skip to main |
skip to sidebar
"நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமி !!!"
மூடப்பழக்க வழக்கங்களை முடிவுக்கு கொண்டுவர தன் வாழ் நாள் முழுமையும் போராடியவர் டாக்டர் .நரேந்திர தபோல்கர் !
பில்லி ,சூனியம், பேய்,பிசாசு ஓட்டும் மந்திரவதிகளிலிருந்து, ஏசு வருகிறார் ,புட்டபர்த்தி சாய்பாபா என்ற போலிச்சாமியார் வரை ஓட ஓட விரட்டியவர் அவர் !
ஏசுவின் கண்களிலிருந்து கண்ணிர் வருகிறது என்று கூறி அதனை புனித நீராக குடிக்கும் கிறிஸ்தவர்களிடம் அது புனித நீரல்ல , மாடியில் உள்ளகழிபிடத்திலிருந்து கசியும் "கழிவு நீர்" என்று நிருபித்த "இடமருகு" அவர்களின் துணையாக இருந்தவர்" தபோல்கர் "!
மராட்டிய மாநில மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அவர் !
2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20 நடை பயிற்சியில் சென்று கொண்டிருந்த போது அவரை சுட்டுக் கொன்றார்கள் !
மராட்டிய முதல்வர் காந்தியைக் கொன்றவர்கள் தான் தபோலகரையும் கொன்றார்கள் என்று பகிரங்கமாக அறிவித்தார் !
மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கான அவசர சட்டத்தையும் அறிவித்தார் !
இந்த கொலைகாரர்களைகண்டுபிடிக்க புனே நகர போலீஸ் கமிஷனர் "குலாப் ராவ் போல் "தலைமையில் ஒரு குழு செயல் பட்டு வருகிறது !
ஒருவருடம் நெருங்கி விட்டது ! அவர்களால் "கண்டுபிடிக்க" முடியவில்லை !
தற்போது புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் !
விளக்கு ஏற்றி கோலம் போடுகிறார்கள் ! அதன் முன் கோலம் போட்டு ஒருபலகையை வைத்தார்கள் ! சாமிகும்பிட்டு அதன் மெலொருகிண்ணத்தை வைத்து "ஆவி" யை வரவழைத்து "குறி "கேட்கிறார்கள் !
"Gulaab rao Pol using planchet to crack Narendra Dabholkar s murder mystery " TOI - 26-7-14
"நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமி "
(என் பிரியமான தாய் நாடே உன்னை வணங்குகிறேன் )
2 comments:
ஆவியை வரவழைத்துக் குறி கேட்பதா?
டாக்டர் .நரேந்திர தபோல்கர் அவர்களை அவமானப்படுத்தும் செயல் அல்லவா?
வருந்துகிறேன்.
மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கம் பற்றி தெரிந்தால் எழுதுங்களேன்?
Post a Comment