Tuesday, August 05, 2014

எதை எழுத .......?

காலையில் எழுந்த உடன் என் கை பேசியில் முகநூல் பார்ப்பது வழக்கம் ! இரவு முழுவதும்"டொக்கு.டொக்கு " என்ற சத்தத்தோடு வந்திருக்கும் செய்திகளை முதலில் பார்ப்பேன் ! 

இரா எட்வின் அவர்களிடமிருந்து " தோழர் குமரேசனின் பலமும் உயிருமாக " என்று படிக்கும் போதே அதிர்ச்சியும். அவநம்பிக்கையும் தோன்ற அடுத்து டாக்டர் ரவிகுமார் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிவித்து விட்டார் !

மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாடு ! அரசரடி பேருந்து நிறுத்ததில் மக்களுக்கான கண் காட்சி ! முழுக்கமுழுக்க அசாக் அவ்ர்களின் தயாரிப்பு ! விடிய விடிய உழைத்திருக்கிறார் ! முடிந்ததும் தன இளம்மனைவி அதனை முதலில் பார்க்க வேண்டும் என்று என்று நினைக்கிறார் ! என்னிடம் என் "மெல்லுந்து" தனை தரமுடியுமா ? என்று கேட்கிறார் ! நான் அப்பொது ஒரு பழைய "விஜய் " வண்டியை ஓட்டையாகிபோனது வைத்திருக்கிறேன் ! இளம் மனைவியை அழைத்துவர சரிபட்டு வராது என்பதால் கொடுக்க வில்லை ! 

வீடு சென்று சைக்கிளில்  அம்மையாரை அழைத்து வருகிறார் ! 

அவர் முகத்தில் வெட்கம் கலந்த பெருமை ! அசாக் கம்பீரமாக என்னைப் பார்க்கிறார் !

வழுக்கையும், எள்ளும் அரிசியுமான தடியும் கொண்ட அசாக் அல்ல அவர் ! எங்கள் நாடகக் குழுவின் கதாநாயக நடிகர் ! "  ரூபா " அம்மையாரை விரும்பி வெற்றிகரமாக கரம் பிடித்தவர் !

தன கணவன் செய்து வந்த தொழிலை விட்டு விட்டு கட்சியின்முழு நேர ஊழியனாக மாறிய போது என் போன்றவர்கள் பயந்தோம் ! ஆனால் "ரூபா"அம்மையார் கஷ்டங்கள் என்ன என்று தெரிந்தும் அவருக்குபலமாக  இருந்து  வெற்றி பெறச்செய்தார் !

அன்றைய காலத்தில் கட்சிப் பணி எவ்வளவு கடினமானது   என்பதையும் எவ்வளவு தூரம் சுயத்தை விட்டுக்கொடுத்து வாழ்க்கையின் சவால்களை சந்திக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து செயல் பட்டவர் ரூபா அம்மையார் !

மதுரையிலிருந்து வேறோடு புடுங்கப்பட்டு சென்னை வந்ததும் மனம் கோணாமல் அசாக் அவர்களின் பின்னால் நின்று காத்தவர் !

காலமெல்லாம் காத்திருந்து மகன்கள் காலுன்றி நிற்கிறார்கள் !

சென்ற ஆண்டு அசாக் அவர்கள் உடல் நலமின்மையால் மருத்துவ மனையில் இருந்த போது அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன் ! அவரது இல்லம் சென்றிருந்தேன் ! எந்த சலனமும் இல்லாமல் அவரை கவனித்துக் கொண்டிருந்தார் ! 

காலை 5 மணிக்கு அசாக்கை தொடர்பு கொண்டேன் ! "நான் இதே நோயால் படுத்தபோது என்னை கவனித்துக் கொண்டார் ! நான் அவருக்கு பணிவிடை செய்வதால் எனக்கு கஷ்டமாகுமோ என்று நினைத்துவிட்டார் போலும் ! Masive Heart attack அவரை கொண்டுபோய்விட்டது !" என்றார் !

அசாக் எட்வின் கூறியது  போல் "உங்கள் பலமும் உயிரும் "அவர்தான் !

முதுமையில் தனிமை கூடாது !

நீங்கள் தனிமையில் இல்லை ! 

ஆயிரக் கணக்கான தோழர்கள்  உங்களுக்கு இருக்கிறோம் !

any way the loss is irrepairable !!!      








1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா