ஒரு கூடை வெங்காயம்+ செருப்படி =தேர்தல்
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் ! ஒரு குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தார் !
அவன் ஒரு கூடை நிறைய உள்ள வெங்காயத்தை திங்க வேண்டும் ! நிறுத்தாமல் திங்க வேண்டும் !
அல்லது செருப்படி பட வேண்டும் ! நிறுத்தாமல் அடிப்பார்கள் !
அவன் யோசித்தான் ! செருப்படி என்றால் வலிக்கும் ! நாம் தான் தினம் வெங்காயம் சாப்பிட்டுகிறோமே ! அதனால் ராஜாவிடம் வேங்காயம் திங்க ஒப்புக்கொண்டான் !
வெங்காயம் வந்தது ! அவனும் திங்க ஆரம்பித்தான் ! பத்து வெங்காயத்தைதின்றான் ! கண்களில் நீர் வர ஆரம்பித்து ! வயிறும் கலங்க ஆரம்பித்தது ! இனி வேங்கையம் தின்றால் செத்து விடுவோம் என்று பயந்தான் ! "ராஜா! நான் செருப்படி பட்டுக் கொள்கிறேன் !" என்று கூறி தண்டனையை மாற்றிக் கொண்டான் !
செருப்படி ஆரம்பமாயிற்று ! அடி விழ விழ அவனுக்கு வலி அதிகமாயிற்று ! இனிமேலும் அடிவிழுந்தால் செத்துவிடுவோம் என்று புரிந்தது ! "ராஜா ! நான் வெங்காயமே தின்கிறேன் !" என்று தண்டனையை மாற்றிக்கொண்டான் !
வெங்காயத்தை திங்க ஆரம்பித்தான் ! மறுபடியும் கண்களில் நீர் ! வயுற்றுப் பொருமல் ! "ராஜா ! நான் செருப்படியே வாங்கிக் கொள்கிறேன் ! " என்று கூறினான் !
இதே போல் தான் நாம் ஒவொரு ஐந்து வருடமும் மாறி மாறி செரூப்ப்டியோ
வெங்காயமோ வாங்கிக் கொண்டிருக்கிறோம் !,
( "சத்யமேவ ஜெயதே " (23-3.14) நிகழ்ச்சியில் கேட்டது )
3 comments:
உண்மை சொன்னது! உண்மை ஜெயிக்கும் நிகழ்ச்சி! பகிர்வுக்கு நன்றி!
உண்மை ஐயா உண்மை
அனுபவஸ்தரான தாங்கள் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாதா? செருப்பால் அடிக்காமலும், வெங்காயத்தைத் தின்னச் சொல்லாமலும் சில தேர்தல்கள் நடந்து முடிவதும் உண்டே!
Post a Comment