skip to main |
skip to sidebar
நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்களும்
"மீமாம்ச " தத்துவமும்........!!!
"கடவுள் இல்லை ! வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள் எவருமே இருந்ததில்ல ! வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்குகளை நியாயப்படுத்த கடவுள் பெயர்களை குறிப்பிடுகிறார்கள் "
"கடவுள் இல்லை ! தேவையும் இல்லை ! மனிதன் வாழ சில கட்டுப்பாடுகள் ,விதிகள்வேண்டும் ! அதனை தர்மம் என்று அழைத்துக் கொள்ளலாம் ! அந்தவிதிப்படி நடக்கலாம் "
"மீமாம்ச " தத்துவத்தின் அடிப்படை கிட்டத்தட்ட இது தான் !
நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவ்ர்கள் "மிமாம்ச தத்துவமும் தர்மத்தின்விதிகளும் " என்றா நூலினை எழுதியுள்ளார் ! அற்புத மான அந்து நூலுக்காக அவருக்கு "கவுரவ டாக்டர் "பட்டம் அளித்துள்ளது லால் பகதூர் சாஸ்திரி பல்கலை கழகம் ! Amity பல்கலைகழகம் சட்டத்துறைக்காக அவருக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளது !
நிதிபதி ஒருவர்" ஓண்ணங்கிளசிலேருந்து வேதம் சொல்லிக் கொடுக்கணும் ! அரை க்ளாசிலேருந்து பகவத் கீதை சொல்லிக் கொடுக்கணும் நு சொன்னாரு " ! எதயுமே வெளிப்படையாக சொல்லும் கட்ஜு நீதிபதியின் இந்த கருத்தை எதிர்த்து அறிக்கை விட்டார் !
பொதுவாக இவருடைய கருத்துக்கு அறிவு ஜிவிகளிடையே மிகுந்த ஆதரவு இருக்கும் ! அதன் காரணமாகவே இந்துத்வா காரர்களுக்கு இவரை பிடிக்காது !
சம்ஸ்கிருதம் பற்றி இவர் சமிபத்தில் சில கருத்துக்களை சொன்னார் ! நம்ம ஊரு தேசிய குஞ்சுகளுக்கு கோபம் வந்திட்டு !
வரலாறு,மொழியியல், சரித்திர பொருள் முதல் வாதம் ஆகியவை பற்றி அடிப்படை அறிவில்லாதவர்கள் முகநூலில் "குண்டக்க மண்டக்க" எழுதுவதைப் பார்க்கும் போது சங்கடமாக இருக்கிறது !
என்ன செய்ய !!!
0 comments:
Post a Comment