"நா காக்க "
முக நூலில் ஒரு நண்பர் மானிலங்கள் அவை உறுப்பினர் தோழர் டி .கே ரங்கராஜன் ராஜினாமா செய்வாரா என்பது போல் கேட்டிருந்தார் !
இந்த முட்டாள் தன மான கேள்விக்கு பதில் சொல்லப் போவதில்லை ! ஆனால் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் நடந்த வரலாற்று நிகழ்வுகளை இளைஞர்களுக்கு சொல்லவிரும்புகிறேன் !
1978ம் ஆண்டு தமிழக சட்டமன்றதிற்கான தேர்தல் நடக்!க விருந்த நேரம் !

அண்ணா திமுக முதன் முதலாக முழுமையாக தேர்தலைச் சந்திக்க முடிவு
செய்தது ! எம்.ஜி.ஆர் அவ்ர்கள்கூட்டணி பற்றி ஆலோசனை செய்து கொண்டிருந்தார் ! மார்க்சிஸ்ட் கட்சி தி .மு.க.வின் அரசியல் முடிவுகளால் தனித்து இருந்தது !
அப்போது மதுரையைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர் பத்திரிக்கை நிருபர் ஒர்வரைச் சந்தித்தார் ! நான் மார்க்ஸிட் கட்சி தலைவர் எ.பாலசுப்பிரமணியம் அவர்களை பார்க்கவேண்டும் ! நீங்கள் அதற்கு ஏற்பாடு செய்யமுடியுமா என்று கேட்டார் ! இதனை ரகசியமாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் !
இருவரும் சந்தித்தனர்!
எம்.ஜி.ஆர் உங்களைப்ப்பார்க்கச் சொன்னார் ! இருகட்சிகளும் இணைந்து
தேர் தலை சந்திக்க முடியுமா என்று பரிசிலிக்க விரும்புகிறார்என்றார் ! பரிசீலித்தனர் ! எம்.ஜி ஆர் அவசரநிலையின் போது எடுத்த நிலையை ஏற்க முடியாது ! அத அவர் மாற்றிக் கொண்டால் பார்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது !
"எந்த நிலையிலும் சர்வாதிகாரத்தை அண்ணா .தி.மு.க ஏற்காது " எம்.ஜி,ஆர் அறிவித்தார் !
78மாண்டு இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்தன ! அண்ணா தி.மு.க ஆரம்பித்து ஆறே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது !
நெடுஞ்செழியன்,நாஞ்சில்மனோகரன்எஸ்.டிசோமசுந்தரம்,கே.எ..கிருஷ்ணசாமி ஆகியொர் அமைசராகினர் !
எம்ஜிஆர் ,எ.பாலசுப்பிரமணியம் உட்பட இவர்கள் மறைந்து விட்டனர் !
ஆனால் மதுரையை சேர்ந்த அந்த அரசியல் தலைவரும் அந்த நிருபரும் மதுரை வீதிகளில் இன்றும் உலாவந்து கொண்டுதான் இருக்கின்றனர் !
ஒருவர் மூத்த அரசியல் தலைவர் பழ நெடுமாறன் !
மற்றொருவர் நிருபர் "தீக்கதிர் நாராயணன் " !!!
( தொகுதி உடன்பாடு என்பது ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வது )

2 comments:
அறியாத செய்திகள் ஐயா நன்றி
ஏம்.ஜி.ஆர் அவர்கள் முதல் முதல் முதலமைச்சர் ஆனது 1977 ம் ஆண்டு ஜுன் மாதம் 30ம் தேதி!
தேர்தல் நடந்த்து 1977மாண்டு ! நான் என் இடுகையில் 1978 என்றுதவறாகக்குறிபிட்டுள்ளேன் ! தவறினை சுட்டிக்காட்டீய தோழர் ஆர்.எஸ்.மணி அவர்களுக்கு நண்றீ !---காஸ்யபன்.
Post a Comment