Wednesday, January 28, 2015

கள மாடுவோம் !

களத்தையும் நாமே தீர்மானிப்போம் !!!



அகமதாபாத் ரயிலடியில்" டீ " விற்றவர் என்று பிரச்சாரம் செய்யப்பட மோடி ஆட்சிகட்டிலி ல் ஏறி கிட்டத்தட்ட எட்டு மாதங்களாகிவிட்டன !

தேர்தலுக்கு முன்பும் பின்பும் கார்பரேட் பத்திரிகைகள் மக்கள் கவனத்தை திசை திருப்பி வலதுசாரிகளின் சாகச நடவடிக்கைகளை மக்கள் முன் மறைத்தன !

கார்பரெட்டுகளின் நன்மைக்காக மக்கள் விரோத முடிவுகள் ஓரங்கட்டப்பட்டு கவனம் சிதறடிக்கப்பட்டன !

"தெருவிளக்கு " பகுதியில் "தீக்கதிர் " பத்திரிகையில் வந்த தகவல்கள் பயத்தை தருகின்றன !

அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி நடந்த "கூத்துக்களை " அதில் விவரித்துள்ளார்கள் !

1. கார்பரேட் கம்பெனிகளுக்கு ஈன கிரயத்தில் நிலம் கொடுக்க நில ஆர்ஜித சட்டம் கொண்டுவந்துள்ளார்கள் !

2. அரிசி,கோதுமை ஆகிய அத்தியாவசியஉணவுப்பண்டங்களை  தற்போது 63% சதம் மக்களுக்கு கொடுக்கிறார்கள் ! இதனை 40% சதமாக குறைத்து விட்டர்கள் !இனி இந்திய  மக்களில் 60 சதம்பேருக்கு உணவு பாதுகாப்பு என்பது கிடையாது !

3.இந்திய உணவு கார்பரேஷன் இனி கொள்முதல் செய்யாது ! விவசாயிகளிடம் கார்பரேட் கமபெனிகள் தான் கொள்முதல் செய்யும் ! அவ்ர்கள் சொன்ன விலைக்கு தான் விவசாயி விற்க வேண்டும் ! கம்பெனிகள் விற்கும் விலைக்கு தான் வாங்கவேண்டும் ! "வால்மார்ட் "உள்ளுர் ரிலயன்ஸ் வரை கொள்ளை அடிக்கலாம் !

4.உயிகாக்கும் மருந்துகள் காப்புரிமைசட்டத்தின்கீழ் இருப்பவை !அவற்றிற்கு விலக்கு அளிக்கப்படும் ! பணம் இருப்பவன் விலைகொடுத்து மருந்துவாங்கிஉயிர காத்துக்கொள்ளலாம் !இல்லாதவன் ...?

5.திவாலாகிப்போன அமெரிக்க இன்சுரன்ஸ்  கம்பெனிகள் இந்தியாவிற்குள் நுழையலாம் !அதற்கு வசதியாக அந்நிய முதலீட்டு வரம்பு 49% சதமாக உயர்த்தப்படும் !

6.அணு உலை  மூலம் மின்சாரம் தயாரிக்க அமெரிக்க கம்பெனிகள் தளவாடங்களை வழங்கும் ! கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் அணு உலைகள் உருவாக்கப்படவில்லை ! அங்கு மிச்சமிருந்த துருப்பிடித்த தளவாடங்கள இந்தியாவில் விற்க ஒப்பந்தம் போடப்பட்டது !இந்த உலை களினால் விபத்து ஏற்பட்டால் அதற்கான நட்டஈட்டை அந்த கம்பெனிகள் கொடுக்க வேண்டும் !இது இந்திய சட்டம் சொல்கிறது ! பிரான்ஸ் ,ரஷ்யா ஆகிய நாடுகள் இதனை ஏற்று கொண்டு உலைகளை தந்துள்ளன ! ஆனால் அமெரிக்க நட்ட ஈடு தர மாட்டோம் என்று சண்டித்தனம் செய்கிறது ! இந்திய சட்டத்திலிருந்து அமெரிக்க கம்பெனிகளுக்கு விளக்கு அளிக்க ஒப்பந்த ஆகியிருக்கிறது !

7.அமெரிக்க கம்பெனிகள் இந்தியாவில் செயல்பட எளிதாக இருக்க இந்திய உழைப்பாளர் உரிமைகளை கட்டுப்படுத்த "சீர்திருத்தம் " என்ற பெயரில் சட்டம்கொண்டுவர சம்மதித்திருக்கிறார்கள் !

8. ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தம் போடப்பட்டது !அமெரிக்க எந்த நாட்டுடனும் போர்தொடுக்கலாம் ! இந்தியா அந்தப்போரில் பங்கெடுக்க இராணுவத்தை அனுப்ப வேண்டும் ! அனுப்பமளிருந்தாலும் பரவாயில்லை ! அமெரிக்க போர் தொடுத்தது தவறு என்று கூறாமல் "பொத்திக் ' கொண்டு இருக்கவேண்டும் !இந்த ஒப்பந்தம் மேலும் பத்து ஆண்டுகளுக்கு  நீட்டிகப்பட்டு இருக்கிறது !

இவை எல்லாம் அமெரிக்க அதிபர் வருகையை ஒட்டி இந்த ஜனவரி மாதம் மட்டும் நடந்தவை !

கார்பரெட்  ஆதரவு பத்திரிகைகள் இவற்றை பற்றி மூச்சு விடுவதில்லை !

"மோடி யின் கோட்டுக்கு 10லட்சம் செலவு !ஒபாமா "சூயிங்கம் " தின்றார் !ஒபாமா ஷாருக்கான் பற்றி குறிப்பிட்டார் " என்று மிக முக்கியமான செய்திகளை கொடுத்தன 

வலது சாரிகளும் ,கார்பரெட்டுகளும் மிக சாமர்த்தியமாக சதுரங்கம் ஆடுகிறார்கள் !

 காந்தியா ? படேலா ? என்று விவாதிக்க களமிறங்குகிறோம் !

ராமரா ? நாதுராமா ? என்று யாருக்கு கொவில்கட்டுவது ?இந்தி திணிப்பா? சம்ஸ்கிருத புகுத்தலா என்று பட்டி மன்றம் நடத்துகிறோம் !

அம்பானியும்,அதானியும்,மெலிதான இதழோரத்து புன்னகையை மறை த்துக் கொள்கிறார்கள் !

வலது சாரிகள் விரும்பும் களத்தில் தான் நாம் செயல்பட வேண்டுமா ?

நமது களம் எது ???


 






1 comments:

'பரிவை' சே.குமார் said...

அரசியலில் அவ்வளவாக அறிவில்லை...
நல்ல பகிர்வு ஐயா...