Thursday, August 07, 2014

நாட்டின் உற்பத்தியில் 

முக்கால் பங்கு "கள்ளப்பணம்" !!!

ஒரு நாட்டின் உற்பத்தியில் 75 % சதம் கள்ளக்கணக்கில் வரும் என்றால் நாம் உருப்படுவது எங்கே ? 

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு எவ்வளவு என்று தெரிந்து கொள்ள பல புத்தகங்களை தேடினேன் !  "கூகிளை " யும் அளைந்தேன் !  

உள்  நாட்டு உற்பத்தி என்றால் என்ன ? பதிலை தேடாதீர்கள் ! தேடினால் கிறுக்கு பிடித்து அலைய வேண்டியது தான் !  நாட்டின் மொத்த பண்ட உற்பத்தி, அரசு சிலவு,தனியார் உற்பத்தி, சேவை, இன்னும் பல - வேண்டாமண்ணே ! பேசாம நண்பர் ஒருவர் கிட்ட கேட்டேன் ! தொழிற்சங்க தலைவர்களுக்கு நிதி நிலை  அறிக்கை , அரசின் பொருளாதார கொள்கை ஆகியவற்றை விளக்கும் தலைவர் அவர் !

சமீபத்திய  புள்ளி விபரப்படி இந்தியாவின் மொத்த உற்பத்தி (gross domestic product )  114.12 லட்சம் கோடி ! 

இதுல கணக்குலகாட்டம மறைச்சது கிட்டத்தட்ட 84 லட்சம் கோடி ! மறைச்சது சுப்பனும் குப்பனும் இல்லை ! பன்னாட்டு,இந்நாட்டு பெரும் கம்பெனிகள் ! உற்பத்தி யான பொருள்களின் எண்ணிக்கயிலிருந்து ,மானியம் வரை கள்ளக்கணக்கு எழுதி காட்டினவங்க !

நோக்கியா ஒன்னு போரும் உதாரணத்துக்கு ! 

அம்புட்டு பயகளும் திருட்டுப் பயக !

எனக்கு மாசம் 2000 /-ரூ வரை மருந்துக்கு செலவாகுது ! வீட்ல கொண்டாந்து கொடுப்பாங்க ! எவ்வளவுன்னு பாத்து செக்கு போட்டு கொடுத்துடு வேன்  !

 இந்தமாசம் என்னாச்சுன்னா ? அண்ணே ரோக்கமாகுடுங்க ! செக்கு வேணாம்னு சொல்லிட்டாரு !

 செக்குன்னா கணக்குல ஏறும் ! பில்லு போடணும் ! கொள்முதல், விற்று வரவு ,விறபனை வரி கணக்கு வழக்கு  ?  சிக்கல் எதுக்கு ? ஆடிட்டர் சொன்னாராம் ! ரொக்கம் தான் சரி நு !

கொஞ்சம் கணக்குல காட்டு ! மற்றதை தனியா கொள்முதல் ,விற்று வரவு நு உன்கணக்குல வச்சுக்கோ ! ஆடிட்டர் சொன்னாராம் !

சர்க்காருக்கு காட்டற கணக்கு வேற  ! இவருக்கு உள்ள கணக்கு வேற ! இதுக்கு ஒரு ஆடிட்டர் ! இவங்களை தூக்குல ... ஆத்தாடி! வன்முறைய தூண்டப்படாது !

2000/- ஓவா வுக்கே இம்புட்டுனா அம்பானி ,அதானி, சிங்கானியா என்னாகும் !

இதை தடுக்க முடியுமா ? முடியும் ! எப்படி ?

எதுனாலும் ரொக்க பட்டுவாடா கிடையாது நு வை  ! வித்தது ,வாங்கினது பூராம் கணக்கில வரும் தானே !

credit card மூலம் வாங்க வை ! கணக்குல வந்துடும்ல !

அமெரிக்காவுல அப்படி தானாமே !

செய்ய மாட்டங்க ! நம்மாளு அதுலயும் ஆட்டைய போடறவன் இருக்கான் !!

ஆனா கள்ள பணம் குறையலாம் ல ! 

மாட்டங்க !  கொஞ்சமா செலவளிச்சு பதவிக்கு வாராங்க ! "கட்காரி" என்ன கஞ்சிக்கு இல்லாதவரா ? பாவம் ! அத்வானி ! அவருக்கே சொந்தமா கம்பெனி இருக்காம் ! 

நாம அனுப்பிச்சவன் எல்லாம் என்ன மாணிக் சர்க்காரா ? இ.எம்.எஸ்   ஸா? 

ஓண்ணும் பண்ண முடியாது போல இருக்குண்ணே  !

ஆனா ஏதாவது செஞ்சாகணும்  ணே !!!







1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இப்படியே போனால், பின் எப்படி நாடு முன்னேறும்