Sunday, February 27, 2011

மொழி என்றால் என்ன?.....

மொழி என்றாலென்ன?....


கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி என்று கூறும் போது நம் இதயத்தில் பரவசமுண்டாகிறது.

மனித குலம் பேச ஆரம்பித்ததே பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் என்று மனிதவியலார் கூறுகின்றனர்.

கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன் மனிதன் தோன்றியிருக்க முடியாது.மனிதனே தோன்றாதபோது மொழி ஏது? ஆனாலும் தமிழ் மொழி மூத்த மொழி என்று கூறும் சிறப்பு வாக்கியம் நம்மை மகிழ்ச்சியடையச்செய்வதும் உண்மை.

இலக்கியம் என்பது தனிமனித அனுபவத்தை சக மனிதர்களின் அனுபவமாக மாற்ற உதவுகிறது.இந்த அனுபவப்பகிர்வு என்பதற்கு அடிப்படை மொழி.மொழியின்றி இலக்கியம் இல்லை. மனிதன் தன் தகவல் தொடர்புக்கு கொண்டதுதான் பேச்சு மொழி (verbal language).தகவலை மொழியால் மட்டும் பரிமாறிகொள்ள முடியாத போது, அதற்கு மாற்றாக அல்லாமல், அனுசரணையாக வந்ததுதான் ஒவிய மொழி(language of Drawing) ஒவியம் கூட ஒவியனின் திறமை திறமையின்மையைப் பொறுத்து தகவல்களை கூடுதலாகவோ குறைவாகவோ வெளிப்படுத்தும். இந்த இடத்தை இட்டு நிரப்ப வந்ததுதான் புகைப்பட மொழி.(language of Photography) இதிலும் கூட குறை உண்டு. இதில் சலனம் இருப்பதில்லை.தான் பார்த்ததை பார்த்தபடியே தன் சக மனிதனுக்கு தெரியப்படுத்த மனிதன் விரும்பினான்.அதனையும் தனதாக்கிக் கொண்டான்.அப்போது கிடைத்தது தான் திரைப்படம்(language of Cinematography) இவை தகவல் தொடர்பை பரட்சிகரமாக்கி உள்ளன.

இருந்தாலும் மொழி என்றாலென்ன? என்ற கெள்விக்கு இவைவிடையாவதில்லை.நம் வீட்டில் குழந்தை ஒசையை எழுப்பி விளையடுகிறது .அர்த்தமற்ற அந்த மழலை ஓசை நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. வெளியே கொண்டு செல்கிறோம்.ஓசையை எழுப்பி விளையாடுகிறது. அது ஏதோ சொல்வது போலவும்,அதர்கு அர்த்தமிருப்பது போலவும் எதிர்ப்படும் நண்பரிடத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறோம். ரயிலைக் காட்டுகிறோம்.பிரும்மாண்டமான ஒசையோடு செல்லும் ரயிலை முதலில் பரவசத்தோடும் பின்னர் அதிர்வோடும், பயத்தோடும் குழந்தை பார்க்கிறது. "ஐ..ரயில்..ரயில்" என்று நாம் உச்சரித்தாலும் குழந்தை ஓசையை மட்டுமே எழுப்புகிறது. மறுபடியும் பார்த்தாலும் அது பாட்டிற்கு ஓசையை எழுப்புகிறது.ரயில் என்பது பற்றிய அறிவு நிலையை எட்டிவிட்டதாக நம் நினைக்கிறோம்.அதற்கு அந்த நிலை உருவாகிவிட்டதா என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை.இதுவே பெசும் திறன் கொண்ட இரண்டு அல்லது மூன்று வயதுக் குழந்தையாக இருந்தால் என்ன செய்யும். ரயில் என்று நாம் சொன்னவுடன் அதுவும் ரயில் என்று சொல்லும். ரயிலை எங்கு பார்த்தாலும் ரயில் என்று கத்தும்.அதாவது ரயில் என்ற அறிவு நிலை அதற்கு ஏற்பட்டுள்ளதை அடையாளப்படுத்தும்.

மொழி என்பது மனிதனின் அறிவு நிலைப்பட்டுள்ளதை அடையாளப் படுத்துகிறது. அதே போன்று அறிவு நிலையின் மூலம் மொழியும் அடையாளப்படுகிறது.

மனிதன் அவன் வாழும் பகுதியின் புவியியல்,வானிலை ஆகியவை அவன் வாழ்க்கைமுறையை நிர்ணயிக்கிறது.அதன்படி அவன் தன்னுடைய பழக்கவழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றை நிர்ணயித்துக்கோள்கிறான்.மொழியும் இதே தளத்தில் அவனால் கைக்கொள்ளப்படுகிறது.

எது எப்படியாயினும் அடிப்படையில் மொழி என்பது மனிதனின் அறிவு நிலைபட்டிருப்பதின் அடையாளம்தான்.அவனுடைய உணர்வு நிலையின், சிந்தனையின் மூலாதாரம் மொழியும் தெளிவான பேச்சுமாகும். ,

16 comments:

hariharan said...

என்றால் என்ன? என்ற தலைப்பே அருமை.

மொழிக்கே ஒரு பரிணாம வள்ர்ச்சி யிருக்கிறது. பத்தாயிரம் வருடத்தில் உலகில் இத்தனை மொழிகள், அதில் இலக்கண ஆரய்ச்சியை பார்க்கும் போது ஆச்சரியமாகயிருக்கிறது.

தற்போது நம் மொழியில் தேக்கநிலை நிலவுவது போன்று உள்ளது.

அப்பாதுரை said...

இலக்கியம் என்பதற்கு ஒரு சிறப்பான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். இதுவரை யாரும் இப்படிச் சொன்னதில்லை.

அப்பாதுரை said...

ஹரிஹரன் சொல்வது சிந்திக்க வைக்கிறது. ஆங்கிலம் தவிர உலக மொழிகள் அனைத்திலும் தேக்க நிலை இருப்பதாக மொழியாய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆங்கில வழக்குகள் இந்திய மொழிகளில் எத்தனையோ வருடங்களாக புகுந்து கொண்டிருந்தாலும் (வெள்ளைக்காரன் ஆட்சியிலேயே) ஜப்பானிய, சீன, உருது மொழிகளில் ஆங்கிலம் அப்படியே இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஒரு காரணம் என்று சொல்கிறார்கள்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! எனக்கு கிறீடம் வைக்காதீர். இலக்கியம் என்றால் என்ன என்ற கெளவியை எழுப்பி அதற்கு பதிலளித்தவர் அந்த கேரளத்து "புத்தி ராக்ஷ்சன்" இ.எம்.எஸ். நம்பூதிரி பாடு.உயிர்,வெளி,மொழி என்றுஎழுதியதெல்லாம் மார்க்சீய அறிஞர்களிடமிருந்து எடுத்தது. ( This is nothing but reflected Glory)-காஸ்யபன்.

'பரிவை' சே.குமார் said...

//மொழி என்பது மனிதனின் அறிவு நிலைப்பட்டுள்ளதை அடையாளப் படுத்துகிறது.//

Its true sir. Nice one.

vasan said...

/அவனுடைய உணர்வு நிலையின், சிந்தனையின் மூலாதாரம் மொழியும் தெளிவான பேச்சுமாகும்./
உண‌ர்வுக்கும் சிந்த‌னைக்கும் மூலாதார‌ம் மொழியும் பேச்சும் என்றால், மொழி அறிவு அற்ற‌வ‌னால் எதையும் உணர‌வும், சிந்திக்க‌வும் இய‌லாதா? விள‌க்க‌/விவ‌ரிக்க‌ முடியாத உணர்வு என எதைச் சொல்கிறோம்? அந்த‌ உண‌ர்வை, சிந்த‌ணையை மொழிவ‌ள‌ம் அற்ற‌வ‌ரால் விளக்க‌முடியாது போக‌லாம், ஆன‌ல் உணர‌, சிந்திக்க‌ முடியும் தானே? மேலும் கொஞ்ச‌ம் விளக்குங்க‌ளேன், இந்த விள‌ங்காத வாச‌(க‌)னுக்கு.

அழகிய நாட்கள் said...

நண்பர் காஸ்யபன் !
மொழிக்கும் சாதி உண்டு என்பதை அறிவீர்களா?
அவாள், இவாள், நன்னா, பேஷா, மன்னி ,அத்திம்பேர் , ஆத்துக்காரர் . இந்த உச்சரிப்பு கூட ஒரு மூன்று சதமான நண்பர்களின் மொழிதான்.
கமல் தவிர வேறு எவரும் இதை உச்சரித்தாகத்தெரியவில்லை ஊடகங்களில்.இது எப்படி நேர்ந்தது எனக்கு இது வரை புரிபடவே இல்லை.

அப்பாதுரை said...

இலக்கியம் definition கொடுத்தது EMSஆ? பிரமாதம்.
இலக்கியம் என்றால் என்ன என்பதை இதைவிட எளிமையாகவும் சிறப்பாகவும் எவருமே அடையாளம் காட்டியதாக நினைவில்லை.

அப்பாதுரை said...

'புத்தி ராக்ஷசன்'... அட!

அப்பாதுரை said...

மொழிக்கு சாதியில்ல திலிப். சாதிக்கு மொழி உண்டு.

சிவகுமாரன் said...

\\மொழிக்கு சாதியில்ல திலிப். சாதிக்கு மொழி உண்டு.//

சபாஷ் துரை.

ஏன் திலிப் அந்த சாதியின் மொழி பற்றி மட்டும் சொல்கிறீர்கள் ?
எல்லா சாதியினருக்கும் ஒரு மொழி வழக்கு உண்டு. காரைக்குடி பக்கம் செட்டிநாட்டு மொழி வழக்கு, கோவை பக்கம் கொங்கு மொழி வழக்கு , மதுரை சிவகங்கை பக்கம் முக்குலத்தோர் மொழி வழக்கு என்று உண்டே .... சாதிக்கென்று ஒரு மொழி.

மோகன்ஜி said...

மொழி பற்றிய தீர்க்கமான பதிவு. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட தமிழாராய்ச்சி,தனித்தமிழ், புதுச்சொல் உருவாக்கம் என்று இருந்த முயற்சிகள் இப்போது குறைந்துதான் போய் விட்டது. யாருக்கிங்கே நேரம்?
தெரிந்த ஒரே மொழி "துட்டு".

தமிழ் செம்மொழி என்ற அங்கீகாரம் பெற்றது ஒரு சாதனையே மறுப்பதற்கில்லை. தமிழ்நூல்களை அதிகமாய் பிறஇந்திய மொழிகளிலும்,அந்நிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்து நம் தமிழ் இலக்கியங்களை உலகறிய செய்ய வேண்டும். தமிழ் கற்றவனுக்கும்,கற்பிப்பவனுக்கும் மரியாதை கிடைக்க வேண்டும்..

suvanappiriyan said...

உலகின் மூல மொழிகளான(நம் தமிழையும் சேர்த்து) அனைத்து மொழிகளையும் இறைவனே மனிதர்களுக்கு அறிவித்தான் என்று குர்ஆனும் பைபிளும் சொல்கிறது. இந்து வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கலாம். நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக இறைவனால் உருவாக்கப்பட்டவையே அத்தனை மொழிகளும் என்ற முடிவுக்கு வந்தால் குழப்பம் வராது.

Unknown said...

மதிப்புக்குரிய சுவனப்பிரியன் ,
இங்கு உள்ள அனைவரும் இந்துக்கள் தான் ...இந்து கடவுள் தான் பூமியை படைத்தார் ,உலகின் மூத்த மொழியான எம்தமிழ் மொழியை படைத்தார். மனிதன் முதன் முதலில் குமரி கண்டத்தில்தான் தோன்றினான் .இந்துக்கடவுளால் தான் இயேசு கிறிஸ்து மற்றும் அல்லா அவர்களின் பிறக்கபட்டார்கள் .அவர்கள் கடவுள்கள் அல்ல மனிதர்கள் ..இயேசு கிறிஸ்து மற்றும் அல்லா அவர்கள் தங்களை வழிபட கூறவே இல்லை .நன்நெறிகளை பின்பற்ற கூறினார். இந்து கடவுளை மட்டும் இல்லை என்று எவ்வாறு கூறுகிறீர்கள்??மற்ற மதங்களை மட்டும் உண்மை என்று எவ்வாறு கூறுகிறீர்கள் .பொய் கூறியே இந்து மதத்தை ஏன் இழிவுபடுத்துகிறீர்கள் தமிழ் கடவுள் முருகன் ....தமிழ் மொழி மூத்த மொழி ...இல்லை என்பதற்கு வாய்ப்பு இல்லை ....சான்று உள்ளது ...மாணவர்கள் பாடப்புத்தகத்தை பாருங்கள் ..அதுவே போதும் ..குரான் மற்றும் பைபிள் மக்களின் மனதை மாற்ற தாங்கள் வழி செய்கிறீர்கள் ...கிமு ..
.10000ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி தமிழ் ....
கிமு .1000ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் இருந்தார் .
இவர் எழுதிய திருக்குறள் செய்யுள் நடை .
ஒரு தொன்மையான மொழி தமிழ்
பிறகு எப்படி தமிழ் பைபிள் மற்றும் குரானில் குறிப்பிட்யிருக்கும் .

தமிழ் மொழி , தமிழ் கடவுள் ,இந்து மதம் போன்றவற்றை பற்றி தவறான முறையில் எவ்வாறு பேசுகிறீர்கள் ??

Unknown said...

மலையாள மொழி.
மலையாள பாஷா.
மொழி என்றால் என்ன?
பாஷா என்றால் என்ன?

Unknown said...

மொழி என்றால் என்ன என்பதற்கு சிறந்த விளக்கம் தர முடியுமா?