Sunday, December 22, 2013

"பாரதி மணியும் "ஒருத்தி " என்ற திரைப்படமும் 


ஒரு நடிகர் சிறிய பாத்திரத்தில் நடித்தாலும் படம் முடிநதபிற்கும் மனதில்  பதிந்து விடுவாரா ?  சிறந்த நடிகர் என்றால் பதிந்து விடுவார் !

"ஒருத்தி" படத்தில் பாரதிமணி அவ்ர்கள் அதைத்தான் சாதித்துள்ளார் ! என்ன கம்பிரம் ! என்ன ஆளுமை ! என்ன   உச்சரிப்பு ! what a dominant presence !!!

"அம்ஷன் குமாரின் "   திரைப்படமான "ஒருத்தி " தூர்தர்ஷ்னில் நெற்று இரவு ஓலிபரப்பயீற்று ! கி.ரா வின் "கிடை " சிறு கதையை கொஞசமாக செதுக்கி திரை ப்படமாக்கியூள்ளர் !

ஆடுமேய்க்கும் தலித் பெண் செவனி !  ஆடு மேய்க்கும் நல்லப்பன் மிது ஆசை கொள்கிறாள் ! நல்லப்பன் மேல்சாதி ! நல்லப்பனும் அவளை விரும்பு கிறான் ! நல்லப்பன் தன சாதியிலொரு பெண்ணையும், செவனிய இரன்டாவது மனைவியாகவும் ஏற்க இருவரும் சம்மதிக்கிறார்கள் ! 

காலம்மாறுகிறது! ஜனங்களிடம் வசூலித்த் வரியை  ஜமீந்தார் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு செலுத்தாமல் இருக்கிறார் !  பிரிட்டிஷ் அதிகாரி வசூலிக்க வந்தபோது செவனி மூலம் ஜமீனின் ஊழல் வெளிவருகிறது !

ஜமீன் முறைக்கு  முடிவு கட்டி வரியை நேரடியாக பிரிட்டிஷ் அரசாங்கத்திடமே கட்ட உத்திரவிடுகிறான் ! கூடுதல் வரியப் போட்டுவிடுவார்களோ என்று பயந்த ஜனங்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் ! இதற்குமுக்கியமான காரணமான செவனியை பாராட்டு கிறார்கள் !

இதற்கிடையே நல்லப்பனின் தாயாரும் செவனியை நல்லப்பன் விரும்புவதை ஏற்கமறுக்கிறாள் ! நல்லப்பனுக்கு தன உறவில் சகொதரிகளிருவரை மண முடிக்கிறாள் !

ஊர்  பஞ்சாயத்தில நல்லப்பனோடு தான் வாழ அனுமதிக்குமாறு செவனி கேட்கிறாள். ! ஊர் சம்மதிக்கிறது !ஒரு நிபந்தனையுடன் ! செவனியும் நல்லப்பனும் ஊரைவிட்டு போக வேண்டும் அவர்களுக்கு விருப்பமான ஊரில் அவர்கள்சென்று சேர்ந்து வாழலாம் என்று  நிபந்தனை விதிக்கிறது !

"நான் கீழ்ச்சாதி ! உங்கள் முன்னால் நான் நால்லப்பனோடு வாழ்வதை உங்களால் ஏற்கமுடியவில்ல ! அதற்காக நான் இந்த ஊரையும் நான் வளர்க்கும் ஆடுகளையும்பிரிய முடியாது"  என்று கூறிசெவனி  மறுத்து விடுகிறாள் .

பிட்டிஷ் அதிகாரியாக வரும் தாமஸ் ஒபர் தவிர அத்துணைபேரும் அற்புதமாக நடித்துள்ளனர் !

கிடாரியாக வரும் "பாட்டை யா" வின் நடிப்பு அற்புதம் ! நடை,கம்பை பிடித்திருக்கும் லாவகம் ,மற்றவர்களிடம் அவர்களுக்குத்தெரியாமலேயெ உத்திரவிட்டு காரியத்தை சாதிக்கும்பாங்கு  பாட்டியா பாட்டையாதான் !!! 

செவனியாக நடிக்கும் பூர்வ ஜா தலித் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார் ! குறிப்பாக நல்லப்பன் இரண்டுமனைவிகளொடு மணக்கோலத்தில் வரும்காட்சியில் தன  சோகத்தை,கையாலாகாத்தனத்தை மறைத்துக்கொண்டு ஆடுமேய்க்கப் போகும் காட்சியில் மனதை நெருட வைக்கிறார் !

பாலா சிங் நடிப்பு நேர்த்தியாக உள்ளது !

எல்.வைத்தியனாதனின்  இசை கச்சிதம் !

விருது பெற்ற அம்ஷன் குமாரின் இந்தப்படத்தை இவ்வளவு நாள் பார்க்காததற்கு அவரிடம் மன்னிப்பு கே ட்டுக்கோள்கிறேன் !செவனி போன்றவர்களுக்கு கல்விதான் விடுதலை என்பதை பறந்து வரும் இறகு எழுதுகோலை செவனி பிடிபதின் மூலம் உணர்த்தியிருப்பது அருமை !

இந்த திறமையான மனிதரை தமிழ் திரையுலகம் புறக்கணித்துவிட்டு நுற்றாண்டு விழா கொண்டாடியதை .........!!!

த.மு,எ.க. ச இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் !!! 





  









5 comments:

kashyapan said...

சாந்தி ராணி என்ற அம்மையார் இறகுப்பேனாவை செவனி பிடிப்பதை காரணமாக்கி இயக்குனர் நினைக்காததை இருப்பதாக சொல்கிறீர்கள் என்றுகூறியிருந்தார் ! (தோலைபெசிமூலம்) தலித் பிள்ளைகளுக்கு எட்டாவது வாய்பாடு சொல்லிக் கொடுக்கும்காட்சியில் செவனி அதனைப் பார்த்து வாயசைப்பது அவளுடையா கற்க வேண்டும் என்ற ஆவலைக் காட்டுவதாக நினக்கிறென் ! அதெபோல் பிரிட்டிஷ் அதிகாரி வில்லியம்ஸ் எழுதுவதையும்,கையெழுத்திடுவதையும் ஆர்வத்தோடு செவனி பார்க்கிறாள் ! தொகுத்துப் பார்க்கும் போது நான் எழுதியிருப்பது சரி யென்றே தோன்றுகிறதூ ! இதற்கு மேல் அமஷன் குமார் தான் விளக்க வேண்டும் !---காஸ்யபன்.

கரந்தை ஜெயக்குமார் said...

கல்விதான் பெண்களின் ஆயுதம் மற்றும் கேடயம்.
நன்றி ஐயா

அப்பாதுரை said...

கேள்விப்படாத படம்.
உங்க விமரிசனம் படம் பார்த்தாப்புல இருக்கு.

veligalukkuappaal said...

அன்புத்தோழர், இத்திரைப்படத்தை சத்யம் திரையரங்கில் வந்த அன்றே நான் பார்த்துவிட்டேன். எப்படியும் 6 வருடங்களுக்கு முன் இருக்கலாம். அம்ஷன்குமார் அன்று அரங்கிற்கு வந்திருந்தார். கி.ரா. அவர்களின் கதை. ஏனோ தெரியவில்லை, இப்படத்தை முற்போக்கு இயக்கங்களும் கண்டுகொள்ளவில்லை!...இக்பால்

பாரதசாரி said...

அம்ஷன் குமார் அவர்களின் நெருங்கிய நண்பர் எனது மறைந்த மாமனார். அவர் இந்தப் படத்தை வெகுவாக ரசித்து Narrate செய்துள்ளார், அதன் எழுத்து வடிவம் போல் இது இருக்கிறது இந்த பதிவு. இந்தியா வரும்போது அதை காண வேண்டும் அதுவும் இயக்குனர் கூடவே அமர்ந்து.