Sunday, April 20, 2014

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு .....!!!


தமிழ்நாட்டில் இருக்கும் "டாஸ் மாக் " கடைகளையும் ,குஜராத
 மாநிலத்தில்மது விலக்கு அமல்படுத்தப்படுவதையும் ஒப்பிட்டு முகனூலில் எழுதுகிறார்கள் !

கூகிளுக்கு சென்று "குஜராத்  மதுவிலக்கு "என்று அடித்தால் தகவல்கள் கொட்டும் !

1946 ஆ 48ஆ என்று நினைவில்லை ! நான் முனிசிபல் பள்ளியில்படித்துக் கொண்டிருந்தேன் !

"மது அரக்கன்  ஒழிந்தான் " என்று கோஷம் போட்டுக்கொண்டு நாங்கள்  நெல்லையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு விழாவில்கலந்து கொண்ட நினைவு  தட்டுகிறது !

சின்ன வயதில் எங்கள் "மாரி  நாடார்" தோப்பில்  நெஞ்சில் தோல் மூடி போட்டுக்கொண்டு கள் இறக்குவதை பயத்தோடு தூரத்தில் நின்று கொண்டு பார்த்திருக்கிறேன் ! 

பெரியவர்கள் நாங்கள் பார்கக்கூடாது என்று விரட்டி விடுவார்கள் !

 "காந்திக்கு ஜே " என்று கூவிக்கொண்டெ காந்திகுல்லாய் போட்ட பெரியவர்கள் போலீஸ்  அடியை வாங்கிக் கொண்டு மறியல் செய்ததையும் பார்த்திருக்கிறேன் !

எங்கள் தலைமுறைக்கு "தண்ணி " போடுவது என்பது என்னவென்றே தெரியாது !

1970மாண்டு ஆகஸ்டு 31ம் தேதி கருணாநிதி தமிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்தார் !

ராஜாஜி போன்ற தலவர்கள் எவ்வளவோ வேண்டியும் கருணாநிதி கேட்கவில்லை !

இன்று பொதையோடு தள்ளாடும் பள்ளி மாணவர்களைக் கூட பார்க்க முடிகிறது !

மறந்த நடிகர் என்.எஸ் .கிருஷ்ணன் மதுவிலக்கு பிரச்சாரம் செய்த காட்சிகள் திரைப்படங்களில் வந்ததுண்டு !

மது விலக்கு தேவையா என்ற விவாதம் நடந்ததுண்டு !

மது விலக்கை ரத்து செய்ய வேண்டும் என்று "போலீஸ் கண்ணன் " என்பவர் போராட்டம் நடத்தியதுமுண்டு !  

பொருளாதார ரீதியாக மதுவிலக்கை ரத்து செய்வது சரிதான் என்று சொன்னவர்கள் உண்டு ! இந்த கருத்து  பின்னாளில் எனக்கு சரியாகப் பட்டதும் உண்டு !

இன்று நிலைமை அப்படி இல்ல !

சுய நலத்திற்காகவும்,அரசியல் காரணங்களுக்காகவும் , அரசின் easy money approach க்காகவும் மது பயன்படுத்தப்படுகிறது !

வட நாட்டில் குறிப்பாக ம.பி,மகாடாஷ்டிரா ,உபி, மாநிலங்களில் sugar loby என்று உண்டு !

சர்க்கரை ஆலை முதலாளிகள் ! அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் ! இவர்கள்கரும்பு விலையிலிருந்து ,அரவையிலிருந்து , விவசாயிகளை வஞ்சித்து கொள்ளையடிப்பவர்கள் ! காங்கிரஸ் ,பாஜக என்று குறுக்குசால் ஓட்டுபவர்கள் ! 

கரும்பு ஆலைகளின் கழிவுப் பொருள் தான் சாராயத்திற்கு கச்சாப் பொருள் !

பாஜக தலைவர் நிதின் கட்காரி ஒரு சாராய ஆலைக்கு சொந்தக்காரர் ! பூர்த்தி என்ற குழுமத்தின் தலைவர் ! இவரைப்போன்ற ஆலை முதலாளிகள் எல்லாகட்சிகளிலும் உள்ளனர் ! இவர்கள் தான் மதுவிலக்கு வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிப்பவர்கள் !

காந்தி பிறந்த மாநிலமென்ற ஒரே காரணத்திற்காக மூச்சைப் பிடித்துக் கொண்டு குஜ ராத்தில் மதுவிலக்கு பேருக்கு   இருக்கிறது !

அரசாங்கத்திற்கு வரவேண்டிய 4000 கோடி ஆண்டு வருமானம் போலிஸ் காரர்களுக்கு லஞ்சமாக் போகிறது ! அவர்கள் மதுவிலக்கு வேண்டும் என்கிறார்கள் !

குஜராத்தில் உள்ள சுற்றுலாத்துறையினர் மதுவிலக்கைரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள் ! இதில் முக்கியமானவர்   நரேந்திர சிங் ராதர் என்பவர் ! இவருக்கு துணையாக தினேஷ் இந்து ஜா இருக்கிறார் !

குஜராத்தில் 60க்கும் மேற்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலமுள்ளது ! இவைகளில் மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை !

கள்ளச்சாராய்மென்பது குஜராத்தின் சிறப்பு ! மகாராஷ்டிரா,ம.பி,உபி மாநில sugar loby யின் கை ஓங்கி உள்ளது !

"சபர் மதி ஆசிரமத்தில்மட்டும் குடிக்கக்கூடாது " என்ற நிலையில் மதுவிலக்கு அமல் படுத்தப்படும் காலம் வெகு தூரத்திலில்லை என்றே படுகிறது !














































 



















0 comments: