பு பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.தமிழகத்தில் இதனை வெற்றிகரமாக செய்து காட்டியவர் திரு வாசன் அவர்கள்.

இந்த ஸ்டூடியோ சிஸ்டம் இற்று விழுந்து ஸ்டார் சிஸ்டம் வந்தது. எப்படி வந்தது ஏன் வந்தது என்ற வினாவுக்கான காரனங்களை திரை உலகுக்குள் தேடமுடியாது.அரசியல் பொறுளாதார சமுக காரணங்களால் அவை மாறின. அதனைத் தனியாக அடுத்த இடுகையில் பார்ப்பொம்.

Monday, November 07, 2011

காந்தியடிகளும் ஏசுநாதரும்.......

காந்தியடிகளும் ஏசுநாதரும் ..........

காந்தியடிகளின் குணசித்திரம் அவருடைய எளிமைதான் என்று கூறுபவர்கள் அவரைப்பற்றி எதுவும் அறியாதவர்கள் என்று பதிவர் அப்பாதுரை அவர்கள் பின்னூட்டம் முற்றிலும் சரிதான்.

இந்திய அமைதி மையத்தின் இயக்குனர் டாக்டர் ஜாண் செல்லத்துரை அவர்களின் இடுகையைப்படித்த பிறகு காந்தி பற்றிய புதிய தரிசனம் கிடைத்தது. ஐம்பது வயதைக்கூட தாண்டாத ஜாண் அவர்களுடைய அறிவார்ந்த கருத்துக்கள் என்னை பல முறை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழ்ந்தமக்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து குழுக்களுக்கிடையே கொலை வெறியோடு தாக்கிக் கொண்டு வாழ்ந்துவந்தனர்.அவர்களை சீரமைத்து வாழவைக்க வந்தவர் தான் "மோஸஸ்" .அந்தமக்களுக்கு அன்பு என்பதை கற்றுக்கொடுத்தார்." அண்டைவீட்டானை நேசி" என்றார்.

அதன் பிறகு வந்தவ்ர் தான் ஏசுபிரான். அன்பு மதத்தை உருவாக்க தன்னையே சிலுவையில் அறைந்து கொண்டார்.அவரோ " உன் எதிரியை நேசி" என்றார்.

அண்ணல் காந்தியடிகள் சேவாகிராமத்தில் வசிக்கும்போது அவரைப்பார்க்க அமெரிக்காவில் இருந்து ஒரு குழு வந்தது. அதில் ஒரு பாதிரியாரும் இருந்தார். மோஸஸையும் ஏசுபிரானையும் விட அன்பினைப் பற்றி காந்தியடிகளால் என்ன சொல்லிவிட முடியும் என்று அவர் கருதினார்.

" காந்தி அவர்களே! ஏசு பிரான் கூறியதைவிட அன்பினைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் ?"

"அவர் என்ன சொன்னார்?"

"உன் எதிரியையும் நேசி என்றார் " என்று பாதிரியார் கூறினார்.

காந்தியடிகள பரிதாபமாகக் கூறினார்" எனக்கு எதிரிகள் எவருமே இல்லையே

அடிகள் மவுன விரதமிருப்பார் தன்னை புடம் போட்டுக்கொள்ள. தன் உடலை வருத்தி உண்ணாமல் இருப்பார் தன் மக்களைப் புடம் போட.

சமீபத்தில் அன்னா ஹசாரே மவுன விரதமிருந்தார். அதனை முடிக்க காந்தியின் சாமாதிக்குச்சென்றார்.அவ
ர் பின்னால் பத்திரிகையாளர்களும் தொலைகாட்சி நிருபர்களும் காமிரவோடு சென்றனர் சமாதியில் வணங்கி விரதத்தை ஹசாரே முடித்தார்.

நிருபர்களிடம் " கங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்யப்போகிறேன் " என்று அறிவித்தார்.

" அண்ணல் காந்தியடிகளே இவர்களை மன்னியும் "

Thursday, November 03, 2011

பி.லெனின் என்ற திரையுலகப் போராளி ....

பி .லெனின் என்ற திரை உலகப் போராளி ....

சமீபத்தில் தமிழ்நாடு சென்றிருந்தபோது லெனின் அவர்களைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை முதன் முதலாக திருப்பரங்குன்றத்தில் நடந்த கலை இலக்கிய இரவில் சந்தித்தேன் .வெகு நேரம்பெசிக்கோண்டிருந்தோம்.
60-70ம் ஆண்டுகளில் தமிழ்த் திரை உலகம் மூன்று மூன்றெழுத்து நடிகர்களிடம் சிக்கிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி வைத்ததுதான் தான் சட்டம் என்று இருந்தது. இந்த நட்சத்திர ஆதிக்கத்தை உடைக்க பல முயற்சிகள் நடந்தன.எல்டாம்ஸ் ரொடும் மவுண்ட் ரொடும் சந்திக்கும் கீதாகபே முனையில் திரையுலகை மாற்றியமைக்க வேண்டும் என்று இளைஞர்கள் பெசிப்பேசி தொண்டை வரண்டுபோய் நிற்பார்கள். கிரமங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் லட்சியகனவோடு வந்த இளம் கலைஞர்கள் 93சி மவுண்ட் ரோடு மொட்டை மாடியில் பட்டினியால் புரண்டு புரண்டு தூக்கம் வராமல் நெளிந்தது தான் மிச்சம்.இவர்களிடையே செயலூக்கமிக்க மூன்று இளைஞர்கள் துடிப்போடு இருந்தார்கள்.கமல ஹாசன் ,பாரதி ராஜா, பி.லெனின் தான் அந்த மூவரும்.சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர்.
பாரதிராஜாவிர்கு " 16வயதினிலே " ஒரு பாதையைக் கொடுத்தது. கமலஹாசனுக்கும் அந்தப் படம் தூக்கிவிட்டது."சகலகலா வல்லவன்" என்றபடம் வந்ததும் கமல ஹாசன் நட்சத்திர ஜொதியில் கலந்து போனார்.வெற்றியின் பின்னால் முகிழ்ந்து பொன பரதி ராஜாவும் பாதயை மாற்றிக்கொண்டார். தன்னந்தனியாக அந்தப்பணியை லெனின் தொடருகிறார்.
"நாக் அவுட்" பட பாராட்டுவிழாவிற்காக திருப்பரங்குன்றம் வந்திருந்த லெனின் அவர்களோடு இது பற்றி பெசிக்கொண்டிருந்தேன்.பெரும் நட்சத்திரங்கள் நடிக்கும்படங்களை எடிட் செவதை தவிர்த்தார். புதியவர்களின் படங்களுக்கு மிகக் குறைந்த கட்டணம் வாங்கி தொகுத்தார். நட்டம் வந்தாலும் விடாமல் தன் போராட்டத்தை தொடருகிறார்.
1957ம் ஆஅண்டுவாக்கில் ஹைதிராபாத்தில் பணியாற்றினேன்.தெலுங்கானா விவசாயிகள் ஆயுதம் தாங்கி போராடி நேருவின் துரோகத்தால் தொல்வியடைததின் பின்னணியில் கம்மம்,வாரங்கல், காசிபெட்டு,குண்டூர்,நாகார்ஜுனசாகர்,என்று சுற்றி அலைந்த காலம் அது. தெலுங்கானா பொராளிகளுக்கு பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து சாதாரண மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து உதவியது நெஞ்சை நெகிழச்செய்யும்.
அந்தப் போராளிகளுக்கு திரை உலகமும் உதவியது என்பது ஆச்சர்யப்பட வைத்தது.சென்னையிலிருந்துசித்தூர்வி.நாகையா,ஜி.வரலட்சுமி,ரேலங்கி,சிவராம்,நாகபூஷணம்,நாடக நடகராயிருந்த ராமாராவ் ஆகியோர் உதவினர்.பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து.தெலுங்கானாவுக்குள் புகுந்து அங்கு கிராமம் கிராமமாக மக்களைத்திரட்டும் பணியில் "புர்ரகதா" நிகழ்ச்சிகளை ஜி.வரலட்சுமி என்ற நடிகை நடத்தியுள்ளார்.இந்ததகவலை உறுதிபடுத்த பல முயற்சிகளைச்செய்தும்தன்னந்தனியாக என்னல் முடியவில்லை.. இந்த நடிகர்களுக்கு துணையாக இருந்தவர்களில் ஒருவர் பீம்சிங். லெனினின் தந்தை .
லெனின் அவர்களடம் இது பற்றி பெசினேன். இந்த நடிகர்களின் வாரிசுகள், உயிரோடு இருக்கும் அவர்களுக்குத்தெரிந்தவர் ஆகியவர்களை அணுகி ஆவணப்படுத வேண்டும் என்று கெட்டுக்கொண்டேன்.வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய திரையுலகின் இந்தப் பங்களிப்பை ஆவணப்படுத்த என்னால் முடிந்ததை செய்வேன் என்று லெனின் கூறினார்.

Sunday, October 30, 2011

அண்ணல் காந்தியடிகளும் இந்தக் கிறுக்கர்களும் ...

அண்ணல் காந்தி அடிகளும் இந்தக் கிறுக்கர்களும்...

வழுக்கைதலயும் பொக்கைவாயுமாக காந்தியின் பிம்பம் நம் மனதில் நிலைத்து நிற்கிறது.காந்தி தொப்பியை மாடிக்கொண்டு இருக்கும் அன்னா ஹஸாரே யின் உருவத்தோடு ஒப்பிட மனசு மறுக்கிறது.ஊழலை ஒழிக்க காந்தீயா வழியில் புறப்பட்டவர் அன்ன ஹசாரே.இப்பொது அவருக்கு உதவியாக இருக்க அமைக்கப்பட்ட குழிவினரின் தொந்திரவு தாங்கமுடியாமல் கமிட்டியை மாற்றலாமா என்று எண்ணுகிறாராம்.
கமிட்டியின் முக்கியமான உறுப்பினர் கிரன்பேடி.எங்கள் அலுவலகத்தில் இரண்டுஆண்டுக்குஒருமுறைசொந்தஊருக்குசென்றுவர பயணச்சிலவைகொடுப்பார்கள் என்நண்பரொருவர்புதுக்கோட்டையிலிருந்துடெல்லிசென்றுஅதற்கானபயணச்சிலவைபெற்றுக்கொண்டார். பின்னர்நடந்தவிசார்ணையில்அவர் சொன்ன தினத்தில் புதுக்கோடை ரயில் நிலயத்திலிருந்து முதல் வகுப்பில் .பயணிகள் யாரும் செல்லவில்லை என்று தெரியவந்தது.அவர் தண்டிக்கப்பட்டர். கிரண்பேடி விமானத்தில் மிக உயர்ந்த கட்டணத்தைத்தான் பயணப்படியாக பெற்றுக்கொள்வார். (அவர் நடந்து சென்றாலும் கூட )இது பற்றி பத்திரிகைகள் எழுதியபோது மிகுதியான் பயணப்படியை தான் வாங்குவது தான் நடத்தும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுக்கத்தான் என்று விளக்கமளித்தார். போபாலைச்சார்ந்த அமைப்பு நோட்டீசு அனுப்ப இன்று அதிகமாக அவர்களிடம் வாங்கிய பயணப்படியை திரும்ப கொடுக்க சம்மதிதுள்ளார் என்று செய்தி வந்துள்ளது.
இந்தக் கமிட்டியில் வக்கீல் ஒருவர் இருக்கிறார். வாயத்திறந்தாலே வம்புதான்.காஷ்மீரில் உள்ள இந்துக்களுக்கு தனி மாநிலம் அமைக்க அங்கு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.சர்சை தீயாக கொழுந்துவிட்டு எரிகிறது.
கேஜரிவால் என்பவர் வருவாய்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர்.வருமான வரித்துரயைசார்ந்த இவர் பதவி விலகி மக்கள் செவைக்கு வந்துவிட்டர். சுமார் 9 லட்சம் வர்மானவரிகட்டாமல் பத்து வருடமாய் ட்பாய்க்கிறார்.ஹசாரேமுதல் உணாவிரத்தின்பொது 800 லட்சம்
வசூலானது. சிலவு 30லட்சம் போக பாக்கி 50 லட்சம் ரூபாயை கேஜரிவால் தன் பெயரில் வங்கியில் பொட்டுக்கோண்டு விட்டார்.உள் குத்து நடந்து கோண்டிருக்கிறது.இது தவிர போர்டு அறக்கட்டளையிலிருந்து இவருக்கு கோடிக்கணக்கில் உதவியிருப்பதாக பேச்சு உண்டு.
மூலவர் அன்னா ஹசாரே. அஹிம்சாமூர்த்தி. அவருடைய கிராமத்தில் விவசாயிகளுக்கு பாசன் வசதி செய்து கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.அங்குள்ள மக்களிடையே நல்ல செல்வாக்கு.காந்தீய வாதியல்லவா .கிராமத்தில் யாரும் குடிகக்கூடாது. அஹிம்சாவாதியல்லவா! யாரும் மாமிசம் உண்ணக்கூடாது. மீரும் தலித்துகளை மரத்தில் கட்டிவத்து உதைக்கிறார்கள்.
அண்ணல் காந்தியடிகளின் வார்தா ஆஸ்ரமத்தில் புலால் உண்ணமுடியாது. எல்லைப்புரத்தில் உள்ள வனகுடி மக்கள் மிகவும் ஆக்ரோஷ மானவர்கள்..பிரிட்டிஷாரை எதிர்த்து போராடினார்கள் அவர்களுடைய தலைவர் தான் பாதுஷா கான். அஹிம்சாவாதி காந்தியின் பிரதமசீடர்.தன் மக்களை அஹிம்சை வழியில் பொராடவைத்தவர்.காந்தியப் பார்க்க தன் குடும்பத்தோடு வார்தாவுக்கு வந்திருந்தார். அவருடைய பேரக்குழந்தைகளும் வந்திருந்தனர். ஆஸ்ரமத்தில் புலால் உண்ண முடியாது.குழந்தை பட்டினி.இதனை காணச்சகிக்காத அண்ணல் காந்தி ஆடு மாமிசம்வாங்கிசமைக்கச்சொல்லிகுழந்தைகளை உண்ணச்செய்தார் என்பது வரலாறூ.
காந்தி பெயரைச்சொல்லி கும்மியடிக்கும் இவர்களை கிறுக்கர்கள் என்று சொன்னால் கோபப்படாதீர்க்ள்.

Thursday, October 27, 2011

சசிகுமார் என்ற ஊடகவியலாளர் ....

சசி குமார் என்ற ஊடகவியலாளர்...

சமீபத்தில் தமிழ்நாட்டில் தங்கியிருந்த போது ஊடகம் பற்றிய கருத்தரங்கிற்குச்சென்றிருந்தேன்.சசிகுமார் அவர்கள். கருத்துரை ஆற்றினார்கள்.ஊடகத்திற்கு விடுதலை - ஊடகத்திலிருந்து விடுதலை என்று எடுத்துரைத்தார்கள்.அவர் ஆற்றிய உரை பற்றியது அல்ல என் பதிவு.
சசிகுமார் எண்பதுகளின் கடைசியில் தூர்தர்ஷனில் செய்திவாசிப்பார்.அவர்வாசிக்கிறார் என்றால் எந்தபணியாக இருந்தாலும் நிறுத்திவிட்டு செய்தி கேட்கப் போய்விடுவேன்.உச்சரிப்பு,கைதேர்ந்த கவிஞனின் கவிதையை ஒத்திருக்கும். சென்னையில் ஒரு மூறை லட்சுமிபுரம் இளைஞனர்சங்கத்தில் சி.பி.ராமசாமி அய்யர்பேசுவதை கேட்டிருக்கிறேன். அதன் பிறகு சசிகுமார் தான் என் நினைவுக்கு வருவார்.செய்தி வாசிக்கும்போது, காலப்பிரமாணத்தை அவர் பயன்படுத்துவத்துவது அற்புதமாக இருக்கும் .
நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது "காலமும் குறியீடுகளும்" என்ற பாடம் இருந்தது .அவன் வருகிறான் (.) வந்தவன் ரயிலை பார்க்கிறான்.(.)ஒரு வாக்கியத்திற்கு மற்றொரு வாக்கியத்திற்கும் இடையில் முற்றுப்புள்ளி போடுகிறோம். ஒருவாக்கியம்முடிந்து அடுத்த வாக்கியம் ஆரம்பிக்க எவ்வளவு இடைவெளி வேண்டும் . முற்றுப்புள்ளி என்றால் நான்கு மாத்திரை. கோலன் என்றால் மூன்று மாத்திரை. செமிகோலன் என்றால் இரண்டு மாத்திரை.கமா என்றால் ஒரு மாத்திரை. ஒரு மாத்திரை என்பது கண் சிமிட்டும் நேரம் .எங்களை வாசிக்கச்சொல்லி வாத்தியார்கள் பயிற்சி அளிப்பார்கள். சசிகுமார் செய்தி வாசிக்கும் போது இதனை அனுபவிப்பேன்.
அவசர நிலை முடிந்ததும் சென்னை ஜெர்மனி தூதரகத்தில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. sex,censor, cinema என்பது தலைப்பு .பொன். பரமகுரு நடுவராக இருந்தார்.திரைப் பத்திரியாளர்கள் ரண்டார் கை ,என்று எழுத்தாளர்கள் மனித உரிமையாளர்கள், என்று கருத்துரையாளர்கள் வந்திருந்தனர்.ஊடகங்களுக்கு தணிக்கையிலிருந்து விடுதலை என்ற கருத்து முன்னின்றது.பார்வையாளர்களில் சிலர் அனுமதிக்கப்பட்டனர். எனக்கும் அனுமதி கிடைத்தது."பத்திரிகயாளர்கள் அரசு,அதிகாரரிகள் ,காவல்துறை ,என்று விமரிசிக்கும் பொருப்புள்ளவர்கள்.அவசர நிலைக்காலத்தில் பல பத்திரிகை ஆசிரியர்கள் போக்குவரத்து காவலர் காலில் விழுந்த கதை.எனக்குத்தெரியும். சுதந்திரம் எதற்கக? யார் நலனுக்காக " என்று கூறி முடித்தேன். அரங்கத்தின் மூலையிலிருந்து மிகவும் பலகீனமான கர ஒலி வந்தது. மதிய உண்வு இடைவேளையின் போது என்னை கை குலுக்கி பாராட்டினார். ஒல்லியான நீண்ட முகத்தில் கருத்த தாடியோடு இருந்த சசிகுமார்.
சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட்ட ஆண்டு டெல்லியில் அவர்பிறந்தநாள் கொண்டாடப்பட்டது .நான்கு நாள் விழா .சப்தர் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.நெஞ்சை உருக்கும் அதனைதயாரித்தவர் சசிகுமார்.
இந்திரா அம்மையார் கொலைசெய்யப்பட்டபொது சீக்கியர்களுக்கு எதிரன வன்முறை ஏவிவிடப்பட்டது.இதனை சித்தரிக்கும்படம் வந்தது சீமா பிஸ்வாஸ் நடித்த இந்தப்படத்தில் வன்முறையாளர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தும்.படத்தில் வன்முறையை காட்டமலேயே சசிகுமார் இயக்கி இருப்பார்.
சென்னையில் பத்திரிகையாளர்களுக்கான கல்லூரி ஒன்றை நடத்திவரும் சசிகுமாருக்கு வாழ்த்துக்கள்.

Monday, August 22, 2011


டாக்டர் கிரண்  பேடி அவர்களுக்கு என்னவாயிற்று?......


























    

டாக்டர் கிரண் பேடி அவர்களே! உங்களுக்கு என்னவாயிற்று...?

டாக்டர் கிரண் பேடி அவர்களுக்கு என்னவாயிற்று?......

80ம் ஆண்டுகளில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் படிப்பு முடிந்தவுடன் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நான் கிரண் பேடி போன்று ஆகவேண்டும் என்பார்கள். இந்தியபெண்களின் ஆதர்சமாக திகழ்ந்தவர்.டென்னிஸ் விளையாட்டில் ஆசிய சாம்பியன்.

காவல் துறையில் ஒரு பெண் அடையமுடிந்த மிகச்சிறந்த பதவியை அலங்கரித்தவர். திகார் சிறையில் சீர்திருத்தங்களை கோண்டுவந்தவர்.அதற்காக "மகசே" விருதினப் பெற்றவர்.சர்வதேச காவல் துறையில் ஐ.நா மூலம் பல மாற்றங்களைக் கொண்டுவந்தவர். போதை மருந்து ஒழிப்பதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

இவ்வளவு இருந்தும்பெண் என்றஒரேகாரனத்தால் அவர் பெயர் நிராகரிக்கப்பட்டு அவரைவிட குறைந்த பணி மூப்பு உடையவர் மேல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

சமூக செவையில் ஈடுபட்டார். தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் குழந்தைகள், குடும்பங்கள் ஆகியோரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டர். காவல் துறை வாங்க மறுத்த புகார்களை பெற்று அதன்மீது நடவடிக்கை எடுக்க அரசை அணுகுவார். லஞ்ச லாவண்யமற்ற ஒரு அமைப்பை உருவாக்க வெண்டுமென்ற வேட்கையை வளர்த்துக்கொண்டார்.

2ஜி அலைகற்றை,காமன் வெல்த் ,ஊழல் களின் பிரும்மாண்டம் அவரைத் திடுக்கிட வைத்தது.அதனை எதிர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கினார்."அன்ன ஹசாரே" யின் அறிமுகம் கிடைத்தது.அவருடைய குழுவில் இணைந்தார். அவருடைய அறிவார்ந்த அனுபவமும், அவருக்கு என்று உள்ள மரியாதையும் அந்த குழுவிற்கு பலத்தைக் கொடுத்தது.

நடந்தவை எல்லம் நல்லவையே!

சந்தடி சாக்கில் அரசு ஊழலை ஒழிக்கிறேன் என்று கூறி "லோக் பால்" மசொதவைக்கொண்டுவந்துள்ளது. இது ஊழலை ஒழிப்பதைவிட ஊழல் பெர்வழிகளை தப்பிக்க வைக்கும் மசோதாவாகும். அதற்கு மாற்றாக "ஜன லோக் பால்" என்ற மசோதாவை "அன்னா " குழு வைத்துள்ளது. இதனை ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்ற வேண்டும்.இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதம் என்று "அன்னா " அறிவித்தார். முட்டாள்தனமாக அரசு அவரைக் கைது செய்தது.ஊடகங்கள் போட்ட வெற்றுக் கூச்சலில் அப்பாவி ஜனங்கள் தெருவுக்கு வந்துள்ளனர்." விடுதலிசெய்யப்பட்டார்"அன்னா " .

திகார் சிறையின் முன் ஆயிரக்கணக்கில்மக்கள் கூடினர். ஆவேசமிக்க மக்கள்முன் தலைவர்கள் பேசினர். தலைவர்களும் ஆவெசமாகப் பெசினர் .

கிரண் பேடியும் பெசினார்."அன்னா தான் இந்தியா! இந்தியாதான் அன்னா!" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலவர் பரூவா " இந்திரா தான் இந்தியா! இந்தியாதான் இந்திரா" என்றார்.இந்தியமக்கள் இந்திராவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடுமையான தண்டனையை கொடுத்தார்கள்.

கிரண் பேடியவர்களே! உங்களுக்குஎன்னவாயிற்று?









டாக்டர் கிரண் பேடி அவர்களுக்கு என்னவாயிற்று?......

80ம் ஆண்டுகளில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் படிப்பு முடிந்தவுடன் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நான் கிரண் பேடி போன்று ஆகவேண்டும் என்பார்கள். இந்தியபெண்களின் ஆதர்சமாக திகழ்ந்தவர்.டென்னிஸ் விளையாட்டில் ஆசிய சாம்பியன்.

காவல் துறையில் ஒரு பெண் அடையமுடிந்த மிகச்சிறந்த பதவியை அலங்கரித்தவர். திகார் சிறையில் சீர்திருத்தங்களை கோண்டுவந்தவர்.அதற்காக "மகசே" விருதினப் பெற்றவர்.சர்வதேச காவல் துறையில் ஐ.நா மூலம் பல மாற்றங்களைக் கொண்டுவந்தவர். போதை மருந்து ஒழிப்பதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

இவ்வளவு இருந்தும்பெண் என்றஒரேகாரனத்தால் அவர் பெயர் நிராகரிக்கப்பட்டு அவரைவிட குறைந்த பணி மூப்பு உடையவர் மேல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

சமூக செவையில் ஈடுபட்டார். தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் குழந்தைகள், குடும்பங்கள் ஆகியோரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டர். காவல் துறை வாங்க மறுத்த புகார்களை பெற்று அதன்மீது நடவடிக்கை எடுக்க அரசை அணுகுவார். லஞ்ச லாவண்யமற்ற ஒரு அமைப்பை உருவாக்க வெண்டுமென்ற வேட்கையை வளர்த்துக்கொண்டார்.

2ஜி அலைகற்றை,காமன் வெல்த் ,ஊழல் களின் பிரும்மாண்டம் அவரைத் திடுக்கிட வைத்தது.அதனை எதிர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கினார்."அன்ன ஹசாரே" யின் அறிமுகம் கிடைத்தது.அவருடைய குழுவில் இணைந்தார். அவருடைய அறிவார்ந்த அனுபவமும், அவருக்கு என்று உள்ள மரியாதையும் அந்த குழுவிற்கு பலத்தைக் கொடுத்தது.

நடந்தவை எல்லம் நல்லவையே!

சந்தடி சாக்கில் அரசு ஊழலை ஒழிக்கிறேன் என்று கூறி "லோக் பால்" மசொதவைக்கொண்டுவந்துள்ளது. இது ஊழலை ஒழிப்பதைவிட ஊழல் பெர்வழிகளை தப்பிக்க வைக்கும் மசோதாவாகும். அதற்கு மாற்றாக "ஜன லோக் பால்" என்ற மசோதாவை "அன்னா " குழு வைத்துள்ளது. இதனை ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்ற வேண்டும்.இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதம் என்று "அன்னா " அறிவித்தார். முட்டாள்தனமாக அரசு அவரைக் கைது செய்தது.ஊடகங்கள் போட்ட வெற்றுக் கூச்சலில் அப்பாவி ஜனங்கள் தெருவுக்கு வந்துள்ளனர்." விடுதலிசெய்யப்பட்டார்"அன்னா " .

திகார் சிறையின் முன் ஆயிரக்கணக்கில்மக்கள் கூடினர். ஆவேசமிக்க மக்கள்முன் தலைவர்கள் பேசினர். தலைவர்களும் ஆவெசமாகப் பெசினர் .

கிரண் பேடியும் பெசினார்."அன்னா தான் இந்தியா! இந்தியாதான் அன்னா!" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலவர் பரூவா " இந்திரா தான் இந்தியா! இந்தியாதான் இந்திரா" என்றார்.இந்தியமக்கள் இந்திராவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடுமையான தண்டனையை கொடுத்தார்கள்.

கிரண் பேடியவர்களே! உங்களுக்குஎன்னவாயிற்று?









































Wednesday, August 17, 2011

"தெய்வத் திருமகள் "---விமரிசனமல்ல ....

"தெய்வத் திருமகள்"---விமரிசனமல்ல .........

" தெய்வத்திருமகள் " திரைப்படம் பற்றி பத்திரிகைகள் விமரிசனம் ந்ல்லதாகவே எழுதியுள்ளன . அவை முக்கியமாக அந்தப்படம் ஆங்கிலப்படத்தை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்றும், அதனை இயக்குனர் விஜய் குறிப்பிடாமல் விட்டது தவறு என்றும் சுட்டிக்காட்டி யுள்ளன.

பதிவர்கள் சிலரும் அப்படியே விமரிசித்துள்ளனர். ஒரு சில பதிவர்கள் கடுமையான வர்த்தைகளைப் பயன் படுத்தியுள்ளனர். ஒருசில வருடங்களுக்கு முன் 12b என்று ஒரு தமிழ் படம் வந்தது.முழுக்க ஆங்கிலப் படத்தை அடியோற்றி இருந்தது.

1949-50 ஆண்டுகளில் "ராஜி என் கண்மணி' என்றொரு படம் வந்தது. கண் தெரியாத பூ விற்பவள் மீது காதல் கொண்ட நாடோடி இளைஞன் அவளுக்காக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து அறுவை சிகிச்சை செய்து பார்வையை வரவழைக்கிறான். அந்தப்பெண் டாக்டரை காதலிப்பதை அறிந்து ஒதுங்கி விடுகிறான். சார்லி சாப்லின் நடித்த ஆங்கில படத்தின் நகலான இதில் ஸ்ரீரஞ்ஜனி,டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர் . ஜெமினி தயாரிப்பு.

அலக்சாண்டர் டூமாசின் நாவல் தான் உத்தம புத்திரன். இரண்டுமுறை தமிழில் எடுக்கப்பட்டது.

"Two half times " செக் படத்தைத்தான் அமெரிக்கா கால்பந்தாட்டவீரர் பீலியை நடிக்கவைத்து மீண்டும் எடுத்தது.

அகிரா குரசொவாவின் seven samuroy தான் அமெரிக்காவின் Magnificiant seven.

இயக்குனர் ஒருவர் இந்தி,வங்காளி, மராத்தி, மலையாளப் படங்களை சுட்டு தமிழில் இயக்கி வெளியிட்டுள்ளார்.கிட்டத்தட்ட 19 படங்கள் கணக்கில் வருகிறது இவருடைய விருது வழங்கும் விழாவில் இந்த விமர்சகர்கள் கலந்து கொண்டு கும்மியடித்தார்கள்.

விக்கிரம் கடுமையாக உழைத்திருப்பதாக சொல்கிறார்கள். அவரோ எல்லாப் பெருமையும் "விஜய்" குத்தான் என்கிறார்." மதறாச பட்டினம் " சிறந்த படம் தானே.பதிவர் ஒருவர் அந்தப்படத்திற்காக தரக்குறைவாக விமரிசித்துள்ளார். சில விமரிசகர்கள் தங்கள் மேட்டிமயை காட்டவிரும்புகிறார்கள். திரைப்பட விமரிசனம் பற்றி திரைப்படக் கல்லூரிகளில் வகுப்பு நடத்துகிறார்கள். இவர்களை அங்கு அனுப்புவது பயிற்சி பெறவைப்பது தமிழ்த்திரைபட உலகத்திற்கு நன்மை பயக்கும்

Saturday, August 13, 2011

தனிப் பயிற்சி மையங்களும்-தனியார் பள்ளிகளும்...

தனிப்பயிற்சி மைங்களும்- தனியார் பள்ளிகளும் ......

சமச்சீர்கல்வி பற்றிய சர்ச்சை முற்றிலுமாக முடியவில்லை. ஆனாலும் ஆகஸ்டு16 ம் தேதியிலிருந்து புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.இதில் ஆசிரியர் இயக்கங்களில் பெரும்பாலானவை இதனை ஏற்று ஒத்துழைப்பு கோடுக்கின்றன. இன்னும் தனியார் பள்ளி நிர்வகங்கள்சண்டித்தனம் செய்துவருகின்றன்."எங்கள் உயிரே பொனாலும் மெற்றிகுலேஷன் " என்ற பெயரை நீக்க மாட்டொம் .ஆங்கிலவழிக்கல்வியை தொடருவோம் "என்று கொக்கரிக்கிறார்கள் இருந்தாலும் நடந்ததுவரை நல்லதே.

மகாராஷ்ட்ற்றா,மத்திய பிரதெசம்,உ.பி,பீஹார் ஆகிமாநிலங்களில் நிலமை மிகவும் வித்தியாசமானது. இங்கு பள்ளிக்குச்செல்லாமலேயே ,வாசப்படியை மிதிக்காமலேயே +2 முடித்து பொறியியல் மருத்துவம் மற்றும் தொழில் முறைக்கல்லூரிகளில் சேர முடியும். இதற்கான சகல ஏற்பாடுகளையும் தனியார் பயிற்சி மையங்கள் செய்து கொடுக்கின்றன.உதாரணமாக தொடுவானம் பயிற்சி மையம், நம்பிக்கை மையம் என்று நாகபுரி நகரத்தில்மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மையங்கள் இருக்கின்றன.

இவர்கள் காலை 6மணியிலிருந்து 9மணிவரை பயிற்சி அளிப்பார்கள் மீண்டும் மாலை 5 மணியிலிருந்து 10 மணிவரை பயிற்சி அளிப்பார்கள் .ஒரு மணி நேரத்திற்கு ஒரு "பாட்ஸ் இது கிட்டத்தட்ட 8ம் வகுப்பில் ஆரம்பிக்கிறார்கள். பயிற்சி பெரும் மானவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம். மையங்களில் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை குறிப்புகளை வீட்டில் செய்து பார்க்க வேண்டும் 8,9,10,11,12 வகுப்பு பாடங்கள் நடத்தப்படும். மையங்களே தேர்வுகளை நடத்தும். இந்த மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி,என்.ஐ.டி,மற்றுமுள்ள பொறியியர்கல்லுரிகளில் ,மற்றும் பிரபலமான மருத்துவ கல்லுரிகளில் இடம் கிடைப்பதை மைய நிர்வாகிகளே கவனித்துக் கொள்வார்கள். ஐந்து ஆண்டுகளுக்கும் மொத்தமாக பல லட்சங்களை பெற்றுக் கொள்வார்கள்.

இவர்களுக்கும் அரசு அங்கீகாரம்பெற்ற பள்ளிகளுக்கும் tie-up உண்டு .பயிற்சி மையங்களில் படிக்கும் மானவர்கள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிப்பதாகவும், அவர்கள் தினம் பள்ளிவருவதாகவும் சான்றிதழ் தருவார்கள் .10 வகுப்பு,12ம்வகுப்பு அரசு தேர்வுகளுக்கு இந்த அங்கீகாரம் பெற்ற பள்ளி மாணவர்களாக அனுப்பப் படுவார்கள். இந்தப் பள்ளிகளுக்கு ஆகும் கட்டணச்சிலவு என்ன உண்டோ அதனை பெற்றொர்கள் கொடுக்க வேண்டும். அது மட்டுமே 5லட்சமாகும். (ஐந்துஆண்டுகளுக்கும்சேர்த்து)பள்ளிக்கே வராத மாணவனுக்கு கல்விக் கட்டணம் வந்தால் தனியார் பள்ளி நிர்வாகிக்கு கசக்குமா!

இந்த மையங்க ளை நடத்துபவர்கள் காங்கிரஸ்,பா .ஜ .க, சிவசேனை தலைவர்கள் . இவர்கள் பட்டா போட்டுக்கொண்டு விதர்ப்பா,மராதா, சாங்கிலி என்று ஏரியா பிரீத்துக்கொண்டு கல்விச்சேவை புரிகிறார்கள். மக்களவை சபாநாயகராயிருந்த ஜோஷி ,மகாஜன் , மாகே ஆகியோர் மிகச்சிறந்த கல்வி வள்ளல்கள் என்று சொல்வார்கள்.

மைய அரசு நடத்தும் தேர்வுகளில் குறிப்பாக பொறியியல் மருத்துவம் ஆகியவைகளில் கெள்வித்தாள்கள் out ஆவதற்கு காரணம் இந்த மையங்கள் தான் என்பது உலகறிந்த ரகசியம். ஏனென்றால் மையங்களை நடத்துபவர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்.
இந்த அனுபவத்தின் பின்னணியில் தமிழகம் பரவாயில்லை என்று சொல்லத்தோன்றுகிறது.

Wednesday, August 10, 2011

அந்தச்சிறுவனுக்கு அகவை அறுபதாகிறது.....

அந்தச்சிறுவனுக்கு இப்பொது அகவை அறுபதாகிறது.......

சோமயாஜுலு - கல்பாக்கம் தம்பதியரின் மகன் தான் சீத்தாரமன் சின்னஞ்சிறுவன் .பூர்வீகம் காக்கிநாடா பக்கம். தற்போது ஹைதிராபத்தில்தங்கியிருக்கிறார்கள்.தந்தை மத்திய அரசில் இஞ்சினியராக இருக்கிறார்.அடிக்கடி மாற்றல்வரும்.

1969மாண்டு.சென்னாரெட்டி தலமையில் தனிதெலுங்கானா பொராட்டம் நடந்தது. பொக்குவரத்து முழுவதுமாய் நின்று கல்விநிலயங்கள் மூடிவிட்டன. சீதாராமனின் தந்தைக்கு மகனின் கல்வி பற்றி கவலை குடும்பத்தை டில்லிக்கு மாற்றிக்கொண்டர். அங்கு அப்பொதுதான் +2 ஆரம்பம். சீதாராமனை அங்கு சேர்த்தார்.தெச அளவில் நடக்கும் சி.பி.எஸ் சி தேர்வு.

பத்திரிக்கையில் தேர்வு முடிவு வந்தது.பள்ளி அளவில் அவன் பெயரைக் காணவில்லை. மாவட்ட அளவில், மாநில அளவிலும் இல்லை. தொலை பெசி ஒலித்தது.பத்திரிகை நிருபர் பெசினார்.சீத்தாராமன்first in the national merrit list ல் வந்திருப்பதாகவும் புகைப்படம் வேண்டுமென்றும் கூறினார் அந்தச்சிறுவன் யாருமல்ல -மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலங்கள் அவை குழு தலைவருமான சீத்தாராம் யெச்சூரி அவர்கள் தான்.டெல்லியில் பி.ஏ ஹானர்ஸ் படித்தார். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஜவஹர்லால் பல்கலையில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்திற்காக பதிவு செய்து கொண்டார்.

ஜே.என்.யு .வில் மாணவர்களிடையே செயல் பட்டார்.74-78 ஆண்டுகளில் மூன்று முரை தொடர்ச்சியாக மானவர் தலைவராக இருந்தார். அவசரநிலை வந்தபோது தலை மறைவாக இருந்து மாணவர்களுக்கு தலமை தாங்கினார். போலீஸ் கைதுசெய்தது.படிப்பு தடை பட்டது. 75ம் ஆண்டு மார்க்ஸிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் மத்திய குழு,செயற்குழு, அரசியல் தலைமைக்குழு என்று உயர்ந்தார்.

மிகச்சிறந்த படிப்பாளி. பின் நவீனத்துவ வாதிகளோடு விவாதிப்பதில் அளவு கடந்த ஆர்வமுள்ளவர். த .மு .எ.ச வின் கோவை மாநாட்டில் அவர்பங்கேற்று பெசியதை இன்றும் இலக்கிய ரசிகர்கள் நினைவு கூறுகிறார்கள்.
அத்வானியின் தேரோட்டத்துக்கு முன் டில்லியில் இடது சாரி கலைஞர்களுக்கு ஒரு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அப்பொது " சோ " வின் நாடகமான "சம்பவாமி யுகே யுகே" குறிப்பிட்டார்.கலை,இலக்கியத்துறையில் அவருடைய ஞானம் போற்றத்தக்கது .உலகம் முழுவதும் சுற்றியவர்.விடுதலை இயக்கங்களின் முக்கியதலைவர்களுடன் நெருக்கமானவர்.குறிப்பாக யாசர் அராபாத், நெல்சன் மண்டேலா, ஃபிடல் காஸ்ட்றோ ஆகியோரை பலமுறை சந்தித்து விவாதித்துள்ளார்.

சென்னையில் நடந்த த .மு.எ.ச மாநாட்டில்.பரிணாம வளர்ச்சியையும், பத்து அவதாரங்களையும் அவர் இணைத்துபெசியது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 16,17,18,ம் தெதிகளில் விருதுநகர் மாநாட்டிற்கும் அவர் வரலாம் என்று தெரிகிறது.

first in natinal merit list ல் வந்த சிறுவன் சீதாராமன் ,சீஈதாராம் யெச்சூரியாகி 12-8-11 அன்று தன் அறுபதாவது வயதை அடைகிறார்.இந்தியப் பாட்டாளிகளும், அறிவுஜீவிகளும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை சொல்கிறார்கள்.அவர்களோடு நானும்நாமும் நீங்களும் எல்லோரும் சேர்ந்து கொள்வோம்.

Haappy Birth day Com. Yechuri !

Wednesday, August 03, 2011

பாலு மஹேந்திரா என்ற அறிவார்ந்த மனிதர்...

பாலு மஹேந்திரா என்ற அறிவார்ந்த மனிதர்......

80ம் ஆண்டுகளின் முற்பகுதியில் சென்னையில் நாவல் பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடத்தியது.

பிரபலமான நாவல்கள் தெர்ந்தெடுக்கப்பட்டு அதன் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர்.எழுத்தாளர்களில் ஒருவர் விமரிசிப்பார் . பின்னர் பயிற்சியாளர்கள் தங்கள் கருத்தினை சொல்வர்கள் வந்திருந்த ஆசிரியர் விளக்கமளிப்பார். இப்படி ஒரு பயிற்சிமுகமை இது வர யாரும் நடத்தியதில்லை என்னும் அளவுக்கு வெற்றிகரமாக நடந்தது.

அசோகமித்திரன், பொன்னீலன், என்று பலர் வந்தனர்.அசோகமித்திரனின் "தண்ணீர்" என்ற நாவலை விமரிசிக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமுக்கு பாலு மஹெந்திரா அவர்களும் கருத்துரையாளராக பங்கு பெற வந்திருந்தார்.மதிய இடை வேளையின் பொது பாலு அவர்களுடன் பெச வாய்பு கிடைத்தது.

உலக சினிமாவிலிருந்து,பேசினோம்.கோதார்து,டி சிகா,என்று இடதுசாரி கலைஞர்களை பற்றி விவாதித்தோம் .
" பாலு சார்! ஜப்பானிய திரைப்படம் ,பிரன்சு திரைப்படம், ஜெர்மனிய திரைப்படம் என்று இருக்கிற து. அவை அந்த நாடுகளின் கலாச்சார பண்பாடுகளை சித்தரிக்கின்றன. ஒட்டுமொத்த மாக " இந்திய சினிமா" என்று இருக்கிறதா? என்று கெட்டேன்.
மென்மையாகப் பேசுபவர் அவர்.கைப்பிடிச்சுவரிலிருந்து இறங்கி என் அருகில் வந்து எந்தோளில் கைபோட்டு குலுக்கினார்.என்னிடமிருந்து விலகி என் கண்களைப்பார்த்து " தமிழ் சினிமா இருக்கிறது.மலையாள சினிமா இருக்கிறது வங்காள .கன்னட மாராத்தி படங்கள் ,ஏன் இந்தி சினிமாவும் உள்ளது. இந்திய சினிமாவை நம் தான் உருவாக்க வேண்டும். " என்றார்.

Monday, August 01, 2011

நடிகர் வீரப்பனும் வாழைப்பழ காமிக்ஸ்ஸும்

நடிகர் வீரப்பனும் வாழைப்பழ காமிக்ஸ்ஸும் ......

இந்தி திரைப் பட உலகில் காதர் கான் என்ற நடிகர் பேரும் புகழும் பெற்றதற்குக் காரணம் அவர் வாழப்பழ காமிக்ஸை பயன்படுத்தியது தான் என்பார்கள் இந்திய மொழிகள் பலவற்றில் இந்த அற்புதமான நகைச்சுவைக் காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் நகைச்சுவை முதன் முதலாக கவுண்டமணி -செந்தில் ஆகியொரால் நடிக்கப்பட்டு அவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இன்றும் அந்தக் காட்சியை தொலைக் காட்சியில் பார்க்கும் போது செந்தில்,கவுண்டமணி,ஜுனியர் பாலையா,சரளா ஆகியொர் நடிப்பை பார்த்து பிரமிப்பே ஏற்படுகிறது

உண்மையில் இந்தக்காட்சியை கற்பனை செய்து உருவாக்கிக் கொடுத்தவர் வீரப்பன் என்ற அற்புதமான .நகைச்சுவை நடிகராகும். தமிழ்த்திரை உலகையே புரட்டிபோடும் அளவுக்கு திரமையும் கற்பனை வளமும் கொண்ட அவரை அவர் கம்யூனிஸ்ட் என்பதால் ஒதுக்கித் தள்ளியதுதமிழ்த் திரை உலகம்.

நான் ஹைதிராபாத்தில் இருக்கும் போது அவரை முதன் முதலாகப் பார்த்தேன்.அங்கு தென் இந்திய கலாசாரகழகம் என்ற அமைப்பில் அப்போது செயல்பட்டு வந்தேன் அதன் தலைவர்களாக ஜஸ்டிஸ் ஸ்ரீனிவசாசாரி அகியொர் இருந்த காலம்.(1957) ஒவ்வொரு ஆண்டும்டிசம்பர்மாதம் நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு முறை செகந்திரபாத் நிஜாம் பள்ளியில் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகங்கள் நடந்தது.மெடை அமைப்பு கலாசாகரம் ராஜகோபால். தி.ஜானகிராமனின் "நாலுவெலிநிலம்," "வடிவெலு வாத்தியார்" என்று நடந்தது.வடிவெலு வாத்தியாரில் வீரப்பன் பக்காஃப்ராடும் ,திமுக அனுதாபியுமான ஒரு தையல் காரராக நடிப்பார். இதே நாடகத்தில் ஆப்ரகாம்வாத்தியாராக பிரபாகரென்ற நடிகரும்நடிப்பார். தமிழ் நடகத்துறையும்,இலக்கியவாதிகளும் கைகோத்து நடை பயின்ற அற்புதமான காலம் அது.

ஜெயகாந்தன் "உன்னைப்போல் ஒருவன்" என்ற படத்தை இயக்கி அளித்தார். அதில் வீரப்பனும் பிரபாகரும் முக்கிய பாத்திரத்தில் நடித்தனர் அந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது .ஒரு தமிழ் படத்திற்கு முதன் முதலில் கிடைத்த தேசிய விருதாகும் அது

ஜெயகாந்தன் கம்யுனிஸ்டாக அடையாளம் காணப்பட்டதால் அதனை வேளியிட விடாமல் செய்யப்பட்டது. தனிக் காட்சியாக எல்.ஐ.சி ஊழியர்கள் வெளியிட்டு . கையைச்சுட்டுக் கொண்டனர்.

Wednesday, July 27, 2011

"அம்பாசமுத்திரம் கந்தசாமி "

சிறு கதை "அம்பாசமுத்திரம் கந்தசாமி "

"ஸ்ரீ அம்மவுக்கு கந்தசாமி வணக்கங்களோடு எழுதிக்கொள்வது.இங்கு நான் நலம்.அங்கு நீங்கள் , உங்கள் மறுமகள் புஷ்பா,பேத்தி இந்திரா, பேரன் காமராஜ் ஆகியொர் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.என்னைப் பற்றி ....

" சோல்ஜெர்ஸ் கம்-அவுட் " என்று காப்டன் ஞானெஷ் வர்மாவின் கர்ஜனை கேட்டதும் கந்தசாமி கடிதம் எழுதுவதை நிறுத்தினான். மூன்று நாட்களாக கடிதம் எழுத நினைத்தும் முடியவில்லை.பங்கருக்குள் உள்ள பெற்றொமாக்ஸ் வெளிச்சத்தில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்த உடனேயே சிம்மம் கர்ஜித்தது.எழுந்துவெளியே ஒடும்போது மற்றவர்களும் " 'அசெம்பிள்' ஆகியிருந்தனர்.

மலை உச்சியில் பாகிஸ்தான் ராணுவமும் முஜாகிதீனும் இருந்தனர்." ஃபயர்" என்று உத்திரவிட்டதும் பீரங்கி முழக்கமிட்டது.பழுப்புநீற வெளிச்சத்தோடு குண்டுகள் பாய்ந்தன.பத்து நிமிட தாக்குதலுக்குப்பிறகு மவுனம்.

அடுத்த உத்திரவு வரை வேலையில்லை.

மீண்டும்கந்தசாமி பங்கருக்குள் நுழைந்தான்.அவனோடு சிக்னலைச்சேர்ந்த சோமசேகரும் நுழைந்தான். சோமசேகர் கர்நாடகத்துக்காரன்.கந்தசாமி கடிதத்தைத் தொடர்ந்தான் .

"என்னை பற்றி கவலைபட வேண்டாம்.நீங்கள் நம்ம வளவில் உள்ள கோனார்வீட்டு டி.வி யில் பார்த்துவிட்டு என்னைபற்றி பயப்படுவீர்கள் என்று நினைத்துத்தான் எழுதுகிறேன்.இங்கு எங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது.நல்ல சத்தான உணவு கொடுக்கிறார்கள் .'

. சோமசேகர் எழுந்து தன் வாட்டர் பெக்கில் இருந்து தண்ணிர் குடித்தான்.ஒரு சிகரெட்டை எடுத்துபத்தவைத்து கந்தசாமியிடம்நீட்டினான்.தனக்கு ஒன்றைப் பத்தவைத்துக்கொண்டான்.அவன் மடியில் இருந்த பிளாஸ்டிக் பையில் வறுத்த பயறு இருந்தது. ஒரு பிடியை எடுத்து கந்தசாமி வாயில்போட்டுக்கொண்டான்.மூன்று நாட்களாக நூடில்ஸ்,பயறு ,சிகரெட் தான் ஆகாரம் .

"ஏய!காந்த்! முன்று நாளா உன் பூட்ஸை கழட்டவில்லை" என்றான் சேகர்."
" நீ நான்குநாட்களாக கழட்டவில்லை " என்றான் கந்தசாமி.இருபத்துநான்கு மணிநெரமும் கண்துஞ்சாத பணி.இந்ததேசத்தின் இருத்தலை உணர்த்தும்பணி.கடிதம் எழுதத் துவங்கினான்.

"இங்கு குளிர் அதிகம் தான் .ஆனால் பத்திரிகைச்செய்திகளைப் பார்த்து பயப்படவேண்டாமம்மா! ...குத்தாலத்தில் அருவியில் தலையைக் கொடுத்ததும் உடம்பு முழுவதும் சிலிர்த்து குளிர்பாயும்..அதே பொலத்தான்.. ஒரே ஒரு வித்தியாசம்..அங்கு அருவியிலிருந்து தலையை எடுத்துவிட்டால் குளிர் குறைய ஆரம்பிக்கும்..இங்கு இருபத்து நலுமணி நேரமும் எலும்பிற்குள் பாயும் குளிர் ...."

பங்கிற்கு வெளியே பூட்ஸ் கால்கள் உரசும் சத்தம்.இருவரும்வேளியே வந்தார்கள்.காப்டன் வர்மாகைதேர்ந்த குதிரையை தடவிக் கொடுப்பதைப்போல தடவிக் கொண்டிருந்தார்.இருந்த இடத்திலிருந்து 40கி,மீ.தூரம் குண்டுகளை வீசும் திறன்.மூன்று குன்றுகளைத் தாண்டி எதிரிகள் இருக்கிறார்கள்,அவர்களுடைய பீரங்கி பிரிட்டிஷ் காரனுடையது.25 கி.மீ பாயும்.
" ... எங்களிடம் வலுவன பீரங்கி உள்ளது.பொபர்ஸ் பீரங்கி..செங்கோட்டையிலிருந்து வீசினால் திருநெல்வெலி கொக்கிரகுளம் தகர்ந்துவிடும். அவ்வளவு வலுவானது .அதனால் பயப்பட வேண்டாம்..."


வெளியில் பால் நிலா ரம்யமாக இருந்தது.கந்தசாமி சிகரெட்டைப் பத்தவைத்துக்கொண்டு பங்கர் ஹோல் மூலமாக சிகரட் நுனியை மறத்துக் கொண்டு பார்த்தான் .எதிரிகள் இருக்கும் மலையில் மூன்று பகுதிகளையும் காவல் காக்கிறார்கள்.உச்சியில்இருப்பவர்களை நெருங்கி விரட்ட வேண்டும்.விரட்டமுடியது.அவனிடம் அதிநவீனமான சிறிய ஆயுதங்கள் உள்ளன.அவன் அவற்றை வீணாக்க வேண்டும்.அதற்கு மேலும் ஆயுதங்கள் வருவது தடுக்கப்பட்டு வருகிறது .

மலைகளின் நான்காவது பகுதிசெங்குத்தான பாறைகளைக் கொண்டது.அதன் மூலம் நமது வீரர்கள் ஏறுகிறார்கள்.சிறு சிறு குழுக்களாக..ஆறுஅல்லதுஎட்டுபெர்கொண்டகுழுக்களாக ...கந்தசாமிக்கு மகள் இந்திரா நினைவு வந்தது ...
."..அம்மா இந்திராவை உன் மருமகள் புஷ்பா மருத்துவக் கல்லூரியில் சேர்க்க ஆசைப்படுகிறாள்.நம்மால் முடியுமா? இடம் கிடைக்காது.தவிர பணம்கட்ட முடியுமா? அதனால் அவளை பி.எஸ் ஸியில் சேர்த்துவிடு.நான் தனியாக புஷ்பாவுக்கு எழுதுகிறேன் .அம்பை நகராட்சி உறுப்பினர் ஒருவரை ஆம்பூர் மச்சானுக்கு தெரியும்.அவர் மூலமாக கல்லூரியில் இடத்துக்கு ஏற்பாடு பண்ணு..சவத்துப் பய காசு கேப்பான்..கொடுத்துவிடு...:
மலை ஏறுபவர்கள் மீது உச்சியில் இருப்பவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் இரண்டு நன்மைகள்.எதிரிகள் வசமுள்ள ஆயுதங்கள் குறையும்.தாக்குதலையும் மீறி நம் வீரர்கள் உச்சியை அடந்துவிட்டால் லாபம்.இடையே ஏறும் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்தால்.. இது ராணுவம் ..நடப்பது யுத்தம்...எதிரிகளிடம் ஆயுதம் குறைந்து வருகிறது என்பது புலப்படுகிறது. ஏறி வருபவர்களை கொல்ல பெரும் பாறைகளை நம் வீரர்கள் மீது உருட்டி விடுகிறார்கள் .கந்தசாமி மீண்டும் தொடருகிறான் .

"... பொட்டல் புதூர் தாவூது ஞாபகம் இருக்கா அம்மா .. நான் பங்களுரில இருக்கும் போது உனக்கு கட்டில் கொடுத்துவிட்டேனே...அவன் போயிட்டான்..."

எதிரிகள் தங்கியிருக்கும் மலை உச்சிக்கு நேர் கீழே தாவூது பதுங்கி யிருந்தான்.நம் வீரர்கள் மலையில் ஏறும்போது நாற்பது கி .மீ. தள்ளி யிருக்கும் வர்மாவுக்கு தகவல்கொடுப்பான்.அவர்கள் ஏறி பாதுகாப்பான பாறைகளுக்கு பின்னால் சென்றதும் பீரங்கி படைக்கு தகவல் கொடுப்பான்.பீரங்கி மலை உச்சியில் உள்ள எதிரிகளைத்தாக்கும்.பீரங்கியால் நம் வீரர்களைப் பார்க்கமுடியாது.நம் வீரர்களால் பீரங்கிபடையை பார்க்க முடியாது.இருவருக்குமிடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்பியவன் தாவூது.அவனை கண்டுகொண்ட எதிரிகள் வீசிய பீரங்கிக் குண்டு அவனை ரத்தம்,சதை,எலும்பு என்று பிய்த்து எறிந்துவிட்டது.
கந்தசாமி குளிருக்காக் காலை ஸ்லீப்பிங்க் பாக் கிற்குள் நுழைத்துக் கொண்டான். கடிதம் தொடர்ந்தது

. "...காமராஜை தீர்தபதி ஹைஸ்கூல்ல சேர்த்துடு...புஷ்பா அவனை கான்வெண்ட்ல இங்கிலீஷ் மீடியத்துல சேக்கணம்னு நினைக்கிறா...பெரிய செலவு...அவளுக்கு அப்பர் தெரு சம்முகக்கனி மகனோடு பொட்டி போடணும் ...சம்முகக் கனி இரும்புக்கடை வச்சிருக்கான்.லட்சம்லட்சமா சம்பாதிக்கிறான்...லட்சம்லட்சமா நன்கொடை கொடுக்கவும் முடியும்.நான் திருவனந்தபுரத்திலேருந்து இங்க வந்ததும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.குளிரு அதிகம்தான்.பத்தாயிரம் பதினைந்தாயிரம் அடி உயரம்தான்.ஆனா சும்மாவா இதுக்காகவே மாதம் 120 ரூ கொடுக்கான்...சண்டை சீக்கிரமாமுடிஞ் சுடும்னு தோணுது... அது நல்லதுதான்..ஆனா நமக்குதான் கஷ்டம்...கீழ இற்ங்கிபுட்டா ..120 ரூ வெட்டிடுவான்..சண்டை முடிஞ்சதும் லீவு தருவாங்க....உன்னையும் ...குழந்தைகளையும் பார்க்க வருவேன்..".புஷ்பா தினம் சின்னச்சங்கரன் கோவிலுக்கு எனக்காக போறாளாம்...எழுதியிருந்தா...அவள பயப்படாம இருக்கச்சொல்லு ...கொவிலுக்குப் போற பாதை ஒரே புதரும் முள்ளுமா இருக்கப்போவுது.பூச்சி பட்டை இருக்கும்...அதுதான் எனக்கு பயமா இருக்கு...வெளிச்சத்திலேயே போய் வரட்டும்...மத்தப்படி என்னை பத்தி கவலைபட வேண்டாம் .....""

கந்தசாமியின் கடிதம் ஆர்மி பொஸ்டாபிஸில் சேர்க்கப்பட்டது.
அம்பசமுத்திரதிலுள்ள கந்தசாமியின் அம்ம சண்முகவடிவுக்கு "தந்தி"வந்தது. கடிதம் வரும்..

(கார்கில் போர் முடிந்ததும் செம்மலரில் பிரசுரமான கதை)



.

Sunday, July 24, 2011

கெல்வின் பீட்டெர்சனும் இடஒதுக்கீடும்.....

கெல்வின் பீட்டர்சனும் இட ஒதுக்கீடும் .....

இங்கிலாந்துக்குப் போய் இந்தியா கிரிக்கெட் விளாயாடுகிறது.பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் இரவும் பகலும் அதுபற்றிய செய்திகளை கொட்டி வருகின்றன.

கெல்வின் பீட்டர்சன் என்ற வீரர் இரட்டைசதம் அடித்தார் என்று . குதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கிலந்து வீரரான கே.பி என்ற பீட்டர்சன் தென் ஆப்பிரிகாவின் வீரர். அங்கிருந்து கிளம்பி இங்கிலாந்து அங்கே குடியுரீமை பெற்று விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்கா ஆரம்ப காலத்தில் வெள்ளைக்காரர்களின் நிற வேற்றுமை காரணமாக கருப்பர்களை அனுமதிப்பதில்லை .முற்காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே ஆடுவார்கள். ஒருகட்டத்தில் நிறவேற்றுமை காரணமாகபுதிதாக விடுதலை பெற்ற நாடுகள் வெள்ளை ஆப்பிரிகாவுடன் விளையாடமறுத்தன .இதற்கு தலைமை தங்கிய நாடுகளில் முக்கியமான நாடு இந்தியாவாகும்.

பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு தென் ஆப்பிரிகாவில் நிலமை மாறியது.கருப்பின மக்கள் விளையாட்டுத்துறையில் முன்னுக்கு வந்தனர். சிறுபான்மையினரான வெள்ளையரையும் ஆதரிக்கும் வகையில் தென்னாப்பிரிக்க அரசு வெள்ளையர்களுக்கு என்று சில சலுகை களை அளித்தது. அவர்களுக்கு என்று சில இடங்களை ஒதுக்கீடு செய்தது. கிரிகெட்விலையாட்டில் குறைந்தபட்சம் நான்கு பேராவது வெள்ளையர்களிருக்க வேண்டும் என்றுஒரு விதியைக்கொண்டு வந்தது.

பீட்டர்சனின் தந்தை கருப்பர். தாயார்வெள்ளைக்காரி. மிகச்சிறந்த விலையாட்டு வீரரக இருந்தாலும் ஒதுக்கீடு முறையில் பீட்டர்சனுக்கு தென் ஆப்பிரிக்க அணியில் இடம் கிடக்கவில்லை. அதனால் அவர் இட ஒடுக்கீடு முறையை கடுமையாக எதிர்த்தார். அவருடைய தாயார் வெள்ளைகாரி என்பதால் அவருக்கு இங்கிலாந்தில் குடியுரிமை கிடத்தது. இப்போது இங்கிலாந்து அணியில் பீட்டர்சன் அணியில் விளையாடி வர்கிறார். அவரிட ஓதுக்கீட்டை கடுமையாக எதிர்ப்பவர்.

அறுபது ஆண்டுகளுக்கும்மேலாக இந்தியாவில் இட ஒதுக்கிடு இருக்கிறது. 130 கோடிப்பேரில் அரசு,மற்றும் வேலை வாய்ப்பில் தலித்துகள் எத்துணை சதம் வந்திருப்பார்கள். இன்று சுமார் 34 கோடி தலித்துகள் இருப்பதாக சொல்கிறார்கள் ஒரு கோடி பேருக்கு கூட வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதா என்றால் இல்லை. இங்கும் இட ஒதுக்கீடை எதிர்க்கும் சக்திகள் கத்துகின்றAன. அவர்களுக்கு தலைமை இங்கும் அரசியல் சக்திகளிருக்கின்றன்.

பீட்டர்சனை அழைத்து அவர் தலமையில் இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடத்தினாலும் நடத்துவார்கள். நம்ம ஊர் கிரிக்கெட் ரசிகர்களும் கூட்டமாய்ச்செல்வார்கள்.

Sunday, July 17, 2011

சிறு கதை ------பேராசிரியர்

சிறு கதை.
பேராசிரியர்

திப்புசாமி "மும்பை-கன்னியாகுமரி "எக்ஸ்பிரசில் ஏறினார்.'ஏ.சி"கோச்சானதால் தன் இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டார்.அனுப்ப யாரும் வரவில்லை .அணுசக்திநகரில் வீட்டைப்பூட்டினோமா என்று அடிமனதில் உளைச்சல் ஏற்பட்டது.பக்கத்து ஃப்ளாட் பார்த்தசாரதி சின்கா பார்த்துக்கொள்வான். அவனிடம் தான் சாவி இருக்கிறது.மனது சமாதானமடைந்தது.

மதுரைசென்று பேராசிரியர் டாக்டர்.எம்.எஸை பார்க்கவேண்டும்.ரயில் கிளம்பிவிட்டது.மிதமான "ஏ.சி"யின் குளிர்ச்சி இமை கனத்தை அதிகமாக்கி மூடச்செய்தது.

திப்புவுக்கு கண்களைத் திறக்க முடியாத அளவுக்கு இமைகள்கனத்தன.அப்பா மெதுவாககூப்பிடுவது கிணற்றிர்க்குள் இருந்து கூப்பிடுவதுபோல் கேட்டது. திப்புவுக்கு ஆறு வயது முடியவில்லை. கல்யாண வீடுகளில் அப்பாவும் அம்மாவும் "லைட்" தூக்குவார்கள். ஆளுக்குஒரு ரூ கிடைக்கும்."கலக்கு முட்டியை" குடித்துவிட்டு இருவரும் சண்டை போடுவார்கள்.சிலசமயம் ஊர்வலத்தின்போதே தலையில் லைட்டுடன் கைகளை ஆட்டி ஆட்டி கெட்டவார்த்தை சொல்லி இருவரும் சண்டைபோடுவார்கள் .

திப்பு இருவருக்கும் நடுவில் மவுனமாக வருவான்.சாமிகள் அதட்டியதும் இருவரும்கொஞ்ச நேரம் நிறுத்துவார்கள்.இந்த "லைட்"தூக்குவதில் ஒரு வசதி உண்டு.இரவு கல்யாண விருந்துமுடிந்ததும் எச்சிலையில் உள்ள மிச்சத்தை பொறுக்கிக் கொள்ளாலாம்.. அதற்காகஒரு ஒலைப்பெட்டியை திப்புவின் தலையில் ஏற்றி வைத்திருப்பார்கள்..சாமிமார் சாப்பிட்டு எச்சிலிலையை போடும் போது "ஏ!சாமி!ஏ!சாமி!" இரண்டு முன்று குடும்பங்கள் அலை பாயும்.

இலைகள் யார் முன்னால் விழுகிறதோ அவர்கள் முதலில் பொறுக்கிக் கொள்ள வேண்டும்.லட்டு,வடை,உருளைக்கிழங்கு கறி,அவியல் ,அப்பளம் என்று திப்பு, அவனுடைய அம்மா, அப்பா ஆகியோர் தனித்தனி எச்சில் இலைகளில் பிரித்து பெட்டியில்வைத்துக் கொள்வார்கள்.

அன்று ஊர்வலம் கொஞ்சம் நேரமாகிவிட்டது.திப்புவுக்கு கால் வலித்தது.நடுரோட்டில் குப்பைமேட்டில் உட்கார்ந்து கொண்டான் தூக்கக் கலக்கத்தில் மண்டபத்திற்கு . வரும்போது பசி வயிறை கிள்ளியது.பந்தலுக்கு வெளியில் படுத்துக் கொண்டான்.அப்பவும். அம்மாவும் "லைட்"டை இறக்கிவிட்டு அவன் அருகில்வந்தூட்கார்ந்து கொண்டது அவனுக்கு நினைவிருக்கிறது.

"திப்பு!ராசா! எச்சல வந்திட்டுதில!எந்தில!ராசா!" என்று அப்ப கூப்பிட்டது கிணற்றுக்குள் இருந்து கேட்டது. "நாயி! எந்தி நாயி!" என்று அம்மா முதுகில் அடித்தாள்.

ரயில்குலுங்கியதா.இல்லை உமைச்சலா தெரியவில்லை திப்புசாமி திடுக்கிட்டு விழித்தார்.மனி இரவு ஒன்பதாகி விட்டது.கையைக்கழுவிக்கோண்டு ஹோட்டல் மெரிடியனிலிருந்து ஸ்டாஃப் கொண்டு வந்து வைத்த டின்னர் கவரைத் திறந்தார்.

பொன் வறுவலில் உருளைக்கிழங்கு, உயர்ந்த வகை கோதுமையில் தயாரிகபட்ட இரண்டு பரோட்ட.நன்கு வறுத்து ஒரேமாதிர்யாக நறுக்கி மிதமான காரத்தோடு உள்ள ஆட்டிறைச்சி.மடியில் டவலை விரித்து அலுமினிய ஃபாயில் தட்டை வைத்துக்கொண்டார்.மினரல் வாட்டர் பாட்டிலைத் திறந்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார். உருளைக்கிழங்கை விட்டுவிட்டு ஆட்டிறைச்சியில் பரோட்டவை தோய்த்து வாயில் பொட முன்வரும்போது "குபுக் என்று நெஞ்சக்குழியில் இருந்து சத்தம் வந்தது.கண்கள் குளமாகியது.எதிர் சீட்டுக்காரன் பார்க்கவில்லை ஒவ்வொரு சீட்டுக்கும் திரை போட்டு மறைத்திருந்ததால்.அவர் வாய் முணுமுணுத்தது"எம்.எஸ்!எம்.எஸ்! என்று.

திப்பு மூன்றாவது படிக்கிறான் அன்று பள்ளிக்கூடம்போகவில்லை.ரங்கசாமிக் கோனார் வீட்டில் மாடு செத்துவிட்டது.அப்பாவொடுஅங்கு போய்விட்டான்.மாடு செத்தால்மாட்டுக்கறி திங்கலாம்.பள்ளிகூடம்போனால்திங்கமுடியுமா? திப்பு இந்த மாதிரி சமயங்களில் அப்பவோடு ஒடிக் கொள்வான்.மாடு செத்தால் இரண்டு மூனேஉ நாள் பள்ளீக்கூடம் போகமாட்டன்.வத்தியார் அடிப்பாரு!அடிச்சா என்ன? அப்பதான வலிக்கும்! என்று திப்பு சமாதனம்செய்து கொள்வான்.

திப்புசாமியால் முழுவதும் சாப்பிட முடியவில்லை."டின்னர்' கவருக்குள் வைத்து வெளியில் எறிய எழுந்து ...அதிர்ச்சியில்திப்புசாமி மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.கவரை சேதமில்லாமல் மூடி வைத்திருந்து காலையில் பிளாட்பாரதில் வரும்பிச்சைகார ..."ஏம்.ஏஸ்.!எம் எஸ்" வாய் முணுமுணுத்தது.

திப்பு இப்போது ஐந்தாவது படிக்கிறான்.குழி வெட்ட அப்பவுக்கு உதவுவான். நாடாக்கமாறு இடுகடு இவங்க பராமரிப்புல தான் இருக்கு.எரிக்கவுமிவனுக்குத் தெரியும்.என்ன என்ன வேணும்,எந்த எந்த சாமிமாருக்கு எப்படிச் செய்யணும்.. எல்லாம் தெரியும். பள்ளிகூடம்போனாலும் எழவு,கேதம்னு வந்தாசைகிளை எடுத்துக்கொண்டு எழவு சொல்லப்பொயிடுவான்.அப்படிப் போன இடத்துல தான் "ஏம்.ஏஸ்"சாரை பார்த்தான்.

அருப்புக்கோட்டைக்கு பக்கத்துலைருக்கிற கிராமத்துல தான் "எம்.எஸ்"சாரை பார்த்தான்.அவரு இவனை விசாரிச்சாரு.வீட்டுக்குள கூப்பிட்டாரு.போகாம பிடிவாதமா தெருவில நீன்னான்.சாரு வெளில வந்து அவன் தொளை அணைச்சு கூட்டிட்டு போனாரு.காப்பி குடுத்தாரு.நாற்காலியில் உட்கார்ந்து குடிக்கச்சொன்னாரு.திப்புவுக்கு பயமா இருந்தது.வெளில போனா அடிப்பாங்களோ! ...சாருஇருக்காரு.. என்று சமாதனம் செய்துகொண்டான்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரச்சொன்னாரு."மேல படி. குழிவெட்டப் போகாத.எழவு சொல்ல நீ போகவேண்டாம்..உங்கப்பாவ வரச்சொல்லு"ந்னு சார் சொன்னார் அப்பா ஐஞ்சாப்போட .நிறுத்த சொன்ன போது தான் சார் அவன் வீட்டுக்கு முத முத வந்தாரு திப்புவ கூட்டிக்கிட்டுபோய்பாளையங்கோட்டை.ஆஸ்டல்ல சேத்தாரு.

ஆறாப்பும் ஏழாப்பும் படிக்கும் போது திப்புவுக்கு மாட்டுக்கறியும், எச்சில் இலை லட்டு வடை நினைவு வரும்.கழுத்தை திருப்பி, உடம்பை ஒரு உலுக்கு உலுக்கி ..ஏன்? தெரியாத் ஒரு ஒக்களிப்பு வரும்.திப்பு பாத்தாவது ப்படிக்கும் போது அவன் அம்மாவும் அப்பாவும் விஷச்சா சாராயம் குடிச்சு செத்துட்டாங்க. அப்ப அவனுக்கு ஆறுதலாயிருந்தது "எம்.ஏஸ்."சாருதான்.

பிளஸ்-2 முடிச்சதும் பி.எஸ் சி ல சேத்தாரு.நுக்ளியர் பிஸிக்ஸ் சிறப்பு பாடம்.திப்பு எம்.எஸ்.சி ரிசல்ட் வந்த அன்னக்கி சாரை பார்க்கப்போனான். சார் திப்புவைக் கட்டிக் கொண்டு விம்மினார்...சார் மகன் பாசு அவனுக்குகைகுலுக்கி பாராட்டினான். சார்விட்டு அம்மா அவனுக்கு இனிப்பு ஊட்டினார்....சாரப் பார்த்தான்...காண் கலங்கியிருந்தது.

" பேராசிரியர் திப்புசாமி--நுக்ளியர் பிஸிசிஸ்ட் " அட்டையொடு டிரைவர் நிறக திப்புசாமியைவரவேற்க எம்.கே யுனிவெர்சிட்டியின் பி.ஆர்.ஓ அருகில் நின்றார்.அவ்ர்கள் டி.வி.எஸ் கம்பெனியின் கெஸ்ட் ஹவுஸை அடையும் போது மணி எழாகியது .பி.ஆர்.ஓ. அவருடைய நிகழ்ச்சியைப் பற்றி பெசினார்.காலை எட்டு முப்பதிலிருந்து ஒன்பது முப்பது வரை தனக்கு வேலையிருக்கிறது கூறிய திப்புசாமி குளித்து உடை மாற்றிகொண்டு காரில் ஏறினார்

"சார்! எந்தப்பக்கம்"
"டி.வி. எஸ் நகர் பக்கம்"
"சரி சார்"
காரிலிருந்து இறங்கிய திப்புசாமி எதிரில்வந்தவரிடம்கேட்டார்.
"ஐயா! எம்.எஸ் வீடு எது?"
"எஸ்! என்னகேட்டீங்க?
"எம்.எஸ்.வீட்டு எது?"
"யூ மீன் புரபசர் ... "
"யெஸ் "
"அதோ "
ஐந்தாறு வீடுகள் தாண்டி காட்டினார்
தூரத்தில் வேப்பமர நிழலில் காம்பவுண்டிற்குள் எம்.எஸ சார் ... திப்பு என்ற திப்புசாமியின் இதயம் தொண்டைக்குள் சென்று அடைக்க ...தூரத்தில் பேராசிரியர் எம்.எஸ் ... ...அந்த உருவம் மிக மெலிதாக மறைந்துவர...பனித்த கண்களை திப்புசாமி துடைத்துக் கொண்டார்...அது யார்...எம்.எஸ் தானா...நடக்க ஆரம்பித்தார்.
.

Wednesday, July 13, 2011

தென் இந்திய ரயில்வேயும் செட்டிநாட்டு முதலாளிகளும் ......

தென் இந்திய ரயிலும் செட்டிநாட்டு முதலாளிகளும்.......

இந்தியா சுதந்திர மடையும் முன்னால் தென் இந்திய ரயில்வே (S.I.R.),பெங்கால் நாக்பூர் ரயில்வே (B.N.R),மெட்றாஸ் ரயில்வே (M.S.M) என்று தனியார் வசம் இருந்தது.
சென்னை எக்மோரிலிருந்து ஒரு ரயில் புறப்படும்.அது விழுப்புரம்,மாயவரம், கும்பகோணம், காரைக்குடி,தனுஷ்கோடி செல்லும். அங்கு ரயில் கப்பலுக்குள் செல்லும். கப்பல் கொழும்பு செல்லும். கொழும்பில் ரயில் கப்பலிலிருந்து தரைக்குச்செல்லும். அங்கிருந்து காங்கெசன் துறை செல்லும்.சென்னை எக்மோரில் ஏறிய பயணி காங்கெசன் துறை வரை இறங்காமலேயே பயணிக்க முடியும். இந்த ரயிலுக்கு "போட் மெயில்"
என்று பெயர்.

இந்த ரயிலில் தான் செட்டிநாட்டு முதலாளிகள் சென்னையிலிருந்து காரைக்குடி வருவார்கள். கரைக்குடிக்கு முன்னாலெயே அவர்கள் கிராமம் வரும். ரயில் நிலையம் கிடையாது. நட்டநடுவில் ரயி ல் நிற்கும் . அவர்களுடைய கணக்குப்பிள்ளை, மற்றும் பணியாட்கள் நிற்பார்கள் .முதலாளி இருக்கும் பெட்டி அருகில் சென்று அவரிறங்குவதற்கு வசதியாக, படிகளை வைப்பார்கள். முதலாளி இறங்குவார். கணக்குப் பிள்ளை ஒடிப்போய் இஞ்சின் ஒட்டுபவரிடம் 20 ரூ கொடுப்பார். கரி போடுபவரிடம் 10ரூ கொடுப்பார். ரயில் புறப்படும்.

இன்று நிலமை மாறிவிட்டதுஎன்று எழுத ஆசைப்ப்பட்ட லும் முடியவில்லை.உத்திரப்பிரதெசம்,பிகார் மாநிலங்ளில் நிலமை வேறு.கிராமத்து மக்கள், நகரங்களுக்கு செல் வார்கள். வரும் பொது ரயிலில் ஏறுவார்கள்.அவர்கள்கிராமத்துக்கு அருகில்ரயில் வரும்போது சங்கிலியைப்பிடித்து நிறுத்துவார்கள்.இறங்கி வீட்டுக்குச்செல்வார்கள் அது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் ராஜதானி எக்ஸ்பிரசானாலும் கவலையில்லை.இதனால் சக்கிரமும் தண்டவாளமும் உரசிக்கோள்ளும். இரண்டுமே இது அடிக்கடி நடப்பதால் பலவீனமடைகிறது. ரயில் பெட்டிகள்தண்டவாளத்திலிருந்து விலக உயிச்சேதமுள்ள விபத்துகள் நடக்கின்றன .மமதாபனர்ஜிதான்நேற்றுவரை ரயில்வே அமைச்சர்.

தண்டவாளங்களின் கனத்துக்கு எற்றவாரு சரக்கு ரயில்களில் சரக்கு எற்றவேண்டும். ஆனால் முதலாளிமார்களுக்கு அவசரம் .கணக்கு வழக்கு இல்லாமல் சரக்கு எற்றப்படுகிறது. இதன் காரணமாக தண்டவாளங்கள் பலவீன மடைவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தண்டவாளங்களி பூமியோடு பிணக்க ஸ்லீப்பர் கட்டைகள் இருக்கும் இப்போது மரத்திற்குப்பதிலாக கங்கிரீட் ஸ்லீப்பர்களைப் போடுகிறார்கள். நமது தலைப்பாகை கட்டிய பிரதமரின் திட்டப்படி இவை தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன . கோடிக்கணக்கில் இதில் ஊழல் . தரக்குறைவான ஸ்லீப்பர்கள், பலவீனமான தண்டவாளங்கள் விபத்து நிகழத்தானே செய்யும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சிக்கன நடவடிக்கை என்று கூறி 3லட்சம் ஊழியர்கள் தேவை என்பதை மூடிமறைத்து புதிய நியமனங்களை செய்யமலிருக்கிறார்கள்.

திருணாமுல் காங்கிரசைச்சர்ந்தவர் திருவெதி. அவர்தான் ரயில்வே அமைசராக வெண்டும் என்று மமதா நிர்ப்பந்தப்படுத்தினார். விபத்து நடந்தபோது நிருபர்கள் திரிவேதியிடம் நீங்கள் விபத்து நடந்த இடத்திற்கு பொகவில்லையா என்று கேட்டார்கள். " நான் ஏன் பொக வேண்டும்.தற்போதுபிரதமர் தான் ரயிலுக்கு பொறுப்பு" என்றுகூறிவிட்டார்.

. அவர் கன்னத்தில் அறைந்து "விபத்து நடந்த இடத்துக்கு போடா " என்று சொல்ல ஆளில்லையே ! என்ன செய்ய?

Wednesday, July 06, 2011

வர்ணாஸ்ரம அதர்மம் .

வர்ணாஸ்ரம அதர்மம் ......

நண்பர் ஒருவரின் இடுகையில் பின்னூட்டமிடும் பதிவர் வர்ணாஸ்ரம தர்மம் என்பதுதர்மமா? அதர்மமா? என்று கேட்டிருந்தார்.

வர்ணாஸ்ரம தர்மம் என்பதே misnomer என்பது என கருத்து. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனிதன் கண்டுகொள்ளப்பட விதி இருக்குமனால் அந்த விதி அதர்மமானது.வெள்ளையர்கள் கருப்பின மக்களை கொடுமைப்படுத்தியது நியாயப்படுத்தப்பட்டது சரி என்றாகிவிடும்.இந்தியர்களை brown dog என்றது நியாயமாகி விடும்.காந்தி அடிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய யுத்தம் தர்ம யுத்தமாக இருந்திருக்காது.

வர்ணாஸ்ரமத்தின் மிக அசிங்கமான அம்சம்" தீண்டாமை."அது இந்துமததிற்கு மட்டும்சொந்தமானதில்லை.யூதமதத்திலிலுமிருந்தது. யூதமதம் உச்சத்தில் இருந்த காலமிருந்தது. கிரேக்கர்கள்,மத்திய தரைக்கடல் பகுதியில் வாழும் மக்களை மனிதர்களாகவே கருதியதில்லை.அவர்களை சுமெரியர்கள் என்று அழைப்பார்கள். சுமெரியர்கள் தீண்டத்தகாதவர்கள். பொது இடங்களுக்கு அவர்கள் வரக்கூடாது. அவர்கள்கைபட்ட நீரைக்கூட அருந்தக் கூடாது.ஏன்? எசுபிரான் கூட இதனை அனுசரித்து வர வேண்டியதாயிற்று. "தீண்டாமையை" ஒழிக்க அவருக்கு உணர்த்தியது ஒரு சுமெரியப் பெண்.

.பலைவனத்தில் ஏசு சீடர்களொடு சென்றுகொண்டிருந்தார்.பிணியால் பாதிக்கப்பட்ட ஏழைஎளிய மக்களுக்கு மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்துவார். ஒருசமயம் அவர் சுமெரியர்களின் குடியிருப்பு வழியாகச்சென்று கொண்டிருந்தார். அந்தக்குடியிருப்பில் ஒருகுடிசையிலிருந்த சிறுமிக்கு உடல் நலமில்லை. அவளுடைய தாயார் தன் குழந்தையின் மேலுள்ள பாசத்தால் ஏசுவிடம் வந்தாள் அவளுக்குத்தெரியும் ." தான் தீண்டத்தகாதவள் தண்டிக்கப்படலாம்.தன்மகள் குணமடையவேண்டும் அதற்காக எந்ததண்டனையையும் தாங்க தயாரனாள்." ஏசு புரிந்து கொண்டார். சீடர்கள் பயந்தனர். மருந்து கோடுத்து அந்த சிறுமியை குணப்படுதினார். மனிதப்பிறவியில் தீண்டத்தகாதவர்கள் என்று எவருமில்லை"என்று அறிவித்தார். யூதர்களுக்கு ஏசுவின் மீதான கோபம் அதிகமாகியது.

தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் நாடினர்கள் தென் மாவட்டங்களில் இன்றும் P.C,N.C, கொடுபோட்டு சர்ச்சுகளில் இட்ம் ஒதுக்குவது நின்றபாடில்லை .

தீண்டாமையை ஒழிப்பதற்காக தமிழகத்தில் ஒரு இயக்கம்நடந்து வருகிறது. தீண்டமைச்சுவர் உண்டாகி அதனை இடிக்க ஒரு போராட்டம். கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடிய சட்டமன்ற உறுப்பினரை அடித்துஅடி வயிற்றில் மிதித்ததில் அவருடைய கர்பப்பை சிதைந்து ஆறுமாதம் மருத்துவ மனையில் இருந்த்தார்.

இன்றும் தீண்டாமை தொடர்கிறது. என் தந்தை காலத்திலும் இருந்தது.என் பாட்டனார் காலத்திலும் இருந்தது. பிரிடிஷ் ஆண்டபொதும் இருந்தது.நாயக்கர் காலத்தில்,சேர சோழபாண்டியர் காலத்தில், இருந்தது.அக்பர் காலத்தில், அசொகன் காலத்தில், புத்தன் காலத்தில்,அலக்சாண்டர் காலத்தில் இருந்தது. ஒவ்வொரு ஆட்சியிலும் மாறும் மாறும் என்று நமபி ஏமாந்தோமே!

அதனால் தான்பாரதி பாடினான். விடுதலை பற்றி பாடினான். விடுதலை யாருக்கு.? பிராமணணுக்கா? பிள்ளைக்கா ? முதலிக்கா ? இல்லை! இல்லை!

விடுதலை! விடுதலை! விடுதலை! என்றான். யருக்கு?
பறையருக்கும் விடுதலை என்றான் .
புலையருக்கும் விடுதலை என்றான்.
பறையரரோடு சேர்ந்து மறவருக்கும்விடுதலை என்றான்.

மறவர்கள் பறையரோடு சேர்ந்தால் தான் விடுதலை .
விடுதலைக்காக தவிக்கும் மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம் !

Saturday, July 02, 2011

எலிகளைப் பிடித்து பெருச்சாளிகளை விட்ட கதை........

__அலைக்கற்றை ஊழல்---
எலிகளைப்பிடித்து பெருச்ச்சாளிகளைவிட்டகதை !

அலைக்கற்றை ஊழல் உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சட்டம் அதன் கடமையை செய்யுமாம். முன்னாள் முதல்வரின்மகள் சிறையில் .முன்னாள் மத்திய அமைச்சர் சிறையில் .மற்றுமொரு அமைச்சர் கம்பி எண்ண காத்திருக்கிறார் என்று கூறப்படுகிற்து

ஊழலில் அரசுக்கு இரண்டு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி நட்டமாம்.சி.பி.ஐ.புலிகள் இப்பொது போட்டிருக்கும் வழக்குகள் மூலம் முப்பத்தைந்தாயிரம் கோடி தேறலாம். பாக்கி நாமம் தான்.

கலைஞர் தொலைக்காட்சிக்கு 210 கொடி ரூ ஒரு பாய் கடன் கொடுத்திருக்கிறார். நாம் 50 ரூ கேட்டால் அரைவேட்டியையும் அரணாக்கயிரையும் பிடுங்கி வைத்துக் கொண்டு கொடுப்பார்கள்.இவர்களுக்கு வார்த்தையிலேயே எல்லாம் முடிந்துவிட்டது.பவம் !இதற்காகத்தான் கனிமொழியம்மையார் சிறையிலிருக்கிறார்.தப்பு தப்புதான் யார் செய்தாலும் !

சென்னையில் அயனான இடம். மவுண்ட் ரொடு பக்கமாம்.வோல்டாஸ் கம்பெனிக்கு சொந்தமானது. அதனை ரெவதியம்மள் என்பவருக்கு விற்றிருக்கிறார்கள். விலை 600 கோடி . வொல்டஸ் கம்பெனி டாடாவுக்குச் சொந்தமானது. அந்த இடம் சந்தைவிலைக்கு 6000கொடி பெருமாம். டொகொமோ டொகொமோ என்று தொலைக்காட்சியில்வருகிறதே அது யார் கம்பெனி?

எங்களிடம் யாரும்தப்பமுடியாது என்று சி.பி.ஐ சவால் விடுகிறது..ADAG கம்பெனியின் உயர் அதிகாரிகளை பிடித்து சிறையில் பொட்டிருக்கிறொம் என்கிறார்கள். Anil Dhirubai Ambani Group தான் ADAG என்பது . அம்பானியை இவர்களால் தொட முடியாது.நிதிபதி பாரிஹோக் பெரியவர்கள் புகுந்து விளையாடுகிறார்கள் என்று தோன்றுவதாகச்சொல்கிறார். அனில் அம்பானியை ஏன் பிடிக்கவில்லை?. அலைகற்றை உரிமம்பெற கட்டணம் காசோலையாக கொடுக்கப்ப்ட்டுள்ளது. அம்பானியும் அவர் மனைவியும் 100கோடிக்குமெல்தான் கையெழுத்துப்பொடுவார்கள். ஆகவே அவர்களை சம்மந்தப்படுத்தமுடியாது என்கிறார்கள்.50கொடியாக பத்துகாசோலையில் கையெழுத்துப்போட்ட அதிகாரிகள் கம்பி எண்ணுகிறார்கள். அலைக்கற்றையின் பலன் அம்பானிக்கு போகும்.

விடியோகொன் கம்பெனி தெரியும். முதன் முதலாக தொலைகாட்சி பெட்டி செய்ய உரிமம்பெற்ற கம்பெனி .இன்று இந்தியாவின் பணக்காரர்களில் 11 இடத்தில் அதன் முதலாளி வேணுகொபால் தூத் இருக்கிறார். இவ்ருடைய தம்பி ரஜ் குமார் தூத். ஏம்.பி .அலைக்கற்றை உரிமம் வாங்க ராஜ்குமார் தான் ஏற்பாடு.

ESSR கம்பெனியின் முதலாளி ரூயா.அலைகற்றை உரிமம் பெற்றவர். இவர்களை ஒன்றும் செய்யவில்லை.செய்யமுடியாது.சிதம்பரம் நமக்கு உள் துறை அமைச்சர். அவர்களுக்கு காசு கொடுத்தால் கோர்ட்படி எறி வாய்தா வங்கும் வக்கீல்.

தினம் கனிமொழி பற்றி செய்திகள்வரும் . கழிப்பறைக்கு திரைபோட்டிருக்கிறார்ர்கள் . அவர் மிழுகு வர்த்தி தயாரிக்கிறார்..வெப்பம் தாங்க முடியாமல் உடலில் கொப்புளங்கள் வருகிறது. என்று பத்திரிகையில்படித்துவிட்டு தூங்கி விடுவோம் .

அன்ன ஹசாரெயும் ராமதேவும் சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள் .செய்திகளை வாசிப்போம் .

ரூயா,டாடா, அம்பானி, தூத் போன்ற பெருச்சாளிகள் புகுந்துவிளையாடும்

Wednesday, June 29, 2011

முதுமை கம்பீரமானது ........

முதுமை கம்பீரமானது..........

ஜப்பானில் சுனாமி வந்து அந்தமக்கள் பேரழிவைச்சந்தித்தார்கள்.ஃபூகு சமா தீவில் அணு உலை வெடித்தது.ஒன்றல்ல.இரண்டு வெடித்தது.ஏராளமான சேதம்.பாவிகள் முழுவிவரத்தையும் சொல்லமாட்டார்கள்.இந்த விபத்தினைத் தடுக்க அரசு விஞ்ஞானிகளை அழைத்துக்கேட்டது."அணு உலையின் வெப்பத்தக் குறக்க வேண்டும்.சமுத்திர நீரை ஹெலிகாப்டர் மூலம் உலையின் மீது கொட்டினால் வெப்பம் குறையும்."என்று அவர்கள் ஆலோசனை கூறினார்கள்.

உலை தனியாருக்குச்சொந்தமானது.ஜப்பான் அரசு அவர்களிடம் அனுமதி கேட்டது.கதிர் வீச்சல் ஏற்படும் சேதம்,சமுத்திரநீரால் இயந்திரங்களுக்கு ஏற்படும் சேதம் இரண்டையும் முதலாளி கணக்குப்போட்டான்.இயந்திரத்தைப் பாதுகாக்க முடிவெடுத்தான். அதனால் சமுத்திரா நீரைஉலையின் மீது அரசால்கொட்டமுடியவில்லை.உலை வெடித்து கதிர்வீச்சு அமெரிக்காவின் கலிபோர்னியாவரை இருந்ததாகச்சொல்கிறார்கள்.

உலை இருந்த இடத்தில் கதிவீச்சு இருக்கும்.சுமார் ஆயிரம் வருடங்கள் வரை இருக்குமாம். கதிர்வீச்சு பரவாமல் இருக்க அதனை மூடவேண்டும்.மூடும் பணி ஜப்பானிய மொழியில் சொல்வதென்றால் "கிடானை,கிட்சுயி,கிசென் " என்கிறார்கள்.ஆங்கிலத்தில்Dirty, Difficult, Dangerous. தமிழில் அவலமானது, கடினமானது,ஆபத்தானது.எராளமான இளம் இஞ்சினியர்கள் தங்கள் உயிரைப் பணயமாக்கி இந்தப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் . கதிர் வீச்சால் அவர்கள்முடமாகலாம்.மலடாகலாம்.அவர்களின் சந்ததிகள் பாதிக்கப்படலாம்.தங்கள் நாடும் தங்கள் மக்களும் காப்பாற்றப்படவேண்டும் என்பதைதவிர அவர்களுக்கு வேறு சிந்தனையில்லை

யசுடெரு யமட என்பவர் இஞ்சினியர் எழுபத்தீரண்டு வயதாகிறது.ஸ்மிடொமோ மெடல் இண்டஸ்றிஸில் பணி . அவர் " எனக்கு வயதாகிவிட்டது. நான் ஒரு இஞ்சினியர். என்னால் இந்தப்பணிகளைச்செய்யமுடியும். கதிர்வீச்சினால் எனக்கு மலட்டுத்தன்மை வந்தால் என்ன? எனக்கு சந்ததிவேண்டாம். ஆண்டு அனுபவித்தவன் நான். நான் உலையை மூடும் பணியில் இறங்கப்போகிறேன். நம் நாட்டின் முதிய இஞ்சினியர்களே வாருங்கள் .கதிர் வீச்சைத்தடுப்போம்.இளைஞர்களையும் மக்களையும் காப்போம்" என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

அவர் பின்னல்முதியவர்கள் திரண்டு வருகிறார்கள்.

முதுமை கம்பீரமானது. .

Wednesday, June 22, 2011

ஈஸ்வர அல்லா தேரே நாம் -----------

ஈஸ்வர்-அல்லா தெரே நாம் .....

அண்ணல்காந்தி அடிகளுக்கு மிகவும் பிரியமான பாடல்கள் "வைஷ்னவ ஜனதோ"வும் "ரகுபதி ராகவ "வும் ஆகும். சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றிருந்தபோது "வைஷ்ணவ" நர்சி மெத்தா என்ற சித்த புருஷரால் எழுதப்பட்டது என்று அறிந்தேன்.

சென்னையில் ஒலிநாடாவாங்கினேன். போட்டுப்பார்த்தபோது "ஈஸ்வர் அல்லா " என்ற வரிகள் இல்லை. கடைக்காரரிடம் விசாரித்தபோது மூலப் பாடலில் அந்த வரிகள்கிடையாது என்று கூறினார். பாடியது விஷ்னு திகம்பர் பலுஸ்கர் என்று அட்டையில் போட்டிருந்தது.அவருடைய வாழ்க்கைகுறிப்பாக அவர் சுதந்திரப் போராளி, கண்பார்வையற்றவர், சிறந்த இசைக்கலைஞர் "தண்டி"யாத்திரையின்போது காந்தியடிகளின் பிரர்த்தனைக்கூட்டத்தில் பாடுவார் என்றுமிருந்தது. (பலுஸ்கர் பற்றிதனியாக இடுகை போடுவேன்).

"ரகுபதி ராகவ "பாடலை எழுதியது யார்? "ஈஸ்வர் அல்லா" ஏன் ஆரம்பத்தில் இல்லை?. பின்னர் எப்படி வந்தது? என்று கேட்டு விடைதேட ஆரம்பித்தேன்.

கோவை "தீக்கதிர்" பதிப்பில் துணை ஆசிரியராக இருக்கும் கணேசன் அப்போது நகபுரியில் இருந்தார்,அவர்மூலம் இந்திய அமைதி மையத்தின் இயக்குனர் முனைவர் ஜாண் அவர்களைத்தொடர்புகொண்டேன்.காந்தி அடிகளால் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் படித்து முனைவர் பட்டம்பெற்ற திருநெல்வெலி மாவட்டத்தைச்செர்ந்தவரவர்.என் கேள்விக்குபதிலை நாராயண தேசாய் ஒருவரால் தன் கொடுக்க முடியும் என்றார் ஜாண் செல்லதுரை.

காந்தியடிகளின் மனசாட்சியக திகழ்ந்த மகாதேவ தேசாயின் மகன் தான் நாராயண தேசாய். சபர்மதி ஆசிரமத்தில்பிறந்து காந்தி அடிகளில் மடிகளில் தவழ்ந்து விளையாடியவர் நாராயண் தேசய். தற்பொது தொண்ணூறு வயதகிறது. குஜராத்தில் வசிக்கிறா அவரை தொட ர்பு கொள்ள முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தான் மற்றொரு நண்பர் சில தகவல்களைச்சொன்னார். குஜராத் மாநிலத்தில் புழங்கும் ஒரு நாட்டுப்புற பாடல் வரிகள் இவை என்றும் அது பற்றிய விவரங்களையும் சொன்னார்.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பியர்கள் சூரத் நகரத்தில் தங்களுடைய கிட்டங்கியை வைத்தனர். போர்பந்த்ரிலிருந்து சரக்குகளை கொண்டுவரவும் இந்திய சரக்குகளை சேகரித்து அனுப்பவும் அது மையமாக இருந்தது. அதனால் துறைமுகத்தில் போக்குவரத்து அதிகமாகியது.சரக்குகளை ஏற்ற இறக்க தொழிலாளர்கள் அதிகமாகவந்தனர். தொழிலாளர்களில் ஜைனர்கள் ஜரதுஷ்டிரர்கள்(பார்சிகள்),இந்துக்கள் , கிறிஸ்துவர்கள்,இஸ்லாமியர்கள் என்று குவிந்தனர். ஒன்று பட்டு பக்கத்து கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். பண்டிகைகளில் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர். இவர்களை மேய்க்கும் கங்காணிகளுக்கு இதில் சம்மதமில்லை . தங்கள் குடியிருப்புகளில் "இவர்கள் வழக்கமாக சொல்லும் சொலவடைதான் "அரே! ஈஸ்வர் க்யா ஹை ! அல்லா க்யா ஹை! சப்கு சன் மதி தே பகவான்" என்பதாகும்
காந்தி அடிகள் "தண்டி யாத்திரை " புறப்பட்ட போது அவரோடு செர்ந்தவர்கள் எழுபத்தெட்டு பேர். செல்லச்செல்ல மக்கள் அவர் பின்னால் திரண்டனர். அபடித் திரண்டவர்களில் துரைமுகத் தொழிலாளர்களும் உண்டு. பிரார்த்தனை கூட்டத்தில் "ரகுபதி ராகவ" பாடும்போது ஜனங்களும்செர்ந்து பாடுவார்கள். "ரகுபதிராகவ ராஜாராம் - பதித் பாவன சீத்தாரம் " என்றதும் இந்தத் தொழிலாளர்கள் "ஈஸ்வர அல்லா தெரே நாம் சப்கோ சன் மதி தெ பகவான் " என்று எதிர்பாட்டுபாடுவார்கள். காந்தி அடிகள் மகிழ்ந்து போய் பாடிக்கொண்டிருந்த விஷ்னு திகம்பர் பலுஸ்கரிடம் இந்த வரிகளையும் சேர்த்து பாடச்சொன்னார். அன்றிலிருந்த்து அப்படியே பாடப்பட்டு வருகிறது. .

Tuesday, June 14, 2011

கள்ளப்பணம் வைக்க கிட்டங்கிகள் .............

கள்ளப்பணத்தின் கிட்டங்கிகள்.........

மதுரைச்செர்ந்தவர்களுக்கு "கிட்டங்கி" என்ற வர்த்தை தெரிந்திருக்கும் அங்கு வடக்குமாசிவீதி,கீழமாசிவீதி களில்கிட்டங்கி கடைகள் என்ற பலகைகளைப் பார்த்திருக்க லாம். இந்தக்கடைகளில்,உளுந்து,பருப்பு, வத்தல், சீனி போன்ற பொருட்களை மூடைமுடைகளாகவோ ,சிப்பங்களாகவோ வாங்கி மொத்தவியாபாரத்திற்காக வைத்திருப்பார்கள்.கம்பம்,தேனி, திண்டுக்கல்,காரைகுடி,ராமநதபுரம் வர்த்தகர்கள் மொத்தவிலைக்கு வாங்கிச்செலவார்கள். குடிதனக்காரர்களும் வருடாந்திரத்திற்கு தேவையான பொருட்களை மொத்தவிலைக்கே வாங்கிச்செல்வார்கள்.

இப்போது பணத்தை மூட்டை மூட்டையாக வைக்கவும் கிட்டங்கிகள் வந்து விட்டான. பணம் என்றால் கள்ளப் பணம்.வர்த்தகர்கள், சிறு தொழிலதிபர்கள், லெவாதெவிக்காரர்கள் ஆகியொரிடம் செரும் கள்ளப்பணத்தை கடைகளிளோ, அலுவலக்ங்களிலோ வைக்க முடியாது. இதனை வைக்க நம்பகமான ஒரு இடம் தேவைப்படுகிறது.இதனை சில வங்கிகள் (தனியர்) செய்து உதவுகின்றன.

எனகுத் தெரிந்த நண்பர் N.R.I. ஒருவர் ஆரம்பித்த தனியார் வங்கியில் வேலைக்குச்செர்ந்தார். அவருடைய வேலை? காலை பத்து மணிக்கு அவர் சென்றவுடன் மெனெஜர் ஒருகாரையும் கொடுத்துவிடுவார். சிலதொலை பேசி எண்களையும் கொடுப்பார். அந்த நபர்களொடு இவர் தொடர்பு கொண்டு அவர்களைச்சந்திக்க வேண்டும்.அவர்கள் 10லட்சம்,20 லட்சம் மூட்டைகளில் பணத்தை கட்டி தயாராக வத்திருப்பார்கள். அதனை எடுத்துக்கொண்டு வங்கியில் கொடுக்கவெண்டும். இதற்கு எந்த ரசீதும் கிடையாது. வங்கியில் உள்ள Money Godown என்ற அறையில் அதனை போட்டுவிடுவார்கள்.சொந்தக்காரர் எப்பொது வேண்டுமானாலும் எவ்வளவு வெண்டுமானாலும் எடுத்துக் கொண்டு பொகலாம். மெனெஜுருக்கும் அவருக்கும் எழுதப்படாத ஒப்பந்தம் (Gentlemens agreement !!!) அது தான்
இந்த வசதிக்காக வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கும் .

" அந்த அறையில் பணம் குவிக்கப்பட்டிருக்கும் .எனக்கு பார்க்கவே பயமாக இருக்கும். யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்.கணக்குவழக்கு கிடையாது. என்ன மொசடியோ என்னவோ என்று பயத்தில் அந்த வங்கி வேலையை விட்டுவிட்டேன்"என்றார் நண்பர்.

அந்த வங்கியை ஆரம்பித்தவர் பெயர் இந்துஜா.

1994ம் ஆண்டு ஆரம்பித்துவைத்தவர் அன்றய நிதி அமைச்சர்
Dr.மன்மொகன் சிங் .

Sunday, June 12, 2011

அந்தப் பாகிஸ்தனத்துக் கவிஞன்...........

அந்த பாகிஸ்தானத்துக் கவிஞன் .......
மேரா ஜூதா ஹை ஜபானி , என் செருப்பு ஜப்பானிலிருந்து,
யே பத்லூன் இங்கிலீஸ்தானி , என் உடுப்பு இங்கிலாந்திலிருந்து ,
லால் டொபி ரூசி , என் சிவப்பு தொப்பி ரஷ்யாவிலிருந்து
பிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி ! என் இதயமோ இந்துஸ்தானத்திலிருந்து !
1955ம் ஆண்டு" ஸ்ரீ 420" என்ற திரைப்படம் வந்தபொது அதில் உள்ள இந்த பாட்டுதான் அன்று இளைஞர்களின் தேசீய கீதமாக இருந்தது.

இந்த பாட்டை எழுதிய கவிஞர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர்.ஷைலெந்திர என்ற அவர் 1923ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ம் தேதி ராவல் பிண்டியில் (british india ) பிறந்தார்
சங்கர் தாஸ் கெசரிலால் என்பதுஅவருடைய பெயர்.புனை பெயர் ஷைலெந்திர.அவரும் பெற்றொரும் லக்னௌ வந்துதங்கினர் அப்பொது ஷைலெந்திராவுக்கு 20 வயது இருக்கலாம். அவருடைய தாயர் திடீரென்று மரணமடைந்தார்.வெருப்புற்ற கவிஞர் நத்திகராக மாறினார். சுதந்திர வேள்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

தனக்கென்று தனிப் பாணியை வைத்துக்கொண்டார். வண்டிப்பேட்டை, சந்தைப்பெட்டை ஆகிய இடங்களில் கூடும்சாதாரண மனிதர்களிடையே கவிதைகளை எழுதி வாசிப்பார்.உணர்ச்சியூட்டும் இந்தக்கவிதைகள் நேரடியாக என்மக்களைச்சென்றடைய இது தான் என் வழி என்பார். தொழிலாளர்களும் பாடுபடும் மக்களும் இவரை விரும்பி வரவேற்றனர். மெள்ள மெள்ள இடதுசாரி இயக்கங்களோடு தொடர்பு ஏற்பட்டது.இந்திய மக்கள் நாடக சங்கத்தில் இணைந்தார். (Indian People Theatre Association--I.P.T.A)

இதற்கிடையே இந்திய ரயில்வேயில் வெலை கிடைத்தது. அதனால் மும்பை பொக வேண்டியதாயீற்று. வேலை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனாலும் இடசாரிகள் நடத்தும் கூட்டங்களில் பேசுவதையும் கவிதை வாசிப்பதையும் தொடர்ந்தார்.கவியரங்கங்களில் ஷைலேந்திரா வருகிறார் என்றால் மக்கள் மொய்த்தனர்.

அப்பொது மும்பையில் பிரித்விராஜ, ராஜ் கபூராகியோர் தங்கள் நாடக சினிமா முயற்சிக்காக கலைஞர்கள் கவிஞர்களைத் தேடிக்கோண்டு இருந்தனர். இடது சாரிகள் நடத்தும் கலைவிழாக்கள், கவியரங்கங்கள் தான் இவர்களின் மையம் . ராஜ் கபூர் ஒரு நிகழ்ச்சியில் ஷைலேந்திராவின் கவிதையைக் கேட்டிருக்கிறார். "பஞ்சாப் பற்றி எறிகிறது" என்ற தலைப்பில் அவர் பாடிய உணர்ச்சி மிக்க கவிதை ராஜ் கபூரை உலுக்கி எடுத்து விட்டது. உங்கள் கவிதைகளைத்தாருங்கள் புத்தகமாக பொடுகிறென் என்று கூறியுள்ளார்.இந்த தொடர்பு அவர் மரணம் வரை நீடித்தது.

ராஜ் கபூரின் "பர்சாத் " படத்திற்காக அவர் எழுதிய "பர்சாத்-கி " என்ற பாடல் நிலைத்து நின்றது.ராஜ் கபூர்,கே . ஏ. அப்பாஸ் ,சங்கர் ஜெய்கிஷன், ஷைலெந்திரா என்ற நலவர் குழு உதயமாகியது.

பால்ராஜ் சஹானி, செதன் ஆனந்த் (தெவானந்த்தின் அண்ணன்),ஹிங்கல், சலீல் சவுத்திரி, பிமல்ராய், நிமாய் கோஷ் , என்று இடதுசாரிகள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள் அப்பொது.

Thursday, June 09, 2011

இதனை இவன் கண் விடல் ........

இதனை இவன் கண்விடல் .....
எந்த ஒரு காரியத்தையும் அது வெற்றி பெற வேண்டுமானால் தகுதியான நபரிடம் விடவேண்டும் . ஒரு குறிப்பிட்ட விஷயத்தில்வெற்றியடைபவர்வெறு விஷயத்தில் அனுபவமின்மையால் சொதப்பிவிடலாம்.அதனால் தான் " குறைந்த விஷயம் பற்றி அதிகமாகத் தெரிந்தவனே நிபுணன் "என்கிறார்கள் . An expaert is one who knows more and more about less and less . கண்வைத்தியரிடம் இதய நோய்க்கு மருந்து கெட்பதில்லை.
கள்ளப்பணம் பற்றி பாபா ராம்தேவ் பெசிவருகிறார்.இந்த நெரத்தில் கள்ளப்பணம் பற்றி அதனுருவாக்கம்பற்றி தெரிந்து கொள்வது நல்லது.வங்கிகள் முலமாக. . வங்கிகளால் நடத்தப்படுகிறது . personnel Banking என்று இருக்கிறது நம்முடைய தொலை பெசிகட்டணம் மின் கட்டணம் சொந்தமாக கடன்,மற்றும் தனிப்பட்ட பணம்செலுத்தும் கடமை களை வங்கிகளே செய்து அதற்காக சிறு தொகையை வாங்கிக்கொள்வார்கள் இதுதான் நமக்குத் தெரிந்தது . .
உங்கள் பணம் வெள்ளையா, கருப்பா,என்று கெட்காமல் ,அதனை கண்ணை இமை காப்பது பொல காத்து வரி இலா நாட்டில் சேர்த்து அங்கு அதைக்குட்டி பொடவைக்கும் வங்கிகள் உள்ளன. City Bank . போன்ற வை இதில் சிறந்தவை.இப்படி ஒருவங்கி சேவை அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது .அமெரிக்கக் கம்பெனிகளின் நலனை பாதுகாக்க அரசியல்தளைவர்கள், பொம்மை ஆட்சியாளர்கள் , சர்வாதிகாரிகள் என்று அவர்களுக்கு வாக்கரிசிபோட சி ஐ ஏ உருவாக்கிய திட்டம் தான் இது.
தென் அமெரிக்காவிலும் ,மத்திய அமெரிக்காவிலும் இவர்கள் ஆரம்பித்த கூத்தின் பலனை அனுபவிக்கிறோம்.சரித்திரம்படித்தவர்களுக்கு தெரியும் .மத்திய அமெரிக்காவில அன்னாசிபழம் அபரிமிதமாக விளையும்.தென் அமெரிக்காவில்வாழை பழம் விளையும் .இவற்றை வாங்கி விற்பவை அமெரிகக்கம்பெனிகள் இந்தக் கம்பெனிசொல்லும் நபர்கள் த ன் இந்த நடுகளின் ஜனாதிபதி, பிரதமர் அதனால் இவற்றிர்க்கு அன்னசிபழகுடியரசு என்றும் வாழைப்பழ குடியரசு என்றும் கூறுவார்கள். இந்த தலைவர்கள் உள்நாட்டில் கொள்ளை யடித்த பணத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான் புதிய வங்கி சேவைகள்.இன்று அவை பட்டைதீட்டி நன்கு பளபளபாக்கப்பட்டுள்ளன.
காலப்போக்கில் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு போட்ட வாக்கரிசிதான் இவை.இதனை அரைத்தலைப்பா மன்மோகனாலோ , அரைவழுக்கை சிதம்பரத்தாலோ நினத்தாலும்திருப்பி கொண்டுவர முடியாது.(காரணம் !!!!!)
பின்பாபா ஏன் இந்தத்தாவு தாவுகிறார்.
இவர் ஹரியானாவை சேர்ந்த யாதவகுல சீலர். தற்போது 1000கோடி சொத்துக்காரர். ஸ்காட்லந்து அருகில் சொந்தமாக ஒரு குட்டிதீவு . சொந்தமாக இரண்டு விமானங்களுள்ளன. இவருக்கு ஆலோசகர்களாக அரியானா உயர்நிதி மன்ற ஒய்வுபெற்ற நீதிபதி பிரீதம்பாலும்பத்திரிகையாளர் தெவெந்திர சர்மாவும் உள்ளனர். முன்னாள் உளவுத்துறை தலவர் அஜித் தொவில் இருக்கிறார். பத்திரிகையாளர் வெதபிரகாஷ் (ஆர்.எஸ்.எஸ்.) இருக்கிறார்.பக்கா ஆர்.எஸ்.எஸ்.காரரான குருமூர்த்தி இவருக்கு ஆலோசனை அளிக்கிறார்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக உமாபாரதியின் சேக்காளியான கோவிந்தாசார்யாதான் இவருடைய நெருங்கிய நண்பர் .அவருடைய பாரத் ஸ்வபிமான் அறக்கட்டளையும்,ஆர்.எஸ்.எஸ். இரண்டு அமைப்புகளும் தான் இந்த ராம் லீலா கூட்டத்தை கொண்டுவந்தது.
திருடன் ஓடும் பொது "திருடன் திருடன்"என்று ஊவிக்கொண்டு பொவான். நாமும் அவன்பின்னே ஒடி களைத்து விழுவோம்.
பாபாவின் மொழிக்கொள்கை என்ன? சட்டங்களை இந்தியில் கொண்டு வர வேண்டும். .இந்திதன் ஆட்சி மொழியாக வேண்டும்
அயொத்தியில் ராமர் கொவில் கட்ட வேண்டும். அதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத்தயார்.
குஜராத் கலவரம் சரிதான்.
பாபா இந்துத்வா வாதி அல்ல. அவர்.ஆர்.எஸ்.எஸ் .அல்ல என்று அவரே கூறியிருக்கிறார்.அவர் பா.ஜ.க அல்ல. அதவானி சொல்கிறார்.நம்புவோம்

Monday, June 06, 2011

ராஜகுருவும் பாபா ராம தேவும் ----

ராஜ குருவும் பாபா ராமதேவும்....
பாபா ராம தேவ் தன் உண்ணாவிரததை ஆரம்பிக்குமுன்னால் ராஜ குருவின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் ஆரமபித்தார்.இந்திய சுதந்திரப் பொராளிகளில் முதன்மையான இடத்தைப் பெற்ற அந்த மூவர் பகத்சிங், ராஜகுரு,சுகதேவ் ஆகியோராவர் .
ஷிவ்ராம் ஹரி ராஜகுரு பூனே அருகிலுள்ள காட்டே என்றசிற்றுரில் 1908மாண்டுஆகஸ்டுமாதம் 24ம் தேதி பிறந்தார்.மேல் படிப்புக்காக வாரணாசி சென்றார். சமஸ்கிருதத்தை,உபநிஷத்தை, ஸ்மிருதிகளை கற்றறிந்தார்.இயல்பிலேயே கூர்மையான புத்திகொண்ட அவர் தூக்கத்தில்கேட்டாலும் எந்த கெள்விக்கும் விடை அளிக்குக்கும் திறமை உள்ளவர்.
வாரணாசியில் இருக்கும் போது தான் அவருக்கு புரட்சியாளர்களோடு பழக்கம் ஏற்பட்டது.சந்திரசேகராஆஜாத்,பகத்சிங், சுகதெவ், படுகெஷ்வர், ஜதின் தாஸ்,யஷ்பால் ஆகியோரோடு நெருக்கம் ஏற்பட்டது.இந்துஸ்தான் சொசலிச குடியரசு படையில் சேர்ந்தார். இந்த இளம் படையினர் காகோரி வழக்கில் சிறையில் அடைகப்பட்டவர்களை சிறையிலிருந்து வேளிக் கொணர திட்டம்தீட்டினர். ஆனால் நிறைவேற்ற முடியவில்லை.
அப்பொது தான் சைமன் கமிஷன். வந்தது. காங்கிரஸ் அதனை பகிஷ்கரிக்க முடிவு செய்தது.நாடங்கும் அதனை எதிர்த்து கூட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன .பஞ்சாபில் நடந்த ஊர்வலத்திற்கு லலா லஜபதி ராய் தலைமை தங்கினார். வெள்ளைகாரஸ்காட் என்ற இன்ஸ்பெக்டர் லலாவை தலையில் தடியால் அடித்தான். மருத்துவமனையில் லஜபதி ராய் மரணமடைந்தார்.இந்தியா பூராவும் கொதித்து எழுந்தது. குடியரசுப்படையினர் பழி வாங்கத் துடித்தனர்.
பழிவாங்கும் பொறுப்பு புரட்சிப் படையினரால் பகத்சிங், ராஜகுரு ,சுகதேவ் ஆகிய மூவருக்குக் கொடுக்கப்படது. ராஜகுரு குறிபார்த்து சுடுவதில்வல்லவர்.இவர்கள் லாகூர் சென்றனர்.பொலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த வேள்ளைகார இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்று விட்டு ஒடிவிட்டனர். மறு நாள் பத்திரிகைகளைப்பார்த்த மூவரும் திடுக்கிட்டனர். கொல்லப்பட்டது ஸ்காட் அல்ல. ஹெட்கான்ஸ்டபிள் சாண்டர்ஸ் .

போலீஸ் மொப்பம் பிடித்துவிட்டது. மூவரும் தலைமறைவாகினர்.ராஜகுரு டெல்லி வந்தார்.. அங்கு இருக்க முடியவில்லை. வேட்டை நாயாக போலீஸ் துரத்தியது.அங்கிருந்து நாகபுரி வந்தார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெக்டெவாரைச்சந்தித்தார். அவர் மூலம் ஒரு ஆர்.எஸ். எஸ்.தொண்டர் விட்டில் தங்கினார். பின்னர் பூனே செல்ல ரயிலில் போய்க் கொண்டிருக்கும் போது போலீசாரால் பிடிக்கப்பட்டார்.
சாண்டர்ஸ் கொலை வழக்கில் தான் பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியமூவரும் தூக்கிலிடப்பட்டனர்.அப்போது ராஜகுருவுக்கு 23 வயது முடியவில்லை.
,
பாபா ராமதேவ் மூவருடைய சிலை இருக்கும் மேடையில் ஏறினார்.தொலைக்காட்சியில் காட்டினார்கள் .முதலி பகத்சிங்.
மாலை பொடவில்லை. அடுத்து ராஜகுரு. பாபா மாலை பொட்டார். அடுத்து சுகதேவ்.மாலை போடவில்லை. ஏன்? ஏன் ? ராஜகுருவுக்கு மட்டும்.....?

என் மண்டை வெடித்து விடும் போலிருக்கிறது.

. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்...