"Bombay Plan " படி
வலது சாரிகளின் பிடி இறுகுகிறது ........!!!
1944-45 ம் ஆண்டுகளில் இந்தியாவின் சுதந்திரக் கனவு நனவாகும் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தான் ! இரண்டாம் உலகப்போரின் முடிவு பல ஏகாதிபத்திய நாடுகளின் முது கெலும்பை நொறுக்கி இருந்தது ! இனியும் அவர்களால் தங்கள் மேலாதிக்கத்தை கொண்டு செல்லமுடியாது என்பது நிதர்சனமாயிற்று
சுதந்திர இந்தியா எப்படிப்பட்ட அரசாக இருக்க வேண்டும் என்று இந்திய மக்களிடையே விவாதம் துவங்க ஆரம்பித்து விட்டது !
இந்திய விடுதலையில் இணக்கமான நிலைப்பாட்டினை எடுத்த இந்திய முதலாளிமார்களும் விவாதித்தனர் !இது சம்மந்தமாக 1944ல் ஒரு அறிக்கையும் 1945ல் ஒரு அறிக்கையும் வெளியிட்டனர் ! அதில் சுதந்திர இந்தியாவின் அரசு எப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கையை கையாள வேண்டும் என்றும் வரையரை செய்யப்பட்டிருந்தது !
"இந்தியா தொழில் துறையில்வளர்ச்சி யடைய வேண்டும் ! இன்றயநிலையில் அரசின் தலையீடு இல்லாமல் அ தன சாதிக்கமுடியாது ! பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க வேண்டும் " என்று பம்பாயில்கூடிய முதலாளிமார்கள் முடிவு செய்தனர் ! அதன் படிஅறிக்கையும் விட்டனர் !இந்த அறிக்கையி கையெழுத்து போட்டவர்கள் :
! Jrd .டாட்டா
2.Gd .பிர்லா
3A .தலால்
4ஸ்ரீ ராம்
5கஸ்தூரி பாய் லால்பாய்
6A தரப்ஷா
8 ஜாண் மத்தாய்
இந்த அறிக்கை வந்ததும் இந்திய மற்றும்வெளி நாட்டுப் பத்திரிகைகள் இந்திய முதலாளிகளின் தேசபக்தியப்பராட்டி பக்கம் பக்கமாக எழுதின !
ஒருபக்கம் பொதுத்துறையும் மற்றொரு பக்கம் தனியார் துறையுமாக இந்தியா கொழிக்கப்போகிறது என்று படம் காட்டின !
இதனைத்தான் "பம்பாய் திட்டம் "(Bonbay Plan ) என்று கூறினர்
இது பற்றி டேவிட் லாக் உட் என்ற விமரிசகர் கூறினார் !
"இது இந்திய முதலாளிகளின் சுய நலத்தையே காட்டுகிறது ! தொழில் வளம் இல்லாத இந்தியாவில் வளர்ச்சிக்கு அடிப்படைபிரும்மாண்டமான
திட்டங்கள்!போக்குவரத்திற்கான ஏற்பாடுகள் ! மிக அதிகமான முதலிடுகள் !மிகக் குறந்த லாபம் ! இந்திய முதலாளிகளால் அதனை ஈடுகட்ட முடியாது ! ஆகவே அதனை பொதுத்துறை மூலம் அரசு மூதலீட்டில் நடக்கட்டும்! நாம் உடனடி லாபத்தைத தரும்தொழில்களில் தற்போது இறங்குவோம் என்ற சுயநலம்!"
என்கிறார்!
இந்தியா முழுவதும் உபயோகப்படும் "மண்வெட்டி " யை டாடா தயாரிக்க ஆரம்பித்தது விவ்வ்சாயிகளின் நண்மைக்காக மட்டுமல்ல ! அன்றைய நிலையில் இருந்த சந்தையையும் லாபத்தையும் மனதில்கொண்டுதான் ! எந்த இரும்புக்கடையிலும் அன்று Tata மண்வெட்டிகள் தான் கிடைக்கும் ! இந்த ஏற்பாட்டை இந்தய தேசீய காங்கிரசும் ஏற்றுக்கொண்டது !
இந்திய முதலாளிகள் தங்களை பொதுத்துறையின் மூலம் வளர்த்துக் கொண்ட பின் அதனை கபளீகரம் செய்து கொள்ள வகுத்த திட்டம் தான் "பம்பாய் திட்டம் " !
அடுத்து அரசை எந்தவித கூச்ச நாச்சமின்றி தன வசப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் !
அதன் அரசியல்முகம் தான் பா.ஜ.க.,காங்கிரஸ் ,ஆம் ஆத்மிகட்சிகள் !!!
கையை
2 comments:
டாடா மண்வெட்டி அறியாத செய்தி ஐயா நன்றி
நல்ல பகிர்வு ஐயா...
Post a Comment