skip to main |
skip to sidebar
(இது ஒரு மீள்பதிவு )
2012
சுப்பையா என்ற பெயர் எனக்கு பிடிக்கும்.............
சுப்பையா என்ற பெயர் எனக்குப் பிடிக்கும்..தமிகத்தின் தென் மாவட்டங்களில் இந்தப் பெயர் அதிகம் உண்டு.. முருகனின் பெயர்களில் ஒன்று சுப்பிரமணியன். செல்லமாக சுப்பிரமணியனை சுப்பை யா என்று அழைப்பார்கள்.."அப்பனைப் பாடும் வாயால் , ஆண்டி சுப்பனை பாடுவேனோ " என்று சிவகவி படத்தில் தியாகராஜா பாகவதர் பாடியது நினைவுக்கு வரலாம்..நெல்லை மாவட்டத்தில் தெருவுக்கு நான்கு சுப்பையா இருப்பார்கள்..
எனக்கு இந்தப் பெயர் பிடித்ததற்கு தனி காரணங்கள் உண்டு..எனக்கு முத்த சகோதரை "சுப்பையா " என்றுதான் அழைப்போம்..பாசத்தோடு அழைக்கும் பொது "ஸ்சுப்பையா" என்பேன் கோபம்வந்தால் "சப்பையா" என்பேன்..நாங்கள் பெரியவர்களாகி குடும்பஸ்தர்களான பின் எங்களுக்குள் மனஸ்தாபம் வந்ததே இல்லை.எங்கள் தாயார் எங்களை வளர்த்த விதம் அப்படி!!
.அவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.. சுப்பையா எனும் பொது என் நெஞ்சு நெகிழத்தான் செய்கிறது..
எனக்கு இந்தப் பெயர் மிகவும் பிடித்ததற்குக் காரணம் உண்டு.."காடெல்லாம் விறகாகிப் போச்சே " என்ற அந்த எட்டைய புறத்தானை அவன் வீட்டில் தாய்,,தந்தை,,உற்றார் உறவினர்
நண்பர்கள் சுப்பையா என்று தான் அழைப்பார்களாம் "கப்பலோட்டிய தமிழன்" என்ற படத்தில் ஒரு காட்சிவரும் பாரதியின் படத்தின் முன் வ..உ..சி நிற்பார்..பாரதிமறைந்த செய்திகேட்டு "பாரதி எப்பா!!சுப்பையா "என்று
கதறும் காட்சி சித்தரிக்கப் பட்டிருக்கும்..அந்த மஹா கவிஞன் பெயரும்
சுப்பையா தான் என்பதால் பிடிக்கும்
எல்லாவற்றிர்க்கும் மேல் ஒரு காரணம் உண்டு ..1946ம ஆண்டு இந்தியாசுதந்திரம் வாங்குவதற்கு ஓராண்டிற்கு
முன்பே தெலுங்கானா விவசாயிகள் ஆயுதம் தாங்கி போராடி விடுதலை
பெற்றார்கள்..முன்று ஆண்டுகள் செங்கொடியின் கீழ் அவர்கள் 1949 வரைஆண்டார்கள்..பல தலைவர்கள் தலைமைவகித்து அவர்களை வழி
நடத்தினார்கள் அவர்களில் ஒருவர் சுந்தரய்யா ஆவார்.. பிரிட்டிஷ் இந்தியாவான மதராஸ் மாகாணத்திலிருந்து துப்பாக்கி ,துப்பகிக் கான ரவை , தளவாடங்கள்,மற்றும் புரட்சிவிரர்களுக்கு உணவு என்று சகலத்தையும் வரவழைத்து
கொடுக்கும் பொறுப்பு சுந்தரய்யவிற்கு இருந்ததது .தலை மறைவாக இருந்து கொண்டு அதனை செய்தார்.. அப்போது அவாது தலைமறைவு
வாழ்க்கையின் பொது அவரது பெயர் "சுப்பையா"தான் .
என் அண்ணன் பெயர் சுப்பையா .என் நெஞ்சு நெகிழ்கிறது..
என் மகாகவி பெயர் சுப்பையா..என்மனம் மகிழ்கிறது
எங்கள் சுந்தரய்யாவின் பெயர் சுப்பையா .என் மனம் பரவசமடைகிறது ,
2 comments:
அருமையான தகவல்கள் தோழர்
தமிழில் உங்கள் பெயரை எப்படி எழுதுவீர்கள்? காஷியபன் என்றா அல்லது காசியபன் என்றா? இது இயற்பெயரா, புனைப்பெயரா? எனக்குத் தெரிந்து இது புராணக் கதை முனிவர் ஒருவர் பெயர். அதை வைத்துக்கொண்டிருக்கக் காரணம் (அதாவது புனைப்கெயர் என்றால்)?
Post a Comment