தோட்டக்காரா....!
தோட்டக்காரா ......!!
அகில இந்திய காப்பிட்டு ஊழியர்கள் சங்க 23வது மாநாடு 2014 ஜனவர் 20ம் தேதி துவங்குகிறது ! பேரணியில் பங்கு பெற "மதுரைக்காரர்கள்" முந்திவிட்டார்கள் !
நாகபுரியின் சாலைகளில் அந்த "மாரதர"களின் ஊர்வலம் வரவிருக்கிறது !
எங்கள் "பிதாமகர் " சந்திர சேகர போஸ் ,
உயர்ந்த,கம்பிரமான ,தளர்ந்தாலும் கோலுன்றி வரும் என்.எம் சுந்தரம்,
பபர்மசூதி யை நொறுக்கிய பாவிகளால் முது கெலும்பு நொறுக்கப்பட்ட எங்கள் சன்யால் ,
"ஆர்.ஜி " என்று அன்போடு ஆழைக்கப்படும் எங்கள் கோவிந்தராஜன்
எங்கள் தலைவர் அமனுலா கான், பொதுச்செயலாளர் வேணுகோபால்,
பேரணியைத் தலைமை தாங்கி வருகிறார்கள் !
இதில் பங்கெடுக்க
தெற்கே மார்த்தாண்டத்திலிருந்து வடக்கே ஓல்ட் -பிக்-தௌலிவரை
மேற்கே ஜுனாகத்திலிருந்து கிழக்கே அகர்த்தாலா வரை பரவிய எங்கள்
ஊழியர்கள் வருகிறார்கள் !
இவர்களின் பாததுளி எங்கள் நாகபுரி நகரத்து மண்ணொடு கலந்து அதனை மேலும் புனிதமாக்க விருக்கிறது !
இந்த சமயத்தில் சுதந்திர போராட்ட காலத்தில் கவிஞர் மக்கன்லால் சதுர்வேதி எழுதிய கவிதை நெஞ்சை நனைக்கிறது !
நந்தவனத்துப் பூக்கள் தோட்டக்கரனை பார்த்து புக்கள் கெஞ்சுகின்றன!
வனமாலி !
அதிகாலையில் எழுந்து எங்களைப்பறித்து மாலையாக தொடுக்கிறாய் ! எங்களை சந்தோஷப்படுத்த பரனசிவனின் கழுத்தில் அணிவிக்கிறாய் !
அதோ ஊர்வலமாக வருகிறார்களே ! அந்த தேசபக்தர்கள் !
தளர்ந்த அவர்கள் பாதங்களை சாலையின் கற்கள் குத்துமே!
முட்கள் வேதனை தருமே !
எங்களைப் பறித்து அந்தப்பாதையில் போடு !
அவர்கள் காலுக்கு மெத்தையாக !!
செய்வாயா ?
தோட்டக்காரா ! தோட்டக்கரா !
1 comments:
வந்துட்டோம் தோழா, ஜனவரி 19 அன்று நாக்பூரில் இருப்போம்
Post a Comment