"சமஸ்கிருதம்
இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமா ? .."
"ஆதிசிவன் பெற்றெடுத்தான் " தமிழை என்பார்கள் ! தமிழை தன பக்கமிழுக்க சைவர்கள்சொன்ன வார்த்தை இது !
பழம் பெரும் நூலான "தொல் காப்பியம் " சமணரால் எழுதப்பட்டது ! தமிழ்மறையாம் திருக்குறள் வள்ளுவனால் எழுதப்பட்டது ! வள்ளுவன் சைவனல்ல !
ஐம்பெரும் காப்பியங்களை எழுதியவர்களில் எத்தனை பேர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் !
ஒளவை இந்துவா ? ( எஸ்.எஸ். வாசனும் ,கொத்தமங்கலம் சுப்புவும் என்னை மன்னித்தருள்வாராக )
மொழிக்கு ஏது மதம்? ஏது சாதி ?
சமஸ்கிருதத்தின் முதல் நூல் "அஷ்டா த்யாயி " என்ற இலக்கண நூல் ! இதனை எழுதியவர் பாணினி என்பவர் ! ( கி.மு. 3-5 நூற்றாண்டு )
சீன யாத்திரிகர் யுவான் சுவாங் குறிப்புப்படி இவர் பிறந்த கிராமம் "சல்தூரா "! இது தட்சசீலா பல்கலைஇருந்த இடத்திற்கு அருகில் உள்ளது ! அங்கு இவருக்கு சிலை உள்ளது ! இந்த நூலை எழுத அவருக்கு அரோமி என்ற வரிவடிவம்பயன்பட்டதாக மொழியியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள் ! ஆரோமி என்ற மொழி யேசுகிறிஸ்துவின் குல மொழி யாகும் ! தட்சசீலம் இன்றய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ளது !
புத்தமத வரலாற்றுக் குறிப்புகள் சம்ஸ்கிருத மொழியில் உள்ளன ! பர்மாவிலிருந்தும்ஜப்பனிலிருந்தும் இந்தியா வந்து பாலி மொழியும்,சமஸ்கிருதமும்கற்றுச்சென்ற வர்கள் அதிகம் !
நாகபுரியில் பாலி மொழி மற்றும் சம்ஸ்கிருத மொழியில்முனைவர் பட்டம்பெற்ற நண்பர்கள் எனக்கு உண்டு ! அவர்களில் பலர் பௌத்த மதத்தினர்!
ஜெர்மனியிலிருந்து "மாக்ஸ் முல்லர் "வந்து சம்ஸ்கிருதத்தின்
மேன்மையைஉலகிற்குச் சொல்லாமல்போயிருந்தால் இன்றய "இந்துக்கள்" பலருக்கு "சுக்கலம் பரதரம் " என்ற வழிபாட்டு முறையே
தெரியாமல்போயிருக்கும் !
ஆனாலும் இந்த இந்துத்வாகாரர்கள் கையில் சம்ஸ்கிருதம் " படும்பாட்டை சொல்லி முடியாது !
எது வெல்லாம் கூடாதோ அதன செய்தே தீருவது என்று முனைப்பாக இருப்பார்கள் !
சம்ஸ்கிருத மொழியில் பட்டப்படிப்பு,முது நிலை ,முனைவர் வரை சோதிடம் படிக்கலாம் ! இதனை சாதித்தவர் டாக்டர் எம்.எம்.ஜோஷி ! இவர் அணு விஞானத்திலும் ,இயற்பியலிலும் பேராசிரியராக இருந்தவர் !
நாகபுரி அருகில் "காம்டி "என்ற இடமிருக்கிறது ! இந்தியாவிலேயே காளிதாசனுக்கு கோவில் உள்ள இடம் ! "குல குரு கவி காளிதாஸ் பல்கலைகழகமென்று உள்ளது ! அதில் சம்ஸ்கிருத இலக்கியம், இலக்கணம்,தத்துவங்கள் ஆகியவற்றைசம்ஸ்கிருத மொழியில்பட்டமேற்படிப்புவரை படிக்கலாம் !!
எல்லாவற்றிர்க்கும்மெலாக "நாத்திகம்" பாடத்திலும் பட்ட மேற்படிப்பு படிக்கலாம் !
இந்த இந்துத்வா வாதிகள் இந்த பல்கலையை கெடுத்து குட்டிசுவராக்கி
விடாமல் இருக்க வேண்டும் !
மிக நவீனமான கண்டு பிடிப்புகள் கூட சம்ஸ்கிருதத்தில் உள்ளது என்று சாதிக்கிற்றர்கள் !
முக நூலில் இவர்கள் எழுதும் அபத்தத்திற்கு அளவே இல்லாமல் போயிற்று !
தண்ணிருக்கு நவீன formule H 2 o ! இது அதர்வண வேதத்தில் இருப்பதாக நரசிம்ம ராமானுஜம் என்பவர் குறிப்பிட்டுள்ளார் ! ( பிராணம் ஏகம் அன்யாத்வே ) என்ற வாசகத்தையும் எடுத்து காட்டியுள்ளார் !
சமண மதத்தில் உலகம் எப்படி உருவானது என்ற கேள்வியை எழுப்பி பதில்கூறுவார்கள் !
உலகம் "ஸ்கந்த"ங்களால் ஆனது என்கிறார்கள் ! "ஸ்கந்தம் "என்றால் molecule !
இதனை பிரிக்க முடியாது என்று அன்றைய அறிவியல் கருதியது !
ஆனால் புஷ்பக விமானம் அன்றே இருந்தது என்று சாதிப்பவர்கள் இருக்கிறார்கள் !
டாகடர் அப்துல் கலாம் மதுரை வந்திருந்தார்கள் ! அப்பொது அவ்ர்கள் ஏவுகணை பற்றிய தீவிர ஆராய்ச்சியில் இருந்தார் ! அவரை சந்திக்க தீக்கதிர் பத்திரிக்கை நிருபர் நாராயணன் சென்றிருந்தார் ! அவரிடம் "புஷ்பக விமானம் பற்றி கேட்டார் !
"அன்றைய புராண காலத்தில் அறிவியல் அந்த அளவுக்கு வளர்ந்திருக்க வாய்ப்பு இல்லை ! ஆனால்பறவைகள் போல தானும்பறக்க வேண்டுமென்று ஒரு மனிதன் சிந்தித்திருக்கிறான் ! அதன கற்பனையாக எழுதி பார்த்திருக்கிறான் ! பல நூற்றாண்டுகள் மனிதன் கனவு கண்டிருக்கிறான் ! அதன் முடிவில் ப்ரைட் சகோதரர்கள் அதன வென்றெடுத்துள்ளார்கள் " என்று விளக்கினார் !
எல்லாம் இருந்தது என்பது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு எதுவும் இல்லை என்பது !
மொழி மக்களுக்குச் சொந்தமானது !
எந்த ஒரு மதத்திற்கும் அல்ல !!!
4 comments:
'இந்துக்கள்' என்பது மொழி கடந்த பரந்த சமூகமாயிற்றே. இந்துக்கள் பலருக்கு சம்ஸ்க்ருதம் என்றால் என்னவென்றே தெரியாதே? ஒரு சில இந்துக்கள் - வெறியர்கள்? - சொல்வதை வைத்து இந்து மதம் சம்ஸ்க்ருதத்தைப் பேணுவதாகவோ சொந்தம் கொண்டாடுவதாகவோ கருதலாமா?
புஷ்பக விமானம் புருடா என்பதை கலாம் அவர்கள் நாடறியச் சொல்லியிருக்கலாமே. ப்ஸ்.. அரசியல்.
அப்பாதுரை அவர்களே ! கால்டுவெல் பாதிரியார் சம்ஸ்கிருதம் பிராமணர்களின் மொழி ! ஆரிய மொழி தமிழ் திராவிட மொழி என்று கூறினார் ! அன்று நம் திரவிடக் குஞ்சுகளும் அதன ஏற்றுக் கொண்டு அரசியல் நடத்தின ! பிடிட்டிஷ் அரசுக்கு இது மிகவும்சவுகரியமான ஓன்றூ ! ஒரு பக்கம் மத மாற்றம் 1 மற்றொரு பக்கம் அரசியல் ஆதிக்கம் ! தமிழ் நாட்டை தவிர ஆந்திரா,கர்னாடக,கேரளா மாநிலங்களில் இதன ஏற்கவில்லை ! அதனல் அங்கு சம்ஸ்கிருத மொழி எதிர்ப்பு இல்லை ! இது பற்றி நிறைய விவாதிக்க வேண்டும் !---காஸ்யபன்.
கலாம் அவர்கள்பத்திரிகையாளர்கள் கூட்டத்தில்தான் கூறினார் ! "தீக்கதிரில் போட்டர்கள் ! ---காஸ்யபன்.
Post a Comment