Saturday, June 21, 2014

சட்டத்தின் முன்னால் "இந்தி " .....!!!



1950 ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது ! தேவநாகரி வரி  வடிவத்தில் "இந்தி" இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்கும் ! இன்றிலிருந்து பதினைந்து ஆண்டுகள் இந்தியோடு ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கும் என்று அரசியல் சட்டம்  அறிவித்தது !

1965ம் ஆண்டுக்குள் இவர்கள் இந்தி மொழியை வளர்த்து எல்லாரும்  ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படித்தி விடுவர்கள் என்ற நம்பிக்கையில் செய்தார்கள் !

இதுநடை பெறவில்லை ! 

ஒரு புறம் இந்தி ஆதரவாளர்களின் அவசரம் ! மற்றொரு புறம் இந்தி பேசாத மக்களின்  தங்கள் தாய் மொழி என்னாவது என்ற பயம் ! இந்த நிலைமையில்  1965   க்கு பிறகு என்னாகும் என்ற விவாதம் நடந்தது !

இதனை சரி செய்ய மொழி மசோதா (languagebill) 1963ம் ஆண்டுகொன்டுவந்தர்கள்!

பதினைந்து ஆண்டுகளுக்குபின்பும் ஆங்கிலம் தொடரும் (may continue ) என்று திருத்தினார்கள் !

1967ம் ஆண்டு இது மீண்டும்திருத்தப்பட்டது !
அதன் படி,இந்தி பேசாத  மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலம் நீடிக்கும் என்று அறிவித்தார்கள் !

1965ம் ஆண்டு தமிழ்நாட்டில் மொழிக்கான போராட்டம் நடந்தது ! இதனை முடிவுக்கு கொண்டுவர , கம்யுனிஸ்டுகள் புரிந்த சேவை வரலாற்றில் மறைக்கப்பட்டது ! பி.ராமமூர்த்தி , மோகன் குமாரமங்கலம், கே.டி.கே. தங்கமணி ஆகியோர் அப்போது அமைச்சராயிருந்த இந்திரா காந்தி அம்மையாரோடு இணந்து கொண்டுவந்த சமரச தீர்வு பற்றி இன்றய  இளைஞர் களுக்கு  சொல்ல வேண்டியவை ஏராளம் !  

 போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் தங்களுக்கும் இந்த போராட்டத்திற்கும் தொடர்பில்லை என்று அறிவித்தார்கள் !

அனாதையாக விடப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் வந்தன !

மதுரையில்  போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக  எல்.ஐ.சி ஊழியர்கள் நின்றது ஒரு வரலாற்று நிகழ்வு !

இவை பதிவு செய்யப்படவில்லை !

பதிவு செய்வேன் !!!


3 comments:

”தளிர் சுரேஷ்” said...

அறியாத தகவல்கள்! அறிந்துகொள்ள காத்திருக்கிறோம் ஐயா! பகிர்வுக்கு நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் பதிவு செய்யுங்கள் ஐயா
அறியக் காத்திருக்கிறோம்

Unknown said...

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது ஆறாம் வகுபபில் இருந்தேன்.மதுரை வடக்கு மாசிவீதியில் காங்கிரசார் வன்முறையில் ஈடுபட்டது தெரியும்.எல்.ஐ.சி ஊழியர்கள் மாணவர்களுக்காதரவாக இருந்த நிகழ்வு எனக்கு தெரியாது.பதிவு செய்யுங்கள் தோழர்..நன்றி