Saturday, January 31, 2015

"ஈஸ்வர அல்லா தேரே நாம் " .....!!!




அருமை  நண்பர் முத்துநிலவன் " ஈஸ்வர் அல்ல தேரே நாம் " என்று ஒரு இடுகை இட்டிருந்தார் ! 

சபர்மதி ஆஸ்ரமம் சென்றிருந்த போது அங்கு காந்தி அடிகளின் பிடித்தமான பாடல்கள் பற்றிய   குறிப்பினை படித்தேன் !"வைஷ்ணவ ஜனதோ" என்ற பாடலை குஜராத்தைச் சேர்ந்த நர்சி மேத்தா என்ற சித்தர் எழுதியது  என்று தெரிந்து கொண்டேன் ! "ரகுபதி ராகவ" பாடலை பாடியவர் ,எழுதியவர் யார் என்பது பற்றி எழுதவில்லை !

சென்னை வந்ததும் கடைகடை யாக ஏறி பழைய காசட்டுகளை வாங்கி பார்த்தேன் ! 1931ம் ஆண்டு அகில   இந்திய ரேடியோவில் பாடிய அந்த பாட்டின் காசெட்டு கிடை த்தது  ! பாடியவர் பெயர் விஷ்ணு தாமோதர் பலூஸ்கர் என்று இருந்தது ! பாட்டை எழுதியவர் பெயர் தெரியவில்லை !

அதை விட முக்கியமான விஷயம்  1931 ம் ஆன்டு காசட்டில் "ஈஸ்வர அல்லா தேரே நாம் " என்ற வரிகள் இல்லை !

பலுஸ்கர்  பற்றி தேட ஆரம்பித்தேன் ! தற்போது தீண் டாமை ஒழிப்பு முன்னணியில் செயல்படும் கணேஷ் அவர்கள் நாகபுரியில் விமானப்படையில் இருந்தார் ! அவரும் நானும் தேட ஆரம்பித்தோம் ! நாகபுரியில் உள்ள "இந்தியா அமைதிமையம்"   (India pe ace  centre) என்ற அமைப்பினை அணுகினோம் ! அதன் இயக்குனராக இருந்தவர் ஜான் செல்லத்துரை ! தமிழ் நாட்டின் சேரன்மாதேவி யைச் சேந்தவர் ! குஜராத்வித்யாபீடத்தீல் முனைவர் பட்டம் பெற்றவர் !

அவர்  இதற்கு பதில் சொல்ல குஜராத் வித்யாபீடத்தை சேர்ந்த நாராயண தேசாய் ஒருவரால் தான் முடியும் என்று  கூறினார் ! நாராயண் தேசாய் ,அண்ணல் காந்தியடிகளின் செயலாளராக இருந்த மகாதேவ் தேசாயின் மகன் ஆவார் ! சிறுகுழந்தயாக காந்தியடிகளின் மடியி ல் தவழ்ந்து அவர்காதை திருகி விளையாடியவர் நாராயண தேசாய் ! தேசாய்க்கு 2011 ல் தொண்ணூருவயது ! அவரை சந்திக்க முடியவில்லை ! நொந்து நூலாகிப்போன எங்களுக்கு டாக்டர் ஜான் அவர்கள் வேறொரு நண்பர் மூலம் தகவல் கிடைக்க உதவினார் ! 

"குஜராத் மாநில மக்கள் கிரமங்களில் உள்ள சொலவடைதான் இது !" என்றார் அந்த நண்பர் !

300 ஆண்டுகளுக்கு முன்னால்  வந்த பிரிட்டிஷ் வியாபாரிகள்  சூரத் நகரில் தங்கள் சரக்குகளுக்கான கிட்டங்கிகளை வைத்திருந்தனர் ! போர்பந்தர் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றவும் ,இறக்கவும் தொழிலாளர்கள் வந்தனர் ! இவர்களில் பார்சிக்கள், ஜைனர்கள், கிறிஸ்துவர்கள் இந்துக்கள்,முஸ்லீம்கள் என்று இருந்தனர் ! இவர்கள் பக்கத்து கிரா மங்ககளில் வசித்து வந்தனர் ! எந்த பண்டி கைகளையும் ஒன்றாக கூடி கொண்டாடி மகிழந்தனர் ! "அரே  1ஈஸ்வர் க்யாஹை ! அல்லா  க்யாஹை ! சப்கோ சன்மதி தேவ் ! " என்று சொல்வார்கள் !

காந்தியின் தண்டியாத்திரியின் போது அவர் புறப்பட்டபோது அவரோடு வந்தவர்கள் 78 பேர் ! செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகியது ! அவர்களோடு ஏராளமான துறைமுக தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டனர் ! 

மாலை நேர பிரார்த்தனை கூட்டத்தில் விஷ்ணு தாமோதர் பலுஸ்கர்  பாடுவார் ! 

அவர் "ரகுபதி ராகவ ராஜா ராம் 

               பதித பாவன சீதாராம் " என்று பாடியதும் ,தொழிலாளர்கள் 

                "ஈச்வர அல்லா தேரே நாம்

                   சப்கோ சன்  மதி தே  பகவான் " என்று எதிர் பாட்டு பாடுவார்கள் !

இதனைக் கேட்டு மகிழ்ந்த அண்ணல் காந்தி அடிகள் இனிமேல் இந்தவரியையும் சேர்த்து பாடுமபோடி கேட்டுக் கொண்டார் ! 

எங்கள் தேடல் வெற்றிகரமாக முடிந்தது !!!

(சுதந்திர போராட்ட வீரரும் பார்வை அற்வருமான விஷ்ணு திகம்பர் பலூஸ்கர்  பற்றி தனியாக எழுத வேண்டும்! எழுதுவேன் )




Wednesday, January 28, 2015

கள மாடுவோம் !

களத்தையும் நாமே தீர்மானிப்போம் !!!



அகமதாபாத் ரயிலடியில்" டீ " விற்றவர் என்று பிரச்சாரம் செய்யப்பட மோடி ஆட்சிகட்டிலி ல் ஏறி கிட்டத்தட்ட எட்டு மாதங்களாகிவிட்டன !

தேர்தலுக்கு முன்பும் பின்பும் கார்பரேட் பத்திரிகைகள் மக்கள் கவனத்தை திசை திருப்பி வலதுசாரிகளின் சாகச நடவடிக்கைகளை மக்கள் முன் மறைத்தன !

கார்பரெட்டுகளின் நன்மைக்காக மக்கள் விரோத முடிவுகள் ஓரங்கட்டப்பட்டு கவனம் சிதறடிக்கப்பட்டன !

"தெருவிளக்கு " பகுதியில் "தீக்கதிர் " பத்திரிகையில் வந்த தகவல்கள் பயத்தை தருகின்றன !

அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி நடந்த "கூத்துக்களை " அதில் விவரித்துள்ளார்கள் !

1. கார்பரேட் கம்பெனிகளுக்கு ஈன கிரயத்தில் நிலம் கொடுக்க நில ஆர்ஜித சட்டம் கொண்டுவந்துள்ளார்கள் !

2. அரிசி,கோதுமை ஆகிய அத்தியாவசியஉணவுப்பண்டங்களை  தற்போது 63% சதம் மக்களுக்கு கொடுக்கிறார்கள் ! இதனை 40% சதமாக குறைத்து விட்டர்கள் !இனி இந்திய  மக்களில் 60 சதம்பேருக்கு உணவு பாதுகாப்பு என்பது கிடையாது !

3.இந்திய உணவு கார்பரேஷன் இனி கொள்முதல் செய்யாது ! விவசாயிகளிடம் கார்பரேட் கமபெனிகள் தான் கொள்முதல் செய்யும் ! அவ்ர்கள் சொன்ன விலைக்கு தான் விவசாயி விற்க வேண்டும் ! கம்பெனிகள் விற்கும் விலைக்கு தான் வாங்கவேண்டும் ! "வால்மார்ட் "உள்ளுர் ரிலயன்ஸ் வரை கொள்ளை அடிக்கலாம் !

4.உயிகாக்கும் மருந்துகள் காப்புரிமைசட்டத்தின்கீழ் இருப்பவை !அவற்றிற்கு விலக்கு அளிக்கப்படும் ! பணம் இருப்பவன் விலைகொடுத்து மருந்துவாங்கிஉயிர காத்துக்கொள்ளலாம் !இல்லாதவன் ...?

5.திவாலாகிப்போன அமெரிக்க இன்சுரன்ஸ்  கம்பெனிகள் இந்தியாவிற்குள் நுழையலாம் !அதற்கு வசதியாக அந்நிய முதலீட்டு வரம்பு 49% சதமாக உயர்த்தப்படும் !

6.அணு உலை  மூலம் மின்சாரம் தயாரிக்க அமெரிக்க கம்பெனிகள் தளவாடங்களை வழங்கும் ! கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் அணு உலைகள் உருவாக்கப்படவில்லை ! அங்கு மிச்சமிருந்த துருப்பிடித்த தளவாடங்கள இந்தியாவில் விற்க ஒப்பந்தம் போடப்பட்டது !இந்த உலை களினால் விபத்து ஏற்பட்டால் அதற்கான நட்டஈட்டை அந்த கம்பெனிகள் கொடுக்க வேண்டும் !இது இந்திய சட்டம் சொல்கிறது ! பிரான்ஸ் ,ரஷ்யா ஆகிய நாடுகள் இதனை ஏற்று கொண்டு உலைகளை தந்துள்ளன ! ஆனால் அமெரிக்க நட்ட ஈடு தர மாட்டோம் என்று சண்டித்தனம் செய்கிறது ! இந்திய சட்டத்திலிருந்து அமெரிக்க கம்பெனிகளுக்கு விளக்கு அளிக்க ஒப்பந்த ஆகியிருக்கிறது !

7.அமெரிக்க கம்பெனிகள் இந்தியாவில் செயல்பட எளிதாக இருக்க இந்திய உழைப்பாளர் உரிமைகளை கட்டுப்படுத்த "சீர்திருத்தம் " என்ற பெயரில் சட்டம்கொண்டுவர சம்மதித்திருக்கிறார்கள் !

8. ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தம் போடப்பட்டது !அமெரிக்க எந்த நாட்டுடனும் போர்தொடுக்கலாம் ! இந்தியா அந்தப்போரில் பங்கெடுக்க இராணுவத்தை அனுப்ப வேண்டும் ! அனுப்பமளிருந்தாலும் பரவாயில்லை ! அமெரிக்க போர் தொடுத்தது தவறு என்று கூறாமல் "பொத்திக் ' கொண்டு இருக்கவேண்டும் !இந்த ஒப்பந்தம் மேலும் பத்து ஆண்டுகளுக்கு  நீட்டிகப்பட்டு இருக்கிறது !

இவை எல்லாம் அமெரிக்க அதிபர் வருகையை ஒட்டி இந்த ஜனவரி மாதம் மட்டும் நடந்தவை !

கார்பரெட்  ஆதரவு பத்திரிகைகள் இவற்றை பற்றி மூச்சு விடுவதில்லை !

"மோடி யின் கோட்டுக்கு 10லட்சம் செலவு !ஒபாமா "சூயிங்கம் " தின்றார் !ஒபாமா ஷாருக்கான் பற்றி குறிப்பிட்டார் " என்று மிக முக்கியமான செய்திகளை கொடுத்தன 

வலது சாரிகளும் ,கார்பரெட்டுகளும் மிக சாமர்த்தியமாக சதுரங்கம் ஆடுகிறார்கள் !

 காந்தியா ? படேலா ? என்று விவாதிக்க களமிறங்குகிறோம் !

ராமரா ? நாதுராமா ? என்று யாருக்கு கொவில்கட்டுவது ?இந்தி திணிப்பா? சம்ஸ்கிருத புகுத்தலா என்று பட்டி மன்றம் நடத்துகிறோம் !

அம்பானியும்,அதானியும்,மெலிதான இதழோரத்து புன்னகையை மறை த்துக் கொள்கிறார்கள் !

வலது சாரிகள் விரும்பும் களத்தில் தான் நாம் செயல்பட வேண்டுமா ?

நமது களம் எது ???


 






Monday, January 26, 2015

தோழமை நெஞ்சங்களே ......!!!




தோழமை நெஞ்சங்களே என்று அழைக்கப்படும் போது நட்பையும் தாண்டி நெருங்குகிறோம் !

மேற்கு வங்கத்தை சேர்ந்த நண்பர் சன்யால் அவர்கள் "hello Comrade " என்று கட்டி அணைத்துக்  கொள்வார் ! என் நெஞ்சில் பீரிட்டுக்கிளம்பும் வாஞ்சையை விவரிக்க முடியாது !

நான் ஹைதிராபாத்தில் பணியாற்றும் போது மத்யூஸ் என்ற கேரளத்து நண்பன்  "சகாவே "என்றுதான் அழைப்பான் !நெஞ்சம் விம்மும் !

அருமை நண்பர் இரா.தே. முத்து அவர்கள்  "சக ஹிருதயர்களே " என்று அழைத்திருந்தார் தன பதிவில் ! பின்னுட்டமாக சிலர் அதனை குறைபட்டுக்கொண்டு பின்னூட்டமிட்டிருந்தனர் ! "சக ஹிருதயர்கள் " என்பது சம்ஸ்கிருத வார்த்தை என்று காரணமும் சொல்லியிருந்தனர் !

ஒரு காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்ய கிளர்ச்சி செய்தோம் ! என் உறவினர் ஒருவர் கண்டித்தார் ! "அம்மை மீனாட்சிக்கு சம்ஸ்கிருதம் மட்டுமே புரியும் என்றால் ஊமையன் எந்த மொழியில் வணங்க  வேண்டும் " என்று கேட்டேன் !

தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற அட்டை தொங்க விடப்பட்டிருக்கிறது தற்போது!

வேத காலத்தில் கையாளப்பட்டு வந்த மோழி வேறு ! பிராகிருதம், கிரந்தம்,மற்றும் பேச்சுமொழியில் இருந்தவை அவை ! இந்த மொழியில் என்னுடைய "நல வாக்கை ! மொழிப்ர்ய்ர்க்க வேண்டாம் என்று புத்தர் கூறியுள்ளார் ! 

கி.மு 4ம் நூற்றாண்டில் பாணினி என்ற புலவர் பிராகிருதம்,கிரந்தம் பேச்சு மொழி ஆகியவற்றை திருத்தி மற்றும் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் வரிவடிவத்தையும் இணைத்து சமஸ்கிருத மொழி க்கான இலக்கணத்தை உருவாக்கினார் என்பது மொழியியல் அறிஞர்களின் கணிப்பு ! கிட்டத்தட்ட இதே காலத்தில் தான் தமிழுக்கும் வரிவடிவம் வந்ததாக கருது கிறார்கள் !

பௌத்தர்கள் தங்கள்மத நுல்களை இதன்பிறகு சமஸ்கிருதத்திலும் பாலிமொழிகளிலும் எழுதி வைத்தனர் !

சமஸ்கிருதத்தின் ஆகப்பெரும் படைப்பு "ராமாயணம்", "மகாபாரதம்" ஆகும் ! ராமயணத்தை எழுதிய வால்மீகி அந்தணன் அல்ல ! மகாபாரதத்தை எழதிய வியாசன் அந்தணன் அல்ல ! உலகப்புசழ் பெற்ற கவிஞன் காளிதாசன் அந்தணன் அல்ல! 

சம்ஸ்கிருதம் "தேவ பாடை"யும் அல்ல ! அப்படி இருந்தால் சமணரும்,பௌத்தரும் தங்கள் பிரார்த்தனைக்கு உபயோகித்திருக்க மாட்டார்கள் ! 

இவை கிறிஸ்தவத்தை பரப்ப வந்த "பிரிட்டோ பாதிரியாரும், கால்டுவெல் பாதிரியாரும் விரக்தியில் சொன்னவை !

கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்த இவர்கள் மெல்சாதி  இந்து எவனும் இவர்களை மதிக்கவில்லை ! பல வேலைகளை செய்து பார்த்தார்கள் ! 

மதுரை பாத்திமா கல்லுரியிலிருந்து செல்லும் சாலையில் பிரிட்டோ சிலை உள்ளது ! தலையில் தலைப்பாகை, காதில் குண்டலம் ,மார்பில் முப்புரி நூல பார்த்தால் தெரியும் ! தானும் ஐயர்தான் என்று சொல்லி தங்கப்பல்லக்கில் வந்து உபதேசம் செய்து பார்த்தார் !கால்டுவெல் பாதிரியார் ஒருபடி மேலேபோய் தென் தமிழக வேதக் கோவில்களில் பாதிரியாரை "ஐயர் " என்று கூப்பிட வைத்தார் ! சில பங்கு கோவில்களில் இன்றும் இந்த பழக்கம் நீடிக்கிறது ! தங்கள் மத பிரச்சாரத்திற்கு வசதியாக " பார்ப்பனர்கள், தேவபாடை சம்ஸ்கிருதம் " என்று கிளப்பிவிட்டனர் !

இதனை அரசியல் லாபத்திற்காக சிலர் பயன்படுத்திக் கொண்டனர் ! பிரித்தாளும் பிரிட்டிஷார் தங்களுக்கு சௌகரியமாக இருந்ததால் கண்டு கொள்ளவில்லை  ! 

கேரளம்,ஆந்திரம்,தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சம்ஸ்கிருதம் எல்லாராலும் கற்றுக்கொள்ள[படுகிறது ! 

"அம்பெத்கரைட்ஸ் " பாலி  மற்றும் சமஸ்கிருதத் தில் முனைவர் பட்டம் பெற்று இன்றும் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றுகிறார்கள் ! 

சம்ஸ்கிருதத்தை வைத்து மதவாதிகள் அரசியல் செய்கிறார்கள் !

அதனை கடுமையாக எதிர்ப்போம் !

அதற்காக "ராஜனை விட ராஜவிஸ்வாசியாக மாற வேண்டியதில்லை "!!!





 

Saturday, January 24, 2015

"அட பாவிங்களா "

"ரூம் "போட்டு யொசிப்பானுகளோ .....!!!!!



திரைப்படத்துறையில் மூஸ்லீம் நடிகர்கள் "இந்து"பெயருள்ள பாத்திரங்களில் நடிக்கிறார்கள் ! அவர்களோடு "இந்து " நடிகைகள் ஆடிபாடி காதலித்து நடிக்கிறார்கள் ! 

சில "இந்து "பெண்களை இவர்களில் சிலர் மணம் செய்து கொண்டு நன்றாக வாழ்கிறார்கள் ! 

இதனைப்பர்க்கும் கிராமத்து அப்பாவி பெண்கள் தங்கள் தெருவில் வசிக்கும் முஸ்லீம்   இளைஞனை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் !இது love jihaath ! இத்தனை தடுக்க வேண்டும்  ! என்று "இந்து மகாசபா "அமைப்பின் அதிகார பூர்வமான ஏடு எச்சரித்துள்ளது !

ஷாருக்கான் காதலித்து கௌரி என்ற இந்து பெண்ணை  திருமணம் செய்து கொண்டார் !

அமீர்கான் காதலித்து கிரண் ராவ் என்ற இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார் !

இவர்கள் காதல் உண்மையானால் இவர்கள் இந்து மதத்திற்கு மாற வேண்டியதுதானே என்று கேட்கிறார்கள் !

சைப்ஃ அலி   முன்னள் கிரிகேட் காப்டன் டைகர் பட்டுவாடி  அவர்களின் மகன் ! பட்டுவாடியை நடிகை ஷர்மிளா தாகூர் ஓடி ஒடி காதலித்தார் !பட்டுவாடியின் தந்தை இந்த காதலைஎற்கவில்லை ! பட்டுவாடி காத்திருந்தார் ! அவர் தந்தை இறந்தபின் இருவரும் திருமணம் செய்து கொண்டார் ! பாடுவாடி என்ற சமஸ்தானத்தின்" ராஜா " டைகர் பட்டுவாடி! ஷர்மிளா பட்டுவாடி ராஜ்யத்தின் ராணியாக மாறினார் ! அவர்களுக்கு பிறந்தவர் தான் சைப்ஃ அலி !தற்போதுதிரை ப்படத்தில் நடித்துவருகிறார்! 

 சக நடிகை கரீனா கபூர் ! ராஜ் கபுரூக்கு உறவினர் என்பார்கள் ! காதலித்து திரமணம் செய்துகொண்டிருக்கிறார்கள் !

அவர் இந்து மதத்துக்கு வரவேண்டும் என்கிறார்கள் சங்க பரிவாரத்தினர் !

சோழ வந்தான் சாமிநாதய்யரின் மகன் சுப்பிர மணியன் ! நல்ல படிப்பாளி ! அவர் "பார்சி" மத பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ! சு.சாமியின் மனைவியை "இந்து "மதத்துக்கு மாறச்சொல்ல "தில் "  இருக்கடே உங்களுக்கு ! உங்க பரம்பர வண்டவாளத்தை தண்டவாளத்தில ஏத்திப்புடவாறு சு சாமி !

தஞ்சாசவூரு சக்ரவர்த்தி ஐயங்கார் பேத்தி ஹேமமாலினி ! இந்தி திரைப்பட நடிகை ! இந்தியாவின் "கனவுக்கன்னி"! தர்மேந்திரா என்ற நடிகர சுத்தி சுத்தி ஏழுவருஷம் காதலித்து வாழ்ந்தார் ! தர்மேந்திராவின் மனைவி எதிர்த்தார் ! ரண்டு பெரும் இஸ்லாத்துக்கு மாறினாங்க ! ஆயிஷா  நு பேரை மாத்திக்கிட்டு ரண்டு பெண்பிள்ளைகளை பெத்து நல்ல வாழ்ந்து கிட்டு இருக்காங்க ! போனசா இப்ப பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்!

அவரை இந்துவா மாறச்சொல்லுங்க டே ! உங்க தலைவங்க சந்தி சிரிச்சு போவாங்க !  

இந்துத்வா தானடே உங்க கொள்கை ! பாரதீய ஜனதா கட்சி தாண்டே உங்க கட்சி ! அமீத் ஷா தானடே  உங்க தலைவர் ! அமீத் ஷா இந்துவா ? என்ன தயிருக்கு  தலைவரா வச்சிருக்கீங்க ? அவர இந்துவா மாறச்சொல்லுங்கபா !!!  

 




Tuesday, January 20, 2015

"மார்க்க தர்ஷக் மண்டல் "



இந்தபேரை உச்சரிக்க முடியாம "மெண்டல் " ஆனவங்க உண்டு ! பா.ஜ.க. தன்னுடைய அமைப்புகளுக்கு இப்படிதான் பெயர் வைக்கிறது ! 

குஜராத் கலவரம் நடந்த போது அன்றய பாஜக தலைவர்கள் நேரடியாக அதனை ஆதரித்து அறிக்கைகள் வெளியிடவில்லை ! கடுமையான விமரிசனம் வந்ததால் அப்போது தலைமையில் இருந்த வாஜ்பாய்,அத்வானி ,ஜோஷி ஆகியொர் அதனை விமரிசித்து கருத்து தெரிவித்தனர் !

வெளிநாட்டினர் கேட்டால் நான் என்ன பத்தி சொல்வேன் "  என்று நொந்து கொண்டார் வாஜ்பாய் !

குஜராத்தின் முதலமைசராயிருந்த நரேந்திர மோடியும்,உள் துறை அமைசராக இருந்த அமீத் ஷாவும் ராஜினாமா செய்வதின் மூலம் கட்சியின் மரியாதையை காப்பற்ற வெண்டும் என்றும் கூறினார் !  இதனை அத்வானியும்,ஜோஷியும் ஆதரித்தனர் !

அன்று பிடித்த சனியன் பாவம் இந்த மூன்ரு பேரயும் ஆட்டிப்படைக்கிறது !

ஜோஷியின் வாரணாசி தொகுதியை மோடி கைப்பற்றினார் ! அதற்கு உள்குத்து அமீதஷா ! 

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தொசீனா வரை உள்ள பகுதியில் இந்து ராஷ்ட்றத்தை  உருவாக்கும் கனவில் இருக்கும் பா.ஜ.வின் தலைவராக ஒரு  இந்து அல்லாதவர் தலைவராக வரலாமா  என்ற கெள்வி எழுந்தது ! இதற்குப் பின்னால் ஜொஷியும் அத்வானியும் உண்டு என்று அமீத்ஷா நினைக்கிறார் !

2014ம் ஆண்டு ஜூலை மாதம் அமீத் ஷா ப.ஜ.கவின் தலைவர் ஆகிறார் !

அதற்கு அடுத்த மாதம் அமீத் ஷா ""மார்க்க தர்ஷக் மாண்டல்" என்று ஒரு குழுவை அமைக்கிறார் !  

பா.ஜ.கவின் ஆட்சிமன்றக்குழுவில் இருந்த அத்வானி,ஜோஷி ஆகிய இரண்டு போரையும் அதிலிருந்து அமீத் ஷா விலக்குகிறார் !

பிரதமர் மோடியை கடுமையாக எதிர்ப்பவர்களுக்கு தலைமை தாங்குபவர்கள் தான் இவர்கள் இருவரும் !

கட்சியை வழிநடத்த (மார்க்க தர்ஷக் ) உள்ள கமிட்டியுள் இவர்கள் இருவரும் செயலாற்றுவார்கள் ! இவர்களுக்கு உதவியாக படுத்த படுக்கையில் இருக்கும் வாஜ்பாய் அவர்களும் செயல்படுவார் என்று அமீத் ஷா அறிவிக்கிறார் !

ஒரேகல்லில் இந்த மூண்ரூ  பேரையும்" முதியோர் இல்ல "த்திற்கு மோடியும்,ஷாவும் அனுப்பி விட்ட குதூகலத்தில் திளைக்கின்றனர் !

பாவம் ! நம்மூர் பெரிசு இல.கணேசன்  என்ன செய்வது என்று தெரியாமல்  திகைத்து "நாகபுரி"யினை பார்க்கிறார் !

நாகபுரி காரர்கள் ஜண்டெ வாலா மார்க் என்ன சொல்கிறது என்று காத்திருக்கிறார்கள் ! 








Monday, January 19, 2015

சாருநிவேதிதாவின் 

கொழுப்பு .........!!!


இவன் கூட்டத்துக்கு போகாம இருக்கணும்ணே  ! அதிர்ந்து பெசமாட்டிக ! இவம்லா ஒரு ஆளு ! அண்ணே  ! பாலு அண்ணே  ! இவன் போட்ட நாடகம் பத்தி ஐஞ்சு வருஷம் முன்னால எழுதுனதை படிங்கண்ணே :



 
HOME
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Saturday, December 25, 2010

சாரு நிவேதிதாவின் "இரண்டாவது ஆட்டம்"
சாரு நிவேதிதாவின் "இரண்டாவது ஆட்டம்"


சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரின் படைபுகள் எதையும் நான் படித்ததில்லை.நண்பர்கள், இலக்கிய அன்பர்கள் மூலமாக அவரைப்பற்றி தெரிந்துகொண்டேன் எல்லோருமே எதிர்மறையான கருத்துக்களையே சொன்னார்கள் சமீப காலங்களில் அவருடைய கட்டுரைகளைப் படித்து வ.ருகிறேன.. வெறுப்பை உமிழ்வார். "விஜய் டி.வி" யில் எனக்கு பணம் கொடுக்காமல் விட்டார்கள் என்று கூறியிருந்தார். அதன் பிறகு "நீயா?நானா? நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப்பார்த்தேன்.

"மனம் கொத்திப் பறவை" என்று ஒரு தொடர் விகடனில் எழுதி வருகிறார். அதில் சில வாரம் முன்பு மதுரையில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் மதுரையில் நாடகம் போட்டபொது சிலா தாக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.என்ன நாடகம்? ஏன் தாக்கினார்கள்?யார் யார் தாக்கினார்கள்.?

நாடகவியல் (Dramaatics) படித்தவன் என்ற முறையில் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். நவீன நாடக ஆசிரியர்களில் அமெரிக்க நாடக ஆசிரியர் டேன்னசி வில்லியம்ஸ் எனக்குப்பிடித்தவர்களில் ஒருவர்.அவருடைய நாடகமான Cat on a Hot tin Roof அமெரிக்காவின் பிராட்வேயில் சக்கைபோடு போட்ட நாடகம். பின்னர் திரைப்படமாக வந்தது.எலிசபத் டெய்லரும்,மாண்ட்கோமரி கிளிஃப்ட் ம் நடித்தது. மிகசிறந்த கால்பந்தாட வீரன். அவனுக்கு "ஓரினச்சேர்க்கை" பழக்கம் உண்டு.அவன் திருமனமாகி தாம்பத்திய வாழ்வில் ஈடுபட இந்தப்பழக்கத்திலிருந்து விடுபட அவன் படும் பாடுகள் தான் கதை. இந்தியாவிலும் பரவலாக வவேற்கப்பட்ட படம்.

மதுரையில் மகாத்மா மாண்டிசெரி பள்ளி யிருக்கிறது.3000 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளி. அதன் வளாகத்தில் தான் சாரு நிவேதிதா "இரண்டாம் ஆட்டம்" என்று நாடகம் போட்டார்.நாடகத்தின் கரு "ஓரினச்சேர்க்கை." அந்தக் கருவுக்கு வெஞ்சனமாக "சுய இன்பம்" வில்லியம்ஸ் நாடகத்தில் இல்லாதது என்ன இருக்கும் என்று பார்க்க விரும்பினேன். வேறுபணியின் கரணமாக முடியவில்லை

போன இளஞ்ர்கள் வில்லியம்ஸ் நாடகத்தில் இல்லாத்தைப் பார்த்தார்கள்." ஓரினச்சேர்க்கை "யும்,சுய இன்பமும்" காட்சிபடுத்தப்பட்டிருந்தது.மேடை யேறி நாடகத்தை நிறுத்தச் சொன்னார்கள். தகராறு நடந்தது. அப்போது தடுத்தவர்கள், இப்போது மதுரைபல்கலையில் பெராசிரியராக இருக்கும் டாக்டர்ரவிகுமார் என்ற ஸ்ரீரசா,தீயாணைப்பு அதிகாரியக இருக்கும் ஆருமுகம்.தோழர் ராகவன், ஆசிர்யர் ஷாஜகான் ஆகியோர்.நாடகத்தை போடவேண்டும், அது மனித உரிமை என்று சாரு நிவேதிதாவை ஆதரித்து வந்தவர்கள் டாகர் கே.ஏ. குணசெகரன்,பொதியவெற்பன் ஆகியோர்.

சாரு நிவேதிதா பாதி உண்மையைச் சொல்லும் பழக்கமுள்ளவர் என்று தான் படுகிறது.
    





Sunday, January 18, 2015

அரூபத்தின் அற்புத வேலைகள் 

ஆரம்பமாகி விட்டதடா !!!




பதினெட்டு வருடம் வழக்கு நடந்து தண்டிகப்பட்டவர் அவர் ! மெல் முறையீடு செய்திருக்கிறார் ! உச்சநிதிமன்றம்  நிபந்தனை ஜாமீன் அளித்ததன் பேரில் வெளிவந்தார் ! தற்பொது வழக்கு நடந்து வருகிறது  ! 

செல்வி ஜெயலலிதா அவர்களைப் பார்க்க அருண் ஜெட்லி சென்னை வந்தார் ! ஞாயிறு இரவு அவரை சந்தித்து ஒருமணி நேரம் பேசியிருக்கிறார் ! 

இந்த மனுசன் தமிழ் நாட்டு பக்கமே தலை வச்சு படுத்தது கிடையாது ! பஞசாப்பில மக்களவை தேர்தல்ல நின்னாறு ! டெபாசிட்டு கிடைச்சிட்டுன்னு கெள்வி ! 

தோத்துப் போன இவரை நிதி மந்திரியாக்கினாறு மோடி ! இந்தியாவுக்கு விசுவாசமா இருக்காரோ இல்லையோ ! அமெரிக்க கார்பொரேட் கம்பெனிகளுக்கு விசுவாசமா இருப்பாறு!

நிலங்களை புடுங்கி கம்பெனிகளுக்கு கொடுக்க  அவசர சட்டம் போட்டாரு ! இன்சுரன்ஸ் துறைல அந்நிய முதலிட கூட்ட அவசர சட்டம் போட்டாரு ! இதுவரைக்கும் நாலு  சட்டம் நாடாளு மன்றத்துல சந்திக்க முடியாம அவசர சட்டமா  போட்டு தள்ளி புட்டாறு ! 

மாநிலங்களவை ஒப்புதல் வேணும் ! பா.ஜ.காவுக்கு பெரும்பான்மை இல்லை ! கூட்டாக மநிலங்கள் அவையையும், மக்களவையும் சேர்த்து சட்டத்தை நிறைவேத்த யோசிக்காங்க ! அ .தி.மு.க வுக்கு 37 உறுப்பினர் இருக்காங்க ! அவங்க தயவை கேக்க தான் அண்ணன் ஜெட்லி  வந்திருக்காரு !

செல்விஜெய்லலிதா  ஆதரவை கொடுப்பாங்களா ?

மக்கள் நலத்தை கணக்குலஎடுத்துகிட்டு புரட்சி தலைவர் பெயரை  சொல்லி தமிழ் மக்களின் நன்மையை மனதில் கொண்டு மக்கள் முதல்வர் உத்திரவின்படி அ .தி.மு/க ஆதரவினை நல்கும் !!





Thursday, January 15, 2015


அடுத்தவாரம் 

"ஒபாமா " வரப்போறாரு !





அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அடுத்தவாரம் வராரு !

பத்திரிக்கை காரன் பூராம் அச்சாரம்வாங்கிட்டான் ! ஒபாமா வீட்டு "நாய்" லேருந்து "பூனைகுட்டி" வரைக்கும் "வியாசம் " எழுதி கொண்ணுபுடுவாங்க ! 

போனதடவை அண்ணன் கிளிண்டன் வந்திருந்தாரு ! தாத்தா செல்வாக்கை பயன்படுத்தி பேரங்களை  கொண்டு போய் காட்டினாரு!

இப்பவும் காட்டலாம் ! அவுங்க என்ன உள்ளவா  இருக்காங்க ! செல்வாக்கு சரிஞ்சு போச்சு ! அம்புட்டுத்தான் ! 

அமெரிக்க தொழிலாளர்களுக்கு சுகாதாரம்,மற்றும் மருத்துவம் பற்றி "ஒபாமா " புதுசா அறிவிக்கப் போறாராம் !

"அங்க கம்பெனில வேலை பாக்குர்வனுக்கு காச்ச வந்தாலும் ஆபிசுக்கு போயாகனும் ! அம்பானி,அதானி ஆட்கள் அமெரிக்க தொழிலாளியின் தேசபக்திய பத்தி புகழுவாங்க ! உழைப்பின் மேல அவங்களுக்கு இருக்கிற மதிப்பை சிலாகிப்பாங்க !"

ஆனா அமெரிக்க சட்டப்படி ஊதியத்தோட sick leave கிடையாது ! சாகக்கிடந்தாலும் அபீசுலதான் கிடக்கணும் ! ஆபிசுக்கு போகாம இருக்க உனக்கு உரிமை உண்டு ! ஆனா சம்பளம் கிடையாது !


வீட்ல கைகுழந்தைக்கு காச்ச நா லும் ஆபிசுக்கு போகணும் ! விட்டுல குழந்தய பாத்துக்க உரிமை உண்டு ! ஆனா சம்பளம் கிடையாது !

வீட்டுல வயதான தாய் தகப்பன் சாகக்கிடந்தாலும் ஆபிஸ் போகணும் ! போலனா சம்பளத்தை பிடுச்சு புடுவான் !

உலகத்திலேயே பேறுகால விடுப்பு கொடுக்கப்படாத நாடு அமெரிக்கா மட்டும் தான் ! குழந்த பெத்துக்கிடுது உன் உரிமை ! உன்ன வேலைக்கு வராத நு சொல்றது என்   உரிமைங்கான் !

அந்நிய நாட்டு கம்பெனில வேல பாக்குற நம்ம ஊர் பொம்பளை புள்ளைங்க கல்யாணம் கட்டணும்னா மேனேஜர்ட கேட்டுக்கிடனும் ! குழ்ந்தை பெத்துக்கிடனும் நா அவர்கிட்ட அனுமதி வாங்கணும் ! IT கம்பெனில வேல பாக்குற பொம்பளை  பிள்ளகள்ட கேட்ட கதை கதையா சொல்லும் !

அமெரிக்காவுலா ஓறு கமிட்டி போட்டுருக்கானுவ ! "இப்பிடி  உடல் நலம்,மருத்துவம் சம்மந்தமான அழுத்தம் காரணமா தொழிலாளர்கள்மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் !  அதனால உற்பத்தி பாதிக்கப்படுகிறது ! உற்பத்திய சரி கட்ட தொழிலாளர்களுக்கு என்று மருத்துவ ரீதியான கொள்கைய வகுக்க வேண்டும்  நு   அந்த  குழு சிபாரிசு செய்திருக்கு !

"உற்பத்திய பெருக்க " மருத்துவ கொள்கையை  "வகுத்து " விட்டு ஒபாமா  இந்தியா வரப்போராரு ! . 










Monday, January 12, 2015

7000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ........!







"பறவையை கண்டான் ,விமானம் படைத்தான் " என்றார் கண்ணதாசன் ! 

பறவை பறப்பது இருக்கட்டும் ! மனிதன் பறப்பது எப்படி? ஒருபொருள் வானில் பறக்க வேண்டுமானால் என்னென்ன வேண்டும் !

தீபாவளி பட்டாசு விடும் போது "ஏரொபிளென் " பட்டாசு விட்டிருக்கிறோம் ! கொஞ்ச தூரம் பறந்ததும் அது விழுந்து விடும் ! அதன் பின் பகுதியில் உள்ள கருமருந்து தீர்ந்து விட்டால் முடிந்தது அதன் சங்கதி ! அது போல அது படுக்கைக்க்கோட்டில் பூமிக்கு இணையாக செல்ல அதற்கு ஏதாவது விசை வேண்டும் ! அந்த விசை தீர்ந்ததும்  முடிந்து விடும் ! 

விமானம் மட்டும் எப்படி மேலே பறக்கிறது ?!

விஞ்ஞானம் "பூமியின் ஈர்ப்பு சக்தியால தான் அது பறக்கிறது ! "என்கிறது அதன் பின்னல் இருக்கும் விசை அதன உந்தி மேலெ தள்ளுகிறது ! அத்ற்கு எதிராக ஈர்ப்பு சக்தி அதன் கிழே இழுக்கிறது !  ஈர்ப்பு சக்தி இல்லை என்றால் அதனை தடுக்க  எதுவும் இல்லாமல்  போய்க்கொண்டே இருக்கும் ! விண்கலத்தில் ஈர்ப்பு சக்தி இல்லாமல் வீரரகள் மிதந்துசெல்வதையும் , பொருள்கள் மிதப்பதையும் நாம்  பார்த்திருக்கிறோம் !

அதேபோல் விமானம் நகர்வதற்கும் விசை தேவைப்படுகிறது ! அந்தவிசைக்கு எதிர் விசை இல்லை என்றால் அது நகர்ந்து கொண்டே இருக்கும் !   அதனை தடுக்க எதிர் விசை வேண்டும் ! காற்றில் உராய்வதின் மூலம் எதிர் விசை கிடை க்கிறது !

ஆரம்ப காலத்தில் காற்றை விட எடைகுறை ந்த(lighter than air craft )    பலூன்களில் தொட்டில் கட்டி மனிதன் பறக்கும் பரிசொதனகளை  செய்தான் !  அதன் மூலம் அவன் கற்று கொண்டான் 1

தற்போது  ஒரு பொருள் வானத்தில் செல்ல புவி ஈர்ப்பு விசையும் ( gravity )காற்றின் உராய்வும் (drag ) அவசியம் என்பதை உணர்ந்தான் !

இந்த இயற்பியல் அறிவு தான் காற்றை விட கனமான (havier than air craft ) கருவியை அவனுக்கு அளித்தது !

புவியின் ஈர்ப்பு சக்தியால் தான் நாம் மிதக்காமல் இருக்கிறோம் ! அதேபோல் உராய்வு எதிர்ப்பதால் தான் நாம் இருந்த இடத்தில் இருக்கிறோம் !

இதனை நான் முழுமையாக விளக்கியிருக்கிறேனா என்ற சந்தேகம் எனக்கு உண்டு ! நீ என்னaeronotics படுச்சவனா என்று கேட் காதீர்கள்! நான் Lic ல் குமாஸ்தாவாக பணியாற்றி ஒய்வு பெற்றவன் ! 

அங்கு இன்சுரன்சு பரிட்சையில்,marine ,மற்றும் aviation  இன்சுரன் ஸ் பரீடசயை வே ரு வழியில்லாமல் படித்து தொ லைத்தேன் ! இதில் வேடிக்கை என்ன வென்றால் இன்றுவரை நான் கப்பலை பார்த்ததில்லை ! அதுமட்டுமல்ல ! நான் என்னுடைய fellowship முடிக்கும்வரை விமான த் தி ல்பற ந்ததில்லை !

படித்து பாஸ் செய்தது மட்டுமல்லாமல் பிற் மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுத்து அவர்களையும் தேர்ச்சிபெரசெய்துள்ளே ன் !

அடிமுட்டாளான எனக்கே இது தெரியுமென்றால் விஞ்ஞானிகள் மத்தியில் 7000 ஆண்டுகளுக்குமுன்னால் விமானம் இருந்தது என்றும் கிரகம் விட்டு கிரகம் சென்றார்கள் என்றும் கேப்டன் வினோத் படோஸ்  என்ற விமானி ,விமானப்பயிற்சி யாளர் கூறி யது விந்தையான ஒன்று !


அண்ணே ! வேற  எதோ சூட்சுமம் இருக்கு போல தெரியுது !!!!



 

 

 

Saturday, January 10, 2015

"ஜன விஞ்ஞான வேதிகா "

( மக்கள் அறிவியல் இயக்கம் )





தமிழகத்தில் அறிவியல் இயக்கம் இருப்பதைப் போல்  ஆந்திராவில் ஜன விஞ்ஞான வேதிகா என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர் ! 

ஹைதிராபாத்தின் மையமான பகுதியான மக்கள்பூங்காவில் (public garden )இவர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள் ! இங்குதான் சட்டமன்றமும் அமைந்துள்ளது ! 

சமீபத்தில் போலி சாமியார்கள் ,மற்றும் அவர்களின் ஏமாற்று வேலைகளை விரிவாக விளக்கி அதற்கான விளக்கஙகளையும் அளித்தார்கள் !

வடை சுடும் எண்ணை சட்டியிலோரு பெண் கையை நுழைத்து விட்டு எதுவும் ஆகாமல் இருந்தார் !அவர்கையில் எந்த கொப்புளமும் ஏற்படவில்லை !  அந்தப் பெண் சுடும்  எண்ணையில் கையை விடுமுன் குளிர்ந்த எண்ணையில் கையை முக்கி விட்டு பின்னர் வடைச் சட்டியில் கையை விட்டார் ! 

மற்றொரு பெண் அந்தரத்தில் எந்த வித மான தாங்கியும் இல்லாமல் படுத்த்ருந்தார் ! அவர் கையில் ஒரு தண்டம் மட்டும் இருந்தது !

அந்த தண்டம் இரும்பால் ஆனது ! அதன் கைப்பிடியில் சதுரமான இரும்பு பட்டை உண்டு ! தரையில் இரண்டு அடி ஆழத்தில்பதிக்கப்பட்டிருந்த அதனை  சாமர்த்தியமாக தன் காவி உடையால் மறைத்திருந்தார் !

நாக்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை ஒரு பெண் செய்து காட்டினார் ! நாக்கில் பெரிய கட்டி "கற்பூரம்" எரிந்து கொண்டிருந்தது ! கற்பூரம் எரியும் வரை நாக்கில் நெருப்பு படாது என்பதை விளக்கினார்கள் !

வேதிகாவின் கிளைகள் ஆந்திரா,தெலுங்கானா மாநிலத்தின் எலா மாவட்டங்களிலும் செயல்படுகிறது !

இதன் பொறுப்பாளர் தி.வி ராவ் வந்திருந்த மக்களூக்கு போலி சாமியார்களின் மோசடிகளை அம்பலப்படுத்தினார் !

7000 ஆண்டுகளுக்கு முன்பாகவே விமானம் இருந்தது என்று கூறப்படுவது பற்றி சொல்லும் போது அப்படியானால் அதனை  ஏன் ஓலை சுவடியில் எழுதி வைக்க வேண்டும் என்றும் கேட்டார் ! 

ஹைதிராபாத்தில் உள்ள "சுந்தரய்யா விஞ்ஞான கேந்திரம் " இவர்களுக்கு பின் பலமாக இயங்குகிறது !




அளித்தார்கள் !

Friday, January 02, 2015

5000 ஆண்டுகளுக்கு 

முன்னாலயே ........!!!


படிச்சவன் ,படிக்காதவன்னு வித்தியாசம் இல்லாதவங்க "இந்துத்வா" காரங்க ! எதப்பத்தி பேசினாலும் அந்தக்காலதிலே ,5000 ஆண்டுக்கு முன்னாலயே நு அரம்பிச்சுடுவாணுவ ! 

சுஷ்மா ஸ்ரராஜ் -மந்திரி,வெளிநாட்டு விவகார மந்திரி -படிச்சவங்க -வக்கீல் -அவங்க ஒரு விழாவுக்கு போயிருக்காங்க !

கீதை உருவான 5151ம் ஆண்டுவிழா !

இவங்களுக்கு எதை எடுத்தாலும் 5000 தான் ! 

வேதம்  5000 ஆண்டு ! ஆயுர் வேதம் 5000 ஆண்டு ! யோகா ,கணிதம்,வானியல், எல்லாம் 5000 ஆண்டுக்கு முன்னால யே இங்க இருந்தது ! அட !கலைகள்  அதுவும் 5000 ஆண்டுங்கான் ! மனித இயல் வல்லுனர்கள் மனிதன் பேச ஆரம்பிச்சே 10,000 ஆண்டுதான் எனும்போது இவனுக என்கூர்ல இலக்கணமே எழுதி வச்சுட்டான் ஞான் !!  

"ஹரப்பா நாகரிகம் " அங்க நடத்த அகழ்  ஆராய்ச்சிக்காரன் சொல்லுதான் ! கிடைச்ச ஓடு, எலும்பு,மண்பாண்டம் நு பாத்து "எல்லாம் சுமார் 2500 ஆண்டு இருக்கலாம்" ஞான் ! 

அதாவது இன்னைக்கி கணக்குல கிறிஸ்து பிறக்க  500 ஆண்டு முன்னால இருக்கலாம் !

அண்ணே ! கொஞ்சம் பயமாத்தான்  இருக்கு !உலகம்பூராவும்உள்ள  விஞ்ஞானிகள் வந்து மாநாடு நடத்தப் போறாங்க ! நம்ம பிரதமர் தெள்ளுமணி கலந்துக்கறாரு ! பம்பாய்ல இன்னிக்கு நடக்கு ! 

உங்களுக்கு எப்படியோ !

எனக்கு பயம்ம் மா இருக்கு !!! 








Thursday, January 01, 2015

வசமான கை !!!


சமீபகாலங்களில் தொலைக்காட்சிகளில் அரசியல் மற்றும் சமுக பிரச்சினைகள் பற்றிய விவாதனகள் அதிகம் நடை பெறுகின்றன! 

வலதுசாரிகள் ,மற்றும் மதவாத  அணிகள் மத்தியில் ஆட்சியைப்பிடித்தபிறகு மக்கள் அதற்கு எதிரான கருத்தை தீவிர மாக விரும்புகிறார்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாள நண்பர் ஒருவர் கூறினார் !

சமீபத்தில்" பாரத ரத்னா " விருது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும், மதன் மோஹன்மாளவியா  அவர்களுக்கும் அளிக்கப்பட்டது பற்றிய விவாதம் தனியார் தொலைக்காட்சியில் நடந்தது ! 

பேராசிரியர் அருணன்,பத்ரி சேஷாத்ரி, கோவை சேகர் (பா.ஜ.க.) மற்றும்காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி என்ற அம்மையார் பங்கு பெற்றார்கள் !

"When argument fails abuse "  என்று "கூறுவார்கள் ! சேகர் அதனை "கட்சி"தமாக செய்தார் ! அரசியல்,வரலாறு பற்றி எதுவும் அறியாத பாமரத்தனமாக அவரது வாதங்கள் இருந்தன!

அறிவார்ந்த தகவல்களோடு அம்மையார் பேசினாலும் அதில் சார்புத்தன்மை இருந்ததாலும், காங்கிரஸ்   கட்சியின் பலவீனமான கொள்கைகளை நிலை நிறுத்தமுடியாததாலும் அம்மையாரின் பேச்சு எடுபடாமல்பொயிற்று !

பத்ரி சேஷாத்ரி ஆரம்பத்திலேயே "பாரத் ரத்னா "விருது  தேவையற்றது என்று வாதிட்டார் ! அடிப்படையில் வலது சாரிக்கொள்கைகளை ஆதரிப்பவர் என்றாலும் அறிவார்ந்த பெருமக்களின் நன்மதிப்பை பெறுவதில் பத்ரி ஆர்வமாக இருக்கிறார் என்பதை விவாதம் சுட்டிகாட்டவே செய்தது !

பேராசிரியர் அருணன் அவர்களை 1969 ஆண்டிலிருந்து நான் அறிவேன் !அண்ணமலை பல்கலையில் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்தே மாணவர் இயக்கத்தில் இருந்தவர் ! மதுரை பல்கலையில் பணியாற்றிய பொதே பணி நேரம் தவிர மற்ற பொழுதுகளில் அங்குள்ள வாசக சாலையில் தான் இருப்பார் !

 மிகத்தீவிரமான படிப்பாளி ! படித்ததை பிறரோடு பகிந்துகொள்ளும் எழுதுக்கு சொந்தக்காரார் !

"'பாரத் ரத்னா " விருது பிரதமரால் சிபாரிசு செய்யப்படுவது ! அதனால் அது கட்சி மாச்சரியங்களுக்கு உட்பட்டுதான் இருக்கும் ! இந்தவிருது தேவையற்ற ஒன்று !"என்றார் ! 

"இந்து மகா சபை "என்ற  மதவெறி அமைப்பை ஆரம்பித்தவர்களில் மதன் மோகன் மாளவியா ஒருவர் ! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்று வரும் போது அதனை கடுமையாக எதிர்த்தவர் ! அண்ணல் அம்பேத்கருக்கும், மாள வியாவுக்கும் நடந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டுவர காந்தியடிகள் உண்னாவிரதம் இருந்தார் ! இறுதியில் அம்பேத்கருக்கும்,மாளவியாவுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகுதான் காந்தியடிகள் உண்ணா விரதத்தைமுடித்துக் கொண்டார் "

அருணன் வரலாற்றுத்தரவுகளை  அள்ளி வீசினார் !

சுப்பிரனனீயம்சாமி ராஜபச்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்று சொன்னதையும் ,1997ம் ஆண்டுகளில் வாஜ்பாய் பற்றி  அவர் விமரிசித்தையும் பற்றிபேராசிரியர் அருணன் கூறியதும் பாவம்  சேகரின் ரத்தம் தலைக்கேறிவிட்டது !

அதே போல் சமீபத்தில் திருமாவளவன், பெரியவர் நல்லகண்ணு, ஆகியோர்கலந்து கொண்ட கூட்ட மொன்றில் பேராசிரியர் அருணன்  "ஆர்.எஸ்.எஸ்  இயக்கத்தை கிழித்து நார் நாரா க்கி தூக்கி எறிந்தார் ! 

" ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்பெண்கள் உறுப்பினராக முடியாது " என்பதை தோலுறுத்திக் காட்டினார் !  

பத்திரிகைகளிலும்சரி ,தொலைக்காட்சியிலும் சரி,பொது மேடைகளிலும் சரி  இந்து மத வெறியர்களின் கொட்டத்தை தடுக்க இடது சாரிகளின் சார்பாக வந்திருக்கும் "வசமான கை  "

பேராசிரியர் அருணன் !!!




காங்கிரஸ் சார்பில்