skip to main |
skip to sidebar
அடுத்தவாரம்
"ஒபாமா " வரப்போறாரு !
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அடுத்தவாரம் வராரு !
பத்திரிக்கை காரன் பூராம் அச்சாரம்வாங்கிட்டான் ! ஒபாமா வீட்டு "நாய்" லேருந்து "பூனைகுட்டி" வரைக்கும் "வியாசம் " எழுதி கொண்ணுபுடுவாங்க !
போனதடவை அண்ணன் கிளிண்டன் வந்திருந்தாரு ! தாத்தா செல்வாக்கை பயன்படுத்தி பேரங்களை கொண்டு போய் காட்டினாரு!
இப்பவும் காட்டலாம் ! அவுங்க என்ன உள்ளவா இருக்காங்க ! செல்வாக்கு சரிஞ்சு போச்சு ! அம்புட்டுத்தான் !
அமெரிக்க தொழிலாளர்களுக்கு சுகாதாரம்,மற்றும் மருத்துவம் பற்றி "ஒபாமா " புதுசா அறிவிக்கப் போறாராம் !
"அங்க கம்பெனில வேலை பாக்குர்வனுக்கு காச்ச வந்தாலும் ஆபிசுக்கு போயாகனும் ! அம்பானி,அதானி ஆட்கள் அமெரிக்க தொழிலாளியின் தேசபக்திய பத்தி புகழுவாங்க ! உழைப்பின் மேல அவங்களுக்கு இருக்கிற மதிப்பை சிலாகிப்பாங்க !"
ஆனா அமெரிக்க சட்டப்படி ஊதியத்தோட sick leave கிடையாது ! சாகக்கிடந்தாலும் அபீசுலதான் கிடக்கணும் ! ஆபிசுக்கு போகாம இருக்க உனக்கு உரிமை உண்டு ! ஆனா சம்பளம் கிடையாது !
வீட்ல கைகுழந்தைக்கு காச்ச நா லும் ஆபிசுக்கு போகணும் ! விட்டுல குழந்தய பாத்துக்க உரிமை உண்டு ! ஆனா சம்பளம் கிடையாது !
வீட்டுல வயதான தாய் தகப்பன் சாகக்கிடந்தாலும் ஆபிஸ் போகணும் ! போலனா சம்பளத்தை பிடுச்சு புடுவான் !
உலகத்திலேயே பேறுகால விடுப்பு கொடுக்கப்படாத நாடு அமெரிக்கா மட்டும் தான் ! குழந்த பெத்துக்கிடுது உன் உரிமை ! உன்ன வேலைக்கு வராத நு சொல்றது என் உரிமைங்கான் !
அந்நிய நாட்டு கம்பெனில வேல பாக்குற நம்ம ஊர் பொம்பளை புள்ளைங்க கல்யாணம் கட்டணும்னா மேனேஜர்ட கேட்டுக்கிடனும் ! குழ்ந்தை பெத்துக்கிடனும் நா அவர்கிட்ட அனுமதி வாங்கணும் ! IT கம்பெனில வேல பாக்குற பொம்பளை பிள்ளகள்ட கேட்ட கதை கதையா சொல்லும் !
அமெரிக்காவுலா ஓறு கமிட்டி போட்டுருக்கானுவ ! "இப்பிடி உடல் நலம்,மருத்துவம் சம்மந்தமான அழுத்தம் காரணமா தொழிலாளர்கள்மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் ! அதனால உற்பத்தி பாதிக்கப்படுகிறது ! உற்பத்திய சரி கட்ட தொழிலாளர்களுக்கு என்று மருத்துவ ரீதியான கொள்கைய வகுக்க வேண்டும் நு அந்த குழு சிபாரிசு செய்திருக்கு !
"உற்பத்திய பெருக்க " மருத்துவ கொள்கையை "வகுத்து " விட்டு ஒபாமா இந்தியா வரப்போராரு ! .
0 comments:
Post a Comment