குஜராத்தின்
சுவாமி நாராயண் கோவிலும்
உச்ச நீதி மன்ற தீர்ப்பும் ..........!!!!
எங்கள் அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு 1992ம் ஆண்டு அகமதாபாத்தில் ந டைபெறுவதாக இருந்தது !
"paapar masUthi itikkappatta நிகழ்வுகளை ஒட்டி நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதும் மாநாடு தள்ளி வைக்கப்பட்டது !
1994ம் ஆண்டு அதே அகமதாபாத்தில் மாநாடு நடந்தது ! நான் பார்வையாளனாக கலந்து கொண்டேன்!
அகமதாபாத்திலிருந்து பத்து மைல் தள்ளி புதிய தலைநகரம் "காந்தி நகர் "உள்ளது ! அங்கு தான் மாநில செயலகம்,சட்டமன்றம் அரசு அலுவலகங்கள் உள்ளன ! அங்குதான் குஜராத் மக்களின் சித்த மாகாபுருஷர் "சுவாமி நாராயண் " கோவிலும் உள்ளது ! கோவிலில் குறைந்தது எட்டு டன் சொக்க கெட்டி தங்கத்தில் அமர்ந்த நிலையில்சுவாமியின் சிலை உள்ளது !
கோவில் இறக்குமதி செய்யப்பட பளிங்கு காற்காளால் உரூவாக்கப்பட்டிருநதது ! ஐந்து ஏக்கர் பரப்பில் Multi Media காட்சி இருந்தது ! கோவில் முழுவதும் A /C செய்யப்பட்டு இருந்தது !
இந்தக் கோவிலில் 24-9-02 ம் ஆண்டு தீவிர வாதிகள் இருவர் புகுந்து தாக்குதல்நடத்தினர் ! இதில் அப்பாவி மக்கள் 36 பேர் கொல்லப்பட்டனர்! 86 பேர் படுகாயம் அடைந்தனர் ! 24 மணீ நேரம் நடந்த சண்டையில் இரண்டு தீவிர வாதிகளும் சுட்டுகொல்லப்பட்டனர் !
விசாரணை நடந்தது ! தீவிர வாதிகளோடு சதி நடத்திய வர்கள் கைது செய்யப்பட்டு" போடா" நீதிமன்றத்தில் 2002ம் ஆண்டு வழக்குபோடப்பட்டது !
ஆதம் பாய்,அப்துல்,அஜ்மீரி,முகம்மதலி பாய் , முப்ஃதி ,சந்த்கான் ,ஆகியோருக்கு மரணதண்டன விதிக்கப்பட்டது ! இது தவிர பலருக்கு ஆயுள் தண்டனையும் ,சிலருக்கு 10-முதல் 3 ஆண்டுகள்வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது !
இன்றய பிரதமர் மோடி தான் அன்று முதலமைச்சராக இருந்தார் !
தண்டிக்கப்பட்டவர்கள் குஜராத் உயர் நிதிமன்ற த்தில் மேல் முறையிடு செய்தனர் ! உயர் நிதிமன்றம் சாட்சிகளை விசாரித்து தண்டனையை உறுதி செய்தது !
தண்டிக்கப்பட்டவர்கள் உச்ச நிதிமன்றத்திற்கு முறையீடு செய்தார்கள் !
உச்ச நிதிமன்ற நீதிபதிகள் எ.கே பட்நாயக் அவர்களும், இ.கோபால் கௌடா அவர்களும் விசாரித்தனர் !
குற்றம் சாட்டப்பட்ட அத்துணை பெரும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தனர் !
281 பக்கம் கொண்ட தீர்ப்பில் அவர்களை விடுதல செய்ய என்ன காரணம் என்றும் விளக்கியுள்ளனர் ! பல காரணங்களை சுட்டிக்காட்டியிருந்தாலும்
உதாரணத்திட்காக இங்கே ஒரே ஓரூ காரணத்தை பதிவிடுகிறேன் !
"24 மணி நேர துப்பாக்கி சண்டையில் தீவிர வாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் ! ஒரு தீவிர வாதியின் உடம்பில் 48 குண்டுகள் பாய்ந்திருந்தன 1 மற்றொருவன் உடம்பில் 60 குண்டுகள்பாய்திருந்தன !சல்லடையாக அறிக்கப்பட்டிருந்த அவர்கள் ரத்த,சதைசகதியில் கிடந்துள்ளனர் !அவ்ர்கள் உடைகள் கிழிந்து கந்தலாகீருந்துள்ளன ! அவர்கள் சட்டைப்பையிலிருந்து உருது மொழியில் ஒரு கடிதம் குற்றம் சாட்டப்பட்டவர்கள தொடர்பு படுத்துவதாக கண்டெடுக்கப்பட்டுள்ளது ! அந்த கடிதம் மட்டும் ரத்தக்கரையோ எந்த அழுக்கோ படாமல் இருந்தது எப்படி ?" என்று நீதிபதிகள் தங்கள்தீர்ப்பில்கேட்டுள்ளனர்!
கிட்டத்தட்ட பனிரெண்டு ஆண்டுகளவர்கள் சிறையில் இருந்துள்ளனர் ! கொஞ்சம் கவனம் பிசகி இருந்தால் ஆறுபேர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் !
2014ம் ஆண்டு ஏப்ரல் மேமாதம் மக்களவத்தேர்தல் நடந்தது ! மே மாதம் 16ம் தேதி தேர்தல் கமிஷன் வாக்குகளை எண்ணி அறிவிக்க ஆரம்பித்தது ! நாம்'மோடியா -ஜாடியா "என்று மண்டையைப் பிடித்துக் கொண்டிருந்தோம் !
உச்ச நீதி மனறம் அன்றுதான் இந்த தீர்ப்பை அறிவித்தது !
எந்தபத்திரிகையும் போட்டதாக நினவில்லை !
ஆங்கிலத்தில் "இந்து " பத்திரிக்கை போட்டது !
தமிழில் போட்டது " தீக்கதிர் "!!!
!
1 comments:
1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாகமாநாடு தள்ளி வைக்கப்பட்டது ! கோத்ரா நிகழ்வு 2002ம் ஆண்டு நடந்தது ! தவறுக்கு வருந்து கிறேன் ! நன்றி எஸ்.வி அவர்களே !---காஸ்யபன்.
Post a Comment