Wednesday, April 09, 2014

யார்  அந்த "சவுரப் படேல் " .....?  


"யோக்கியன் வரான் ! சோம்பை  தூக்கி  உள்ளெ வை "  என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு !

செல்வாக்கு மிக்க "மொள்ளமாரி"யை  பகைத்துக் கொள்ள மாட்டார்கள் ! அதே சமயம் அவன் "மொள்ளமாரி " என்பதை நாசூக்காக உணர்த்தி விடுவார்கள் !

தீரு பாய் அம்பானி என்ற தொழிலதிபர் மறைந்து விட்டார் ! அவர் ஆரம்ப காலத்தில் பெற்றோல் பங்கில் பெற்றோல் ஊ த்தும் பணியாளாக இருந்தார் !

இன்று இந்தியாவின் முக்கியமான பெற்றோல் கம்பெனிகளில் ஒன்று அம்பானியின் "ரிலையன்ஸ்" நிறுவனம் ! 

இவர் எப்படி இவ்வளவு பெரிய தொழில் அதிபரானார் ?

நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள் !

பிரும்மாண்டமான நதி அது பிறக்குமிடத்தில்பார்த்தால் ஒரு கற்பாறையின் இடுக்கிலிருந்து சிறு தாரையாக நீர் வழியும் காட்சி தான் தெரியும் !

காட்டில் பயணம் செய்யும் பயணிகளை கொள்ள அடித்தவன் தான் மகிரிஷி வால்மீகி யானான் !

அழுக்கான யமுனை சேர்ந்த பிறகு  கங்கை "திரிவேணி " யாகிறது !

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் , விநதிய காடுகளில் கஞ்சா பயிரிட்டு அதை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்பட்டதுதான் பம்பாய் துறைமுகம் !

அந்த கஞ்சா வை விற்ற வியாபாரிகள் தான் இன்றைய இந்திய தொழிலதிபர்கள் !
பிறன் மனைவியரை மோகித்து , வேசியரோடு இருந்தவர்தான் "அருணகிரி நாதர் !

சரி ! இருக்கட்டும் !

தீரு பாய் அம்பானிக்கு மூத்த சகோதரர் ஒருவர் உண்டு !

R .H . அம்பானிஎன்று பெயர் .!

அவ்ருடையசெல்லமகள் தான் "இலா" !

இலாவுக்கு திருமணம் ஆனது !

அவர்கணவர் பெயர் "சவுரவ் படேல் "

இவர் நரேந்திர மோடி அமைச்சரவியில் இருக்கிறார !

மாநில பெற்றொலியதுறை அமைச்சராக இருக்கிறார் !

இந்த  அர்வுந் கேசரிவால் ஒருகூட்டத்தில் சவுரவ் படேல்  அம்பானிக்கு உறவினர்  என்று கூறிவிட்டார் !

கொதித்து எழுந்த ப.ஜ.க  தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பியது !

தேர்தல் கமிஷன் உடனடியாக சவுரவ் படேலுக்கு இது உண்மையா என்று கேட்டு கடிதம் எழுதியது !

"திருமணம் செய்து கொண்ட வகையில் அம்பானி எனக்கு உறவு தான் " என்று சவுரவ் எழுதியுள்ளார் !

மோடி பிரதமரானால் ...! 

இந்திய முதலாளிகள் உறவினர்களுக்கு 

வேலை கிடைக்கும் -அமைச்சர்களாக !!!4 comments:

சிவகுமாரன் said...

Who is bothering? Votes are sold here. A part of robbed money is spent in election. Politicians have partnership with people in robbery.

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

ஹிஹி.. உறவுமுறை பாவிக்காத அரசியல் கட்சியோ ஆட்சியோ நம்ம நாட்டுல இருக்குதா?

kashyapan said...

அப்பதுரை அவர்களே! முதலமைச்சர் பதவியிலிருந்து விடுபட்டதும்,இரண்டு வேட்டி,ஜிப்பாவை தகரப் பெட்டியில் வைத்துக் கொண்டு கட்சி ஆபீசுக்கு வசிக்கப் போன நிருபன் சக்கரவர்த்திக்கு உறவுகள் உண்டா ? இ.எம்.ஏஸ் அவர்களீன் மகன்,மகள் என்ன செய்கிறார்கள் ? எம்.ஆர்.வெங்கடராமன்,ஏ பாலசுப்பிரமணியம், பி.ராமமூர்த்தி ,அவர்களுக்கு பாவிக்கக்கூடிய உறவுகள் இருந்தனவே ! எம்.பிகோட்டவில் கிடக்கும் தொலை பெசி சலுகையை கூட கட்சிக்கு கொடுத்த தலவர்களுண்டு ஐயா ! ---காஸ்யபன்.