Wednesday, August 13, 2014

(இது ஒரு மீள்பதிவு )

ABOUT

POSTS RSS

CONTACT

LOG IN

Friday, December 13, 2013


நாத்திகம், பகுத்தறிவு , பார்ப்பன எதிர்ப்பு .....!


சர்வதேச அளவில் நடந்த செமினார் ஒன்றுக்கு அழைக்கப்பட்டென் ! Interfaith seminaar ! எல்லா மதத்தவர்களும் வந்திருந்தர்கள்.என்முறை வந்த போது " I am not a believer ! But I beleive those who believe in God ! Because the are my fellow human beings !  என்று ஆரம்பித்தேன் ! வெளி நாடுகளிலும் நாத்திகர்கள் உள்ளார்கள் ! சர்வதெச அளவில் Rationalist assn கள் உள்ளனர் ! கடவுள் இல்லை என்பவன் நாத்திகன்! அவனுக்கும் இல்லாத கடவுளுக்கும் பகை இருக்க வாய்ப்பில்லை ! தமிழகத்தில் தோன்றிய கடவுள் மறுப்பு வாதம் பார்ப்பன எதிர்ப்பாக சுருங்கியது தான் சோகம் ! கடவுளில்லை என்பதை மறுக்க முயற்சிகள் எடுப்பது சிரமம்! பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்பில் கடவுள் இல்லை என்பதையும் அரைப்பாடமாக வாவது  வைத்திருக்க நாம் முயற்சிக்கவில்லை! இன்று அமெரிக்காவில் அந்த முயற்சி நடைபெற்று வருகிறது ! சோவியத்தில் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்யமுடியும் ! புரட்சிக்கு முன்பு அது முடியாது ! நம் கல்லூரிகளில் பல்கலைக்கழக்ங்களில் தத்துவம் படிக்கும் மானவர்களுக்கு கூட நாத்திகம் பற்றி அறிவியல் பூர்வமாக கற்றுத்தர வழியில்லை ! காலையில் வானோலியில் ஐயப்பமார் பாட்டு, பஜனை, எல்லம்  உண்டு  !கடவுள் மறுப்பு பற்றி கிடையாது ! ஊடகங்கள், பத்திரிகைகள், எல்லாம் கடவுள் உண்டு என்று பிரச்சாரம் செய்ய முடியும் ! நாத்திகர்கள் பலவீனமானவர்களாக்கப்பட்டு விட்டர்கள் !  வெறும் பர்ப்பன எதிர்ப்பு என்பது பகுத்தறிவு வாதம் அல்ல ! புத்தியோடு பிழையுங்கள் தோழர்களே! 


7 comments:

Anonymous said...

பார்ப்பனர்கள் அளவுக்கு புத்தியோடு "பிழைக்கத்" தெரியாதவர்கள் தான் இந்த நாத்திகர்கள் பாவம். விட்டு விடுங்கள் ஆமாம் ஒரு சிறு கேள்வி உங்கள் தொடர்வோர் பட்டியலில் பாரதசாரி என்ற நபர் சோதிட மூட நம்பிக்கையும் நசிகேத வெண்பாவும் எந்த வகையில் அடங்கும் ? நீங்கள் உண்மையில் நாத்திகர் போர்வையில் ஊரை ஏமாற்றும் ஒரு போலி என்றே குற்றம் சாட்டுகிறோம். வைதீகப் பார்ப்பனர்களை விட முற்போக்கு பார்ப்பனர்கள் ஆபத்தானவர்கள் என்பது சரியே. உண்மையில் நமது நாத்திக நண்பர்கள் சரியாகத்தான் உள்ளார்கள் இந்த கடவுள் மந்திரம் சோதிடம் போன்ற மூட நம்பிக்கைகளைப் பரப்பிய பார்ப்பனர்கள் என்ற மூலத்தை தாக்குகிறார்கள் அது வெறும் பார்ப்பன எதிர்ப்பல்ல அது ஒட்டு மொத்த பார்ப்பனீய மதிப்பீடுகளின் மீதான எதிர்ப்பு என்ன இருந்தாலும் நமக்கு "போஜனம்" நடக்க வேண்டுமல்லவா ?

sury siva said...

As you said there is no possibility of enmity between God and an atheist, as once one feels a feeling of enmity, unawares to oneself, one believes in the existence of God.
However, there could be jealousy as the atheist could feel that God whose existence he opposes tooth and nail is more popular and will continue to be so, despite his life long struggles.
Having said this,
Anyway, for people who have no other work, both
theism and atheism must be providing enough material to grind.

subbu thatha.
www.subbuthatha72.blogspot.com

kashyapan said...

எழில் பிரபாகரன் அவர்களே ! வருகைக்கு நன்றி ! ஏன் இவ்வளவு அவசரம் ! திரு பாதசாரி அவர்கள் ஆண்டுக்கு ஒன்ரு அல்லது இரண்டு பதிவுகளை இடுவார் ! என்னுடைய பதிவுகளுக்கும் ஒன்று இரன்டு முறைபின்னூட்டம் இட்டுள்ளார் ! மிகவும் நகைசுவை யுள்ள மனிதர் ! ஜனவரி மாதம் சொதிடத்தை கிண்டல் செய்து ராசி பலன் எழுதியுள்ளார் ! அதனப் படிக்காமலேயே நீங்கள் அது பற்றி விமரிசித்துள்ளது உங்கள் அவசரத்தையே காட்டுகிறது ! "நசிகேத வேண்பா"வை எழுதியவர் சர்வதேச பகுத்தறிவாளர் சங்கத்தைச்சேர்ந்த செயல் வீரர் ! இந்திய தத்துவ விசாரணையில் மிகவும் முக்கியமான கடோபனிஷ்த் அறிவியல்ரீதியாக விவாதிக்கப்படும் ஒன்றாகும் ! அதன தமிழில் வெண்பாவாக இயற்றியுள்ளார் ! விரைவில் புத்தகமாக வரும் ! அது தமிழுக்கு அவர் கொடுத்த கொடையாக கருதப்படும் ! "பகுத்தறிவு " உலகம் பூராவும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று! அதன பெரியார் திடலுக்குள் அடக்கி விட முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் ! அது சரி ! உங்கள் வலத்தளத்தை பார்க்க முடிய வில்லையே ? ஏன் ? வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்..

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

தமிழ் நாட்டில் நாத்திகம் என்பது காசுக்காக கறுப்பு சட்டை அணியும் கூட்டம் செய்யும் பம்மாத்து. இன எதிர்ப்பு நாத்திகமாகாது - உண்மை தான்.

எழில் அவர்களே.. கடவுள் நம்பிக்கை ஜோதிடம் இவற்றைப் பரப்பியது பார்ப்பனரா? ம்ம்ம்.. உலக வரலாறு படித்தால் உங்கள் கணிப்பு எத்தனை முரணானது என்று புரிந்து விடும்.

பார்ப்பனீயத்தைக் கடைபிடிக்கும் விதத்தில் தமிழ் நாத்திகர்கள் தான் பார்ப்பனர்கள். இதை ஆணித்தரமாகவும் ஆவேசமாகவும் எடுத்துச் சொல்ல பிராமணர்களுக்குத் தேவையில்லாது போனது ஒரு வருத்தம் என்றால் நேரம் இல்லாது போனது பெரும் வருத்தம்.

எத்தனை காலம் கடவுள் எதிர்ப்பு என்ற போலிப் போர்வைக்குள் இன எதிர்ப்பை மூடி வைப்பார்கள் போலி நாத்திகர்கள்?

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...
This comment has been removed by the author.