Sunday, December 29, 2013

வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி ......!


உண்மைதான் வார்ததைகளால் விவரிக்க முடியாத வலி ஏற்படத்தான் செய்தது ! 

கோத்ரா ரயில் நிலையத்து பிளாட் பாரத்தில் கருகிய பிணங்கள் கிடந்தன  ! உடனடியாக பிரேத பரி சோதனையி னை  அந்த பிளாட்பாரத்திலேயே நடத்த வேண்டும் என்று முதலமைசர் உத்திரவிடுகிறார் !

மக்கள் முன்னாள்,அவர்கள் பார்வையில் நடக்கிறது ! இப்படி செய்ய வேண்டாம் என்று கூரிய சில அதிகாரிகள் உதாசினப்படுத்தப்படுகிறார்கள்! மக்கள் இதனைப் பார்த்தால் உணர்ச்சி வசப்படக் கூடும் என்பதால் அவ்ர்கள் கூறுகிறார்கள் ! உள் துறை அமைச்சர் நரேன் பாண்டே எதிர்க்கிறார் ! முதல்வர் அலுவலகம் பகிரங்கமாக பரிசோதனை மக்கள் பார்வைபட நடக்கவேண்டுமென்று    உத்திர்வு இடுகிறது  ! 

பஞரங்க தள தலைவர்கள் வருகிறார்கள் ! அகமதாபாத்தில் ஊர்வலம் நடத்தவேண்டும் என்கிறார்கள் !  உடலை அறுத்து பரிசோதன முடிந்த சடலங்களை போட்டலமாகக்கட்டி தாருங்கள் ! அதனை 
ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்ல வேண்டும்  
என்று கோரிக்கைவக்கிறார்கள் !" ஊர்வலத்தில் சடலங்களைக் கொண்டு போகாக்கூடாது ! மக்கள் உணர்ச்சி வசப்பட்டு மாநிலம் மூழுவதும் கலவரம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு  கெட்டுவிடும்" என்கிறர் உள் துறை அமைச்சர் நரேன் பாண்டே ! முதல்வர் அலுவலகம் தலையிடுகிறது ! சடலங்களை ஊர்வலமாக எடுத்திச் செல்ல அனுமதியளிக்கிறது !

ஏழை எளிய முஸ்லீம்கள் ஆனும்பெண்ணும் குழந்தகளுமாக உயிருக்குப்பயந்து ஜாப்ரி விட்டில் தஞ்சமடைகிறார்கள் ! கலவரக்காரர்கள் அவர் வீட்டை சூழ்ந்துகொள்கிறார்கள் ! உள்ளெ புகுந்து படுகொலை நடத்தும் நோக்கத்தோடு !

ஜாப்ரி முதலமைசரோடு  தொலை பேசியில் பாதுகாப்புகோரிமன்றாடுகிறார் ! "முஸ்லீம்கள்  இந்துக்களை  படுகொலை செய்யும் போது நிங்கள் எங்கு 
இருந்திர்கள்" என்று பதில் வருகிறது ! மனம் நேந்து ஜாப்ரி வீட்டின் முன்னே 
 இருக்கும் கலவரக்காரர்களிடம் " என்னை எடுத்துக் கொள்ளுங்கள் ! அப்பாவி ஜனங்களை  விட்டு விடுங்கள் " என்று கதறுகிறார் !

கலவரக்காரர்கள் அவரை எடுத்துக்கொண்டார்கள் ! கண்ட துண்டமாக வெட்டினார்கள் ! தஞ்சம் புகுந்த மக்களையும் வெட்டி வீட்டிற்கு தீவைத்து அநத நெருப்பில் போட்டார்கள்  !மாண்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமாக 68 பேர் ! 

இதனைத் தடுக்க விரும்பிய நரேன் பாட்டியா குஜராத்தின் தலைநகர்
 காந்திநகரில் அரசு தலைமைச் செயலகத்தின் முன்பு பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார் ! 

வார்தைகளால் விவரிக்க முடியாத வலி எனக்கு ஏற்படுகிறது !

இதனைப்படிக்கும் உங்களுக்கும் ஏற்படும் !!

சில நாய்களுக்கும் ஏற்பட்டுள்ளதாம் !!!




























   


       





  

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆம் ஐயா வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி, வேதனை தோன்றுகிறது.

venu's pathivukal said...

அன்பின் காஸ்யபன் அவர்களுக்கு

வகுப்புவாதம் என்னென்ன செய்யும் என்பதை உண்மை நிகழ்ச்சிகளின்மீது சத்திய ஆவேசத்தோடு பதிவு செய்துள்ளீர்கள்...
ஏற்படும் வலி சாதாரணமானது அல்ல..
குரானை மட்டுமல்ல, இந்துக்கள் வேத புத்தகங்களையும், கீதை உள்ளிட்டவற்றையும் கூட தனது நூலகத்தில் பேணிப் பாதுகாத்த இஸ்லாம் பெரியவரை வெட்டிச் சாய்த்த அராஜகவாதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள், உண்மையில்...அவர்கள் சுட்டெரித்த பட்டியலில் தங்களது வேத புத்தகங்களும் அடங்கும் என்பது கூட அறியாத வெறித்தனமும் மடமையும் அவர்களுள் ஆட்சி செய்திருக்கிறது...உண்மைக் கயவாளிகள், குற்றவாளிகள் இந்துத்துவ மத அடிப்படைவாதிகள்..
அதன் எதிர்வினையாக உருப்பெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகள்...நவீன தாராளமயம், இந்த நிலபிரபுத்துவ சிந்தனைகளை வெட்டிச் சாய்க்காமல் தூபம் போட்டுவிடுவது ஏகாதிபத்திய நலன்களைக் காப்பதற்கு...
சவால்கள் நிறைந்த காலம் இது...
வரலாற்றை மறுப்பவர்கள் மீண்டும் அதே பிரச்சனைகளில் சிக்கி உழல்வதைத் தவிர வேறு வழியில்லை...எனவேதான் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை இவற்றுக்கு இடதுசாரிகள் முன்னுரிமை அளிப்பது

எஸ் வி வேணுகோபாலன்

'பரிவை' சே.குமார் said...

வலி... வேதனை... எங்களுக்குள்ளும்...

கடைசி வரி நெற்றிப் பொட்டில் அடித்தது...

kashyapan said...

ஆமாம் ! ஹரேன் பாண்டியா என்பது தான் சரி ! நன்றி வாணுகோபாலவர்களே!---காஸ்யபன்.

suvanappiriyan said...

காஸ்யபன் போன்ற நல்லுள்ளம் கொண்ட நடுநிலையாளர்கள் எனது நாட்டில் உள்ள வரை மக்களுக்கிடையே பிரிவினையை உண்டு பண்ணி ஆட்சி அதிகாரத்தை பிடித்து விட எண்ணும் குறுமதியாளர்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.

உங்கள் இந்த பதிவை எனது பதிவிலும் பதிவு செய்துள்ளேன்.

http://suvanappiriyan.blogspot.com/2013/12/blog-post_29.html