Saturday, January 31, 2015

"ஈஸ்வர அல்லா தேரே நாம் " .....!!!




அருமை  நண்பர் முத்துநிலவன் " ஈஸ்வர் அல்ல தேரே நாம் " என்று ஒரு இடுகை இட்டிருந்தார் ! 

சபர்மதி ஆஸ்ரமம் சென்றிருந்த போது அங்கு காந்தி அடிகளின் பிடித்தமான பாடல்கள் பற்றிய   குறிப்பினை படித்தேன் !"வைஷ்ணவ ஜனதோ" என்ற பாடலை குஜராத்தைச் சேர்ந்த நர்சி மேத்தா என்ற சித்தர் எழுதியது  என்று தெரிந்து கொண்டேன் ! "ரகுபதி ராகவ" பாடலை பாடியவர் ,எழுதியவர் யார் என்பது பற்றி எழுதவில்லை !

சென்னை வந்ததும் கடைகடை யாக ஏறி பழைய காசட்டுகளை வாங்கி பார்த்தேன் ! 1931ம் ஆண்டு அகில   இந்திய ரேடியோவில் பாடிய அந்த பாட்டின் காசெட்டு கிடை த்தது  ! பாடியவர் பெயர் விஷ்ணு தாமோதர் பலூஸ்கர் என்று இருந்தது ! பாட்டை எழுதியவர் பெயர் தெரியவில்லை !

அதை விட முக்கியமான விஷயம்  1931 ம் ஆன்டு காசட்டில் "ஈஸ்வர அல்லா தேரே நாம் " என்ற வரிகள் இல்லை !

பலுஸ்கர்  பற்றி தேட ஆரம்பித்தேன் ! தற்போது தீண் டாமை ஒழிப்பு முன்னணியில் செயல்படும் கணேஷ் அவர்கள் நாகபுரியில் விமானப்படையில் இருந்தார் ! அவரும் நானும் தேட ஆரம்பித்தோம் ! நாகபுரியில் உள்ள "இந்தியா அமைதிமையம்"   (India pe ace  centre) என்ற அமைப்பினை அணுகினோம் ! அதன் இயக்குனராக இருந்தவர் ஜான் செல்லத்துரை ! தமிழ் நாட்டின் சேரன்மாதேவி யைச் சேந்தவர் ! குஜராத்வித்யாபீடத்தீல் முனைவர் பட்டம் பெற்றவர் !

அவர்  இதற்கு பதில் சொல்ல குஜராத் வித்யாபீடத்தை சேர்ந்த நாராயண தேசாய் ஒருவரால் தான் முடியும் என்று  கூறினார் ! நாராயண் தேசாய் ,அண்ணல் காந்தியடிகளின் செயலாளராக இருந்த மகாதேவ் தேசாயின் மகன் ஆவார் ! சிறுகுழந்தயாக காந்தியடிகளின் மடியி ல் தவழ்ந்து அவர்காதை திருகி விளையாடியவர் நாராயண தேசாய் ! தேசாய்க்கு 2011 ல் தொண்ணூருவயது ! அவரை சந்திக்க முடியவில்லை ! நொந்து நூலாகிப்போன எங்களுக்கு டாக்டர் ஜான் அவர்கள் வேறொரு நண்பர் மூலம் தகவல் கிடைக்க உதவினார் ! 

"குஜராத் மாநில மக்கள் கிரமங்களில் உள்ள சொலவடைதான் இது !" என்றார் அந்த நண்பர் !

300 ஆண்டுகளுக்கு முன்னால்  வந்த பிரிட்டிஷ் வியாபாரிகள்  சூரத் நகரில் தங்கள் சரக்குகளுக்கான கிட்டங்கிகளை வைத்திருந்தனர் ! போர்பந்தர் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றவும் ,இறக்கவும் தொழிலாளர்கள் வந்தனர் ! இவர்களில் பார்சிக்கள், ஜைனர்கள், கிறிஸ்துவர்கள் இந்துக்கள்,முஸ்லீம்கள் என்று இருந்தனர் ! இவர்கள் பக்கத்து கிரா மங்ககளில் வசித்து வந்தனர் ! எந்த பண்டி கைகளையும் ஒன்றாக கூடி கொண்டாடி மகிழந்தனர் ! "அரே  1ஈஸ்வர் க்யாஹை ! அல்லா  க்யாஹை ! சப்கோ சன்மதி தேவ் ! " என்று சொல்வார்கள் !

காந்தியின் தண்டியாத்திரியின் போது அவர் புறப்பட்டபோது அவரோடு வந்தவர்கள் 78 பேர் ! செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகியது ! அவர்களோடு ஏராளமான துறைமுக தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டனர் ! 

மாலை நேர பிரார்த்தனை கூட்டத்தில் விஷ்ணு தாமோதர் பலுஸ்கர்  பாடுவார் ! 

அவர் "ரகுபதி ராகவ ராஜா ராம் 

               பதித பாவன சீதாராம் " என்று பாடியதும் ,தொழிலாளர்கள் 

                "ஈச்வர அல்லா தேரே நாம்

                   சப்கோ சன்  மதி தே  பகவான் " என்று எதிர் பாட்டு பாடுவார்கள் !

இதனைக் கேட்டு மகிழ்ந்த அண்ணல் காந்தி அடிகள் இனிமேல் இந்தவரியையும் சேர்த்து பாடுமபோடி கேட்டுக் கொண்டார் ! 

எங்கள் தேடல் வெற்றிகரமாக முடிந்தது !!!

(சுதந்திர போராட்ட வீரரும் பார்வை அற்வருமான விஷ்ணு திகம்பர் பலூஸ்கர்  பற்றி தனியாக எழுத வேண்டும்! எழுதுவேன் )




1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அறியாத செய்தி நன்றி ஐயா