புராணங்களையே வரலாறாக மாற்ற
பா.ஜ.க திட்டம் .....!!!
" வெற்றி -வெற்றி ! ஆரம்பமாகிவிட்டதடி ! அரூபத்தின் அற்புத வேலைகள் " என்று" மனோகரா " திரைப்படத்தில் வசனம் வரும் !
அரூபமாக அல்ல ! நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ் தன் வேலையை ஆரம்பித்து விட்டது !
ஒய். சுதர்சன் ராவ் என்பவர் திருவாய் மலர்ந்திருக்கிறார் !
"பண்டைக்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதீய முறைமைகள் அதிகமாக உதவியிருக்கின்றன! குறிப்பாக "வர்ணாசிரம தர்மம் " இந்திய சமூகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றிருக்கிறது " என்று கூறியிருக்கிறார் !
இவரைத்தான் பிரதமர் நரேந்திர மோடி இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக நியமித்திருக்கிறார் !
இவர் யார் ?
தேடிப்பார்த்தேன் !
வாரங்கல் நகரில் உள்ள காகடீய பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர் ! முழ நீளத்திற்கு பட்டங்களை வாங்கியிருக்கிறார் !
இவருடைய ஆராய்ச்சியின்படி " சாதி சமூகத்தை படினிலைப்படுத்துகிறது ! வர்ணாசிரம தர்மம் தனி மனிதனின் செயலைக் குறிக்கிறது !" என்கிறார் !
( மனுஷன் குழப்பறான் ! ஒரு மண்ணும்புரியல )
இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்காக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி இந்த "எல்லபிரகத சுதர்சன ராவ்" என்ற அய்யரை நியமித்திருக்கிறார் !
இந்த அறிவாளி "சாதி பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துக்கள் தவறானவை ! 700 ஆண்டுகள் நடந்த முஸ்லீம்களின் ஆட்சியின் காரணமாக இது
நடந்துள்ளது ! ஆதிகாலத்தில் சாதிகளால் நன்மைகள்தான் சமூகத்திற்கு நடந்துள்ளன!"என்கிறார் !
ராமர்,கிருஷ்ணர் எல்லாம் வரலாற்று ரீதியாக வாழ்ந்தவர்கள் ! இவை பற்றி ஆராய்ந்து உண்மைகளை மக்களுக்கு சொல்லப் போகிறேன் என்றும் அறிவித்துள்ளார் !
சகல ஆராய்ச்சி மையங்களையும் ஆர்.எஸ்.எஸ் காவிமயமாக்கப் போகிறது !
விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக "குருநாத ஜோசியரை" நியமிப்பார்கள் !
கேக்க முடியாது !
ஏன் ?
அள்ளி போட்டோம்ல வாக்குகளை !!!
1 comments:
சாதியின் பெயரால் ஏற்படுகின்ற அநீதிகளைக் களைவதற்குப் பதில், அதன் மேன்மைகளைப் பேச ஆரம்பித்தால், அவ்வவளவுதான்
மீண்டும் பின்னோக்கித்தான் பயணிக்க வேண்டும்
Post a Comment