இந்தி மொழி பற்றி .....!!!???
1996 ம் ஆண்டு தேர்தலின் போது மதுரையிலிருந்தேன் ! மேற்கு வங்கம்,திரிபுரா,வாரணாசி ,சிம்லா, டெல்லி, வார்தா , பீடர் ,என்று ஒரு சுற்று சுற்றி மார்க்சிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகளை பார்க்கலாம் என்று கிளம்பினேன் ! இந்தி மொழி கைவராத நிலையில் மொழிபெயர்ப்பாளர் முத்துமீணாட்சி அவர்களையும் கூட அழைத்துச் சென்றிருந்தேன் !
சென்னையிலிருந்து கல்கத்தா செல்வது ! அங்கு பார்வையிட்ட பிறகு திரிபுரா செல்வது என்பது திட்டம் !
கல்கத்தா சென்றதும் திரிபுரா செல்ல விமான டிக்கட் வாங்க உதவுமாறு "கணசக்தி " பத்திரிக்கை அலுவலகம் சென்றேன் !
டிக்கட் கிடைக்கவில்லை ! அவ்ர்கள் இரண்டு நாள் கல்கத்த தேர்தலை பார்வையிடுமாறு யோசனை சொன்னார்கள் ! அப்பொதுஅங்குசட்டமன்ற தேர்தலும் நடந்தது !
முதல்வர் ஜோதி பாசு "சத்காசியா" தொகுதியில்போட்டியிடுகிறார் ! அன்றுமாலை தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்குகொள்கிறார் !மாலை மூன்று மணிக்கு வந்தால் அவருடைய வாகனங்களோடு "ஜீப் "ல் செல்லமுடியும் என்றனர் ! கசக்குமா ! கிளம்பிவிட்டோம் !
அலைபாயும் மக்கள் வெள்ளத்தின் ஊடாக சென்றோம் ! கல்கத்தா நகரத்தை தாண்டியதும் எங்கள் வாகனம் வேறுபாதையில் சென்று அவருக்கு முன்பாகவே சத்காசியாவை அடைய புறப்பட்டோம் !
நாங்கள் முந்தி விட்டதால் வழியில் ஒரு கிராமத்தில் சாலை ஓரத்தில் நின்றோம் ! கொஞசம் நடந்து கிராமத்து வயல்களையும் அங்கு வேலை செய்யும் விவசாயிகளையும் சந்திக்க விரும்பினோம் !
வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு விவசாயியை அழைத்தோம் ! அருகில்வந்த் அவரிடம் முத்து மீனாட்சிஅவ்ர்கள் இந்தியில் கேட்டார்கள் !அவருக்கு "இந்தி" தெரியவில்லை !
எங்களுடன் வந்த தோழர் ஒடி வந்தார் !"இவர்களுக்கு இந்தி தெரியாது ! வாங்க மொழி மட்டும் தான் தெரியும் ! கலகத்தாவில் வேண்டுமானால் இந்தியில் சமாளிக்கலாம் ! கிராமப்புறங்களில்வங்க மொழிதான் " என்றார் !
அவருடைய உதவியோடு அந்த கிராமத்தி விவசாயியோடு பேசினோம் !
மீண்டும் நாங்கள் சத்காசியா நோக்கி புறப்பட்டோம் ! அங்கு முதல்வர் வங்க மொழியில் பேசினார் ! குறிபெடுக்க முடியாது !
ndtv நிருபர் மோனிகா தீபா பானர்ஜி இடம் உதவி கேட்டோம் ! அவருடைய மகள் வந்திருந்தார் ! அவர் பெங்காலியிலிருந்து இந்திக்கு மொழிபெயர்க்க முத்து மீனாட்சி அவர்கள் அதனை எனக்கு தமிழில் சொன்னார் !
மகாராஷ்ட்ராவின் உள் கிரமங்களில் "இந்தி" பப்பு வேகாது !
வட கிழக்கு மாநிலங்களில் வண்டி ஓடாது !
ராஜஸ்தான்,மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் மட்டும் வண்டி ஓடும்!
ராஜஸ்தானிலிருந்து வரும் இந்தி மொழி பத்திரிக்கை "ராஜஸ்தான் பத்ரிகா"
! உ.பி,மற்றும் ம..பியில் ஒரு பய வாங்க மாட்டன் ! அது வித்தியாசமான "இந்தி" !
ஹரியானாவில் பேசும் இந்தி "ஹரியான்வி " ! நான்தான் சுத்த இந்தி நு அவன் அருவாள எடுப்பான் !
தெரு நாய் சொரிஞ்சே தான் சாகும் !
சாகட்டும் !!!
4 comments:
இந்தி திணிக்கப் படுகிறதா என்ன?
இந்தி ஒழிக என்றவரெல்லாம் இன்று இந்தி பேசி பழகி ஒன்றிவிட்டார்களே? இதென்ன இன்னொரு பூதமா?
இந்தி இனிமையான மொழி. பிடித்தவர்கள் ரசிக்கட்டும். மற்றவர்களுக்கும் சேர்த்து.
கட்டாயப் படுத்துதல் என்பது கூடாது என்பதே என் கருத்து ஐயா
//இந்தி ஒழிக என்றவரெல்லாம் இன்று இந்தி பேசி பழகி ஒன்றிவிட்டார்களே? //
எங்கே ஒன்று பட வேண்டுமோ அங்கு ஒன்று பட்டு விட்டனர்.
அங்கே, ஜாதி, இனம், மொழி, எந்த வித்தியாசமும் இல்லை.
அப்பாதுரை க்கு ஜே.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
Post a Comment