சரஸ்வதி பூஜையும் .....!!!
துபாயில் இருக்கும் நண்பர் ஒருவர் தன்வீட்டில் சரஸ்வதி /ஆயுத பூஜை கொண்டாடியதை வலைப்பூவில் போட்டிருந்தார் !
சந்தோஷப்பட்டேன் ! ஒருவேளை அந்த நாட்டு சட்டப்படி அரசு அப்படி செய்தது தவறு என்று கூறி அவரை கைது செய்தால் ...?
நிச்சயமாக அதனை எதிர்த்து குரல் கொடுக்கத்தான் செய்வேன் !
சென்னையில் கிழக்கு பதிப்பகத்தில் சரஸ்வதி/ஆயுத பூஜை நடந்தது புகைப்படத்தோடு பிரபல பதிவரல் பதிவிடப்பட்டிருதது !
சங்கரன் அதனை கேள்விக்குறியாக்க , ஒருசர்ச்சை கிளம்பியது ?
சரி,தவறு என்று கச்சை கட்டிக் கொண்டு கிளம்பினார்கள் !
இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும்,நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையாக இதனை பார்க்க வேண்டாம் என்றுதான் நான் கருதுகிறேன் ! அடிப்படையில் "மனித உரிமை சார்ந்தது ! புரட்சி ஏற்பட்டதும் சர்ச்சு களை கொளுத்தவில்லை ! மசூதிகள் அழிக்கப்படவில்லை ! கடவுள் இல்லை என்று சொன்னால் தண்டிக்கப்படும் விதி தளர்த்தப்பட்டது ! ஆத்திகம் போல நாத்திகப்பிரச்சாரமும் அனுமதிப்க்கப்பட்டது ! மூட நம்பிக்கையை ஒழுக்கும் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ! அறிவியல் ரீதியான சிந்தனை வளர ஏற்பாடு செய்யப்பட்டது !
இந்த இடுகையின் நோக்கம் அதுவல்ல !
பிரபல பதிவர் தன குழந்தைக்கு அட்சரப்பியாசம் செய்வித்ததை பதிவிட்டிருந்தார் !
இரண்டரை வயதிருக்கும் ! "எங்கள் பள்ளியில் சேர்ப்பதானால் நங்கள் அட்சரப்பியாசம் செய்துதருகிறோம்" என்று பள்ளியில் நிபந்தனை வைத்ததால் அவர் கோவிலில் நடத்தியுள்ளார் !
1942ம் ஆண்டு என் ஆறாம் வயதில் எனக்கு அட்சரப்பியாசம் நடந்தது ! தி,லி டவுண் பாட்டப்பத்து ,நகராட்சிப்பள்ளிஆசிரியர் தான் செய்வித்தார் ! அப்போது ஒரு ரூபாய்க்கு 192 ச்ல்லிக்காசுகள் ! பள்ளிக்கு செல்லுமுன் ஒரு சல்லி கொடுத்தால் தன பள்ளி செல்வேன் என்றுஅடம் பிடிப்பேன் ! என் சேக்காளிகள் பள்ளிக்கு வரவே மாட்டர்கள் ! நாங்களும் படித்து பட்டம்பெற்று தமிழ்,ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் !
நாம் குழைந்தைகளை குழைந்தைகளாக பார்க்க தவறி வருகிறோம் ! சர்வதேச ஒப்பந்தப்படி குழந்தைகளுக்கு என்று தனியாக 22 உரிமைகள் உள்ளன ! இந்த சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியாவும் கைஎப்பமிட்டிருக்கிறது! உச்ச ,உயர் நிதி மன்றங்கள் கூட அதனை தடுக்க முடியாது !
ஐக்கிய நாடுகள் சபை யில் குழந்தைகளுக்கான பிரிவு இதனை கண்காணிக்க வேண்டும் ! கண்காணிப்பதில்லை !
சரஸ்வதி பூஜை செய்யலாமா ? என்று விவாதிப்பதைவிட குழந்தைகளுக்கு சரஸ்வதியை எந்தவயதில் அறிமுகப்படுத்தவேண்டும் என்பதில் தெளிவு பெறுவது முக்கியம் !!!
4 comments:
//குழந்தைகளுக்கு சரஸ்வதியை எந்தவயதில் அறிமுகப்படுத்தவேண்டும் என்பதில் தெளிவு பெறுவது முக்கியம் !!!///
உண்மை ஐயா. அறியா வயதிலேயே, தெய்வத்தைக் கற்பித்ததைவிட,குழந்தைகளின் அழுகையினை நிறுத்த, பேய் பூதங்களைச் சொல்லி பயமுறுத்தியே பழகிவிட்டோம்.
அருமை...
கடைசியில் சொல்லியிருப்பது உண்மை ஐயா...
நாம் குழந்தைகளை குழந்தைகளாக பார்க்க தவறி வருகிறோம் !
புத்தகச் சுமையை ஏற்றி வாசிக்கும் பழ்க்கத்தை முடக்கிவைக்கிறோம் ..
முழுமையான வளர்ச்சியடையாத
பூங்கரங்களுக்கு அட்சராப்பியாசம் அறிவு வளர்ச்சிக்கு
முட்டுக்கட்டைதான் போடும்
கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது மாபெரும் waste என்ற நம்பிக்கை வர எத்தனை நாளாகுமோ!
Post a Comment