Sunday, May 10, 2015

AB என்ற ஏ.பாலசுப்பிரமணீயம் அவர்களூம் ,

மாணவர்களூம்.............!!!



கட்சியில் மதுரை - முகவை மாவட்டம் என்று தான் சொல்லி வந்தார்கள் ! பின்னர் தான் மதுரை மாவட்டம்  அதன் பின்னர்,திண்டுக்கல்,தேனி என்று மாவட்டங்களாகபிரிந்தது ! 


மதுரை மில் தோழிலாளியாக இருந்த ABPஎன்ற  எ.பி பழனிச்சாமிதான் மதுரைமாவட்ட செயலாளராக வெகு காலம் இருந்தார்! அப்பொது தான் அவரை நான் முதன்முதலாக பார்த்தேன் ! "திண்டுக்கல் பாலு" என்று அழைப்பார்கள் ! ஏ.பாலசுப்பிரமணியம் என்ற  AB பின்னாளில் மாநில  செயலாளராக.அரசியல்தலமைக்குழு உறுப்பினராக உயர்ந்தார் ! 


மிட்லண்ட் ஹோட்டல் எதிரில் இருக்கும் அரசமரம் சந்தில் தான் பொது தொழிலாளர் சங்கம் இருந்தது ! அதற்கு முன் அதன் பின்புறம் உள்ள கருகப்பிலை கார சந்தில் ஒருவீட்டின் மொட்டை மாடியில்  ஓலை குடிசை போட்டு செயல் பட்டு வந்தது ! அங்குதான் கட்சி யூனிட் கூட்டம் நடக்கும் ! 9 பெர் உறுப்பினர்கள் ! சனிக்கிழமை மதியம் படை பதைக்கும் வெய்யிலில் மொட்டைமாடியில் வகுப்பு நடக்கும் !  AB,NS போன்ற தலைவர்கள் வகுப்பு எடுப்பார்கள் !


வகுப்பு முடிந்ததும் NS அவர்கள் "சரியாக இருந்ததா ? நல்ல புரிஞ்சிதா ? நான் பேசினது சரிதானா என்று என் போன்ற குஞ்சுகுளுபவாங்களீடம் விசாரிப்பார்! 'தலைவா தலைவா "  என்று எங்கள் நெஞ்சம் கதறும் ! எப்பேர்பட்ட தலைவர்கள் ! இவர்கள் காலடியிலமர்ந்து பாடம்கேட்ட நாங்கள் எவ்வளவுபாக்கியவான்கள் !


மாணவர்கள் இயக்கத்தை கட்டி அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தது ! 

 

ரயிவே கர்டர் பாலத்திற்கு அருகில தான் "ராஜா மில் "இடுந்தது ! அதன் பின்னால் மதுரையின் சாக்கடை நீர் வைகையில் கலக்கும் ! அதில் உள்ள திட்டுகளில் மரங்களையும் செடிகளயும் வளர்த்திருப்பார்கள் ! அதனை அங்கு குடியிருக்கும் மில் தொழிலாளர்கள் "பூந்தோட்டம் " என்று அழைப்பார்கள் 1 அங்குதான் மாணவர்களூக்கான வகுப்புகள் நடக்கும் ! எங்களைப்போன்றவர்கள் மாணவர்களை அங்கு அழைத்து வரும் பொருப்பினை ஏற்றுக் கொள்வோம் !


ஒரு முறை AB  தொடர் வகுப்பின எடுத்தார் !  வகுப்பு எடுக்கும் போது ஒரு மாணவன் எழுந்து சந்தேகங்களை கேட்பான் ! தலவரும் விளக்கமளீப்பார் ! சில சம்யங்களில் அவனுடைய சந்தேகங்கள் மிகவும் சிறு பிள்ளைத்தனமாக இருக்கும் ! வெட்டித்தனமாகவும் இருக்கும் !  இந்த மாணவன் மட்டும் அதிகம் கேட்பான் ! ஒருமுறை  AB அவர்கள் வகுப்பு முடிந்ததும் என்னை வந்து பார் ? என்றார் ! 


"எங்கு படிக்கிறாய்?"

"அக்ரி கல்லுரியில் "

"எங்கு இருக்கிறது?"

"மேலூர் ரோட்டில் 1ஆனை மலை அருகில் "

"பேராசிரியர் கிரிஜா அவர்களைத்தெரியுமா ?"

பையன் முகத்தில் ஆச்சரியக்குறி !

"அவர்களிடம்விசாரித்தேன் ! "

"அவன் தங்கமான பையன் ! மற்றவர்களூக்காக  உயிரக்கொடுத்து வேல செய்வான் ! ஆனால் அவன யாரும் சட்டை செய்யமாட்டார்கள் ! படிக்கவே மாட்டான்! சிங்கில்டிஜிட் தான் மார்க் ! எந்த மாணவனும்  அவனோடு  ஓட்டாமாட்டான் என்று பேராசிரியர் சொன்னதாக  கூறினார் ! தோழா !

பி.டி ஆர் தெரியுமா ! நமது அகில  இந்தியதலவர் ! அவர் ஆங்கிலம் பேசினால் பிரிட்டிஷ் காரனே தடுமாறுவான் ! ஷெக்ஸ்பியரையும்,மிலடனையும் கரரைத்துக் குடித்தவர் ! அவர் விக்டொரியன் ஆங்கிலம் பேசுவார் ! மாணவர் சங்க தலைவர் சிதாராம் எச்சுரி தெரியுமா? ! அவர்  நேஷனல் மெரிட் லிஸ்டில் நம்பார் ஒன் ! எம்.ஆர்.வி தெரியுமா ? அவர் சென்னை பலகலைகழக கால்பந்து குழுவில் இருந்தார் ! உலக கால்பந்து போட்டி ஹாலந்தில் நடக்கும் போது பார்த்தவர் ! பீலியின் விளயாட்டை பார்த்தவர் !   அண்ணாமலையில் தான் நான் படித்தேன் ! பல்கலைகழகஹாக்கி டீமில் விளையாடீயிருக்கீறேன் ! நாம் எங்கு இருந்தாலும் முதலிடத்தை பிடிக முயற்சிக்க வேண்டும்  ! அப்போது தான் நம்மை மற்றவர்கள் பார்ப்பார்கள். கவனிப்பார்கள் ! காது கொடுப்பார்கள் ! "


பெருமூச்சு விட்டார் AB ! " பெராசிரியர் கிரிஜா என் மனைவி ! நல்ல படி !" என்று அந்த மாணவனை விடை கொடுத்து அனுப்பினார் !


3 comments:

www.eraaedwin.com said...

அந்தப் பையன் இப்ப எந்த நிலையில் இருக்கிறார் தோழர்?

kashyapan said...

அருமையான கேள்வி எட்வின் அவர்களே ! நாம் இப்படி தோழர்களை தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தாமல் இருக்கிறொம் ! ஆனாலும் முற்றிலும் அப்படி யில்லை ! ஒரு தோழர் படித்து பொறியாளராகி மும்பையில் தொலைபெசி நிகாமில் பொதுமெலாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார் ! இன்று வரை தொடர்பு உண்டு ! பல தோழர்கள் மருத்துவம் படித்து "அன்பு" கிலினிக்குகளை நடத்து கிறார்கள் ! மருத்துவ கல்லுரிகளில் "டீனாக" இருக்கிறார்கள் பேராசிரியர்களாக இருக்கிறார்கள் ! அவர்களால் ஆன வகையில் தொண்டூழியம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் !
அனாலும் இவை பொதாதே !---காஸ்யபன்.

சரவணன் said...

புரட்சி ஓங்குக! என்று தொண்டை விடைக்க கத்துகிறீர்கள். ஆனால் செய்வது என்னவோ காவல்துறை அனுமதிபெற்று அரைமணி ஆர்ப்பாட்டம் மட்டுமே! புரட்சி நடத்த காவல்துறை அனுமதி அளிப்பதில்லை.. நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம்!