Thursday, April 03, 2014

​​​​​​​​​​​​​​​ (​ப.ஜ.க வந்தால் )

கடல் மட்டுமல்ல,  கடற்கரையையும்,

நதிகளையும் விற்று விடுவார்கள் ....!!!


நெற்று பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள் ! மோடி அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் மூன்று  மணீ நேரம் விமானத்திற்காக காத்திருந்தாராம் ! 

ரே பெரேலி விமான தளத்தில் ஹெலிகாப்டருக்காக இரண்டு மணிநேரம் காத்திருந்தாராம் ! 

ஆரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் டீ கடை வைத்திருக்கும் சேகர் !  டீ விற்றவர் விமானத்தில் பறக்கிறார் என்று நினைக்கிறார் ! நமோ டீ  கடை வாதிகளும் அப்படியெ நினைக்கிறார்கள் !

அவ்ர்களுக்கு தெரியாது ! நரேந்திர மோடி பறப்பது சொந்த விமானத்தில் அல்ல -"அதானி "கம்பெனியின் விமானத்தில் என்பது !

குஜராத் அரபிக் கடற்கரையில் அமைந்துள்ள மாநிலம் ! 

அதன் வழியாக ஆப்பிரிக்க,அரேபிய ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல நவீன துறைமுகம் "முந்தரா " என்ற பகுதியில் அமைக்க விரும்பினார்கள் !

அதற்காக கடல் பகுதியையும் அதுசார்ந்த கடற்கரையையும் நரேந்திர மோடி 
அதானி என்ற முதலாளிக்கு "ஈன " கிரயத்திற்கு கொடுத்தார் !

மிகவும் நவீனமான துறைமுகம் உருவானது ! குஜராத்திலிருந்து ஒரு ஆணி, வெளிநாட்டு போக வேண்டுமனாலும் அதன் வழியாகத்தான் போகவேண்டும்!  இறக்குமதியும் அப்படியெ ! 

கப்பல் வந்தால்,நின்றால்,புறப்பட்டால் அதானிக்கு காசு ! 

அண்ணே ! வீடு சொந்தமா இருக்கும் ! காரு சொந்தமா இருக்கும் ! இங்க துறைமுகமே சொந்தம் அண்ணே!

துறைமுகம்போக மீதி இடங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள் ! அலுவலகங்கள் ! கொள்ளை விலைக்கு விற்பனை ! இன்று இந்தியாவின் மிகப் பெரியா பணாக்காரரகளீல் "அதானி "குழுமமும் ஒன்று !

டீ கடை சேகர் விடல சைக்கிள் இருக்கும் ! வசந்த பவன் ரெட்டியார் வீட்ல ஸ்கூட்டர் இருக்கும் ! மாடர்ன் லாட்ஜ் முதலாளி வீட்ல கார் இருக்கும் !

அதானி அண்ணன் தம்பிகள்    ஒவ்வோருவருக்கும்  ஒரு சொந்த விமானம் காத்திருக்கும் !!!

பட்டா அவங்க பேர்ல ! 

புரிஞ்சா புரிஞ்சுக்கோ !

சதீஸ்கர்ல இவங்க ஆண்டாங்க ! 

நல்ல செழிப்பான பூமி ! மத்திய இந்தியாவுல விவசாயம் கொழிக்கும் பக்தி ! அங்க ஒரு நதி ! பேரு "ஷிவநாத் " ! 

அதுல ஒரு ஐம்பது அறுபது மைல் நீளத்துக்கு வித்து புட்டாங்க !

ஆமாண்ணே ! நதியை வித்துபுட்டாங்க !

யாருக்கு தெரியுமா ?

பெப்ஸி கோலாவுக்கு !

அந்த "தொரை" என்ன செஞ்சான் தெரியுமா?

சுத்தி வளச்சு வேலியை போட்டான் ! ஒருபய வரப்ப்டாதுன்னூட்டான் ! அங்க உள்ள ஆத்து தண்ணி,மீனு, அருவி அம்புட்டும் அவனுக்குதானாம் !

இப்பம் சனங்க -சொத்துக்கு மட்டும் இல்ல ​​ குடிக்கவும் கழுவவும் "சிங்கி" அடிக்காங்க !!

பாஜாக தஞசாவூருல நிக்க போறாங்களாம் ! காவிரியை வித்துருவாங்க !

மதுரைல நிப்பாங்களாம் !   மீனாட்சி தாயை காப்பத்தணும் !

கன்னியாகுமரில ! ஆத்தாடி ! விவேகானந்தர் பாறை ! திருவள்ளூவர் சிலை !

அண்ணே ! 

டீ  வேண்டாம் அண்ணே !

நீத்தண்ணியே  போரும் அண்ணே !!!
2 comments:

அப்பாதுரை said...

எரியுற கொள்ளில எது உசத்தி? இதானா இந்தியக் குடிமகன் கேட்கவேண்டிய கேள்வி?

kashyapan said...

இல்லை அப்பாதுரை அவர்களே! இடது சாரிகள் அற்புதமான அகல் விளக்கை ஏற்றித்தருகிறார்கள் ! இந்த மூலதனச்சூறாவளியில் அது அணைந்து அணைந்து போகிறது ! மீண்டும் மீண்டடும் அவர்கள் ஏற்று கிறார்கள் ! நம்பிக்கையோடு ! ---காஸ்யபன்.